Sunday, October 26, 2014

காமிக்ஸ் மழை (Comics Collection)

நண்பர்களே ! கொட்டி தீர்த்த மழை மாதிரி காமிக்ஸ் மழை பொழிந்தது என்றே சொல்ல வேண்டும். நேரத்தை போக்குவதற்காக ஒரு பழைய புத்தக வியாபாரியிடம் (கார்த்திகேயன் அவர்கள் ) காமிக்ஸ் இருக்குமா என்று கேட்டேன். சார் ராணி முத்து காமிக்ஸ் தெரியுமா என்றார்? நல்லாவே தெரியும் சார் லயன்  முத்து    காமிக்ஸ் பற்றி கூட தெரியும் என்றேன். என்னிடம் இருக்கு நாளை கொண்டுவாரேன் என்றார். சொன்னபடி அடுத்தநாள் கொடுத்தார் 40 ராணி காமிக்ஸ் 30 லயன் காமிக்ஸ் (கார்சனின் கடந்த காலம் பாகம் 1, மரண முள் (என்னா கதை சார் ) உட்பட ). முதல் நாள் நானும் அவருடன் விலையை கேட்க்க வில்லை , அவரும் சொல்லவில்லை. ஒரு புத்தகத்துக்கு ரூ 5 மட்டும் கொடுங்கள் என்றார். உங்களை மாதிரி காமிக்ஸை நேசிப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்று வைத்திருந்தேன் என்றார். நான் கொண்ட கொள்கையை  (காமிக்ஸை விலை ஏற்றி விடாமல் வாங்க வேண்டும்) காப்பாற்றி நிறைய காமிக்ஸ் வாங்கி விட்டேன். உங்களுக்கும் அதே மாதிரி கிடைக்க ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.  










Post Comment

8 comments :

  1. அடிக்கடி அந்த பக்கம் போடா.. இது போல் மீண்டும் ஒரு புதையல் கிடைக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பல பேருக்கு புகையை வரவழைக்கும் பதிவு. வாழ்த்துகள் ஜி. :)

    ReplyDelete
  3. ஹம்... உங்ககிட்டயெல்லாம் நட்பு வச்சிக்கிட்டதுக்கு பதிலா, யாராவது பழைய புத்தக வியாபாரியைத் தேடிப்பிடிச்சு நட்பு வச்சுருந்திருக்கலாம்... நாலு புக்காவது மிஞ்சியிருக்கும்! ;)

    (சற்றே பொறாமை கலந்த) வாழ்த்துகள் !! :)

    ReplyDelete
  4. @ Raj Muthu Kumar S

    காமிக்ஸ் மழை தலைப்புக்கு ஏற்றபடங்கள்,ஆனால் மழை தான் செயற்கை என தோன்றுகிறது நண்பரே...ஹி..ஹி..
    பழைய புத்தக வியாபாரியை (கார்த்திகேயன் அவர்கள் ) விவரம் தெரியாதபுதுவேட்டையர்கள் வலைவிசி தேடிக்கொண்டிருப்பார்கள்...!

    ReplyDelete
  5. வேட்டை கனஜோர். விற்பனையாளர்கள் மத்தியிலும் இன்னும் காமிக்ஸ் காதலர்கள் தப்பி பிழைத்து வருகிறார்கள் என்ற கேட்க சந்தோஷமே.

    ReplyDelete
  6. 30 வருஷங்களாக நான் சேர்த்துக்கொண்டிருப்பவைகளை விட அதிகமாக சில நாட்களிலேயே சேர்த்துவிட்டீர்களே.!!

    !!!சூப்பர்.சூப்பர்.சூப்பர்.!!

    சில காமிக்ஸ்கள் என்னிடத்தில் இல்லை.
    எனவே சற்று வயத்தெரிச்சலுடன்,

    வாழ்த்துக்கள். !!!!

    பி.கு. காமிக்ஸை சகாயவிலையில் குடுத்த புண்ணியவானிடம்
    என்னையும் ரெகமன்ட் செய்யுங்கள் ராஜ்குமார் சார். ஹி ஹி.ஹி!!!

    ReplyDelete