Saturday, April 19, 2014

நாகர்கோவில் பயணக் கட்டுரை


என் மனைவியின் அண்ணன் மகள் நாகர்கோவில், கன்னியாகுமரி மருத்துவ கல்லூரியில் M.B.B.S முடிக்கும் பட்டமளிப்பு விழாவைப் பார்க்க நாகர்கோவில்போக வேண்டி இருந்தது. எந்த ஊருக்கு போனாலும் நம் முகநூல் மற்றும் காமிக்ஸ் நண்பர்கள் இருக்கிறார்களா என்று தேடுவது வழக்கம். நாகர்கோவில் என்றவுடன் நினைவுக்கு வந்தது ஷல்லும் பெர்னானண்டஸ் தான்.  நீங்கள் சனிக் கிழமை இருப்பீர்களா என்ற கேட்டு முகநூலில் செய்தி அனுப்பிய அடுத்த நிமிடம் போன் செய்தார். கட்டாயம் வாங்க 1.30 மணிவரை வேலை இருப்பதால் அதற்க்கு அப்புறம் சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம்.


சுசிந்தரம்  கோவில்வெள்ளி சாயங்காலம் 5.30 மணிக்கு மினி பஸ்ஸில் புறப்பட்டு அங்கு காலை 8 மணிக்கு சென்றோம். காலையில் 11.20 க்கு புறப்பட்டு சுசீந்திரம் சென்றோம். 12 மணிக்கு நடை சாற்றி விட்டார்கள், அதனால் தாணுமாலயனை மனதில் நினைத்தபடி ஒரு கும்பிடைப் போட்டு விட்டு, சுற்றி வந்தால், எனக்கும் உனக்கும் இடையில் நடை என்ற தடை தேவை இல்லை என்றபடி விஸ்வரூபத்தில் ஆஞ்சநேயர் நின்று கொண்டிருந்தார். வெண்ணை சாற்றிய மேனியை ரெண்டு பேர் ஏறி கழுவிக் கொண்டு இருந்தனர். இங்கே இசைதூண் ஒன்று உள்ளது. 7 சிறு சிறு தூண்கள் உள்ளது ஒவ்வொரு தூணிலும் கையை வைத்து ஓங்கி தட்டினால் ஒவ்வொரு சுரம் வருகிறது.  ஆஞ்சநேயருக்கு எதிரே போனால் ஒரு சிலையில் ஒரு காதில் துணியை  விட்டால் மறு காதில் வருகிறமாதிரி இருக்கிறது. சிறிது நேரம் கோவிலில் இருந்து விட்டு கிளம்பினோம்.வரும் வழியில் சாப்பாடு வாங்கிக்கொண்டு வந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது, ஷல்லும் போன் பண்ணினார். பின் அரை மணி நேரத்தில் காரில் வந்து கூட்டிக் கொண்டு போய் விட்டார். 

நாகர்கோவிலில் ஏப்ரல் மாதம் தான் அதிக சூடாக இருக்கும். அந்த கோடையிலும் ஆங்காங்கே குளங்களும் அதில் வெளிநாட்டு பறவைகளுமாக காரில் கடந்து வந்தோம்.மாலை 4.30 மணிக்குள் திரும்ப வேண்டிய கட்டாயம் இருந்ததால் குறுக்குப் பாதையில் சென்றோம் கிராமங்கள், குளங்கள் நெல்  இல்லாத வயல் வெளிகள் என்று கடந்து அவர் வீட்டுக்கு சென்றோம். 50 டிகிரி கோணத்தில் மேலோகத்துக்கு காரோடு போவது போல் மீடின் மீது ஏற்றி வீட்டின் முன் நிறுத்தினார்.

நாலு கால் செல்லங்கள் 

வீட்டில் நாலு கால் செல்லங்கள் இருப்பது தெரியும் என்பதால் ஹி ஹி நீங்க மொதல்ல போங்க என்றேன். முதலில் ஒரு செல்லம் குலைக்க ஆரம்பித்தது, பிறகு வீட்டினுள் இருந்து ரெண்டு செல்லங்கள் யார்ரா அவன் எட்றா அருவாளங்குற மாதிரி குலைக்க ஆரம்பிக்க கொஞ்சம் அரண்டு போனோம். ஷல்லும் சற்று நேரம் அவைகளை ஆசுவாசப் படுத்தி நம்ம ஆளுங்கடான்னு சொன்னதும், அட நம்ம பயக தானான்னு ட்ரீட்மென்ட்டே மாறிப் போனது.
 சிறிது நேரம் எங்கள் குடும்பத்தை மோப்பம் பிடித்து எங்களது வாசனையை தங்கள் மூளைக்குள் வைத்துக் கொண்டன. பின் எங்களை நக்கி அவற்றின் அன்பை தெரிவித்தன. பிறகு எங்களை உரசி எங்களோடு விளையாடு என்பது மாதிரி செய்தன. 

லவ்லி செல்லம் எங்கள் அனைவரையும் உரசி விளையாடி என்று சோப்பு போட்டது. அவ அப்படிதான் எல்லோரையும் சோப்பு போட்டுருவா என்றார் ஷல்லும். மூட் சரியில்லாத செல்லம் ஒன்று இருந்தது, சீக்கிரம் கோபம் வந்து விடுமாம். அதனால "பேச்சு பேசாதான் இருக்கணும், இந்த கோட்ட தாண்டி நானும் வர மாட்டேன் நீயும் வரக் கூடாது" ன்னு அது இருந்த முன் பக்கமே போக வில்லை.  ஒரு ரூமுக்குள் லியோ என்ற செல்லத்தை காண்பித்தார். பார்த்தவுடன் பரிதாபமாக பார்த்தது. அதன் காரணம் அப்புறம் அவர் சொல்லித்தான் தெரிந்தது "ஒன்ன தூக்கி இவங்க கிட்ட குடுதிடுவோம்ன்னு" சொல்லுவோம் அதுனால யார் புதுசா வந்தாலும் ரூமுக்குள் போய் ஒளிந்து கொள்ளும் என்றார். நாயே டெரர், இவரு அதுக்குமேலே இருக்காரே. :D 


அப்புறம் டின் டின் கதையில் வரும் நாய் போல் ஆனால் சற்றே உயரமாக ஒரு நாய் வைத்திருக்கிறார். அதுதான் முதலில் எங்களைப் பார்த்து குலைத்தது. அது நாங்கள் உள்ளே வந்து பேச ஆரம்பித்ததும் "சாப்பிட்ட மயக்கத்துல தூங்கலாம்ன்னு பாத்தா இவிங்க வேற தோண தொணன்னு பேசிக்கிட்டுங்னுகுரமாதிரி" பக்கத்துக்கு ரூமுக்கு சென்று தூக்கத்தை கன்டினுயு பண்ணினார்.    


முதலில் தெரியாத வீடு நான் எதுக்கு என்று பேக் அடித்த மனைவியை நிறைய நாய்கள் இருக்கும்ன்னு சொல்லித்தான் கூட்டிட்டு போனேன். எல்லா நாய்களுடனும் என மகன் விளையாட ஆரம்பித்து விட்டான். 

 காமிக்ஸ் புத்தகங்கள் 

காமிக்ஸ் புத்தகங்களை கொண்டு வந்து காட்டினார். 10 ரூபாயில் வந்த 100 ரூபாயில் வந்த தொடர்கதைகளை ஒரே புத்தகமாக பைண்ட் பண்ணி வைத்திருந்தார்.ஒரு கதாநாயகன் கதையென்றால் முழுவதும் அவருடைய கதையாக இருக்க வேண்டும். கதம்பம் எனக்கு பிடிக்காது என்றார்.
மொத்தத்தில் இந்த பயண முடிவில் நல்ல ஒரு நட்பை, நல்ல குடும்ப நண்பரை  பெற்றுக் கொண்ட மகிழ்ச்சி எனக்கு. 

சோகம் 

நாங்கள் பங்கேற்ற டாக்டர்களின் பட்டமளிப்பு விழாவில் பட்டம்பெற்ற ரெண்டு நண்பர்கள் சில காரணங்களுக்காக அங்கேயே இருந்திருக்கின்றனர்.  பட்டமளிப்பு விழா முடிந்து ரெண்டாம் நாள் பைக்கில் செல்லும்போது லாரியில் அடிப்பட்டு இறந்தனர். அதி வேகத்தில் சென்றதனால் சென்ற வினை. அவர்கள் ஆத்மா சாந்தி அடைவதாக.  அவர்கள் குடும்பத்தின் துயரை காலம் ஆற்றட்டும். 

Post Comment

4 comments :

  1. எங்கள் செல்லங்களை குறித்து எழுதியமைக்கு நன்றி

    ReplyDelete
  2. ஷல்லும் வீட்டு செல்லங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி, ராஜ் குமார்.

    ReplyDelete
  3. ஜாலியான பயணக்கட்டுரையின் முடிவில் இழையோடும் ஒரு சோகம். பாவம்! RIP. :(

    ReplyDelete