Sunday, March 8, 2015

தளபதிக்கு போட்டி பௌன்செரா ? (சர்ப்பங்களின் சாபம், வேங்கைக்கு முடிவுரையா?) Bouncer, Blueberryஎன் மன வானில்

இந்த தடவை என்ன புத்தகங்கள் வரப் போகிறது என்ற எதிர் பார்ப்பே  இல்லாமல் இருந்தேன். அதனாலோ என்னமோ வியாழன் அன்றே என் தளபதி கதவை தட்டி விட்டார். அட்டைப் படங்கள் கண்ணில் ஒற்றிக் கொள்வது போல இருக்கின்றன. முக்கியமாக ராபினின் கதை அட்டைப் படம் மற்றும் அளவு ரொம்ப பிடித்திருந்தது இனிமேல் வரும் கருப்பு வெள்ளை கதைகள் இதே அளவில் வந்தால் நல்லது.

பௌன்செர்  தளபதிக்கு போட்டியா? 

பௌன்செர் வந்த புதிதில் சிலர் தளபதிக்கு போட்டி வந்து விட்டது இனிமே அவர் அவ்வளவுதான் என்று சொல்லி இருந்தனர். டெக்ஸ் , டைகர் , பௌன்செர் இம்மூவரும் மூன்று வழிகளில் பயணிப்பவர்கள். டெக்ஸ்சினுடைய வழி எல்லா கதா நாயகனுக்கும் பொருந்தும். ரஜினி சார் சுத்தி சுத்தி 40 பேர அடிக்கிற மாதிரிதான் அவர் வழி. எப்போதும் ஒரே பில்ட் அப் தான். தளபதி வழி தனி வழி அடக்கி வாசிப்பார் யதார்த்த வாதி நிச்சயமாக இது சாத்தியம்தான் என்று நமக்கு தோணக்  கூடிய வழிகளை வைத்து அவர் சாதிப்பார்.  பௌன்செர் வன் மேற்கில் இருந்த சட்டமில்லா ஒரு நிலையில் சில்லறைக்காக தலையை சில்லு சில்லாக சிதறடிக்கும் காட்டுப் பயல்கள் இருக்கும் ஒரு சூழ் நிலையை கண் முன் நிறுத்துபவர். அதனால் டைகருக்கு போட்டியை யாரும் வரவில்லை யாரும் வரவும் முடியாது.  வேங்கைக்காவது  முடிவுரையாவது? போங்கப்பா போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கப்பா.

டைகர் VS பௌன்செர்

இப்போது ஒரே நேரத்தில் டைகருடய சாகசமும் பௌன்செரும் வந்திருக்கிறது. மார்ஷல் டைகர் முதல் பாகம் பொசுக்கென்று முடிந்து போனதால் கொஞ்சம் தவிப்புடன் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் வழக்கதுக்கு மாறாக பள பள கன்னத்துடன் மார்ஷலாக அதகளம் பண்ணி இருந்தார். டைகரின்  ரொமண்டிக் எபிசொட் சூப்பர். டைகரின் யுக்திகளுக்கு பஞ்சம்தான் என்றாலும் கதை விறு விறுவென்று  போகிறது. முதல் பாகத்தில் ஏமாற்றியதை இந்த பாகங்களில் பிடித்து விட்டார் டைகர்.

அதே நேரம் பௌன்செர் கதை பல ட்விஸ்ட்டுகளுடன் விறு விறுவென்று  போனது. ஒரே இரவில் காதலையும், கொலை செய்யும் அளவுக்கு வெறுப்பும் உண்டாகும் பல விதியின் விளையாட்டுகளும் உண்டு. நிச்சயமாகவே பௌன்செருக்கு நம் மனதில் இடம் உண்டு வன் மேற்கின் பக்கங்களை நிஜமாக காட்டியதற்கு. சீனப் பெண்ணின் ஒரு தலைக் காதலும் அதற்க்கு அவள் சொல்லும் வசனங்களும் நம் மனதில் என்றும் நிற்பவை. இது நம் எடிட்டரின் கவிதை மற்றும் தத்துவார்த்த வசனங்களால் அழகுருகிறது.

ஓவியப் பார்வை

1) பறவைப் பார்வையில் சட்டமில்லா சமவெளி2) பிடித்த எடிட்டரின் வசனம் #1


3) பிடித்த எடிட்டரின் வசனம் #2


4) பிடித்த எடிட்டரின் வசனம் #3


5) பிடித்த எடிட்டரின் வசனம் #4


6) ஹேங் வுமன் பௌன்சரை விட்டு போகப் போகிறாள் என்று உணர்த்தும் படம்


7) அதகள டைகர்


8) கிஸ் வாங்கிவிட்டு ஜாலியாக இருக்கும் டைகர் 


9) அதகள டைகர் மாஸ் படம் (நண்பர்கள் இதை டச் அப் பண்ணி இன்னும் கொஞ்சம் கிரிஸ்ப்பாக்க  முடியுமா )


10)  டைகரின்  ரொமண்டிக் எபிசொட்


11) ரசித்த ஓவியங்கள்
மொழிபெயர்ப்பில் சொந்த சரக்கை கலப்பது சரியா ?

போன பௌன்செர் கதையில் வந்த ரெண்டு வார்த்தைக்கு எடிட்டர் எழுதிய ஒரு பத்தி வசனங்கள் சர்ச்சைகள் பலவற்றை ஏற்படுத்தியது. எனக்கும் அவ்வளவு பெரிய வசனங்கள் தேவையா என்றே தோன்றியது. அந்த படத்துக்கு கொஞ்சம் ஓவர் டோஸ் என்றே சொல்வேன். ஆனால் அப்படியே மொழி பெயர் என்று சொன்னால் எடிட்டரிடம் இருக்கும் கவிதை நடை , தத்துவார்த்தமான வசனங்களை நாம் இழப்போம். மற்ற தமிழ் காமிக்ஸ் படித்தவர்களுக்கு அவர்களுடைய வசனங்கள் எப்படி இருக்கும் என்பது தெரியும். ஓவர் டோஸ் ஆகாமல் எடிட்டரின் நடை தொடரவேண்டும் என்பதே என் அவா.

கிளைமாக்ஸ் 

மொத்தத்தில் வன்மேற்கில்  ஒரு நாலு மணிநேரம் எடிட்டரின் வசனங்களோடு உலவி வந்தது நல்ல அனுபவம். 

Post Comment

6 comments :

 1. 5 மாதங்களுக்கு பின் ஓர் அழகிய பதிவு..!

  ReplyDelete
 2. அருமை பதிவுடன்
  பங்களின் மூலம் நீங்கள் ரசித்த விதம் அலாதியானது

  ReplyDelete
 3. // டைகர் , பௌன்செர் இம்மூவரும் மூன்று வழிகளில் பயணிப்பவர்கள். //

  தல, தளபதி என்று இணையத்தில் போட்டிபோடும் பலருக்கு இந்த அடிப்படை விஷயம் புலப்படாமல போவதுதான் பிரச்சனையே..... ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு.... :)

  ReplyDelete
 4. Super ...தங்க தலைவன் கதையை இன்னும் படிக்கவில்லை . இந்த பதிவு ஆர்வத்தை தூண்டுகிறது .

  ReplyDelete
 5. டியர் ராஜ் முத்து குமார்,

  ஜனவரி இதழ்களுக்கே (குறிப்பாக பெளன்ஸர்) உங்களது ஓவியப் பார்வையுடன் கூடிய பதிவை எதிர்பார்த்தேன். இரண்டு மாதங்கள் லேட்! உங்களின் புதிய பதிவைப் பற்றி தெரிந்ததும் ஓடோடிவந்த நீங்கள் கொடுத்ததோ (யானைப் பசிக்கு) சோளப்பொரி! வித்தியாசமான கோணத்தில் ஓவியங்களை அலசி மற்றவர்களையும் ரசிக்கவைத்திடும் உங்களது 'ஓவியப் பார்வை'யைக் காணவில்லையே நண்பரே!

  அடுத்தமாதம் வரயிருக்கும் கிராஃபிக் நாவல் மூலமாகவாவது (நேரம் அனுமதித்தால்) உங்களின் இந்த ஓவியப் பார்வை ரசிகனின் ஆவலை நிறைவேற்றுவீர்களென நம்புகிறேன்.

  ReplyDelete
 6. வாழ்த்துகள் நண்பரே ...

  ReplyDelete