Tuesday, June 10, 2014

வெனிஸ் நகரில் ஒரு வெங்காய படலம் (Voir Venise)

என் மன வானில்(

Asterix and Obelix full set அமேசானில் ரூ 999 offer ஐ தவற விட்ட கடுப்பை அடக்கிக் கொண்டு வீட்டிற்கு சென்று படிக்க ஆரம்பித்தேன். வழமை போல எனக்கு ஒரு நாள் தள்ளியே புத்தகம் கைக்கு கிடைத்தது. வெள்ளி இரவு என்பதால் ஒரே மூச்சில் படித்து விடலாம் என முதலில் ஒரு பைங்கிளி படலத்தை முடித்தேன். அப்புறம் வெனிஸ் நகர கோமானை முடித்தேன்.

அட்டைப் படம்

டிராமா கெட்டப்பில் அழகாக லார்கோவும் பின்னணியில் டாலர் நோட்டுகளும் அருமை.  சிக் பில் ல்லை குறிவைக்கும் குள்ளன் அருமையான வண்ணக் கலவையாக இருந்தது.
குள்ளன் பேரு யாருக்காவது தெரியுமா ? மூலத்தில் கூட குள்ளன் தானா? =========================================================================
வாசகி லட்சுமி செல்வம் அவர்களின் பைந்தமிழ்ப் பாட்டு  நம் லயனைப் பற்றி.  
 
லயன்படித்து வாழ்வாரே வாழ்வார் பிறர்வாழ்வில்
பயனிலையே அவர்செய் பாவம் என்கொல்?

துஞ்சிடுமோ விழியிரண்டும் தூரத்தே ஆகஸ்ட் 2
அஞ்சிடுமே மனமதுவும் அதுவரையில் வலி தாங்க
கெஞ்சிடுமே மிஞ்சிடுமே கேடு கெட்ட பேராசை.ஆம் !
நெஞ்சினிலே லயன் மேக்னம்.

முத்தெடுக்க பல தமிழர் கடல் மூழ்க சௌந்தரபாண்டியனார்
முத்தெடுத்தார் நிலமீதில் நீடு வாழ்வார் அவர் வாரிசோ
அங்கமதை தான் வருத்தி தங்கமதை தேடாது
சிங்கமதை கொணர்ந்த்திட்டார் சீருடனே வாழியவே

தப்புபல தான் திருத்தி தாமதபேய் விரட்டி
ஒப்பிலா தமிழ்நடையால் ஊரார் மனம் மயக்கி
முப்பதாம் அகவையிலே முன்செல்லும் சிங்கமதை
எப்போதும் இறவாவரம் பெற இறைவனை இறைஞ்சுகிரோம்.

முதியோர் பின் வருவார் முனைப்புடனே கருத்துரைப்பார்
புதியோரே வருக! மேல்போர்த்த நாணம்எனும் ஆடை துறந்து
தளத்தினை பலப்படுத்த தாரனியோர் வாய்பிளக்க
உளமது கூறுவதை ஊரறிய உரைக்க வா!

யாரிவர் அவர் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யாது
ஊர்கூடி தேர் இழுப்போம் உவகை கொளவோம்
பார் அதிர படையெழுமின்! பட்டாசு சிவகாசி
ஊர் அதிர உண்மை பேச வா! நண்பா! வா!
 =========================================================================


வெனிஸ் நகர வெங்காயம்

தமிழில் சுவை கெட்டு விடும்  என்பதற்காக நான் ஆங்கிலத்தில் லார்கோவை படிக்காமல் வைத்திருக்கிறேன். இந்த பாகத்தைப் பற்றி இது வருவதற்கு முன்னமையே பல தடவை குறிப்பிடப் பட்டுள்ளது அதில் இருக்கும் சென்சார் தேவைப் படும் இடங்களுக்காக. நண்பர்கள் சிலரும் இந்த பாகத்தை பற்றி சொன்னார்கள்.

ஆனால் நார்மலான லார்கோ மாதிரி இல்லாமல் சப்பென்றிருந்தது.  லார்கோ எப்போதும் தன் வில்லன்களுக்கு நல்ல பதிலடி கொடுப்பார். இந்த பாகத்தில் அவர் மீது அடி விழாமல் இருந்தால் போதுமடா சாமி என்றிருக்கிறது.

கிட்டத்தட்ட திருவிழாவில் காணாமல் போன குழந்தையின் நிலையில், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் லார்கோ இருப்பது பரிதாபமாக இருக்கிறது.
இந்த பாகத்தில் லார்கோ மற்றவர்களை காப்பற்றுகிறாரோ  இல்லையோ, நிறைய பேர் லார்கோவை காப்பாற்ற வேண்டியிருக்கிறது.முதலில் பட்லர் லார்கோவை குடையின் மூலம் எதிரியை வீழ்த்தி காப்பாற்றுகிறார். பின் டோட்ஜ் பிரபுவே லார்கோவை விடுவிக்கிறார். க்ளைமாக்சில் கூட விடாலி வந்து லார்கோவை காப்பற்ற வேண்டி இருக்கிறது. அட போங்கப்பா 


நல்லா டீம் வொர்க் பண்ணி (ராம் குமார் சொன்னது போல ) காப்பாதுராங்கப்பா.
சைமன் இல்லாதது பெரிய குறைதான். லார்கோ தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கு ரியாக்ட் தான் பண்ணுகிறாரே தவிர பதிலடி கொடுக்க எதுவும் செய்ய மெனக்கிடவில்லை. லார்கோவின் தெனாவெட்டு வசனங்களும் கம்மி.   


பைங்கிளி படலம்

ஒரு பெண்ணுக்காக ஷெரிப் டாக் புல்லும், கிட்டும் அடிக்கும் கூத்துக்கள் தான் கதை.  மிகப் பெரிய சிரிப்பு வெடி இல்லை என்றாலும் ரசிக்கவே வைத்தது. கிட் கதையிலும் சென்சாரா?


ஓவியப் பார்வை 

1) மாலை வெயில் தகதகக்க ஓடும் ரயில் 


2) வெனிசின் கால்வாய் 


3) சூரியனின் ஒளிக் கற்றைகள் 


எனக்குப் பிடித்த (தெனாவட்டு) வசனங்கள் 

1) பென்னி கிளப்புக்கு போவதைப் பற்றி நக்கல்   2) கோபப் படும் கமிஷனரை தன்  வழிக்கு கொண்டு வரும் லார்கோ , பின் மன்னிப்பு கோருதல் 
3) இக்கட்டில் மாட்டி விட்டவளுக்கு கொடுக்கும் பதிலடி
4) விடாலியிடம் பேசும் இந்த வசனம்5) ரண களத்திலயும்  ஒரு கிளுகிளுப்பு6) சுற்றி போலிஸ் நின்று கொண்டிருக்க குறும்பாக பேசும் இந்த வசனம்7) தோழியை காப்பாற்ற சபதம் எடுக்கும் லார்கோ

 
========================================================================
இதையும் படிக்கலாமே 


======================================================================== 

 முரண்

1) வீடிnலி என்று நிறைய இடத்தில இருக்கிறது. இதை எப்படி வாசிப்பது என்று யாராவது சொன்னால் தேவலை.

2)  கெய்யுரிட்டி என்று தவறாக வந்துள்ளது. இவ்ளோ பெரிய எழுத்திலுமா தவறை கண்டு பிடிக்க முடியவில்லை ?


3) பைங்கிளி படலத்தில் ஆம்பளை அம்பளை ஆகி இருக்கிறது. 

க்ளைமாக்ஸ்

வெனிஸ் நகரில் லார்கோ என்ற ஆக்சன் ஹீரோவை தேடு தேடு என்று தேடினாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. வெங்காயத்தை உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது அது போல அதிரடியான லார்கோ எங்கே எங்கே என்று தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.மொத்தத்தில் ஏமாற்றமாகி விட்டாது. அதிக எதிர் பார்ப்பால் வந்த பிரச்னை என்றே நினைக்கிறேன்.

பைங்கிளி படலம் - ரிலாக்ஸ்சாக படிக்க வேண்டிய புத்தகம் என்று எடிட்டர் லேசாக திகிலை கிளப்பி இருந்தாலும், நன்றாகவே  இருந்தது.  

Post Comment

3 comments :

 1. Don't worry Raj.. Next books will have the usual largo...As usaual nice review...since English edition was uncensored i liked or and I did recognize missing of largo action :)

  ReplyDelete
 2. வாசகி லட்சுமி செல்வத்தின் செய்யுள் (கொஞ்சம் புரியாவிட்டாலும்) அருமை! என் வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்துவிடுங்கள்!

  லார்கோவின் இந்தப் பாகங்கள் கொஞ்சம் வளவளா ரகம். ஆக்ஷன் குறைவு! ஆனால் அடுத்த பாகத்தில் சைமன் அசத்தவிருப்பதாக எடிட்டர் சொல்லியிருப்பதால் கொஞ்சம் ஆறுதல்!

  ReplyDelete
 3. எனக்கு வேட்டை நகரம் வெனிஸ் எனக்கு ரொம்ப பிடித்தது.!இருந்தாலும் உங்கள் ஓவியப்பார்வை அசத்துகிறது.!

  ReplyDelete