Saturday, August 9, 2014

ஈரோடு புத்தக கண்காட்சி (Erode Book Fair - 2014 )

ஈரோடு போன கதை 

ஈரோடு போயி திருச்சி வந்தாச்சு. ஈரோடு போவதற்கு ஒரு நப்பாசை இருந்தாலும் வீட்டிலிருந்து புறப்படும் ரோகினி, ஆர்யபட்டா, PSLV ராக்கெட்டுகளை சமாளிக்க முடியுமா என்று நினைத்தபோது "வேணா நினைப்பு நினைப்பாவே " இருக்கட்டும்ன்னு சீசீ போனா ஒடம்பு வலிக்கும்ன்னு நானே சமாதானம் செய்து கொண்டு அந்த காசை +6 சந்தாவா கட்டிடலாம்ன்னு கட்டிட்டேன். 

ஆனா விதி வலியது இல்லையா. என் அம்மா தஞ்சாவூரில் இருக்கும் அக்கா வீட்டுக்கு உடனே போக வேண்டும்ன்னு ஒரு குரல் எழுப்பினார்கள். சரின்னு தஞ்சாவூர் சனி காலை ட்ரெயினில் போய்விட்டு ஞாயிறு காலை ட்ரெயினில் திரும்பி விடலாம்ன்னு நினைத்து டிக்கெட் புக் பண்ணி விட்டேன். அடுத்த நாள் தான் Aug  2  என்ற தேதியைப் பார்த்ததும் தான் நினைவுக்கு வந்தது ஈரோடு புத்தக திருவிழா. ஆகா இதே சாக்கா வச்சு தஞ்சாவூரில் இருந்து ஞாயிறு ஈரோடு போய் விடலாம்ன்னு முடிவு பண்ணி தஞ்சை டு சென்னை டிக்கெட்டை கான்செல் பண்ணினேன். 

சர்ப்ரைஸ் 

போவதென்று முடிவானவுடன் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று திருப்பூர் ப்ளுபெர்ரி நாகராஜனிடம் மட்டும் பட்டும் படாமல் சொல்லிவிட்டு யாரிடமும் சொல்லி விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டேன். 

சனியன்று அக்கா வீட்டுக்கு செல்லும் போதே மொபைலில் சௌந்தர் , ஸ்டாலின் , செயின்ட் சாட்டான் பதிவுகளை படித்து விட்டேன். FB  இல் நண்பர்களது உற்சாகத்தை பார்க்கும்போது உடனே ஈரோடு போக ஜெட் கிடைக்காதா என்று இருந்தது.

பயண அனுபவம் 

ஆடிப் பெருக்கு 

ஞாயிறு காலை 4.30 மணிக்கு எழுந்து கிளம்பினால் 10 மணிக்கு ஈரோடு வந்து விடலாம்ன்னு பிளான் பண்ணி அலாரம் வைத்தேன். அலாரம் புஸ் ஆகிவிட்டது. தஞ்சாவூரில் ஆடி பெருக்கு விஷேசம் என்பதால் காலை 5 மணிக்கு எழும்பி என்னை எழுப்பி விட்டார்கள். பிறகு அடித்து பிடித்து கிளம்பி தஞ்சாவூரில் 6.15 க்கு திருச்சி பஸ் ஏறி விட்டேன். வழியெல்லாம் ஆடி பெருக்கு விசேஷத்தை பார்த்துக் கொண்டே வரும் வாய்ப்பு கிடைத்தது. வலது பக்கம் அகண்ட காவிரியில் தொட்டுக்கோ தொடச்சுக்கோ ன்னு தண்ணி வர, எங்க இடது பக்கத்தில் கால்வாயில் நன்றாக வந்து கொண்டிருந்தது. அதில் சிறுவர்கள் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். முக்கொம்பில் நல்ல கூட்டம். இருபுறமும் காவிரி ஆற்றை  பார்த்துக் கொண்டே வரும்பொழுது பொன்னியின் செல்வன் நினைவுக்கு வந்தது, அதன் ஆரம்பமே இப்படிப்பட்ட ஒரு ஆடிப் பெருக்குதானே. காவிரி ஆற்றின் மறுபெயர் பொன்னி, அதனால் தான் பொன்னியின் செல்வன் என்று ராஜ ராஜன் அழைக்கப் படுவதும் நினைவுக்கு வந்தது. அந்த ஆடிப் பெருக்கு வர்ணனையை மீண்டும் வாசிக்க வேண்டும். 

கரூர் 


திருச்சியில் இருந்து நேரடியாக ஈரோடு செல்ல காத்து இருக்க வேண்டும் என்பதால் கரூருக்கு போய் ஈரோடு போய்  விடலாம்ன்னு கரூர் பஸ்ஸில் ஏறினேன். திருச்சி வரும்போதும் கரூர் வரும்போதும் பஸ்ஸில் கூட்டமே இல்லை. ஈரோடு மக்களின் மரியாதையை பேசும் பண்பு அந்த கண்டக்டரிடம் கண்டேன். "தம்பி வாசலில் நிக்காதீங்க மேல வாங்க. அண்ணா டிக்கெட் வாங்கியாச்சான்னு" மிக மரியாதையை கேட்டுக் கொண்டிருந்தார். சென்னை தமிழ் சீ என்றிருந்தது.

சதுரங்க வேட்டை படம் பற்றி பேசும் பொது நண்பர் ஒருவர் திருப்பூர் கரூர் மாவட்ட மக்கள் சீக்கிரம் பணக்காரன் ஆகும் ஆசை மிக உள்ளவர்கள், அதனால்தான் இப்படிப்பட்ட ஏமாற்று வேலைகளினால் சீக்கிரம் ஏமாந்து விடுவார்கள் என்றார். அது அவருடைய கருத்து. கரூர் பஸ் நிலையம் இறங்கி ரெஸ்ட் ரூமில் இருக்கும்போது ஒரு குரல் "சார் அதிர்ஷ்ட்ட கல்லு மோதிரம் சார். போட்ட ஏழில் இருந்து இருபத்தொரு நாளில் அதிர்ஷ்ட்டம் வரும் . அப்படி வரேலேன்னா நாங்க குடுக்கிற கேரண்டி கார்டை கொண்டு வந்து குடுங்க. நாங்க உங்க பணத்தை திருப்பி குடுக்குறோம்." ன்னு கேட்டது. ஆரம்பிச்சுட்டாங்கடான்னு நினைச்சுக்கிட்டே வெளியே வந்தேன். அட்லீஸ்ட் ஒரு மாருதி வேனில் வந்து இப்படி வித்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்தேன். வெளியே வந்து பார்த்தால் தரையில் போட்டு என்ன ரேஞ்சில் ஒருத்த வித்து கொண்டிருக்காருன்னு பாருங்கள். அவரிடம் ஒரு பெரியவர் அப்போதுதான் வந்து தம்பி "தம்பி ஒரு ஏழு நாளில் அதிர்ஷ்டம் வருமா தம்பி " ன்னு உக்காந்து கிட்டு தன் அதிர்ச்ட்டதை தேர்வு செய்வதை பாருங்கள். ஆயிரம் சதுரங்க வேட்டை படம் வந்தாலும் ஒங்கள திருத்த முடியாதுன்னு நினைச்சு கிட்டே ஈரோடு பஸ்ஸை பிடித்தேன். 


ஈரோடு பஸ்சில்தான் கூட்டம் இருந்தது. பஸ் ஸ்டாண்டில் இறங்கி ஒருவரிடம் ரெஸ்ட் ரூமுக்கு வழி கேட்க "அதோ அந்த கட்டிடம் தான் " என்றார். மினி IT கம்பனி மாதிரி இருக்கு ஈரோடு கட்டண கழிப்பறை. கலக்கல் போங்க ( சீ சீ அந்த கலக்கல் இல்லேங்க).

பார்க்கு போகும் வழியை கேட்க VOC  பார்க்கு எங்க இருக்குங்கன்னு கேட்க்க சிறிது யோசித்து விட்டு வ. வு. சி பார்க்குங்களா ன்னு கேட்டார் (மனதிற்குள் நல்ல தமிழில் பேசாதற்கு ஒனக்கு தேவதான்டின்னு நினச்சுகிட்டேன்). ஆமாம் என்று சொன்னவுடன் "ஒரு ரவுண்டானா வருங்ண்ணா அதில்   இருந்து நேரே போயிடுங்ண்ணா" வாழ்க ஈரோடு மக்களின் மரியாதை என்று வாழ்த்திக் கொண்டே நடை கட்டினேன். 

முதலில் ஆச்சர்யப்படுத்தியது நுழைவுக் கட்டணம் இல்லை என்பதுதான். சர்ப்ரைஸ் என்று சொன்னேன் இல்லையா அது என்னன்னா, யாருக்கும் என்னை  தெரியதுன்னால (விஸ்வா, எடிட்டர் தவிர) ஸ்டாலில் நுழைந்து "இரும்புக் கை மாயாவி புத்தகம் வேணுமே. என்னது இல்லையா ? இரும்புக்கை இல்லாம என்னையா காமிக்ஸு? எனக்கு  வேணும் எவ்வளவு ரூபான்னாலும் பரவாயில்லை ன்னு ஒரு ஆக்டிங்க போடணும்ன்னு   நினைச்சுக்கிட்டேன்.

பூனையாரை பின்னாலிருந்து அட்டாக்

நம்ம ஸ்டால் முன்னாடி வழக்கம் போல கூட்டம் இருந்தது. ஈரோடு விஜய் நின்னு கொண்டிருப்பது தெரிந்தது. சரி பூனையாரை பின்னால் இருந்து அட்டாக் பண்ணும்வோம்ன்னு அவர் பின்னாடி நின்னுகிட்டு "இரும்புக் கை மாயாவி புக் இருக்கான்னு ?" கேட்டேன் உடனே அவரு திரும்பிக் கூட பார்க்காம சிக்கினாண்டா சேகருன்னு "சார் இங்க பாருங்க இரும்புக்கை மாயாவி புக் வேணுமான்னு " எடிட்டரை கோர்த்து விட்டு விட்டார். எடிட்டர் என்னைப் பார்த்தவுடன் என் வேடம் களைந்து விட்டது. அப்புறம் அடப் பாவி ஒரு வார்த்தை கூட சொல்லாம வந்துட்டீங்கலேன்னு மண்டகப் படி நடந்தது. ஸ்டாலின் "ஓ நீங்க தானா அதுன்னு" கையை குலுக்கினார். விஸ்வாவை சிறிது நேரம் கழித்துதான்  பார்த்தேன்.                

ஸ்டாலினிடம் இன்னும் புத்தகத்தை பார்க்க வில்லை என்றவுடன் " இங்க வாங்கன்னு" கூட்டிட்டு போய் புத்தகத்தை எடுத்து காட்டினார். சூப்பர் சார் லிப்கோ டிஷ்னரி மாதிரி இருக்குன்னு சொல்லி விட்டேன். அப்புறம்தான் ஐயையோ என்னடா இது இப்படி சொல்லிட்டோம்ன்னு "இல்ல சார் ஹார்டு பவுண்டு அட்டை பார்த்தவுடன் அப்படி தோன்றியது. சூப்பர் சார் பைண்டிங் மற்றும் அட்டைப் படம் சூப்பர் " என்றேன். 

மாயாவி சிவாவின் மின்னும் மரணம் டீசர்


ஈரோடு உணவகங்கள் 

ஈரோடு புத்தக கண்காட்சி போகும் வழி எல்லாம் நல்ல உணவகங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று ஜூனியர் குப்பண்ணா. சரி அதில் போய் சாப்பிடலாம்ன்னு போனா நண்பர் ஷல்லும் மனைவியுடன் சாப்பிட வெய்ட் பண்ணிக் கொண்டிருந்தார். அவருடன் ஒட்டிக்கொண்டு சாப்பிட்டு வந்து விட்டேன். இரவும் முதலியார் மெஸ் என்ற இடத்திற்கு போனால் மறுபடியும் எனக்கு முன்னால் சாப்பிட உட்க்கர்ந்திருக்கிறார். எங்கே போனாலும் எனக்கு முன்னே போயிடுறீங்களேன்னு கேட்டுக் கொண்டே சாப்பிட்டு முடித்தோம். ஜூனியர் குப்பண்ணா சாப்பாடு சூப்பர். ரசம் கேட்டு வாங்கி சாப்பிடுங்கள். டிவைன்.

வாசகர்கள் 

கோவில் பட்டியில் இருந்து சிவா(சுப்ரமணியன்) என்ற வாசகர் எடிட்டரை பார்க்க வந்திருந்தார். ஒரு 45 நிமிடம் தாமதமாக வந்ததால் எடிட்டரை பார்க்க முடியவில்லை. கையில் கோவில் பட்டி கடலை மிட்டாய் கொண்டு வந்திருந்தார். தஞ்சாவூர் பூர்விகமாக கொண்ட திருப்பூரில் வசிக்கும் ராஜாராமன் ஒரு இண்டரஸ்டிங் பெர்சனாலிட்டி. பிடித்த கதைகளில் வரும் கேரக்டர்களின் பேர் மற்றும் வசனங்களை மனப் பாடமாக சொல்கிறார். அவருடைய நினைவுத்திறனை கண்டு நான், விஜய் மற்றும் ஸ்டாலின் வியந்தோம். டெக்ஸ் மற்றும் கார்சன் இடையில் நடக்கும் நக்கல் பேச்சுக்களை நம் எடிட்டர் எழுதும் விதம் பற்றி வெகுவாக சிலாகித்தார். அவருக்கு காரிகன், ரிப் கிர்பி கதைகள் வேண்டுமாம். அடடா எடிட்டர் இருக்கும் நேரம் வராம போயிட்டீங்களேன்னு வருத்தப்பட்டார் ஈரோடு பூனையார்.

 மற்றுமொரு நண்பர் கார்த்திக் (ப்ளேடு கார்த்திக் இல்லை) இவரைப் பற்றி விஜய் சொன்ன விஷயம் ஆச்சர்யமானது. ரூ 200 ரத்தப் படலம்  முழு புத்தகத்தையும் ஒரே நாளில் படித்து முடித்து விட்டாராம். நாலஞ்சு தடவை படித்தும் இன்னமும் என் குழப்பம் தீரவில்லை. சந்தித்த மற்றுமொரு முக்கியமான வாசகர் Rummy XIII (ரமேஷ் பழனிச்சாமி) என்ற பெயரில் கமெண்ட் இடுபவர். XIII மீது இருக்கும் காதலால் ரத்தப் படலம் நாயகனை போலவே இவரும் XIII  என்று பச்சை குத்திக் கொண்டு உள்ளார். என்னே காமிக்ஸின் வலிமை. 

       

சாயங்காலம் நான், விஜய், கோவில் பட்டி சிவா, திருப்பூர் ராஜாராமன், ஸ்டாலின் மற்றும் செயின்ட் சாத்தான்  வெளியே வந்து பேசிக் கொண்டிருந்தோம். நல்ல மாலைப் பொழுதில் நம் அலை வரிசை உள்ள நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தது சுகமான அனுபவமாக இருந்தது.  அப்பொழுது ஈரோடு பூனையார் எப்படி புத்தகத்தை படிப்பார் என்று சாத்தான் போட்டுக் கொடுத்து விட்டார். விஜய் நீ ரசிகன்யா. இந்த தடவை நானும் அந்த மாதிரி படித்து பார்க்கிறேன். என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டால் நேரே ஈரோடு தான். :D [நான், ஸ்டாலின்,கோவில்பட்டி சிவா,புனித சாத்தான் சோமசுந்தரம்,திருப்பூர் ராஜா ராமன், ஷல்லும் மற்றும் அவரது மனைவி]இரவு 9.15 பஸ் என்பதால் 8.15 போல பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். பஸ் அபிராமி தியேட்டர் வாசலில் நிற்கும் என்றார்கள். 9.00 மணிக்கு போனால் பஸ் 9.45 க்கு தான் வந்தது. பஸ் வரும் வரை தியேட்டர் போஸ்டரில் இருக்கும் லக்ஷ்மி மேனனை பார்க்க  வைத்து விட்டார்கள். ;) ஒரு வழியாக ஏறி உட்க்கார்ந்து வண்டி கிளம்பியது. 12.45 மணியளவில் டமால் என்று ஒரு சத்தம் பஸ்சும் சிறிது அலைக்கழிய ஆரம்பித்தது. அடப் பாவிகளா காலையில ஆபீசுக்கு போனா மாதிரிதான்னு நினைசுக் கிட்டே இறங்கி பார்த்தால் பின் சக்கரத்தில் ஒண்ணு அவுட். எப்படியும் ஒரு மணிநேரம் ஆகி விடும் என்று நினைத்தேன். ஆனால் அரை மணி நேரத்தில் சரி பண்ணி ஆச்சர்யப் படுத்தினார்கள். காலையில் கூட டிராபிக் அதனால் கோயம்பேடு செல்லும் முடிவை மாத்திக் கொண்டு தாம்பரத்தில் 6.25 க்கு இறங்கி ட்ரைன் பிடித்து நுங்கம்பாக்கம் இறங்கி வீட்டுக்கு வந்தேன். வாசலில் "என்ன பிரெண்ட்ஸ் கூட நல்லா அரட்டை அடிச்சாச்சா ?" என்ற கேள்வியுடன் திருமதி. Home Sweet Home   

       

Post Comment

7 comments :

 1. வரலாறு முக்கியம்தான் நண்பரே! :)

  ReplyDelete
 2. உங்கள் அனுபவம் கலக்கல் ..:-)

  ReplyDelete
 3. please visit my blog friends
  http://vickycomics.blogspot.in/

  ReplyDelete
 4. நண்பர் ராஜ் முத்து குமார் - வணக்கம்,
  உங்கள் அனுபவத்தை விவரித்த விதம்,நானும் உங்களுடன் சேர்ந்து பயணித்தது போலவே அவ்வளவு சுவையாக இருந்தது நண்பரே!
  வாழ்க்கையை எவ்வளவு சுவையாக பார்கிறீர்கள் என்பதை உங்கள்பதிவு அழகாக காட்டுகிறது !!
  உங்களிடம் பேச எப்படி தவறினேன் என்பது தெரியவில்லை,
  மற்றொரு சந்திப்பில் அவசியம் பேச வேண்டும் நண்பரே.!!!
  (எப்படி இவ்வளவு நீளம் அசால்ட்டா டைப் செய்கிறீர்கள்)

  எனது பேனரை நானே இப்போதுதான் போடோவில் பார்கிறேன் !
  படம்பிடித்துக் கட்டிய கைகளுக்கு ஒரு நன்றி குலுக்கல் !!

  ReplyDelete
 5. உங்களது ஈரோடு வருகை திடீர் சர்ப்ரைஸ் என்றால், உங்களுடனும் மற்ற நண்பர்களுடனும் பேசிச் சிரித்துக் கழிந்த அந்த மாலைப் பொழுது மறக்க இயலாதது ரா.மு.கு அவர்களே!
  தஞ்சாவூரில் ஆரம்பித்து, சென்னை சென்று sweet homeல் நுழைந்தது வரையிலான உங்களது விவரிப்புகள், பல வருடங்களுக்கு முன் என் பாட்டியிடம் கேட்ட கதையைப் போல சுகமாய் இருக்கிறது. ;)

  அப்புறம்... நான் புத்தகம் படிக்கும் ஃபார்மூலாவை யார்கிட்டேயும் சொல்லீடாதீக. அடிச்சுக்கூடக் கேப்பாக, அப்பயும் சொல்லீடாதீக. ;)

  ReplyDelete