Saturday, October 4, 2014

தேவ ரகசியம் தேடலுக்கல்ல (Sep-2014)

என் மன வானில்

எனக்கு வெள்ளிக் கிழமை 5ம் தேதி தான் கையில் கிடைத்தது. LMS க்கு பிறகு இன்னுமொரு குண்டு புக் தான் நம்மை அசத்த முடியும் என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் பேக்கிங்கை பிரித்த உடன்  வாவ் என்று திறந்த வாயை  மூட முடியவில்லை. கண்ணில் ஒற்றிக் கொள்ளுகிற மாதிரி யான அட்டைப் படங்களுடன் அசத்தலாக மூன்று புத்தகங்கள் வந்து விழுந்தன. அதிலும் காதலிக்க குதிரை இல்லை அட்டைப் பட பின்னணியை மாற்றி இருந்தது ஒரிஜினலை விட நன்றாக இருந்தது .

தேவ ரகசியம் தேடலுக்கல்ல
ஓவிய ரசிகனாக முதலில் தேவ ரகசியத்தை எடுத்தேன். நல்ல குண்டு புக். திபெத்தில் ஆரம்பிக்கும் தேடல் கடைசியில் ஸ்ரீநகரில் முடிகிறது. சிறு வயதில் நான் கிறித்துவ மதத்தில் பற்று கொண்டிருந்தேன். அப்பொழுது என் இஸ்லாமிய நண்பர்களிடம் இயேசு பற்றி கேட்கும் போது  " அவர் பெயர் ஈசா நபி. குர்ரானில் உள்ளபடி அவர் ஒரு இறை தூதர் மட்டுமே. அவர் சிலுவையில் அறையப் படவில்லை அவரை வேறு இடத்திற்கு மாற்றி இறைவன் காப்பாற்றினார்" என்றார்கள். இந்த கதை ஏறத்தாழ அந்த கருத்தை ஒத்துப் போகிறது. அப்படி காப்பாற்றப் பட்டிருந்தால் அவர் இருந்த இடத்தை விட்டு நிச்சயம் நீங்கி தொலை தூரத்துக்கு போயிருப்பார். சாதாரண மனிதராக ஏதோ ஒரு இடத்தில் மரித்திருக்கலாம். ராமரையும், கிருஷ்ணரையும் அப்படியே நான் நினைக்கிறேன். அவர்கள் முன்னர் இருந்த ராஜாக்களாய் இருந்திருக்கலாம். 

ஓவியங்கள் அருமை. சில இடங்களில் தெளிவில்லாமல் இருப்பது போல வரைந்திருக்கிறார். கதை முழுவதும் தொன்மைதன்மைக்கு பக்க பலமாக செந்நிறம் கதை முழுதும் விரவி கிடைக்கிறது. முகத்தில் காட்டும் பாவங்கள் அருமை. நிறைய இடங்கள் அட போட வைத்தன. சரவணா RSK கிழி கிழியென்று இந்த புத்தகத்தை கிழித்திருக்கிறார்.  கிராபிக் நாவல் பயம் இன்னும் போகவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் பெரும்பான்மை வாசகர்கள் ஆதரவு இந்த கதைக்கு உண்டு என்றே நினைக்கிறேன். வாழைப்பூ வடை போராட்டக்காரர் இந்த கதை எப்படி இருக்கு என்று சொன்னால் நல்லது.

செங்குருதி சாலைகள்
அஞ்சான் ஏற்படுத்திய பாதிப்பு (?!) இன்னும் என் மனதை விட்டு நீங்காததால், அட்டைப் படத்தில் வில்லன் வாயில் குச்சியை வைத்துக்  கொண்டு இருப்பதை பார்த்தவுடன் ராராராஜூஜூஜூ பாபாய்ன்னு ஒரு நிமிஷம் கலங்கி போயிட்டேன். வயோமிங் ஓநாய் என்று அறியப்படும் வில்லனை துரத்தி சென்று போட்டுத் தள்ளுவதுதான் கதை. ஓவியங்கள்  மட்டுமே கதையை தாங்கிப் பிடிக்கிறது. ஆனால் ஓவியங்கள் மட்டும் போதுமா ? என்பதே கேள்வி. பார்த்த மூன்று பாகங்களுமே ஓகே ராகம் தான். இனிமேலும் அப்படிதான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒவியங்களுக்காக ஒரு தடவை படிக்கலாம்.

காதலிக்க குதிரை இல்லை


அட்டைப் படம் அட்டகாசம். அசலை விட பொன்னன் மாற்றிய பின்புலம் மிகவும் நன்றாக் இருந்தது. இரு நண்பர்கள் அடிக்கும் கூத்துக்களுக்காகவே  இந்த தொடர் எனக்குப் பிடிக்கும். விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் இல்லை ஆனாலும் நன்றாகவே இருந்தது.
கடைசியில் கிழக் குதிரைகளை கொண்டு வந்து பல்பு வாங்கிய பிறகு ஏதாவது செய்வார்கள் என்று பார்த்தால் அப்படி ஒண்ணும் காணோம். முடிவு பொசுக்கென்று முடிந்த மாதிரி இருந்தது. கடைசியில் சார்ஜெண்ட் குள்ளனுடைய செத்த மாதிரி கிடக்கும் யுக்தியை வைத்து உயிர் தப்புவது காமெடி.

ஓவியப் பார்வை

மாயாவி சிவாவின் பதிவைப் பார்த்தவுடன் புத்தகத்தில் வந்த படங்களுடன் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. அதனால் அவருடைய படங்களை லிங்க் பண்ணியிருக்கிறேன்.

1) புத்தகங்களுக்கு தீ வைத்து வெறி சிரிப்பு சிரிக்கும் சீனன்.யாழ் தமிழ் நூலகம் எரிக்கப்பட்டதை இந்த படம் நினைவூட்டியது.

 2) லாஸ் ஏஞ்சல்ஸ் யுனிவர்சிட்டி

 
 
3) 1953 இல் புழக்கத்தில் இருந்த மெர்சிடிஸ் பென்ஸ் Cabriolet 220

 
Mercedes-Benz 220 Cabriolet (W187)
 


 4) ஹாரிசன் போர்ட் மாதிரி இருக்கும் கதா நாயகன் 

 
 
5) திபெத்திய மடாலயம்
 
 
 
 
6) ஓவியரின் கற்பனைக்கும் திறமைக்கும் ஒரு சாட்சி. ஒரு எலியின் கண்களில் கதாநாயகன் 
 
 
7) கண்களில் தெரியும் வியப்பு. கண்ணீரும் தெரியும்படி வரைந்திருப்பது சிறப்பு. 8) பறவைப் பார்வையில் ஸ்ரீநகரின் வீதி 

 
9) கண்களின் மீது என்ன மோகமோ ஓவியருக்கு. மற்றுமொரு கண்ணோவியம்


10) ஸ்ரீ நகர் ஏரியின் அழகு


11) நம் காதுகளில் ஒளி படும்போது ரத்த ஓட்டத்தினால் சிகப்பாக தெரியும் அதை கூட நுணுக்கமாக வரைந்திருக்கிறார் ஓவியர். துறவியின் காதை பாருங்கள்
 
12) ஏரி ஓர ஒளி ஓவியங்கள்


13) கண்களை நேரே பார்த்து எச்சரிக்கும் ப்ரொபசர்

14) வெவ்வேறு முகங்களில் கொப்பளிக்கும் உணர்ச்சிகள்


15) தீக்குச்சி வெளிச்சத்தில் நாயகன் முகம்


16) விளக்கு வெளிச்சத்தில் நாயகன் முகம் வரையப் பட்ட விதத்தை பாருங்கள் மற்றும் ஜாலி மூடில் ப்ரொபசர் 


17) கள்ள முகம் மாற்றம் திடுக்கிடும் முகம்18) நாயகியின் நாணம்


19) வெறும் கருப்பு வெள்ளை மட்டுமே வரையப்பட்ட ரெண்டாவது பேனலை நீங்கள் ரசிக்க வில்லையா ?


20) குழந்தையை போல நிம்மதியாய் தூங்கும் ப்ரொபசர்.


21) இரு முகங்களின் விசனம்


22) மகளின் பாதுகாப்பு பற்றிய கவலை ப்ரொபசர் முகத்தில்


23) மிக்கி கோஹேன் என்ற ஒருத்தன் நிஜமாலுமே இருந்திருக்கிறான்.

 
 
24) அந்தக் கால ரயில்

 
 
25) மயங்கும்போது முகம் கொஞ்சம் கொஞ்சமாக மங்குவதையும், பின்பு கொஞ்சம் கொஞ்சமாக வருவதையும் பாருங்கள்26) பூங்காவின் வனப்பான ஓவியம்27) போதையில் தெளிவில்லாத முகம்


28) மழை கொட்டும் இரவில் யுனிவெர்சிடி


29) கருப்பு வெள்ளை துளியுண்டு சிகப்பு கொண்டு வரையப்பட்ட ஓவியம் 


30) கொலை செய்ய யோசிக்கும் போது அவர் முகத்தின் வேதனையை பாருங்கள்

31) மரண பீதி


32) அரைபக்க ரயிலோவியம்


33) பாலத்தில் இருந்து பாயும் குதிரை. எவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது பாருங்கள் .


34) அமைதியான நதிக்கரை


35) சிகப்பு சூரியனுக்குப் பின்னால் கதாநாயகன்


36) பறவைப் பார்வையில் ஒரு வன்மேற்கு நகரம்
37) ராபர்ட் லீ என்று ஒரு ஜெனரல் தெற்கத்திய ஆர்மியில் இருந்திருக்கிறார். அவரை வைத்துதான் வரையப் பட்டிருக்கிறது.


 
 38) ஆந்திர செவ்விந்தியர்கள்  ;)
 


க்ளைமாக்ஸ்
 
தேவ ரகசியம் தேடலுக்கல்ல : ஓவிய ரசிகனான என்னை கொள்ளை கொண்டது.  கதை என்று பார்த்தல் சற்று இழுவை தான்.
 
செங்குருதி பாதை : வழமை போல அமைதியாக செல்லும் கதை.  ஓகே ரகம்.
 
காதலிக்க குதிரை இல்லை: ரொம்ப சிரிப்பு மூட்டவில்லை. 

Post Comment

8 comments :

 1. துண்டு போட்டாச்சு! அப்புறமா வர்றேன்! :)

  ReplyDelete
 2. Super typical Raj review. Need to see the book after your review.
  I liked last month's all three stories.

  ReplyDelete
 3. //அ ப வி வா கு வை கொ இ பா ராராராஜூஜூஜூ பாபாய்ன்னு ஒ நி க போயிட்டேன்//
  :D கதையும் கிட்டத்தட்ட அந்தப் படத்தைப் போலதான் இருந்தது... சப்பென்று!

  ReplyDelete
 4. ஹூம்! இன்னும் என்னுடைய ரசணையை (குறிப்பாக, ஓவியப் பார்வைக்கு) வளர்த்துகொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது - என்பதை இந்தப் பதிவைப் பார்த்தால்தான் தெரிகிறது!

  மாயாவி சிவா திரட்டிய தகவல்களையும் இங்கே பயன்படுத்திய விதம் அருமை!

  ReplyDelete
 5. Yes another book is there named Rozabella line by the author of the Krishna key with the same story line.

  Art work was amazing and eye catchy.

  I agree with Ur point of view on ramar and Krishna which was handled in the same way in Shiva trilogy by Amish.
  It become my all time favourite.

  Big thumps down for Comanche.

  Yet to read Bluecoats.

  ReplyDelete
 6. //ஹாரிசன் போர்ட் மாதிரி இருக்கும் கதா நாயகன் //

  சாமிகளா, அது ஹம்ப்ரி பொகார்ட். ஹார்சன் போர்ட் அல்ல.

  ReplyDelete
 7. @ Raj Muthu Kumar S


  இயற்கை காட்சிகளை ரசித்து பல பார்வையில் வரிசைபடுத்திய விதம்,
  நவரசங்களையும் தாண்டி பல முகபாவங்களை பட்டியாலிட்டு,
  வித்தியாசமாக உங்கள் ரசனயை வெளிப்படுத்தியிருந்த விதம் அருமை !
  பாராட்டுக்கள் நண்பரே..!!!

  ReplyDelete
 8. தேவரகசியம்.. உங்கள் விமர்சனத்திற்குப்பின் இன்னொரு தடவை பார்க்க தூண்டுகிறது. !!

  ReplyDelete