Thursday, September 11, 2014

The லயன் MAGNUM ஸ்பெஷல் - LMS

LMS எப்படி
 
முதல் பார்வை
 
ஈரோடு புத்தக கண்காட்சியில் தான் முதல் முதலில் நேரில் பார்த்தேன். ஈரோடு ஸ்டாலின் எடுத்து கொடுக்க வாங்கிப் பார்த்த போது வாய் அகல திறந்து கொண்டது. காரணம் ஹார்ட் பௌண்ட் அட்டை, இது போல காமிக்ஸ் புத்தகத்தை பார்த்ததில்லை என்பதால் வாவ் என்ற வார்த்தை தன்னை அறியாமல் வெளி வந்தது.  ஈரோட்டில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கே நேரம் இல்லை என்பதால் மறு நாள் தான் "என்ன இது ? வர வர ஒங்க அழிச்சாட்டியம் ஓவரா போய்க்கிட்டு இருக்கு" என்ற திருமதியின் திட்டுக்கு நடுவில் அதை எடுத்தேன். எடுத்தவுடன் அவர் திட்டின திட்டுக்கு நான் கொடுத்த மகிழ்ச்சி ரியாக்சனை பார்த்து "நல்லாத்தான இருந்தாரு, அதுக்குள்ள என்னாச்சுன்னு " குழப்பமடைந்து நிறுத்தினார். நமக்கு அது தானே வேணும்.
 
 ஏற்கனவே என் மகள் பிரித்து விட்டதால் அந்த அனுபவம் மிஸ்ஸிங்.  :(
 
ரெண்டு புத்தகமாக இருந்ததே பிடித்திருந்தது. ஒவ்வொரு புத்தகத்தையும் தலையும், தளபதியும் முன்னட்டையில் தோன்றி தத்தம் ரசிகர்களை மகிழ்ச்சியூட்டினார்கள்.  தளபதி படம் கலக்கல். தல படம் ஹார்ட் பௌண்ட் அட்டையில் அட்டகாசம். அதுவும் அந்த துப்பாக்கிக்கும், கார்சனின் தொப்பிக்கும் கொடுத்த ஹை- லைட் நச். இந்த புத்தகத்தை வாங்கிய ஒருத்தரும் இந்த புத்தகத்தை ஒரு தடவயாவது நன்றாக கவனித்து பார்க்காமல் இருக்க மாட்டார்கள். ஈரோடு பூனையார் ரூ 100 புத்தகத்துக்கே ஒரு வாரம் கழித்துதான் படிக்கவே செய்வார். இந்த ரூ 500 புத்தகத்துக்கு என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை.
 
 

சட்டம் அறிந்திரா சமவெளி
 
பொன்னியின் செல்வனில் அருள் மொழி வர்மன் இலங்கையில் இருக்கும்போது, எடு உன் வாளை என்று வந்திய தேவனை வலுவில் சண்டைக்கு இழுத்து தன் பெரு வாளுடன் சண்டையிடுவார். சண்டை முடிவில்லாமல் போய்க்  கொண்டிருக்கும்போது கூட்டத்தில் இருந்த பூங்குழலியை பார்த்து திகைத்த ஒரு நொடியை பயன்படுத்தி வந்திய தேவனின் வாளை தட்டி விடுவார் அருள் மொழி வர்மன்.  என் வாளால் முடியாததை பூங்குழலியின் கண் ஒரு நொடியில் செய்து விட்டதே என்று நகைப்பார் அருள் மொழி. பின் ஏன் சண்டைக்கு இழுத்தேன் என்று கூறும்போது என் தோள்கள் தினவெடுத்தன. கத்தியை கூர் செய்வது போல அவ்வப்போது இப்படி சண்டை செய்தல் தம் பழக்கம் என்பார். டெக்ஸ்சும் அதே போல தினவெடுத்த தோளுடன் இந்த கதை ஆரம்பிக்கும் போதே இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். 
 
டெக்ஸ் கதைகள் ஒரே டெம்ப்ளேட் தான் என்றாலும் ஒரு சில கதைகள் ரசிக்க வைக்கும். எனக்கு பிடித்த டெக்ஸ் கதைகள் தலை வாங்கி குரங்கு, நள்ளிரவில் ஒரு நரபலி, மரண முள். இவை மூன்றுமே டெம்ப்ளேட் கதைகள் இல்லை. இவை மூன்றிலும் ஒவ்வொரு நிமிடமும் திக் திக் என்று அடுத்து என்ன ஆகப் போகிறதோ என்று கதையுடன் ஒன்றி படிக்க முடியும். 
சட்டம் அறிந்திரா சமவெளி டெம்ப்ளேட் கதை என்றாலும் ரெண்டு விஷயங்களால் மற்ற கதைகளில் இருந்து மாறுபட்டு இருக்கிறது. ஒன்று டெக்ஸ்சின் கும்மாங்குத்து மற்றொன்று கார்சனின் ஜொள்ளு மற்றும் லொள்ளு.
 
எடிட்டர் சொன்னது போல முதல் ஐந்து பக்கத்தில் கதை தெரிந்து விடும். பெரிய மனிதன் போல நடித்துக் கொண்டிருக்கும் ஒரு விரியன் பாம்பை  வன்மேற்கின் பெருந்தங்கம் டெக்ஸ் நசுக்குவதே கதை. (டெக்ஸ் பத்தி எழுதும்போது கனவுகளின் காதலனை மறக்க முடியவில்லை ;) )
 
டெக்ஸ் சட்டையை கழற்றாமலே விடுகின்ற குத்துக்கள் எத்தனை என்று போட்டியே நடத்தலாம். அத்தனை குத்துக்கள். வேலை கொடுக்கும் உயரதிகாரியிடமே மேஜையில் கையை ஊன்றி பேசும்போதே உயரதிகாரியின் முகரையை பெயர்த்து விடுவாரோ என்ற பயம் நமக்கு தொற்றிக்கொள்ளும். கதை முழுவதும் ஒரு வித எரிச்சலுடனே இருக்கிறார். அதனால் அகப்படுபவனை கும்மாங்குத்து குத்துகிறார். டமால் டுமீல் ஒலியை விட சத், நங், ஐயோ , அம்மா ஒலிகளே கதையெங்கும் விரவி கிடக்கின்றன.
 
கார்சனுக்கு ஆக்சன் ப்ளாக்கில் அதிகம் வேலை இல்லை என்றாலும் காமெடி ப்ளாக்கில் வெளுத்து வாங்குகிறார். டெக்ஸ் துவைத்து எடுக்கும் நபர்களை தூக்கி உட்கார வைப்பதே பெரு வேலையாக இருக்கிறது அவருக்கு.  வறுத்த கறி நினைவு, பெண்களிடம் வழிவது என்று டிபிகல் கார்சன். பெண்ணாக கிட்டின் கோச்சு வண்டி பயணமும் நகைப்பூட்டக் கூடியதே.
 
கிளைமாக்ஸ்சில் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. சிறையை டைனமைட்டுகளை வைத்து வில்லன் தாக்கும்போது துப்பாக்கியை வைத்து ஒன்றும் செய்ய முடியாதுதான், ஆனாலும் ஊரில்  இருக்கும் கிழம் கெட்டைகள் வந்து டெக்ஸ்சை காப்பற்றுவது ஏற்புடையதாக இல்லை. என்னய்யா கிளைமாக்ஸ். டெக்ஸ்சோட மானம் என்னாவது.
 
ஒரு முழு நீள ஆக்சன் படத்தை பார்ப்பது போல ரசிக்க வைத்திருப்பதால் தலைக்கே LMS இல் முதலிடம்.
 
டைலன் டாக்
 
திகில் கதைகள் படித்து ரொம்ப நாளாச்சு. சிறு வயதில் படித்த ஒரு கதை இன்னும் நினைவில். ஒரு விஞ்ஞானி பூனையின் மூளை போன்ற ஒன்றை வைத்து அந்த நகரத்தில் உள்ள எல்லா பூனைகளையும் கட்டுப் படுத்துவார். இறுதில் அந்த மூளையை அழிக்க எல்லா பூனைகளும் சுய உணர்வுக்கு வரும். பெயர் நினைவுக்கு வரவில்லை. தெரிந்தால் பகிரவும்.
 
திகில் கதை வேண்டும் என்றும் எல்லோரும் நினைப்பதால் இது கட்டாயம் ஹிட் அடிக்கும் என்றுதான் ரெண்டாம் கதையாக எடிட்டர் போட்டிருக்கிறார்.  முதல் பக்கமே முகம் கிழிந்து தொங்கும் படம் சற்றே அசூயை கொள்ள வைத்தது.  மரணத்தை வெல்ல அப்படிப்பட்ட ஒரு சோதனையும் சாத்தியமே என்று நாம் நம்ப ஆரம்பிப்பதே இந்த கதையின் வெற்றி.  ஒரு கிராமமே வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே இருக்கும்  அந்தி மண்டலத்தில் வாழ்ந்து வருவது போன்ற கதை சிலருக்கு பிடிக்கலாம், சிலருக்கு உடான்ஸ் என்று பிடிக்காமல் போகலாம். எனக்கு பிடித்திருக்கிறது. எவ்வளவு நாள் வாழ்ந்தாலும் கடைசியில் ஒரு விரக்தி மற்றும் வெறுப்பு தான் அந்த டாக்டருக்கு மிஞ்சுகிறது. இயற்க்கையை எதிர்த்து செய்யும் விசயங்கள்  அப்படிப் பட்ட ஒரு நிலையைதான் தரும்.    
 
மொத்தத்தில் டைலன் டாக் தனக்கு தரப்பட்ட ரெண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார்.
 
ராபின்
 
ராபினின் கதைகள் நான் அவ்வளவாக படித்ததில்லை. ஆனாலும் ஒரு டிடெக்டிவுக்கு நியாயம் தரும் அணுகுமுறை எனக்கு பிடித்து இருந்தது. அதிக டுமீல் டுமீல் இல்லை, ணங், சத் சத்தங்கள் இல்லை. ஒரு ராஜேஷ் குமார் நாவல் போல, குற்றத்தின் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்து கடைசியில் கொலையாளி வெளிப்படுவது அருமை. சரவணா RSK சொன்னது போல மார்க்கோவை இன்னும் துருவி இருந்தால் சீக்கிரமே இந்தக் கதை முடிவுக்கு வந்திருக்கும். இந்தக் கதையில் வண்ணங்கள் சரியாக அச்சிடப் படவில்லை என்று நண்பர்கள் சிலர் முக நூலில் சொல்லி இருந்தார்கள்.சிம்பிள் ஆன வண்ணங்களுடன் இருந்ததால் அப்படி நினைத்திருக்கலாம். எனக்கு வித்தியாசமாக எதுவும் தெரிய வில்லை. ராபின் நல்ல அறிமுகம் (எனக்கு ). மேலும் கதைகளை எதிர்பார்க்கிறேன்.
 

கட்டத்துக்குள் ஒரு வட்டம்

மர்ம மனிதன் மார்டின் கதை வழக்கம் போல வித்தியாசமாக இருந்தது. கொஞ்சம் யோசித்தால் எப்பேர்பட்ட புதிரையும் அவிழ்க்கலாம் மற்றும் பெரிய புதிருக்கு விடை மிக எளிமையானதாகவும் இருக்கலாம் என்பதையும் வைத்து பின்னப் பட்ட கதை.

ஆனா இத்துனூண்டு கடப்பாறையை வைத்து அத்தாப்பெரிய அனகோண்டாவை கொல்லுரதாவது. செம காமெடி பாஸ்.

விண்ணில் ஒரு விபரீதம்

ஜூலியா கிரிமினாலஜிஸ்ட் - பேருல்லாம் பெத்த பேரா இருக்கு. ஆனா சரக்கில்லையே. இந்தம்மா என்ன பண்ணுராங்கன்னே தெரியல. கதை க்ரிஸ்ப்பா டக்கு டக்குன்னு போக வேண்டாமோ. இப்பதான் இன்ஸ்பெக்டரும் இந்தம்மாவும் உக்காந்து தங்க கதைய , வேலைய பத்தி பேசுறாங்க, சரி அத வச்சு ஏதோ இருக்கபோகுதுன்னு பாத்தா, ஒண்ணுமில்ல. அந்த கார் ஆக்சிடெண்ட் தேவை இல்லாத ஒண்ணு. அது மூலமா கதையில் திருப்பம் ஏதாவது வருதா ஒண்ணு மில்லை. திரும்ப ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்ன்னு சொல்லுறாங்க. ஆனா எனக்கு விருப்பமில்லை. கொடுத்த வாய்ப்பையே சரியா பயன்படுத்தவில்லை.

LMS போன்ற  ஒரு மைல் கல் புத்தகத்தில் வருவதற்கு 1% கூட இதுக்கு தகுதி இல்லை.

இறந்த காலம் இறப்பதில்லை

B /W இல் ஒரு கிராபிக் நாவல்னு சொல்லும்போதே சொரேர் என்றது. கலரில் போட்டாலே நம்ம பயக அந்த ஆபத்தான மிருகம் வருது எல்லோரும் அந்த பக்கமா ஒடுங்கன்னு ஓடுவாங்க இதில் B /W லான்னு படிக்க ஆரம்பித்தேன்.

 B /W இல்நல்ல திரைக்கதை உள்ள கதை, கமல் ஹாசன் மாதிரி ஆள் அந்த கிழவராய்  நடித்தால் படம் ஹிட் என்று சிலாஹித்தார் ஈரோடு பூனையார்.

அவர் சொன்ன மாதிரி நல்ல கதைதான். ஆனால் இதே மாதிரி நிறைய ஆங்கில படங்கள் வந்துவிட்டன. அதை பார்த்து விட்டதாலோ என்னமோ, எனக்கு ஆஹா ஓஹோ என்று தோணவில்லை. இறந்த காலதுக்கும் நிகழ் காலத்துக்கும் அடிக்கடி போய் வரும்படி அமைத்து இருந்தது எனக்கு பிடித்திருந்தது. கொஞ்சம் கவனமாக பார்க்க வேண்டும் இல்லையென்றால் ஏன் இதில் இளமையாய் இருக்கிறார் அடுத்த பேனலில் கிழவரை இருக்கிறார் என்று குழம்ப வாய்ப்புண்டு.

பேய் நகரம்

இதுவே நான் படிக்கும் முதல் கலாமிட்டி ஜேன் கதை. உண்மையான   கலாமிட்டி ஜேன்னின் கதையையும் சுருக்கமாக கொடுத்திருந்தது சிறப்பு. விழுந்து விழுந்து சிரித்த கதை. மீண்டும் மீண்டும் படித்த கதை. என மகன் மீண்டும் மீண்டும் திருப்பிக் கொண்டிருக்கும் கதை. முதலில் ஜேன் மட்டுமே கெட்ட வார்த்தை பேசிக் கொண்டிருப்பார் முடிவில் எல்லாரும் ஒவ்வொருவராக பேச ஆரம்பிப்பது சிரிப்பை வரவழைத்தது. மெயின் கேரக்டரை ஓரம் கட்டி விட்டது ஜாலி ஜம்பரும் ஜேனின் குதிரையும். குட்டிம்மா பப்பிமா ன்னும் ஜாலி ஜம்பரை கொஞ்சுவதும், அந்த விஸ்க்கி கலந்த தண்ணீர் நன்றாக இருப்பதால் வைத்து விட்டுப் போன விஸ்க்கி பாட்டிலை உடைத்த பிறகு அவற்றின் முக பாவத்தை பாருங்களேன். சூப்பர்   ரின் டின் கேன்

இந்த கதை பற்றி ஒரு மிக்ஸ்டு ரியாக்சனையே எடிட்டரின் ப்லொக்கில் பார்க்க முடிந்தது ஒண்ணு ரொம்ப நல்ல விழுந்து விழுந்து சிரிக்கிறேன்னு சொல்லுறாங்க. இல்லேன்னா இதுக்கா இவ்வளவு  பில்ட்  அப்பு  ன்னு சொல்லுறாங்க. எனக்கு என்னமோ அந்த நாய் லெவலுக்கு எறங்கி யோசிச்சாதான் இந்தக் கதை பிடிக்கும்ன்னு நினைக்கிறேன். சில இடங்களில் மட்டுமே சிறு புன்னகையை வரவழைத்தது. மற்ற இடங்களில் எல்லாம் ஏன்டா இவ்வளவு பக்கியா இருக்குது இந்த நாய் என்ற நினைவுதான் வந்தது.

மார்ஷல் டைகர் 

தங்க கல்லறையை மனதில் வைத்து இந்தக் கதையை படிக்காதீர்கள். புது சித்திர முயற்சி நன்றாக இருக்கிறது. ஆனால் ஆரம்பிக்கும் முன்னே முடிந்து விட்ட மாதிரி ஒரு பீலிங். எப்பவுமே இந்த மாதிரி ஒரு அதிரடிக்கு பின் தான் மெயின் சாகசமே ஆரம்பிக்கும். ஆனால் இதில் பொசுக்கென்று முடித்து விட்டது ஏமாற்றமே. மார்ஷல் டைகருக்கு ஒரு பில்ட் அப் கதை என்ற வகையில் ஓகே. (ஹ்ம்ம் என்னென்ன பில்ட் அப்புலாம் கொடுக்க வேண்டி இருக்கு இந்த டெக்ஸ் ரசிகாஸ் கிட்ட இருந்து தப்பிக்க)
 

எனக்கு பிடித்த வரிசை

இப்படி வரிசைப் படுத்தும்போது வண்ணக் கதைகளையும் , கருப்பு வெள்ளை கதைகளையும் ஒரே வரிசையில் வகைப்படுத்த  விரும்பவில்லை. எனவே தனிதனியாக எனக்கு பிடித்த வரிசையில் LMS  இல் வந்த கதைகள்

வண்ணத்தில்

1) சட்டம் அறிந்திரா சமவெளி - கும்மாங்குத்து
2) அந்தி மண்டலம் - வெகு நாள் கழித்து அனுமாஷ்ய கதைக்காக
3)  ராபின் - நல்ல ஒரு டிடெக்டிவ் கதைக்காக
4) பேய் நகரம் - ஜாலி  ஜம்பர் அடிக்கும் லூட்டிக்காக 
5) மார்ஷல் டைகர் - அடுத்த கதை வந்த பிறகு பாருங்க . நாங்கெல்லாம்
                                         அப்பவே அப்புடி
6) ரின் டின் கேன் - ஓகே ரகம்தான். ஒரு வேளை நம்ம ஓவரா  யோசிக்கிரமோ.

கருப்பு வெள்ளையில்

1) கட்டத்துக்குள் ஒரு வட்டம் - விறு சிறுப்பான கதை
2) இறந்த காலம் இறப்பதில்லை - சென்டிமென்ட் உள்ள மனதை பிழிய
                                                               வைக்கும் குடும்ப சித்திரம். :D
3) விண்ணில் ஒரு விபரீதம் - வேறு வழியில்லாமல் கடைசியில்

=============================================================================
மாயாவி சிவாவின் கை வண்ணத்தில் "மின்னும் மரணம் " போஸ்டர் ஈரோடு புத்தக விழாவில்
 
 
 
 
=============================================================================
தொடர்புடைய மற்ற பதிவுகள் 

 
1) லயன் மேக்னம் ஸ்பெஷல் - சத்தமில்லாமல் ஒரு சரித்திரம்!
2) THE LION MAGNUM SPECIAL  
3) LMS எனும் புதிய சாகாப்தம்
4) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் இனிய லயன் காமிக்ஸிற்க்கு!!!  
5) குத்து...மொத்து... முருக்...மிடுக் “டெக்ஸ்” !
6)  The லயன் MAGNUM ஸ்பெஷல்
=============================================================================
 
க்ளைமாக்ஸ்
 
மொத்தத்தில் நல்ல முயற்சி. ரெண்டு புத்தகமும் நன்றாக வந்திருக்கிறது. ஒரு பக்கம் குண்டு புத்தகம் சூப்பர் பைண்டிங் என்று மனம் குதூகளித்தாலும் ஐநூறு , ஆயிரம் என்று ஏறும் விலையைப் பார்த்து சிறிது கலக்கமாகத்தான் இருக்கிறது. 

  

Post Comment

9 comments :

 1. Super review. I liked R.T.C :-). Yes. We need to be dumb to enjoy the story.

  No words about Tiger story art work ?. I was waiting to read you art work review.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராம் குமார். ஒரு சில இடங்களை தவிர எனக்கு போட்டோ எடுத்து போடும் அளவுக்கு சித்திரங்கள் இருந்த மாதிரி தெரியவில்லை. ஒரு வேளை புதிய மாதிரி சித்திரங்கள் என்பதால் இருக்கலாம்.

   Delete
 2. ஒரு திருப்தியான முழுநீளப்பதிவு! ரின்டின்கேனை ரசிக்க பிராணிகளின் சைக்காலஜி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். லக்கிலூக்கின்'பேய் நகரம்' கதையை நீங்கள் ரசித்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது. 'பூம்பூம் படலம்' மாதிரியான ஒரு சூப்பர் ஹிட் கதையை சமீபத்தில் படித்ததாலோ என்னவோ எனக்கு இது கொஞ்சம் சுமார் ரகமாகவே தோன்றியது.
  நான் 'தல'யின் தீவிர ரசிகன் என்றாலும் 'சட்டம் அறிந்திரா சமவெளி'யில் அந்த ஷார்ப்பான ஓவியங்களைத் தாண்டி வேறெதையும் ரசிக்க முடியவில்லை. கிளைமாக்ஸ் எதார்த்தம் தான், என்றாலும் (உங்களைப் போலவே) என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

  இப்பதிவில் என் கண்ணுக்குப்புலப்பட்ட சிறு தவறுகள்:
  * 'வட்டத்திற்குள் சதுரம்' இல்லை. "கட்டத்துக்குள் ஒரு வட்டம்"

  * 'மாயாவி பாலா' இல்லை. மாயாவி சிவா!

  ReplyDelete
  Replies
  1. எனக்கு குதிரை சைக்காலஜி மட்டும் தெரிந்திருக்கு போல. ஜாலி ஜம்பெரை ரசிக்க முடிந்த லெவலுக்கு ரின் டின் கேனை (கேனை ? ;) )ரசிக்க முடிய வில்லை.

   தவறுகளை மாற்றி விடுகிறேன்.

   Delete
 3. அருமையான விமர்சனம். ரின்டின்கேனை பற்றிய உங்கள் விமர்சணம் என்னை பொறுத்தவரையில் மிகச்சரியே.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கார்த்திகேயன் !

   Delete
 4. நம் இருவரது ரசனைகளும் அநியாயத்திற்கு ஒத்துப்போகின்றன.

  சித்திர தரத்தில் உங்கள் டாப்3 சொல்ல வில்லையே ராஜ்?

  எனக்கென்னவோ இதிலும் டைகரும் வில்லரும் போட்டி போடுவதாக தோன்றுகிறது. ;-)

  ReplyDelete
  Replies
  1. நன்றி அமர்நாத். தலையுடயது நார்மலான ஸ்டைலில் உள்ள சித்திரம். தளபதியுடயது புது ஸ்டைல் என்பதால் எனக்கு அவருடைய சித்திரங்களே பிடித்திருக்கிறது.

   Delete