Sunday, November 1, 2015

உள்ளம் கவர் கள்வன் (Krishna : Defender of Dharma & Sundhara Kandam)


என் மன வானில்

பிளிப்கார்ட்டில்  கிராபிக் நாவல் என்று தேடும்போது இந்த கிருஷ்ணன் ஓவியத்தை பார்த்தேன். அப்படியே என்னை கவர்ந்து விட்டான் என் உள்ளம் கவர் கள்வன்.  சற்று சல்லிசாக கிடைக்கவும் வாங்கினேன். அதனுடன் சுந்தர காண்டம் என்ற அனுமனின் கி நா வும் கிடைக்க ரெண்டையும் அமேசானில் வாங்கினேன். 

ரெண்டே நாளில் வந்தவுடன்  கிருஷ்ணன் புத்தகத்தை நாள் முழுதும் புரட்டி பார்த்துக் கொண்டே இருந்தேன் அவ்வளவு அருமை. ஒவ்வொரு ஓவியமும். ஒவ்வொரு ஓவியத்தையும் செதுக்கி  இருக்கார்  மனுஷன் . ரூ 250  அட்டைப் பட ஓவியத்துக்கே சரியா  போச்சு . ஒரு மெஸ்மாரைசிங் ஓவியம் அது. ஒரு ஐந்து அந்த ஓவியத்தை உற்று பார்த்தால் கிருஷ்ணனுடன் நீங்கள் சினேகமாகி விடுவீர்கள். 

சுந்தர காண்டம் கிருஷ்ணன் அளவுக்கு இல்லாவிட்டாலும் நன்றாகவே இருந்தது. முக்கியமாக அட்டைபடம் அனுமனின் விஸ்வரூப தரிசனம் நன்றாக இருந்தது. கிருஷ்ணன் புத்தகம் ஓவிய காதலர்கள் ஒவ்வொருவரும் வாங்கி பாதுகாக்க வேண்டிய புத்தகம். ஓவியர்களும்   வாங்கி பயில வேண்டிய புத்தகம் அது. 

ஓவியப் பார்வை 

உருவாக்கிய மகானுபாவர்கள் 



 வெறி தெறிக்கும் கண்கள்

 ஆதி சேஷனும் ஆதியும்

 அனுபவித்து தூங்கும் கண்ணன்

விஷமக் குழந்தை 

 

நந்தலாலா 
 
காளிங்க நடனம் 

 கிருஷ்ண ப்ரேமம்

 சிவ தனுசை உடைக்கும் கண்ணன்


 மல்லர்களை துவைக்கும் கண்ணன் (தலை நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிய வில்லை)
 கம்ஸ வதம்


 கிருஷ்ண  உபதேசம்


 பீஷ்மரை ஹதம் பண்ண பாயும் கிருஷ்ணன்

 பிரம்மாஸ்திரத்தை அடக்கும் கண்ணன்

 சாபம் வாங்கும் போது அவரின் நீல நிறம் வெளிறி இருப்பதை பாருங்கள்

 மோகனக் கண்ணன் (என்னா ஓவியம்ப்பா)


 பரப்பிரம்மம்



பிரம்மாண்ட அனுமன் 


அனுமன் வாயு புத்திரன் என்பதால் வாயுவாகி இருப்பது போல் அவருடைய உடலை வரைந்து இருப்பதை பாருங்கள். 





 இலங்கை தீ

 சற்று சோர்வாகி ரெஸ்ட் எடுக்கும் அனுமன்



 ஓவியத்தில் லைட்டிங்கை பாருங்கள்


 வருண தேவன்



க்ளைமேக்ஸ் 
கிருஷ்ணன் புத்தகத்தை கண்ணை மூடிக் கொண்டு வாங்குங்க. இந்தியாவிலும் ஓவியத்திறமை இருக்கா என்பவர்கள் முகத்தில்  எறிய வேண்டிய புத்தகம் இது. சுந்தர காண்டத்தை நான் அப்லோடி இருக்கும் ஓவியங்கள்  பிடித்தால் வாங்குங்கள். 

Post Comment

8 comments :

  1. கொள்ளை அழகு குட்டி கிருஷ்ணன். இங்கிலீசு தெரியலைன்னாலும் வாங்கிபுடுறேன் ! :)

    ReplyDelete
  2. @ ராஜ் முத்து குமார்

    நான் ஒரு தீவிர கிருஷ்ண பக்தன்..."தன்னை அறிந்தவன் எவனோ, அவனே என்னை அறிந்தவன்" என்ற கிருஷ்ணபரமாத்மா வாக்கு, என்னை எனக்கு காட்டிய வேதம்..! உங்கள் பதிவு...பெயர்கள் இட்டு போட்ட பட்டியல் படங்கள் மயக்கிவிட்டது. அதுவும் அந்த 'நந்தலாலா' அட்டகாசம்..! என் சிறுவயதில் நான் எங்கோ பார்த்த பல அற்புதமான கிருஷ்ணரின் ஓவியங்களை, நீங்கள் போட்ட ஓவியங்கள் நினைவுட்டிவிட்டது..! அறிமுகபடுத்தியமைக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  3. வாங்குவதர்கான லிங்க் சேர்த்தால் உபயோகமாக இருக்கும். அருமையான ஓவியங்கள்.

    ReplyDelete
    Replies
    1. @ கிருஷ்ணா VV

      வாங்குவதற்கான லிங்க்...இங்கே'கிளிக்'

      Delete
    2. நன்றி Krishna . நீங்கள் ஏற்கனவே வைத்திருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete