Saturday, January 14, 2017

வன்மேற்கின் காலதேவன் ட்யுராங்கோ (Durango,Tex, Blue Coats)

என் மன வானில்
பதினாறில் பதினேழு போஸ்ட் வாயிலாக 31 ம் தேதியே புது இதழ்கள் வர போகிறது என்றவுடன் இருப்பு கொள்ளவில்லை. ஏங்க சனிக் கிழமை போய் பொங்கலுக்கு துணி எடுத்துதுட்டு வந்துடுவோம்ன்னு வீட்டு அம்மணி சொன்னதுக்கு தலையாட்டி இருந்தது நினைவுக்கு வந்தது. கொரியர் காரன் எப்போ வந்து தொலைக்க போறானோ ? பேசாம துணி எடுக்கிறத ட்ராப் பண்ணிடலாமான்னு நினைத்தேன், ஆனால் அதனால் இடி, மின்னலாக வரும் பின் விளைவுகளை  எண்ணி பேசாமல் இருந்து விட்டேன். வழக்கமாக கோரியர்காரர் மதியம் மூணு மணிக்கு மேல்தான் கதவை தட்டுவது வழக்கம். சரி ஆனது ஆகட்டும்ன்னு துணி எடுக்கப் போய்விட்டு வந்தாச்சு. வந்து சற்று கண் அயரலாம்ன்னு படுத்தால் நினைத்த மாதிரியே 3 .45 கதவை தட்டினார் கொரியர் அண்ணன் (ஹி ஹி கையில் காமிக்ஸ் வாங்கும்போது அவர் ஒரு தேவதை மாதிரி தெரிவது எனக்கு மட்டுமில்லை என்று நினைக்கிறேன்). பார்சல் பெரிதாக இருக்கவே சரி surprise கிப்ட் டெய்லி காலெண்டர்தான் என்று நினைத்துக் கொண்டு திறந்தேன்.

ட்யுராங்கோ

முதலில் பார்த்தது ட்யுராங்கோவைத்தான். பார்த்ததும் வாவ் என்று வாயை பிளந்து விட்டேன்.  அடடா என்ன ஒரு தரம். அப்படி ஒரு மேக்கிங் முன் பின் அட்டைப் பட கலரிங்கும் சூப்பர். பள பளவென்று இருக்கும்  ஹீரோவின் படமும் எடுப்பாக இருந்தது. முன் பின் அட்டையில் இருந்த கோடுகளும் வளைவுகளும் தொட்டுப் பார்த்தால் உணரும் வண்ணம் இருந்தது அருமை. தரத்தை பார்த்து ரெண்டு மூணு தடவை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தேன். புத்தகத்தின் உள் அட்டை தாள் மற்றும் அதை தொடர்ந்து வரும் சாதாரண வெள்ளை கலர் தாள்கள் இந்த புத்தக மேக்கிங்குக்கு பொருத்தமாக இல்லை. வழு வழு தாளையே அல்லது முடியாத பட்சத்தில் வேறு கலரிலாவது  போட்டிருக்கலாம். என்னடா முன் அட்டையில் கதாநாயகனுக்கு முகத்தையே காணோமே என்று யோசித்துப் பார்த்தால் ஒரிஜினல் ஓவியமே அப்படிதான்.

சரி ட்யுராங்கோ ஆள் எப்படி ? கவ்பாய்  கதைகள் நமக்கு பிடிக்காமல் போகுமா? சரியாக சொன்னால் தலைவன் டைகருக்கும் டெக்ஸ்ஸுக்கும் நடுவே இருக்கிறார். யதார்த்தமாக கதை செல்வது  இவரின் சிறப்பு.நான்கு பாகங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் முதல் பாகத்திலேயே வலது கையில் சுடப் படுகிறார். துப்பாக்கி வீரருக்கு வலது கை  எவ்வளவு முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்க்கு அப்புறமும் எப்படி சாகசம் செய்கிறார் என்பதை எதார்த்தமாக சொல்லப் பட்டிருக்கிறது.          

ப்ளூ கோட்ஸ்

நம் தமிழ் சினிமாவில் கதாநாயன் அவர்கூடவே வரும் காமெடியன் செட்டப் தான் இந்த ப்ளூ கோட்ஸ் கதாநாயகர்கள்.கதா நாயகனுக்காக   அடிவாங்கும்போது  காதலில் அடி வாங்கிறதுல்லாம் சகஜம்டா ன்னும் நாயகன் சொல்ல "உன் காதலுக்கு நான் ஏன்டா அடி வாங்கணும்ன்னு " கொந்தளிக்கும் காமெடியன்தான் ஸ்கூபி. கசாப்பு கடையில் வேலை பார்க்கும் ரூபியும் , பாரில் வேலை பார்க்கும் ஸ்கூபியும் எப்படி பட்டாளத்தில் சேர்க்கிறார்கள் என்பதே கதை. கதை வழக்கம்போல புன்னகைக்க வைத்தது. எடிட்டர் இந்த ப்ளூ கோட்ஸ் பட்டாளத்தை அதிக எண்ணிக்கை கொடுக்காமல் இந்த வருடம் ஓரம் கட்டியதில் வருத்தம் எனக்கு.  


டெக்ஸ் ஆவியின் ஆடுகளம்

டெக்ஸ் ஆவியுடன் நேருக்கு நேர் மோதி ஜெயிக்கும் கதை. ஆவியை சுட முடியாவிட்டாலும் கட்டிப் பிடித்து, கட்டிப்  புரண்டு, வலு கொண்ட முஸ்ட்டியால் கும் கும் என்று நாலு விட்டால் பறந்து போய் விட போகிறது, ஆவியாவது நீராவியாவது  என்றெல்லாம் நினைத்துக் கொண்டு படிக்க ஆரம்பிக்க வேண்டாம். மந்திர  மண்டலம் படித்த பின் நாலு நாள் வேப்பிலை அடித்த பிறகு சரியானதால், கொஞ்சம் காதில் பூ சுற்றலாக இருக்குமோ என்ற நினைப்புடன் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் இது பக்கா டிடெக்டிவ் கதை. 

சரியாக சொன்னால் "திகில் நகரில் டெக்ஸ்" மாதிரியான கதை. அட எழுதும் போதுதான் நினைவுக்கு வருகிறது இது அதே கதைதான். தமிழ் சினிமாவில் ஒரே கதை வேறு டிரீட்மென்ட் என்பார்கள் அதே மாதிரிதான் இது. ஆனால் குறை சொல்லக் கூடாது அவ்வளவு நன்றாக இருந்தது. டெக்ஸ் உண்மையை வரவழைக்க திடீரென ஒரு கட்டுக் கதையை சொல்ல ஆரம்பிக்க, அதை சமாளிக்க முடியாமல் "அவன் பாட்டிற்கு அள்ளி விட்டால் என்ன சொல்லி சமாளிப்பது" என்று கார்சன் திணறும் அந்த சம்பவம் நன்றாக இருந்தது. தனுஷ் விவேக் காமெடி (ஆடிட்டராய் இருப்பார்) நினைவுக்கு வந்தது. சார் வாஷிங்க்டன் வெற்றிவேல் உங்க பிரன்ட் என்று சொன்னவுடன் முழி முழியென்று முழிப்பார் அதே மாதிரி கார்சன் முழிப்பது செம காமெடி

இயந்திரத்தலை மனிதர்கள்

பழைய கதைகள் கொஞ்சம் தயக்கத்துடன் வாசிக்க ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் இந்தக் கதை ரொம்ப ஜவ்வு போடாமல் காதில் பூ சுற்றும் ரகம் என்றாலும் ( இதே மாதிரி ஏலியன் அட்டாக் பற்றி மினிமம் ஒரு  பத்து திரைப் படங்களாவது பார்த்திருப்பதால் ) பெரிதாக தெரியவில்லை. நம் சின்ன வயதில் வந்த கதை என்று நினைவில் இருத்தி பார்த்தால் அந்த கால கட்டத்தில் நாம் இதை படித்தால் நம் கற்பனை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது

மாத காலெண்டர்

மாத காலெண்டர் அருமை. வன்மேற்கின் வேங்கை என்ற டைட்டிலோடு டைகரின் படம் அருமை. நண்பர் சௌந்தரின் பிறந்த மாதத்திலேயே டைகர் படம் வந்திருப்பது ஆச்சர்யம். நீ கலக்கு தம்பி. 

டெக்சின் படத்தை சின்னதாக போடாமல் அரை பக்கத்துக்கே போட்டிருக்கலாம். இளவரசி மாடஸ்டியின் படமும் அருமை க்ளாஸிக் ஆக இருந்தது. லக்கி படம் சொதப்பல் பின்னால் இருக்கும் படத்தை மறைத்துக் கொண்டு பெரிய படம் அதுவும் நன்றாக இல்லை.

இந்தா காமிக்ஸ் காலெண்டர் என்று வீட்டில் காட்ட, ஏற்கனவே கீர்த்தி  சுரேஷ் காலெண்டர் வாங்கி மாட்டி இருக்கீங்க இது வேறயா? ன்னு எகிற. ஹி ஹி நான் இதை ஆபிசுக்கு கொண்டு போய்டுறேன்னு வெள்ளை கொடி காட்டினேன்.  

சென்னை புத்தக கண்காட்சி

சனி காலை மருத்துவமனைக்கு சென்று விட்டு மதியம் மூன்று மணிக்குத்தான் வீட்டுக்கு வந்து படுத்தேன். மாலை ஆறு மணிக்கு எழுந்து  கண்காட்சி போனேன். ஈயோட்டிக் கொண்டிருந்தது கண்காட்சி. நேரே நம் ஸ்டாலுக்கு போனேன். எப்பவும் சாரை சுற்றி  10 பேர் நின்று கொண்டிருப்பார்கள். அன்று கம்மிதான்.

ஸ்டாலின் உள்ளே ஒரு பெண் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். சரி யாரோ ஒரு காமிக்ஸ் வெறியர் சாரை சுற்றி நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டே உள்ளே சென்றேன். சூப்பர் 6 ஆரம்பித்த புதிதில் கொஞ்சம் மட்டுமே அடிக்கப் போகிறோம் வெளியே கிடைக்காது என்று சார் சொல்லி இருந்தார். அப்போதும் அதில் வரும் எல்லா புத்தகங்களும் தேவை இல்லை என்பதால் எப்படியும் கண்காட்சிக்கு வரும் வாங்கி கொள்ளலாம் என்று விட்டு விட்டதால் அதை முதலில் தேடினேன், கிடைக்கவில்லை.

ஸ்டாலில் மாயாவி சிவா வருபவர்களுக்கு  நிறைய உதவிகளை செய்து கொண்டிருந்தார். புனித சாத்தானும், ஈரோடு டெக்ஸ் பூனை விஜய்யும், ஷல்லும் பெர்னாண்டன்சும்  நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். விஜயன் சாரிடம் நான் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்த கேள்விகளை கேட்டேன்.

கேள்வி 1  : ரத்தக் கோட்டை  எப்போது வரும் ?
பதில்        : வரும் சார். இத்தனை புத்தகம் வருது அதற்க்கு மேல்தான் அதை பார்க்க வேண்டும் என்ற மழுப்பலான பதிலே கிடைத்தது.

கேள்வி 2  : ரத்த படலம் எப்போது வரும் ?
பதில்        : இதற்கும் சரியான பதில் இல்லை.
ஆனால் அப்போது நான் நினைத்தது ஈரோட்டில் ரத்தக்  கோட்டையும்  2018 இல் ரத்தப் படலமும் வரலாம் என்று நினைத்தேன். அதே போல   சமீபத்திய பதிவில் நம்மிடம் கேள்வி கேட்டிருக்கிறார். ரத்தப் படலத்தை
மின்னும்மரணம் போல ஒரே புத்தகமாக கொடுக்க வேண்டாம் படிக்க கஷ்ட்டமாக இருக்கிறது என்றேன். அதையும் ஒத்துக் கொண்டார், மின்னும் மரணமும் வாசகர்களின் கோரிக்கைக்காகவே ஒரே புத்தகமாக கொடுக்கப் பட்டது.
 
கேள்வி 3  : ப்ளூ கோட் பட்டாளத்தை ஏன் ஒதுக்குகிறீர்கள்? நிறைய ஸ்லாட் கொடுக்கலாமே ?
பதில்        :  கொடுக்கலாம் சார். படிக்க வாசகர்கள் ரெடியா இல்லையே.  கார்ட்டூன் கதை என்றால் கட்டத்துக்கு கட்டம்  சிரிப்பு இருக்கவேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள். சேல்ஸ்  இந்த  சீரிஸ் ரொம்ப கம்மி. என்றார்.

இன்னும் 60+ புத்தகங்கள் இருக்கும் இந்த தொடர் இப்படி ஓரங்கட்டப் படுவது தேவையா?

என் மகனுக்கும் மகளுக்கும் லியோனார்டோ தாத்தா ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேன்.
     

மறுநாள் ஞாயிற்று கிழமை சாயங்காலம் மற்ற புத்தக ஸ்டால்களில் நேரத்தை செலவிட்டேன். நண்பர் பென்ஹர் ஒரு டெக்ஸ் புக் தருவதாக சொல்லி இருந்தார். போன் பண்ணி கண்காட்சிக்கு வந்து கொடுத்து விட்டு போனார். நன்றி நண்பரே  சரி 8 மணிக்கு மேல் போய் லக்கி சூப்பர் சிக்ஸ் இருக்கா என்று பார்த்தேன். முத்து  பேன் தயாளன் சார் எடுத்துக் கொடுத்தார்.

சரி.வீட்டிற்கு கிளம்பலாம் என்று நினைத்த போது சரவணன் என்ற அன்பர் "சார், நீங்க ராஜ் முத்து குமார் தானே? என்றார். நீங்க எழுதுற ப்லோக் படிப்பேன் என்றார்.மடிப்ப்பாக்கம் வெங்கடேஸ்வரன் அறிமுகப் படுத்தினார் என்றார்.இந்த ஊர் நம்மை இன்னுமா பிளாக் எழுதுறவன்னு நம்பிக் கொண்டிருக்குன்னு" நினைச்சவாறே அறிமுகப் படுத்திக் கொண்டேன். வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு நல்ல காமிக்ஸ் ரசிகரை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி. வியாபாரத்தில் நேரமில்லாமல் இருந்தாலும்  ரிலாக்ஸ்  பண்ண காமிக்ஸ் தான் படிப்பேன் என்றார். சந்தா கட்டி விட்டு புத்தகத்தை வாங்கி வீட்டில் அடுக்கி விட்டு படிக்காமல் இருக்கும் அன்பர்கள் கவனிப்பார்களா?

ஓவிய பார்வை

1 ) ட்யுராங்கோ

 மேக்கிங் சூப்பர். ஆனால் உள் தாள் சொதப்பல். கோட் ஸூட் போட்ட போட்ட கனவான் வாயை திறந்தால் சென்னை தமிழில் பேசுவது மாதிரி இருந்தது  
2) மரண தேவன் பின்னே வர முன்னே வரும் கழுகுகள் 


3) பனியில் இருக்கும் போது சற்று வெள்ளை மற்றும் நீல கலரிலும், வீட்டின் உள்ளே இருக்கும்போது தீயின் சிகப்பு மஞ்சள் நிறத்தில் இருப்பதை பாருங்கள்   4) பனியில் கதிரவன் 5) வன்மேற்கின் தெரு வீதி 


6) பண்ணை வீடு

7) பின்னணியில் உள்ள வண்ண சேர்க்கையை பாருங்கள் 


8) காட்டின்  பின்னணியில் ஒரு ஓவியம்


9) ஒரு பக்கத்தில் எத்தனை டுமீல் டுமீல்

10) தனிமையே என் துணைவன் என்று செல்லும் ட்யுராங்கோ. பின்னணி ஓவியத்தை பாருங்கள்

11) அட்டை பட ஓவியம்


12) கண்களுக்கு அடிக்கடி க்ளோஸ் அப் வருகிறது 13) யார் வர போகிறார்  என்ற எதிர்பார்ப்பும் வந்தவுடன் முகத்தில் தோன்றும் நிம்மதியும் குழப்பத்தையும் பாருங்கள் 15) மஞ்சளும் சிகப்பும் கலந்த நல்ல ஒரு வண்ணக் கலவையில் ஒரு பக்கம் 
16) பறவைப் பார்வையில் இரு நல்ல ஓவியங்கள்17) கார்சனின் முகபாவங்களை பாருங்கள் செம காமெடி


க்ளைமாக்ஸ்
ட்யுராங்கோ : மேக்கிங் சூப்பர் ஹீரோ பிடிச்சிருக்கு. நல்ல அறிமுகம்.
ஆவியின் ஆடுகளம் : டெக்ஸ் டிடெக்டிவாக மாறி ஆடும் ஆட்டம்
நானும் சிப்பாய்த்தான் : ப்ளூகோட்ஸின் ஆரம்பக் கதை அத களம் சூப்பர்
இயந்திர தலை மனிதர்கள் : காதில் பூ சுற்றினாலும் ரசிக்க வைத்தது

Post Comment

13 comments :

 1. Ungalukku nalla vettai than polum durango.
  Superb post.
  Subscription panni padikama adiki vaithirupavarkalil nannum oruvan:(

  ReplyDelete
  Replies
  1. என்னாது படிக்கிறது இல்லையா ? காமிக்ஸ் தூணே இப்படி சொன்னா எப்படி ?

   Delete
  2. Ippo than padichu mudichen udane unga pathivu than nyabakam vanthuchu.
   Kathaiyum art workum attakaasam. Kathaikalam konjam bouncer pola.

   Delete
 2. அருமையான பதிவு நண்பரே..!!

  ReplyDelete
 3. அருமையான பதிவு நண்பரே..!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே. ப்ரோபைலில் இருக்கும் போட்டோ ரொம்ப பழசோ ? :D

   Delete
 4. கச்சிதமான விமர்சனம், அழகான ஓவியப் பார்வை!

  புத்தகத் திருவிழாவில் இம்முறை உங்களோடு கொஞ்சமேனும் நின்று அரட்டையடிக்க முடியாததில் துளியூண்டு வருத்தம்!

  ReplyDelete
  Replies
  1. Sunday 8 மணியில் இருந்து நம் ஸ்டால்களில் தான் இருந்தேன் நீங்கள் புறப்பட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன். சனி அன்றுதான் ரெண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோமே.

   ரத்தகோட்டை ஈரோட்டில் ரீலீஸ் என்றால் வர முயற்சிக்கிறேன்

   Delete
 5. அருமை நண்பரே...ஒவ்வொரு மாதமும் உங்கள் பார்வையை தொடரலாமே...

  ReplyDelete
  Replies
  1. நேரம் அதுதானே ஆட்டம் காட்டுகிறது

   Delete
 6. Super work sir, pinni pedal eduthitingha. You are deeply readed and upserving all stories. Keep it up. I don't know how you are alloting time for this analysisation. Remarkable.

  ReplyDelete
  Replies
  1. நேரம் அதுதான் பிரச்னை நண்பரே. இருந்தாலும் எப்படியாவது போட வேண்டியதுதான்

   Delete