Saturday, April 25, 2015

டாலர் சாம்ராஜ்யபதியின் அதிரடி -Largo Winch (The Price Of Money The Law Of The Dollar)

 என் மன வானில் 

இந்த தடவை டாலர் சாம்ராஜயதிபதியை  மருத்துவமனையில் சந்திக்க நேர்ந்தது. கடந்த சனி 4-ஏப்ரல் அன்று என் மனைவி வீதியில் நடந்து வரும்போது இசகு பிசகாக விழுந்து இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்ப்பட்டு விட்டது . சும்மா நடந்து வரும்போது விழுந்து எலும்பு முறிவு என்பது சற்றே வியப்புக்குரியது. ஆனால் பெண்களுக்கு 30 வயதுக்கு பின் கால்சியம் சற்றே குறைய தொடங்குகிறது. Low Bone Density  அதனால் சிறு அடிக்கு கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. உங்கள் வீட்டில் 30 வயதுக்கு மேற்ப்பட்ட பெண்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களை கால்சியம் அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட சொல்வது அவர்களை பாதுகாக்கும். 

ஓகே என் கதை போதும். 

லார்கோ கதையில் நான் பெரிதும் ரசிப்பது விறு விறுவென்று செல்லும் ஓவியங்கள், லார்கொவின் பஞ்ச் டயலாக்குகள் , மற்றும் சைமனின் சிரிப்பூட்டும் டயலாக்குகள். இந்த கதையில் கடைசில் ரெண்டும் இல்லாதது சற்று ஏமாற்றம் தான். ஆனால் விறுவிறுப்பான கதை தூக்கி சாப்பிட்டு விடுகிறது. 

ஓவிய வானில் 

1) லார்கோ கதைகளில் வரும் W குழும கட்டடத்தை வெவ்வேறு   ஒளியில் காட்டி இருப்பார். இந்த கதை ஸ்பீட் ஒன் நிறுவனத்தை சுற்றி சுழல்வதால் அதை பல்வேறு கோணங்களில் வெவ்வேறு ஒளியில் காட்டி இருக்கிறார். 

தெருவில் நின்று ரசிக்கும் கோணத்தில் ஒரு ஓவியம்

  

பறவைப் பார்வையில் அந்த கட்டிடம்பனி விழும் இரவில் தூரத்தில் இருந்து பார்க்கும் கோணத்தில் ஓவியம்.2) இந்த மாதிரி ஒரு நகர நெருக்கடியில் பறவைகள் பறப்பது அபூர்வம் இல்லையா.


3) பனி படர்ந்த பாதையில் செல்லும் கார். அந்த போஸ்ட் பாக்ஸ் நம்பர் கூட வரைந்திருக்கிறார் பாருங்கள்    4) கண்ணுக்கு முன்னால் சல சலக்கும் சிற்றாறு


5) அருவியின் பிரமாண்டமும் அதன் நிழலும், அதன் மீது படும் வெயிலும் பாருங்கள் 


6) இந்த மாதிரி ஒரு வீடு சொர்க்கத்தில் மட்டுமே கிடைக்கும் இல்லையா ?
7) கீழே பனி கொட்டிக் கிடந்தாலும் உயரே மலையில் பட்டு தெறிக்கும் ஆதவனின் ஒளிக்கீற்றை பாருங்கள். எவ்வளவு துயர் வந்தாலும் நம்பிக்கை எப்போதும் கைவிடக் கூடாது என்று சொல்லாமல் சொல்லவது போலில்லை ?8) அந்த லாயர் என்ன செய்யப் போகிறாரோ என்று எல்லோரும் பயந்து கொண்டிருக்க, அதிரடியாய் அவரை வரவேற்கப் போவதாக சொல்லும் லார்கோ. அவருடைய குணத்தை இது உணர்த்துகிறது. 9) தன் மதியால் எல்லோரையும் வெல்லலாம் என்று தெனாவட்டு பேசும்  லாயரிடம் , தன் துருப்பு சீட்டை இறக்கும் லார்கோ. அந்த லாயரின் முகம் போகும் போக்கை பாருங்கள்.


10) தன்னை கண்டபடி திட்டினாலும் பாவம் பார்த்து (?) டைரக்டராக்கும் லார்கோ. பெநிகோ அடிக்கும் அந்தர் பல்ட்டியை பாருங்கள் 

11) ஒரே ஒரு டாலர் கொடுத்து ஒரு நிறுவனத்தை வாங்கி தனதாக்கி கொள்ளும் திறமை லார்கொவுக்கு மட்டுமே உண்டு.

பாவம் செலவுக்கு வச்சுக்கோன்னு சொல்லுற மாதிரி பெனிகொவின் பாக்கட்டில் டிப்ஸ் வச்சுட்டு போற தெனாவட்டு.  பெனிகொ அடங்குர ஆளு இல்ல. பெருசு ஏதாவது பண்ணுவார் .


===========================================================================
இதையும் படிக்கலாமே 
===========================================================================

க்ளைமாக்ஸ்

மொத்தத்தில் தரணி படம் பார்த்த மாதிரி விறுவிறுன்னு போகிறது. முந்தைய லார்கோ இதழ்களில் இருந்த தொய்வு இதில் இல்லை. இருந்தாலும் சைமனை இன்னும் கொஞ்சம் உள்ளே வர விட்டிருக்கலாம். சூப்பர் .

===========================================================================

எடிட்டரின் ஒரு முந்தைய பதிவில் என் பதிவை பற்றி குறிப்பிட்ட  நண்பர் ஸ்டீல் க்ளா பொன்ராஜ் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக. நிறைய பேர் நம் பதிவை படிக்கிறார்கள் என்பதே மீண்டும் மீண்டும் என்னை எழுத வைக்கும்.

===========================================================================

Post Comment

6 comments :

 1. Good post.
  After few moderate largo issues, this issue was a cracker jacket

  ReplyDelete
 2. Nice post... Praying for your wife...

  ReplyDelete
 3. Nice post... Praying for your wife...

  ReplyDelete
 4. வருத்தங்கள். விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.

  வழமை போல மீண்டும் புத்தகத்தை பார்க்கத் தூண்டிவிட்டீர்கள்.

  ReplyDelete
 5. உங்கள் துனைவியார் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் எதுவுமே நடவாததைப் போல மி.ம வெளியீட்டு விழாவுக்கு வந்து கலந்துகொண்டது நட்புக்கும் காமிக்ஸுக்கும் நீங்கள் செய்த மரியாதையாகவே கருதுகிறேன். (கால்சியம் நிறைந்த பதநீரை எங்களுக்கு அளித்ததன் பின்னணியும் இதுதானோ?)

  நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களுடைய ஓவியப் பார்வையுடன் ஒரு பதிவைப் படித்ததில் மகிழ்ச்சி!

  ReplyDelete
 6. நண்பரே! உங்கள் மனைவிக்கு ஏற்பட்ட துன்பம் மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்று எச்சரித்த உங்கள் நல்ல உள்ளத்தை நினைத்தால் பிரமிப்பு ஏற்படுகிறது.!

  என் மன வாழ்வில் படித்தவுடன் எனக்கே என் மீது வெறுப்பாக உள்ளது.வடிவேல் மாதிரி "நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என்று கூறுவது போல் நானும் காமிக்ஸ் ரசிகன்தான் நானும் காமிக்ஸ் ரசிகன்தான் என்று 800 புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளேன்.ஹும்.இன்றே டாலர் தேசத்தை திரும்பவும் ஒருமுறை ஓவியங்களையும் ரசித்து படிக்க வேண்டும்.........

  ReplyDelete