Saturday, April 25, 2015

மின்னும் மரணம் புத்தக வெளியீடு (Minnum Maranam book release)

என் மன வானில்
ஒவ்வொரு நாளாக கவுன்ட் டௌன் நெருங்கி சனிக் கிழமையில் வந்து நின்றது. திருப்பூர் ப்ளுபெர்ரி போன் பண்ணினார் என்றார் என் மனைவி.  ஆஹா ஆட்டம் ஆரம்பமாயியிடுச்சுடோய்ன்னு நினைச்சுக் கிட்டே போன் பண்ணினேன். நாளைக்கு 9 மணிக்கி ரெடி ஆகி இருங்க சேந்தம்பட்டி கோஷ்டியை போய் மீட் பண்ணுவோம் என்றார். சரின்னு அடுத்தநாள் 9.15 வரை காத்திருந்தும் போன் வராததால் நானே போன் பண்ணினேன்.    
ஹலோ நான் போன் பண்ணினால் எடுக்கலையே என்றார். கடைசியில் என் பழைய நம்பருக்கு போன் பண்ணி இருக்கிறார். என்னடா மதுரைக்கு வந்த சோதனைன்னு சேந்தம்பட்டி  கோஷ்டிக்கு வாங்கி வச்சிருந்த சரக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். சரக்கா என்று வாயை பிளக்காதீர்கள் 

நான் வாங்கி வைத்திருந்தது பனையில் இருந்து இறக்கப் படும் பதநீர். சரின்னு கிளம்பி போனால் எதுத்த சைடுல இருந்து கரகாட்ட கோஷ்டியின் காமாட்சி ( டெக்ஸ் விஜய ராகவன் ) கிராஸ் பண்ணி நான் பைக்கில் இருக்கும் சைடுக்கா வந்தார். ஹலோ சொல்லி பார்த்தால் மாயாவி சிவா, டெக்ஸ் சம்பத், இத்தாலி விஜய்  மற்றும் குழுவினரும் வந்தனர்.   

 ராயபேட்டா YMCA விற்குள் நுழைந்தோம். இவ்வளவு கூட்டதை அதுவும் 10 மணி அளவில் பார்த்ததும் வாட்ச் மண்ணுக்கு கண்ணு பிரகாசமானது. பைக்கை நிறுத்தி விட்டு அங்கேயே நல்ல காத்து வந்ததால் நின்று கச்சேரியை ஆரம்பித்தோம். நான் கொண்டு வந்திருந்த பதநீரை எடுத்து அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தேன். வாயில் வைத்தவுடன்  ஒவ்வொருவராக தெலுங்கு தெலுங்கு என்றனர். என்னாது தெலுங்கா? பதநீர் குடிச்சவுடன் தெலுங்கனாயிட்டாங்கலா ன்னு நெனச்சிக்கிட்டு, அய்யயோ செம்மரக் கட்டய வெட்டப் போனவனுங்கலையே போட்டு தள்ளின மாதிரி நம்மளையும் கும்மப் போறாங்களோ என்று நினைத்தவுடன், தனி தவில் வித்துவான் இத்தாலி விஜய் எங்க ஊர் பக்கம் இத தெளுவுன்னு சொல்லுவோம் ஜி என்றார். அப்பாடா இப்பதான் எனக்கு கண்ணு தெளுவா சீ தெளிவா தெரிஞ்சுது. phew கொஞ்ச நேரம் காத்து வாங்கின பிறகு வெளி அரங்கில் போய் இருப்போம் என்று சிலர் சென்றனர். அங்கே நம் ஸ்டாலின் குமாரும் ஒரு பொடியனும் இருந்தனர். அதைப் பார்த்தவுடன் அங்கே சென்றோம். அந்த அரங்கில் ஒரு மேடையும் ஒரு மைக்கும் இருந்தது. மைக் கிடச்சா விடமாட்டானு சில ஜோக்ல படிச்சிருப்போம் அன்னைக்கு ரம்மி ரமேஷ் மேடையேறி டெக்ஸ் வில்லருக்கும் அவர் ரசிகர்களுக்கும் ஒரு சவால் விட்டார். 


இந்த மாதிரி 11 பாகம் வர்ற மாதிரி டெக்ஸ் புத்தகம் ஒண்ணாவது போனெல்லி குழுமம் வெளியிட முடியுமா ? அந்த தைரியம் இருக்கா ? நெஞ்சுல மஞ்சா சோறு இருந்தா நேருக்கு நேர் ப்ளுபெர்ரி கிட்ட டெக்ஸ் சண்டையிட முடியுமான்னு ஆவேசமாக உரையாற்றினார்.  இவர் என்னை டாக்டர் என்று நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார் நீங்க டாக்டர் தான என்றார் நான் இல்லை என்றேன் இல்ல நீங்க டாக்டர் தான என்று மறுமுறை சொன்னார். ஒரு நமக்கே தெரியாமே நம்ம படிச்சிருப்போமொன்னு நானும் எவ்வளவோ ரோசிச்சு பார்த்தேன் ஒன்னும் புலப்படாததால இல்லங்க நான் பாவம் சாப்ட்வேர் எஞ்சினியர்  என்ன உட்டுடுங்க ன்னு சொல்லி தப்பிச்சு வர்ரதக்குள்ள ஷப்பா. ஆனா சின்ன வயசுல என் கனவு படிப்பு டாக்டர் தான்.     

கொஞ்ச நேரத்தில் RT முருகன் காரில் வந்து இறங்கினார். போனி டேயில் முடியில் கலக்கினார். ஆண் பாவம் படத்தில் பொட்டி வந்திருச்சுன்னு  கத்துன மாதிரி, வந்துட்டாரு வந்துட்டாருன்னு எல்லோரும் பரபரக்க எடிட்டர் வந்து இறங்கினார். வெட்ட வெயிலிலேயே சிறிது நேரம் எடிட்டரை பார்த்த சந்தோசத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அப்புறம்தான் மொட்டை வெயில் உரைக்க வாங்க  உள்ளே போகலாம்ன்னு போனோம். 

அரங்கம் சிறிதுதான் என்றாலும் நம் எண்ணிக்கைக்கு பராவாஇல்லை. இன்னும் முன் கூட்டி திட்டமிட்டு நடத்தி இருந்தால் இன்னும் நிறைய பேர் வந்திருக்கலாம்.  ரெண்டாயிரம் ரூபாய் தானாம் வாடகை. ஒரு வழியாக செட்டில் ஆனதும் புத்தகத்தை எடுத்து சௌந்தர பாண்டியனார் வெளியிட்டார். புத்தகத்தை பார்த்து யாவரும் சந்தோசமடைந்தனர். போஸ்ட்டரும் வெளியிடப் பட்டது. பின்னர் புத்தகம் வரிசையாக வழங்கப்படும் என்று அறிவித்து இத்தாலி விஜயும், திருப்பூர் ப்ளுபெர்ரி யும் மைக்கை பிடித்து வரிசையாக கூப்பிட ஆரம்பித்தனர்.   

புத்தகம் வாங்கும் நான் (இதுல கொஞ்சம் யூத்தா தெரியுற மாதிரி இருக்கேன்னா வாய மூடிக்கிட்டு சிரிக்குறாங்க  என் வீட்டுல இருக்குற எல்லோரும். என்ன கொடும சார் இது )

 புத்தகம் வாங்கும் டெக்ஸ் சம்பத் 

 புத்தகம் வாங்கும் திருப்பூர்  ப்ளுபெர்ரி நாகராஜன்

 புத்தகம் வாங்கும் பரிமேல்

புத்தகம் வாங்கும் கிட் ஆர்ட்டின் கண்ணன் ரவி


புத்தகம் வாங்கும் சுதாகர் - காங்கேயம்
 


புத்தகம் வாங்கும் ஜெய குமார் - மேச்சேரி


 
தனி தவில் விஜய் அவர் பேரை கூப்பிடும்போது மட்டும் இத்தாலி விஜய், இத்தாலி மெயின் ரோடு, இத்தாலி குறுக்கு சந்து , இத்தாலி என்று அட்ரஸ் சொல்லி வாங்கி கொண்டார். ஒரு வழியாக எல்லோருக்கும் கொடுத்து முடிந்ததும் நான் இன்னுமொரு காப்பி வாங்க கடைக்கு சென்றேன். அப்பவே அடிச்சுக்கோ பிடிச்சுக்கோ என்று விற்பனை நடந்து கொண்டிருந்தது. கிருஷ்ணா அப்போதுதான் பார்த்தேன் "எப்பூடி ப்ளுபெர்ரி  காவியத்த போட சொல்லி வாங்கிட்டம்ல" ன்னு சொன்னா "இருக்கிறது ஒரே புக் அத போட்டாச்சு"ன்னு கடுப்ப கிளப்பினார். புக்கு கிடைக்காம போக உங்களுக்குன்னு மனதுக்குள் சாபம் கொடுத்தேன். அதே மாதிரி புக்கு தீந்து போச்சுன்னு புலம்பினார் வேணும் ஜி வேணும். 

  நான் கடைக்கு போயிட்டு வருவதற்குள் சௌந்தர பாண்டியனார் பேச ஆரம்பித்து இருந்தார். கேள்விகள் நண்பர்கள் கேட்க அதற்க்கு சுவாரஸ்யமாக பதில் அளித்துக் கொண்டிருந்தார். விஜயன் சார் 17 வயதில் இத்தாலிக்கு போனபோது அவர் வயதை கண்டு சந்தேகப் பட்டு கஸ்டம்சில் குடைந்ததை சுவராஸ்யமாக் சொன்னார். அப்போது எனக்கு எழுந்த கேள்வி 17 வயதில் தன் மகனை எப்படி தனியே அனுப்ப முடிந்தது என்பதுதான். 

விஜயன் சார் அப்போது பின் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். கேள்வி நேரம் முடிந்ததும் விஜயன் சாரை பேச அழைக்கிறோம் என்று கோர்த்து விட்டார் தனி தவில். அப்படியே எடிட்டர் ஸ்பெஷல் அறிவிப்பையும் வெளியிடுமாறு கேட்டுக்  கொள்கிறோம் என்று பட்டயக் கிளப்பினார் விஜய். 

விஜயன் சார் சற்று பதட்டமாகவே ஆரம்பித்தார். ஹாட் லைன் போலவே நண்பர்களே என்று விளித்து ஆரம்பித்தது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.இந்த வெற்றி  நீங்கள் வாசகர்கள் இல்லை என்றால் சாத்தியமில்லை என்றார். கடைசியில் அந்த ஸ்பெஷல் அறிவிப்பு என்ன என்று சொல்லாமல் முடிக்க, விஜய் மற்றுமொருமுறை நினைவு படுத்த ஜானி எதிர் பார்த்த அந்த அறிவிப்பு வந்தது. அது திகில் மறு பிரவேஷம். புதிய திகில் கதைகளாய் எதிர் பார்க்கலாம். தயவு  செய்து சார் திகிலில்  அந்த மறு பதிப்பு வேணும்ன்னு ஆரம்பிக்காதீங்கப்பா.

அட்டைப் பட ஏமாற்றம் 

கொஞ்சம் நேரம் கழித்தே என் புத்தகத்தை பிரிக்க முடிந்தது. அட்டைபடம் பார்த்தவுடன் எனக்கு ஒன்றும் புரியவில்லை. யார்ரா இது வில்லனை அட்டைப் படத்தில் போட்டிருக்கு என்றுதான் சத்தியமாக  நினைத்தேன். அப்புறம் தான் அது ப்ளுபெர்ரி என்று சொன்னார்கள். O MAN.  என் முகம் ஏமாற்றத்தால் சுண்டியது. என்னடா இது 1000 ரூ புத்தகம் ஒரு அட்டைப் படம் கூட நல்லா இல்லை. நல்லா ரோஸ் பவுடர் அடிச்சிக்கிட்டு அந்த ஆளு ஒரு நாடக நடிகனைப் போல இருக்கான். இவனை போய் நல்லா இருக்குன்னு போட்டிருக்காரேன்னு தான் என் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. மற்ற நல்ல விஷயங்கள் கண்ணில் அப்போது படவில்லை என்பதே நிஜம். எவ்வளவு நல்ல நல்ல படங்கள் இருக்குது எங்க இருந்துதான் இந்த படத்த புடிச்சாங்கன்னு தெரியல. அட்டைப் படமே யாருன்னு தெரியாம போனது இந்த முறைதான். என்ன நல்லா பண்ணி என்ன பயன் முக்கியமானதுள்ள கோட்டை விட்டாச்சு. சரி விடுங்க இனிமே புலம்பி என்ன பயன். சொக்கா என்ன  இப்பிடி பொலம்ப வச்சிட்டியே 

அப்புறம் நல்ல சாப்பாடு எடிட்டர் செலவில் அருகில் இருக்கும் சைவ ஓட்டலில் சாப்பிட்டோம். நண்பர்கள் குழுவுடன் பேசிக் கொண்டே சாப்பிட்டது நல்ல அனுபவம். என்னுடன்  மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன் , கலீல் ஜி, ஸ்ரீதர்  சாப்பிட்டனர். சாப்பிட்டு முடிந்ததும் திரும்ப லக்கி லிமட்டும், நாகராஜனும் ஸ்டாலுக்கு திரும்பினோம்.  சிறிது நேரம் இருந்து விட்டு நானும் நாகராஜனும் 4 மணிப் போல வீட்டுக்கு நடை கட்டினோம். 
  

இதே மாதிரியான அனுபவம் வேணும்னா முக்கிய புத்தக கண்காட்சிக்கு வாங்க. நிறைய அனுபவங்கள், நிறைய நண்பர்கள் என்று என்ஜாய் பண்ணலாம். 

எங்கள் கிளைகள் பெங்களூரில் இல்லை என்பதை ப்ளேடாருக்கு தெரியப் படுத்தி கொள்கிறோம். அதுனால சென்னைக்கும், ஈரோட்டுக்கும் IRTC யில் புக் பண்ணவும். அடுத்த முறை நிறைய நண்பர்களை எதிர் பார்க்கிறோம். see ya 

  

Post Comment

18 comments :

 1. ராஜ் முத்துகுமார், சேந்தம்பட்டி குழுவின் சார்பா பதநீருக்கு, முதலில் உங்களுக்கு நன்றிகள்..!

  // அய்யயோ செம்மரக் கட்டய வெட்டப் போனவனுங்கலையே போட்டு தள்ளின மாதிரி நம்மளையும் கும்மப் போறாங்களோ //

  //இல்ல நீங்க டாக்டர் தான என்று மறுமுறை சொன்னார். ஒரு நமக்கே தெரியாமே நம்ம படிச்சிருப்போமொன்னு நானும் எவ்வளவோ ரோசிச்சு பார்த்தேன் //

  //தனி தவில் விஜய் அவர் பேரை கூப்பிடும்போது மட்டும் இத்தாலி விஜய், இத்தாலி மெயின் ரோடு, இத்தாலி குறுக்கு சந்து , இத்தாலி என்று அட்ரஸ் சொல்லி வாங்கி கொண்டார்.//

  // சொக்கா என்ன இப்பிடி பொலம்ப வச்சிட்டியே //

  //எங்கள் கிளைகள் பெங்களூரில் இல்லை என்பதை ப்ளேடாருக்கு தெரியப் படுத்தி கொள்கிறோம். //

  காமெடி கலந்து அட்டகாசமாக எழுதியிருக்கிறிர்கள்...அந்த கடைசி 'பாயின்ட்' சூப்பர்..!
  (அப்ப நிஜமாவே நீங்க டாக்டருக்கு படிக்கலையா..? நல்லா யோசிச்சி சொல்லுங்க..ஹீ..ஹீ..)

  ReplyDelete
  Replies
  1. நன்றி சிவா. ஒரு நாளை நண்பர்களுடன் கழித்து மண் மகிழ்ச்சியாக இருந்தது.

   Delete
 2. டாக்டர் டக்கர் ராஜ் அவர்களே...

  அனுபவ பதிவு அட்டகாசம்.

  ReplyDelete
 3. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ராஜ் முத்துக் குமாரின் தனித்துவ காமெடி நடையில் ஒரு அட்டகாசமான பதிவு!
  விழா நிகழ்வுகளை விடாம கவனிச்சிருக்கும் விதம் எனக்குப் பிடிச்சிருக்கு! ;)
  அப்புறம்... நீங்கள் குறிப்பிட்ட அந்தத் 'தனித்தவில் வித்துவான்' நான் கிடையாது. அது நம்ம மேச்சேரி ரவிக்கண்ணன்! :))

  ReplyDelete
 4. /// இந்த நண்பர்கள் பெயர் தெரியவில்லை///
  என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த நண்பர்கள் முறையே: சுதாகர் (காங்கயம்), ஜெயக்குமார் (மேச்சேரி)

  ReplyDelete
  Replies
  1. நன்றி Vijay அப்டேட் பண்ணிவிட்டேன்

   Delete
 5. நண்பரே

  அருமையான அனுபவம் ... நண்பர்களுடன் ஒரு நாள் ... மறக்க இயலா நாள் ...

  திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்

  ReplyDelete
  Replies
  1. @ ப்ளூ

   சீனியர் எடிட்டர் மற்றும் எடிட்டருடன் ஒரு 'வாசகர் கலந்துரையாடல்'ஐ ஏற்பாடு செய்தாலென்ன என்று சமயோஜிதமாக யோசித்து அதைச் செயல்படுத்தியதும், பம்பரமாய் சுழன்று விழாவையும், நண்பர்களுக்குத் தேவையான உதவிகளையும், மாயாவியுடன் வண்டியில் சுற்றியலைந்து மதிய உணவுக்கான நல்லதோர் இடத்தையும் ஏற்பாடு செய்த உங்களின் அர்ப்பணிப்பை மறக்க முடியாது ப்ளூ! நன்றிகள் பல!

   Delete
  2. பதிவு அருமை சார்.புத்தக கண்காட்சியில்,ஹாய் தமிழா என்றுகூறியது.லிங்க் கொடுத்த இத்தாலி விஜய்க்கு நன்றி!

   Delete
  3. நன்றி நாகராஜன் :D

   Delete
 6. //புத்தகம் வாங்கும் நான் ... கொஞ்சம் யூத்தா //
  மீசை இல்லாத பழைய சத்யராஜ் போல இருக்கீங்க ராஜ்! ;) டாக்டர் சத்யராஜ்குமார், MMTCS! :P

  ReplyDelete
  Replies
  1. ஒரு ரகசியம் காதக் குடுங்க. மீசை நான் பெயிண்ட் வாங்கி குடுக்காமயே, அதுவா வெள்ளை பெயிண்ட் அடிக்க ஆரம்பிச்சுது. அதுதான் இந்த இருக்கும் ஆனா இருக்காது கோலம். :D

   Delete
 7. சித்திரப் புத்தக மகா ரசிகரே,
  தங்கக்கல்லறை வந்தபோது தற்செயலாக வலை
  பக்கங்களை புரட்டுகையில் தங்களின் பக்கம்
  எனக்கு ஒரு தங்கப்புதையலாக கிடைத்தது.
  முத்லில் உங்களின் முயற்சிக்கு எனது
  பாராட்டுக்கள்.தங்கக்கல்லறை,மரணநகரம் மிசௌரி போல மின்னும் மரணத்திற்கும் தங்கள் நேரத்தை ஒதுக்கி தயவுசெய்து உங்கள் ஓவிய ரசனையுடன் ஒரு பல்நோக்கு பார்வை பதிவிடுங்கள் சார்.....ஆவலுடன்....உண்மையில் தங்கக்கல்லறை காமிக்ஸ் வாசித்ததே உங்களின் உங்கள் நுண்ணிய ரசனையான பதிவைக் கொண்டுதான். மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி திருமா வளவன். நிச்சயம் மின்னும் மரணம் பற்றி பதிவு(கள்) உண்டு. டைகரின் ரசிகனாக இருந்து விட்டு அதை செய்யலேன்னா எப்படி

   Delete
 8. வணக்கம் !

  தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_28.html

  நன்றியுடன்
  சாமானியன்

  ReplyDelete