Saturday, January 9, 2016

மரணத்தின் முத்தம்- Modesty Blaise

என் மன வானில்

நார்மலாக மாடஸ்ட்டி கதைகள் மேல் அவ்வளவு சுவாரஸ்யம் இருப்பதில்லை.  மாடஸ்ட்டி ஒரு வெட்டு வெட்டினாள், அவன் வெட்டுண்ட மரம் போல சாய்ந்தான்.கார்வின் காங்கோவை பிரயோகித்தார் அவன் கதை முடிந்தது என்பது போன்ற வர்ணனைகளும் மாடஸ்ட்டியின் ஜிம்னாஸ்டிக் போஸ்களும் எனக்கு (எனக்கு மட்டுமே - இப்படி சொல்லலன்னா மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன் என் மேல் கேஸ் போட்டு விடுவார்) அவ்வளவு சுவாரஸ்யமாக இருப்பதில்லை. இல்லை ஒரு ஆணாதிக்க மனோபாவத்தில் இருக்கிறேனா என்பதும் தெரியவில்லை.

சில கதைகள் நம்மை தூங்க விடாது, என்ன வேலை இருந்தாலும் போஸ்ட்டப் போடுன்னு தொல்லை பண்ணும். அந்த மாதிரி ஒரு கதை தான் இந்த "மரணத்தின் முத்தம்".  மாடஸ்ட்டி கதையில் கார்வினையே சைடு ஆக்டர் மாதிரி பயன் படுத்துவார்கள். ஆனால் இந்த கதை முழு முதல் நாயகன் சுப்ரீம் மாஸ்டர் சராகம்தான். கதை ஆரம்பிப்பதும் அவரிடம் தான் முடிவதும் அவரிடம் தான். 

அந்த க்ளைமாக்ஸ் அடடா ஒரு சீன அல்லது ஜப்பானிய படத்தை பார்த்தது போல் ஒரு விறுவிறுப்பு. StandStill எனப்படும்  மன அசைவிலா நிலை  தான் தியானத்தில் போற்றப்படும் நிலை. அப்படி ஒரு நிலையை அடைந்ததால் தான் சுப்ரீம் மாஸ்டர் ஆகிறார் சராகம்.

ஒரு வேளை மாடஸ்ட்டியை கேட்காமல் வேறு ஒரு சாதாரணமான பெண்ணை கேட்டிருந்தால் அவர் பேத்தியைக் காப்பாற்றி விட்டு, சண்டையிட்டு உயிர் துறந்திருப்பார் என்பது என் அனுமானம்.

மாடஸ்ட்டி தன் மாஸ்ட்டரை புரிந்து கொள்ளும் இடம்.

மாடஸ்ட்டிக்கும் கார்வினுக்கும் என்ன ஒரு பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா டிரஸ்? மாடஸ்ட்டியை கோடஸ்ட்டி ஆக்கின மாதிரி ஆக்கிபுட்டாரா?                 

மாஸ்டர் தன் மாணவியைப் பற்றி பெருமிதம்  கொள்ளுமிடம்

 சீன பட சண்டை காட்சி போல ஒரு ஓவியம்

 மாஸ்ட்டர் சராகமின் கையை கவனியுங்கள், எவ்வளவு தளர்வாக இருக்கிறது. அடிப்பதற்குள்ள எந்த ஏற்பாடும் இல்லை.மாஸ்ட்டர் சராகமின் கையை கவனியுங்கள், எவ்வளவு தளர்வாக இருக்கிறது. அடிப்பதற்குள்ள எந்த ஏற்பாடும் இல்லை. காரணமில்லாமலா கைக்கு க்ளோஸ் அப் போட்டிருப்பார் ஓவியர்    
 தான் அவனை கொல்லவிருக்கும் காரணத்தை விளக்கும் மாஸ்ட்டர்


 கீழுள்ள முதல் படத்திலும் அவர் கை தளர்வாகவே இருக்கிறது.  கீழுள்ள முதல் படத்திலும் அவர் கை தளர்வாகவே இருக்கிறது.  ரெண்டாவது படத்தில் ஒரே அடி, அடி வாங்கியவன் உடல் கீழே விழுமுன் உயிர் பிரிகிறது.

இப்படிப்பட்ட மன ஆற்றல் இருப்பதாலேயே மாடஸ்ட்டி ஒரு இடத்தில மாஸ்ட்டர் முன் நாம் அற்பமானவர்கள் என்பாள்.


க்ளைமாக்ஸ் 

இதுதான் ஒரு கருப்பு வெள்ளை புத்தகத்திற்கு நான் போட்ட முதல் போஸ்ட் என்று நினைக்கிறேன். சுப்ரீம் மாஸ்ட்டர் சராகம் நம் மனதில் என்றும் இருப்பார். 

Post Comment

14 comments :

 1. @ ராஜ் முத்துகுமார்

  படங்கள் சொல்லும் தகவல்களை ஆழமாக பார்க்கும் உங்கள்கண்ணோட்டமே அமர்க்களம்தான் போங்கள்..! பாராட்டுகள்..!!

  ReplyDelete
 2. அருமையான பதிவு நண்பரே. தொடருங்கள். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. Raj wrong description for Karvin he uses only knives and modesty will only use Congo. I loved these characters in Rani 1st and then came to know from lion. Lot of very good stories there. Read if u get a chance.

  ReplyDelete
  Replies
  1. Thanks Krishna. May be I read less famous stories of Modesty. I don't have Modesty books actually. Will get it from friends.

   Delete
 4. அடடே! சூப்பரான விமர்சனம்!.ஒரு ஹீரோ (அ) ஹீரோயின் பிடிக்குதோ! இல்லையோ! கதையை புரிந்து கொண்டு மனதில் பட்டதை அப்படியே விமர்சனமாக எழதினால் தனி சுவராசியம்தான்.!சூப்பர்.!

  ReplyDelete
 5. //எனக்கு மட்டுமே பிடிக்கவில்லை .என்று சொல்லாவிட்டால்//

  ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை.!பிடித்தால் பாராட்டவேண்டியதுதான்.இல்லாவிட்டால் கழுவி கழுவி ஊற்ற வேண்டியதுதான்.! இந்த உரிமையில் யார் தலையிடமுடியும்.? நீங்கள் கூறியமாதிரி "எனக்கு மட்டும்தான்" ரொம்ப பிடிக்கும்.!


  " என் கடமை என் உரிமை.!"

  இந்த வாசகம் எல்லா காமிக்ஸ் ரசிகர்களுக்கும் பொருந்தும்தானே.!

  சார் அடிக்கடி பதிவிடுங்கள் .உங்கள் பார்வையில் நீங்கள் பெரும் ரசிகர் என்று தெரிகிறது.காமிக்ஸ பற்றிய உங்கள் பார்வையில் விமர்சனத்தை படிக்கும்போது.நான் ஏதோ காமிக்ஸை குத்துமதிப்பாக படிப்பது போன்று தோன்றுகிறது.உங்கள் சேவை எங்களுக்கு தேவை.!(குறிப்பாக கி.நா.விற்கு.!)

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கடேஸ்வரன். எங்கே உங்களை காணோமே என்று பார்த்தேன். உங்கள் போன் நம்பர் என்னிடம் இல்லை. 9444 112 445 என் நம்பர் ப்ரீயாக இருக்கும்போது கால் பண்ணுங்கள்.

   Delete
 6. ///காமிக்ஸ பற்றிய உங்கள் பார்வையில் விமர்சனத்தை படிக்கும்போது.நான் ஏதோ காமிக்ஸை குத்துமதிப்பாக படிப்பது போன்று தோன்றுகிறது.///

  நன்றி M.V அவர்களே!

  அதிக வேலைப்பளு காரணமாக இப்புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை அல்லது இதுமாதிரியான ஒரு விமர்சனத்திற்காகக் காத்திருந்தேன் என்று வேண்டுமானாலும் சொல்லலாம். ;)

  நன்றி ரா.மு.கு அவர்களே! :)

  ReplyDelete
 7. அனைவருக்கும் வணக்கம்

  புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

  நன்றி

  நமது தளத்தை பார்க்க Superdealcoupon

  ReplyDelete