Saturday, October 8, 2016

லயன் காமிக்ஸ் சந்தா 2017 - ஒரு அலசல் (Lion Comics Subscription 2017- An Analysis)


என் மனவானில் 

ஒவ்வொரு வருடமும் சந்தா கட்டுவோமா வேணாமா என்கிற கேள்வி நம் எல்லார் முன்னும் நிற்கும். எல்லா வருடமும் ஒவ்வொரு மாதமும் கடைக்கு போய் வாங்குவவதற்கு கஷ்ட்டப் பட்டுக் கொண்டு,  சந்தா கட்டி விடலாம் என்றே முடிவெடுத்திருக்கிறேன். இந்த தடவை சரி கடையில் வாங்குவதற்கும் சந்தாவுக்கும் என்ன வித்தியாசம் மற்றும் புத்தக கண்காட்சியில் வாங்குவதற்கும் சந்தாவுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு Analysis போட்டு விடலாம் என்று நினைத்து போட்ட Analysis தான் இது.

இதில் நான் பண்ணிய Analysis வைத்து மட்டுமே பேசுகிறேன், யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ நான் பேசுவதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் கற்பனையே. 

தமிழ் நாட்டில் இருக்கிறேன், எல்லா புத்தகமும் வாங்குவேன் ஆனால் சந்தா கட்டுவதா, கடையில்வாங்குவதா,  புத்தக கண்காட்சியில் வாங்குவதா என்று தெரியவில்லை என்பவர்களுக்கு இந்த அலசல் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.  

இந்த அலசலில் 5 டேபிள் வருகிறது.



Table #1 
 இந்த டேபிளில் ஒவ்வொரு சந்தாவிற்கும் எத்தனை புத்தகங்கள் ? அதில் கலர் புத்தகங்கள் எத்தனை? கருப்பு வெள்ளை எத்தனை? மொத்தம் எத்தனை என்று போட்டிருக்கிறேன். 

Table #2
இந்த டேபிள் 2017 அட்டவணையில் கடைசி பக்கம் வந்த சந்தா கட்டண அட்டவணை தான். 

Table #3
 இந்த டேபிளில் எந்தெந்த கதா நாயகர்கள் / நாயகிகள் எத்தனை புத்தகங்களில் எத்தனை பாகங்களில் வருகிறார்கள் என்று போட்டிருக்கிறேன். ட்யுராங்கோ வருவது ஒரு புத்தகத்தில் தான் ஆனால் 4 பாக கதை ஒரே புத்தகத்தில் வருகிறது. 

இந்த டேபிளை பார்க்கும்போதே தெரியும் இரவுக் கழுகு உயரே பறப்பது. டெக்ஸுக்கு மட்டும் 9 புத்தகங்கள். மற்றவர்களுக்கு அதிக பட்சம் 2 புத்தகங்கள் தான். வழி வழியாக நாம் வாசித்து மகிழ்ந்த சில கதாநாயகர்கள் இதில் இல்லை. முதலாவது கேப்டன் டைகர், இவர் இல்லாததற்கு இன்னும் கதைகள் இல்லாதது ஒரு காரணம். இன்னுமொரு காரணம் ரத்தக் கோட்டை தனி வெளியீடாக வரவிருப்பது. அனைவருக்கும் பிடித்த கேப்டன் பிரின்ஸ்க்கு ஒரு இடம் கூட கொடுக்காதது வருத்தம் அளிக்கிறது. இவரும் சூப்பர் சிக்ஸ்  புத்தகத்தில் வரவிருப்பதால் இங்கே கல்தா கொடுக்கப் பட்டிருக்கிறார்.  ட்யுராங்கோ மற்றும் லேடி S புது வரவுகள். 

Table #4
இந்த டேபிள் ஒவ்வொரு சந்தாவில் இருக்கும் புத்தகங்களை கடையில் வாங்கினால் எவ்வளவு ஆகும்?, புத்தக கண்காட்சியில் 10% தள்ளுபடியில் வாங்கினால் எவ்வளவு ஆகும்? என்று காண்பிக்கும். தனித்தனியாக சந்தா இல்லை என்பதால் அதை இங்கே நுழைக்கவில்லை.

Table #5

ரொம்ப முக்கியமான டேபிள். தமிழகத்துக்குள் இருக்கும் வாசகர்களே அதிகம் என்பதால் சந்தாவுக்கு அந்த  DTDC/ST கூரியர் விலைகளையே எடுத்துக் கொண்டுள்ளேன். நீங்கள் தமிழகத்துக்கு வெளியே இருந்தால் அதற்க்கேற்ப சந்தா விலை காலத்தில் மாற்றிக் கொள்ளவும் 

சந்தா A + B + C + D +E
என்னை ரொம்ப ஆச்சர்யப் படுத்தியது, சந்தா A + B + C + D +E தான். கடையில் வாங்குவதை விட சந்தாவில் 50 ரூ கம்மி. அதனால் எல்லா புத்தகமும் வாங்குவேன் ஆனால் புத்தக கண்காட்சி வரைக்கும் பொறுத்திருக்க முடியாது, மாதாமாதம் கடையில் வாங்கிருவேன் என்பவர்கள் கண்ணை மூடிக் கொண்டு சந்தாவை கட்டுங்க சாமியோவ். 

புத்தக கண்காட்சி வரைக்கும் வெயிட் பண்ணலாம் என்பவர்களுக்கு கிடைக்கும் லாபம் 385 ரூபாய் மட்டுமே. கண்காட்சிக்கு போக வர செலவு, அங்கே சாப்பாடு , ஸ்நாக்ஸ் , காபி , டீ, போனது வந்ததுன்னு வர்ற செலவுகளையும் பாருங்க அப்புறம் ஒரு முடிவுக்கு வாங்க. :-) 

சந்தா A + B + C + D 
சந்தாவுக்கும் கடையில் புத்தகத்தை வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம் வெறும் 50 ரூபாய் மட்டுமே. சந்தா - கடை என்ற காலத்தை பார்க்க. என்னை  பொ றுத்தவரை இதற்க்கு சந்தாவே பெஸ்ட் என்பேன் நான். 

சந்தாவுக்கும் புத்தக கண்காட்சியில் வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம் 420 ரூபாய். கண்காட்சி செலவுகளை மனதில் வைத்து முடிவு செய்யவும்.  

சந்தா A + B + C + E
சந்தாவுக்கும் கடையில் புத்தகத்தை வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம் வெறும் 5 ரூபாய் மட்டுமே. சந்தா - கடை என்ற காலத்தை பார்க்க. என்னைப் பொறுத்தவரை இதற்க்கும் சந்தாவே பெஸ்ட் என்பேன் நான். 

சந்தாவுக்கும் புத்தக கண்காட்சியில் வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம் 386.50 ரூபாய். கண்காட்சி செலவுகளை மனதில் வைத்து முடிவு செய்யவும்.  

சந்தா A + B + C 
சந்தாவுக்கும் கடையில் புத்தகத்தை வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம் வெறும் 85 ரூபாய் மட்டுமே.  என்னைப் பொறுத்தவரை இதற்க்கும் சந்தாவே பெஸ்ட் என்பேன் நான். 

சந்தாவுக்கும் புத்தக கண்காட்சியில் வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம் 401.50 ரூபாய். கண்காட்சி செலவுகளை மனதில் வைத்து முடிவு செய்யவும்.  

சந்தா E 
சற்று என்னை யோசிக்க வாய்த்த சந்தா இது என்பேன். சந்தாவுக்கும் கடையில் புத்தகத்தை வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம் 250 ரூபாய். வெறும் ஆறு புத்தகங்கள் உள்ள ஒரு சந்தாவிற்கு இது சற்று அதிகமே. குறைந்த பிரிண்ட் ரன் மட்டுமே, கடைகளில் கிடைக்காது எங்களிடம் மட்டுமே வாங்கமுடியும் என்ற கட்டாயத்தை எடிட்டர் வைத்திருக்கிறார். கட்டாயம் வாங்க வேண்டும் என்பவர்கள் சந்தா E வருமாறு ஏதாவது ஒரு சந்தா காம்போவை தேர்வு செய்யலாம்.  எப்படின்னாலும் புத்தக கண்காட்சிக்கு இதை கொண்டு வந்துருவாரு பாருங்க என்பவர்கள் கண்காட்சி வரை வெயிட் பண்ணலாம். 

க்ளைமாக்ஸ் 
சரி என்னதான் முடிவா சொல்லவர்றிங்கன்னு கேட்டா, நீங்க எல்லா புத்தகத்தையும்   வாங்குவேன்ன்னு சொல்ற ஆளா இருந்தா சந்தா கட்டுவதுதான் பெஸ்ட். 

எனக்கு ஒரு சில கதாநாயகர்கள் மட்டுமே பிடிக்கும் அல்லது மறு மதிப்பு நாயகர்கள்  மட்டும் பிடிக்கும் அவர்கள் புத்தகம் மட்டுமே வாங்குவேன்  அல்லது நான் வாங்கும் புத்தகங்களின்  எண்னிக்கை கம்மி என்பவர்கள் உங்கள் காத்திருப்பின் வலிமையை பொறுத்து கடையிலோ புத்தக கண்காட்சியிலோ வாங்கி கொள்ளுங்கள். அம்புட்டுதேன். :-)

Post Comment

26 comments :

  1. நல்லா யோசனையான பதிவு அண்ணா
    இதை படிக்கிறவங்க
    கண்டிப்பா சந்தா கட்டுவதைப்பற்றி யோசிப்பாங்க

    கீப் இட் அண்ணா

    ReplyDelete
  2. நல்லா யோசனையான பதிவு அண்ணா
    இதை படிக்கிறவங்க
    கண்டிப்பா சந்தா கட்டுவதைப்பற்றி யோசிப்பாங்க

    கீப் இட் அண்ணா

    ReplyDelete
    Replies
    1. Excellent analysation. You are absolutely correct. The bestway to buy books only paying annual Sandha only. V. SUNDARAVARADAN, LITTLE KQNCHEEPURAM.

      Delete
  3. அருமையான பதிவு கணக்கு போட்டு பார்க்க வேண்டும் என பலர் நினைப்பர் ஆனால் செய்ய மாட்டார்கள் ஆக என்னை போன்றவர்களுக்கான பதிவு. சந்தா கட்டியாகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிருஷ்ணா !

      Delete
  4. வணக்கம் ஜி! நல்லதொரு பதிவு. ஒரு ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமே போட்டு விட்டீர்கள். பட்ஜெட் ராஜ் என்ற சிறப்பு அடை மொழிப் பெயரை உங்களுக்கு சூட்டி மகிழ்கிறேன். நல்ல பயனுள்ள காலத்துக்குத் தேவையான பதிவு.

    ReplyDelete
  5. சந்தா கட்டுவது நமக்கு லாபமான ஒன்றே,,நேரம், பணம்,மிச்சம்

    ReplyDelete
  6. நல்ல அலசல்.

    ஒரு சின்ன சந்தேகம்,
    உங்க. வீட்டில் துணி துவைக்கும் இயந்திரம் இல்லையா.;)

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி அலசுறது தொவைக்கிறது எல்லாம் நானே

      Delete
  7. நண்பர் ராஜ் முத்து குமார்

    சந்தா கட்டுவது அருமை ....அது தான் நல்லது மிக நல்லது பயனுள்ள பதிவு.

    சில விசயங்களை கணக்கிடாமல் மறந்து விட்டீர்கள் . அதையும் கணக்கிட்டால் நன்றாக இருந்திருக்கும் ( டேமேஜ் ஆன புத்தகத்தை எப்படி மாற்றுவது , இதன் வருட வட்டி வீதம், சராசரி சம்பளம் வாங்கும் நபர்களுக்கு இது சாத்தியமா ஏனெனில் இன்றும் பலர் சம்பளமே 5 இலக்கினி தாண்டுவது சிரமமக உள்ளது , இப்படி.... )

    என்னை பொறுத்தவரை எப்படி வாங்கினாலும் விலையினை கூட்டியது அதிகமே தங்ககல்லறை 100 விற்றது . இன்று அதனை விட குறைந்த பக்கமுள்ளது சில ஆண்டுகளில் 50% விலை ஏற்றத்தில் 150 ஆனது அதிகமே .

    இது எனது சொந்த கருத்து மட்டுமே . ( பின்னூட்டம் போட்டு பல வருசமாச்சு )

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்டாலின். உங்களின் சில கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த பதில். எடிட்டருக்கு பதிலாக நான் பேசவில்லை, எனக்கு தெரிந்த பதில் மட்டுமே

      1) டேமேஜ் ஆன புத்தகத்தை எப்படி மாற்றுவது ?
      நீங்கள் கால் பண்ணி சொன்னால் உடனே அனுப்பி விடுகிறார்கள். சென்னை நண்பர்கள் வாங்கி இருக்கிறார்கள்.

      2) இதன் வருட வட்டி வீதம்
      நாம் 4300 ரூபாய்க்கு 10% வட்டி போட்டால் ரூ 430, இதில் 46 புத்தகங்கள் கூரியரில் அனுப்ப வேண்டுமே?

      3) சராசரி சம்பளம் வாங்கும் நபர்களுக்கு இது சாத்தியமா ஏனெனில் இன்றும் பலர் சம்பளமே 5 இலக்கினி தாண்டுவது சிரமமக உள்ளது

      உண்மை. நிறைய நண்பர்களின் வருமானம் 10 ஆயிரத்தை தாண்டவில்லை. இதில் இந்த சந்தா , சூப்பர் 6 மற்றும் ரத்தக் கோட்டை என்றால் கட்ட முடியாது. இதில் மாற்றுக் கருத்து இல்லை.

      4) என்னை பொறுத்தவரை எப்படி வாங்கினாலும் விலையினை கூட்டியது அதிகமே தங்ககல்லறை 100 விற்றது . இன்று அதனை விட குறைந்த பக்கமுள்ளது சில ஆண்டுகளில் 50% விலை ஏற்றத்தில் 150 ஆனது அதிகமே

      விலை கூடுதலாக இருப்பது உண்மையே. ஆனால் ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்க கூடியவர் எடிட்டர் மட்டுமே. ஈரோடு கண்காட்சிக்கு வரும்போது நீங்கள் கேட்கலாமே? :-D

      Delete
  8. அப்புறம் புத்தகம் வரலைன்னா போன்செய்து கேட்டால் கொரியர் எண்ணை தருவதாக அலுவலகத்தில் இழுத்தடித்து வரும் பதிலுக்கு நாம் செய்யும் போன்கணக்கையும் சேத்துக்கோங்க :) :) ;)

    ReplyDelete
    Replies
    1. எனக்கு அந்த மாதிரி லேட் ஆகவில்லை ST கூரியருக்கு மாறிய பிறகு. கூரியர் ஆபிசில் இருந்து நம்பர் வருவதற்கு தாமதம் ஆவதாக ஒரு முறை சொன்னார்கள். அதுதான் காரணமாக இருக்குமோ ?

      Delete
  9. @ ராஜ்

    அருமையான அலசல்.! அக்கறையான பகிர்வு.!! அடக்கமான அட்டவணைகள்.!!! என் பாராட்டுகள் ராஜ்,இதை உங்கள் அனுமதியோடு fb யில் பகிர்ந்துகிறேன். :)))

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிவா. ஷேர் பண்ண அனுமதி தேவையா என்ன ? பிடித்தால் பகிருங்கள் அவ்வளவே.

      Delete
  10. சின்ன சின்ன சந்தோஷங்களை நிறைய தொலைத்திருக்கிறோம்..
    புத்தக தேதி முடிவாகி வெளிவரும் நாள் எதிர்பார்த்து
    பார்சலை கைகளில் வாங்கி நீண்ட நெடு நேரம் அதை காதலோடு பார்த்துக் கொண்டேயிருப்பது.....
    ஆழமான அழகான ஒரு அற்புதமான புணர்ச்சியின் சுகம் அதிலுண்டு..!
    உங்களின் பதிவு அழகு...!
    வாழ்த்துக்கள் தோழமையே...!!

    ReplyDelete
  11. ராஜ் முத்து குமார் சார் ...லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா மட்டுமல்ல பெஸ்ட் ஆகவும் வந்து இருக்கீக ...

    மனமார்ந்த பாராட்டுக்கள் ...

    உங்கள் பதிவுகள் ஆசிரியரின் பதிவு போலவே சுவையானது ...கொஞ்சம் அடிக்கடி வாருங்கள் ...:-)

    ReplyDelete
  12. Useful post. Thanks Raj
    Clear as crystal

    ReplyDelete
  13. டியர் ராஜ்முத்துகுமார்,

    அருமையானதொரு அலசல் பதிவு! நன்றாக உழைத்திருக்கிறீர்கள் என்பது டேபிள்களைப் பார்க்கும்போது உணரமுடிகிறது! 'சந்தாவா? கடையா? கண்காட்சியா?' என்று தற்போது கொஞ்சம் குழப்பத்திலிருக்கும் நண்பர்களுக்கு சாலமன் பாப்பையா பாணியில் 'சந்தாவே.. சந்தாவே.. சந்தாவே!' என அழகாகக் தீர்ப்புச் சொல்லியிருக்கிறீர்கள்! குறிப்பாக, கடையில் வாங்குவதைக் காட்டிலும் சந்தாக் கட்டுவதில் ரூ.50 லாபமே எனக் கண்டுபிடித்துச் சொல்லியிருப்பது உங்கள் உழைப்பின் பலன் என்றே சொல்லலாம்!

    என் வாழ்த்துகள்!!

    உங்களுக்கே உரித்தான ஹாஸ்யநடை + ஓவியப் பார்வை சகிதம் ஒரு பதிவைப் படித்துப் பல மாமாங்கங்கள் ஆகிவிட்டதே? நேரம் கிடைக்கும்போது அப்படியொரு பதிவைப் போட்டுத் தாக்க முயற்சியுங்களேன் ப்ளீஸ்?

    ReplyDelete
    Replies
    1. //உங்களுக்கே உரித்தான ஹாஸ்யநடை ஓவியபார்வை சகிதம் ஒரு பதிவை படித்துப் பல மாமாங்கள் ஆகிவிட்டதே.!//

      சரியா சொன்ணீங்க ஈரோடு விஜய்.!
      தீபாவளிக்கு ஒரு பதிவு போடுவார் என்று எதிர்பார்ப்போம்.!

      Delete
  14. ராஜ் குமார்.!

    காமிக்ஸ் ஆர்வத்துடன் படிப்பவர் என்றால் ,வசதி , வாய்ப்பு இருந்தால் சந்தா கட்டுவதுதான் சாலச்சிறந்தது.அதுவும் சென்னைப்போன்ற நகரங்களில் சந்தா கட்டவில்லை என்றால் இருமடங்கு வீண் செலவும் பொன்னான நேரத்தை இழக்க நேரிடும்.இதை அனுபவத்தில் இந்த வருடம் உணர்ந்தேன்.! அடிக்கடி பதிவிடுங்கள் சார்.

    என் ID jai02venkates@gmail.com

    ReplyDelete