Saturday, November 14, 2015

4 டேபிள் உணவகங்கள் (Hajeera's Kitchen, Peungudi, Rayar Mess, Mylapore)

4 டேபிள் உணவகங்கள்

அது என்ன 4 டேபிள் உணவகங்கள் என்கிறீர்களா? நாளே நாலு சாப்பாட்டு மேஜை இருக்கும்  அதில் ஒவ்வொன்றிலும் நாலு பேர் சாப்பிடலாம். முன்னர் இந்த மாதிரி உணவங்களை மெஸ் என்று அழைப்பார்கள். இப்போதும் கூட சில இடங்களில் உண்டு. கடந்த வாரம் அந்த மாதிரி ரெண்டு உணவகங்களில் உணவருந்தினேன். அங்கே என் அனுபவமும் அவற்றை பற்றிய ரெவ்யுவும் தான் இந்த பதிவு.

1) ஹாஜீராஸ் கிச்சன் (Hajeera's Kitchen, Perungudi)

எனக்கு ஒரு பார்சல் வரவேண்டி இருந்தது. அதற்காக பெருங்குடி ப்ளூ டார்ட் ஆபிசுக்கு 8.30 PM போனேன். சார் 6.30 க்கு தான் இங்கே வந்தது இன்னமும் பேகை பிரிக்கல. எப்படியும் 10 மணி ஆகிடும் நீங்க போயி சாப்பிட்டு வாங்க என்றார் பணியாளார். சரி எங்க சாபிடலாம்னு நினைக்கும்போது Where Chennai Eats என்ற பேஸ்புக் குருப்பில் ஹாஜீராஸ் கிச்சன் பற்றி போட்டிருந்தது சரி கூகுளை தேடுவோம் என்று பார்த்தால் அவர்கள் போட்டிருந்த படம் தெளிவாக இல்லை. அந்த நம்பருக்கு போன் அடித்தேன் தெளிவாகவும் மரியாதையாகவும் பதில் சொன்னார்கள்.

எங்கே இருக்கு ?

 
 
OMR இல் அப்பலோ ஹாஸ்பிடல் (பழைய லைப் லைன் ஹாஸ்பிடல்) அருகில் பிரியும் M.G.R சாலையில் 300 மீட்டர் தொலைவில் இடது கைபக்கம் முதல் மாடியில்.
 

 
போனவுடன் நாளே நாலு டேபிள் இருந்ததுதான் டக்கென்று கண்ணில் பட்டது.  AC க்கு நேரில் அமர்ந்தால் சீக்கிரம் சாப்பாடு ஆறிவிடும் என்பதால்  (நாங்கல்லாம் அப்பவே அப்பிடி )AC க்கு  எதிரில் இருக்கும்  டேபிளில் அமர்ந்தேன்.

Where Chennai Eats குருப்பில் சொல்லி இருந்தவர் சொன்னபடி ஒரு காம்போ ஆர்டர் பண்ணினேன்( முஸ்லிம்  மட்டன் பிரியாணி + சிக்கென் 65 -3 பீஸ்  + ஸ்வீட் ) விலை 240 ரூ.  சார் ஸ்வீட் இல்லை அதுக்கு பதில் இன்னும் ரெண்டு பீஸ் சிக்கென் 65 குடுத்துரட்டுமா என்றார். தெய்வமே ! அத  குடுமையா என்றவுடன் சிறிது நேரத்தில் சுட சுட பிரியாணி வந்தது.  என்னடா Starter சிக்கென் 65 குடுக்காம இத குடுக்கிறானே ன்னு நினைச்சுக்கிட்டே ஒரு வாய் பிரியாணியை எடுத்து வாயில் போட்டேன். WOW என்று நான் சொல்ல ஆரம்பித்தது கடைசி வாய்  வைக்கும்வரை ஒவ்வொரு வாய்க்கும் அந்த WOW சொல்லவதை என்னால் நிறுத்த முடியவில்லை. 20 வருடங்களுக்கு முன் சென்னை வந்தேன். அன்றிலிருந்து இது வரை இப்படி ஒரு பிரியாணியை சென்னையில் சாப்பிடவில்லை. பாதி பிரியாணி காலி ஆனவுடன் 65 வந்தது சுடச்சுட. சிக்கென் 65 நான் தவிர்ப்பதற்கு காரணம் எண்ணையில் பொரித்து  ரப்பர் மாதிரி இருக்கும். மசாலா உள்ளே இறங்கீருக்காது. ஆனால் அந்த மாதிரி எந்த பிரச்னையும் இல்லை சாப்ட்டாக ஜுசியாகவும் இருந்தது. யப்பா இந்த மாதிரி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு.  

நான் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போதே நிறைய பேர் பார்சல் வாங்கிக் கொண்டு போனார்கள். 7 பேர் வந்து முன்னால் இருந்த ரெண்டு டேபிளை ஒன்றாக்கி போட்டு உட்கார்ந்து சாப்பிட்டார்கள். பெருங்குடி அன்பர்கள் கொடுத்து வைத்தவர்கள் . இவ்வளவு நன்றாக இருந்தும் ரூ 240 தான் என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. VFM I strongly Recommend.

என் Suggestions

1) பிரியாணியை பிளாஸ்டிக் பாத்திரத்தில் தராமல் நல்ல காப்பர் பாத்திரத்தில் தரலாம்.
2) கடை மெனுவையும் , கடைக்கு வர வேண்டி நீங்க கொடுத்திருக்கும் மேப்பையும் தெளிவா போடுங்கள் .
3) இன்னும் பெரிய இடத்துக்கு போகலாம், பெருங்குடி நல்ல இடம், சற்றே பெரிய இடமாக இருந்தால் நன்றாக இருக்கும்

 2) ராயர் மெஸ் (Rayar Mess, Mylapore)

 

Zamoto  வில் 4 ஸ்டார் வாங்கிய மெஸ் இது. போன ஞாயிறு மழையுடன் அதி காலையில் மருத்துவரைப் பார்க்க மயிலாப்பூர் சென்றேன். மருத்துவரைப் பார்க்க முடியாமல் சரி ஏதோ ஆஹா ஓஹோன்னு சொல்றாங்களே ன்னு அருண் டேல் தெருவில் இருக்கும்  ராயர் மெஸ் போனேன். சரி மழை பெய்யுது கூட்டம் இருக்காதுன்னு பார்த்தா கூட்டம் கண்ணைக் கட்டுது. அம்புட்டும் ஹிந்தி வாலாக்கள். முதலில் வாயிலில் இருந்த ஒரு பையன் எத்தனை பேர் சார் என்று கேட்டு எழுதிக் கொண்டு ரெண்டாவது பந்தியில் தான் உங்க முறை வரும் சார் என்றான். சரின்னு மழைக்கு ஒதுங்கி நின்றேன்.

 எதிரில் ஒருத்தன் இளம் பொண்டாட்டியை இந்த மெஸ்சுக்கு கூட்டி வந்து விட்டு எப்பொ வேணாம் வேற எங்கயாவது சாப்பிடுவோம்ன்னு சொல்லிருவாலோன்னு   பதறிக்கிட்டு இருந்தான். அவள் கவனத்தை திசை திருப்ப செல்ல விளையாட்டு வெலயாண்டுக்கிட்டு இருந்தான்.  ஆண்டவா இவன் நமக்கு முன்னாடி உக்காரக் கூடாதுன்னு நினச்சேன். ஆனால் அந்த ஜோடி முன்னாலேயே உக்கார வேண்டி இருந்தது. அட ராமா.  மெஸ் உள்ளே போனால் நெருக்கமாக 4 டேபிள் மட்டுமே இருக்கிறது. ஒரு வீட்டின் ஹாலை அப்படியே டைனிங் ஹால் ஆக்கி விட்டார்கள் . பக்கத்திலேயே கிச்சன்  இருக்கிறது.

காலையில் வெண் பொங்கல், இட்லி , வடை மட்டுமே என்றார்கள். எல்லோரும் அமர்ந்தவுடன் இலை போட்டு பொங்கல் வைத்தார்கள். சாம்பார் ஊத்தினார்கள். ரெண்டு வாய் வைத்தேன் பிடிக்கவில்லை. பொங்கலை தனியாகவும் சாம்பார் தனியாகவும் சாப்பிட்டு பார்த்தேன். சாம்பார்  உறைப்பு இல்லாமல் பிளான்டா இருந்தது.  சாம்பார் பொடி இல்லாமல் வைத்தால் எப்படி இருக்குமோ அந்த சுவையே இருந்தது. வடையும் கட்டி சட்னியும் நன்றாக இருந்தது. ஆனால் ஆகா ஓஹோ வெல்லாம்  இதுக்கு ரொம்பவே ஓவர். பச்சை மிளகாயை அரைத்து சட்னி செய்திருந்தார்கள். ஒன்னும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்த மெஸ்சுக்கு நாலு ஸ்டார் ரொம்பவே ஓவர். கடைசியாய் வந்த காபி நன்றாக இருந்தது.

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவுடன் ஓனர் வெளியே வந்து காசு வாங்கி கொள்கிறார். காலையில் 6-9 AM மற்றும் மாலையில் 3-6 PM  மட்டுமே கடை. மாலையில் ஸ்வீட், அடை, மைசூர் போண்டா உண்டு.
3 பொங்கல் +6 வடை + கெட்டி சட்னி +1 இட்லி + 1 இட்லி பொடி சேர்த்து ரூ 107. விலை பரவாயில்லை என்றாலும் டேஸ்ட் இல்லை.

 ஹிந்தி வாலாக்கள்

சாப்பிட்டு விட்டு நொந்து போய்   வெளியே நின்று கொண்டிருந்த போது பக்கத்தில் இந்த இந்திக் காரனிடம் பேச்சு கொடுத்தேன். ரொம்ப நல்லா இருக்கு சார் என்றான். எனக்கு பிடிக்கவில்லை என்றதும் ஏன் என்றான். சாம்பாரை சொன்னேன், உடனே நீங்க ஆந்திராவா என்றான் இல்லப்பா பச்சை தமிழன் என்றதும், இல்ல ஆந்திராக் காரங்க தான் ரொம்ப ஸ்பைசியா  எதிர் பார்ப்பாங்கனான். ஒநாக்குல வசம்ப வச்சு தேக்க ன்னு நெனச்சுகிட்டு நடையை கட்டினேன்.  சென்னையில்  வடநாட்டுக்காரன் இருக்கிற வரை இந்த மெஸ் ஓடும்.  

ஹாஜீராஸ் கிச்சன் :WOW
ராயர் மெஸ்               : No
 

Post Comment

2 comments :

 1. நாக்கில் எச்சில் ஊறபடித்தேன்.!

  ஆமாம் சார்.,காலையிலேயே பிரியாணி, சிக்கன் 65 வா???
  எப்படிங்க.?

  வெஜிட்டபில் மெஸ் சொதப்பியது வருத்தம்.எனக்கு40 வயதை கடந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.டாக்டர் அட்வைஸ்,, நோ நான்வெஜ்.! எனவே இதைமாதிரி படித்து திருப்தி அடைந்து கொள்ளவேண்டியதுதான்.உங்கள் பதிவு அருமை சாப்பிட்ட திருப்தி.வெஜிடேரியன் ஹோட்டல் நல்ல சுத்தமான(நல்லா கழுவி சுத்தமான)வெஜிடேரியன் ஹோட்டல் பெயரை சொன்னால் பரிசித்து பார்ப்பேன்.!

  ReplyDelete
  Replies
  1. சாரி.காலை நேரம் என்று தவறாக எண்ணிவிட்டேன்.! காலையில் எங்கே பிரியாணி கிடைக்கும்?.,கிடைத்தாலும் சாப்பிடத்தான் முடியுமா.?

   மதுரை பேமஸ் காலை டிபனாக குஸ்கா சாப்பிட்ட அனுபவம் உண்டா.?

   Delete