Friday, March 21, 2014

கலக்கிய கப்பலும் கலங்கிய டைகர் ரசிகனும்என் மன வானில்

முதலில் சுணங்கலுக்கு வருந்துகிறேன். எப்போதும் போல வந்தவுடன் டைகர் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.10 பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. ஒருவேளை வேங்கையின் சீற்றத்திற்கு அடுத்தார்ப் போல் வந்த தொடர் கதை என்பதால் புரியவில்லையா என்று சற்று நேரம் பாண்டிய ராஜனின் திருட்டு முழி முழித்து விட்டு, சரி இதுவே முதல் பாகம் என்று நினைத்துக் கொண்டு படிக்க ஆரம்பிப்போம், என்று நினைத்துக் கொண்டு மறுபடி படிக்க ஆரம்பித்தேன். மறுபடியும் 15 பக்கங்களுக்கு மேல் போக முடியவில்லை. சரி கப்பலில் ஒரு விசிட் அடித்து விட்டு வந்து பார்ப்போம், என்று  கப்பலுக்குள் களேபரத்தை படிக்க ஆரம்பித்தேன். கார்ட்டூன் பாணி சித்திரங்களுடன் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தனர் ஸ்கூபியும் அவனது சார்ஜும். எதிரி கப்பல் வரும் முன்னரே கடலுக்குள் டைவ் அடிக்கும் ஸ்கூபி அடிக்கும் லூட்டிகள் சிரித்து மாளாது.   

கப்பல் தந்த நல்ல அனுபவத்துடன் டைகரையும் முடித்து விடுவோம் என்று எடுத்து ஒரே மூச்சில் படித்து விட்டு ( பிரேக் விட்டால் திரும்ப எடுப்பேனா என்ற சந்தேகம் வந்து விட்டது.) நிமிர்ந்த போது மனதில் எழுந்த  கேள்வி "இது டைகர் கதை தானா?" என்பதே.

டைகர் கதைகளுக்கு நான் ரசிகனானது, அவரது கதையில் வரும் யுக்திகளுக்காகத்தான். ஆனால் இந்த கதையில் அந்த மாதிரி  எதையும் துளியும் காணோம். இக்கட்டான  ஒரு நிலையில் தன சாமர்த்தியமான யுக்திகளால் எப்படி வெற்றி பெறுகிறார் என்பது தான் டைகர் கதையில் இருக்கும் ஒரு சுவாரஸ்யம். அந்த மாதிரி கதை எழுத கொஞ்சம் யோசனை, யுக்திகளுடன் பரிச்சயம் கதாசிரியருக்கு இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு சும்மா மற்ற கவ்பாய் மாதிரி குதிரையும் தொப்பியும் எடுத்துக் கொண்டு சும்மா டூமீல் டுமீல் என்று சுட்டு  விளையாடும் விளையாட்டு டைகர் ரசிகர்களுக்கு என்றுமே பிடிக்காது. டைகர் ஒரு கவ்பாயின் இலக்கணம். இந்த கதையில் எந்த வித திருப்பங்களும் இல்லாமல் கதை ப்ளாட்டாக போவது எந்த டைகர் ரசிகனுக்கும் பிடிக்காது எனக்கும் பிடிக்க வில்லை.

அட்டைப்படம்

வந்த ரெண்டு புத்தகத்தில் கப்பலுக்குள் களேபரம் அட்டை கலக்கியது. நாமே ஒரு கப்பலின் மேல்தளத்தில் இருந்த படி எதிரி கப்பல் வரும் வேளையில் பார்வை இடுவது மாதிரியான ஒரு கோணம்.

 

டைகர் அட்டைபடம் பரவாயில்லை ரகம்தான். பின்னட்டை நன்றாக  இருந்தது. ஆனால் அவரது மார்பளவு கோட்டு சித்திரம் கிளாஸ். கொஞ்ச நேரம் பார்த்து விட்டுதான் அடுத்த பக்கம் போக முடிந்தது. ஈரோடு டெக்ஸ் ரசிகர் ஒருவரும் அதே தான் சொன்னார். எனவே அந்த ஓவியம் சூப்பர் ஹிட்தான்.ஓவியப் பார்வை

1) தலைவரது கோட்டு போட்ட கோட்டு சித்திரம்

2) நெருங்கி வரும் போர் வீரர்கள். அருமையான பின்னணி


3) பறவைப் பார்வயில் அட்லாண்ட்டா


4) பறக்கும் பலூனில் டைகர்


5) தனியே ஒரு கழுகு

6) மரங்களின் பின்னணியில் ஒரு இறுதி யாத்திரை


7) சைக்கிள் கேப்பில் கெடா வெட்டும் டைகர்


8) நல்லது செய்யப் போய் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள்


9) மனத்தைக் கொள்ளை கொள்ளும் பாய்மரக் கப்பல்கள் 10) மாலைச் சூரியனின் ரத்த சிகப்பு பின்னணியில் கப்பல்


11) இரவில் கொழுந்து விட்டு எரிந்து வான வேடிக்கையாகும் கப்பல்


12) எதிரிக் கப்பல் வரும் முன்னரே கடலில் டைவ் அடித்து கோமாளித்தனம் பண்ணும் ஸ்கூபி.

13) சார்ஜ் என்று கத்தும் கேரட் மண்டையன்

க்ளைமாக்ஸ்

1) கப்பலுக்குள் களேபரம் : கலக்கல்
2) அட்லாண்டாவில் ஆக்ரோஷம் : கலங்கல் (டைகர் ரசிகனோட கண்ணு வேர்க்குது பாஸ்!)

பொனல்லி குழுமம் இன்னும் டெக்ஸ்சை விண்வெளிக்கு மட்டும்தான் கூட்டிட்டு போகவில்லை மத்தபடி எல்லா முயற்சியும் பண்ணிட்டாங்க (தலையில் கண்ணாடி சட்டியை மாட்டிக் கொண்டு விண்வெளியில் பறந்தபடி டெக்ஸ் டுமீல்  டுமீல்ன்னு சுட்டுக் கொண்டிருந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.). இந்த டைகர் கதை தயாரிப்பாளார்கள் ஏம்ப்பா இப்படி இருக்காங்க ?

Post Comment

8 comments :

 1. பேசாம மின்னும் மரணத்தை ரீமேக் செய்ய சொல்லாமோ

  ReplyDelete
  Replies
  1. அதுதான் 2015 சென்னை புத்தக கண்காட்சியில் வெளிவருவது உறுதி ஆகிவிட்டதே. சென்னை புத்தக கண்காட்சியில் NBS இலும் அட்டையில் கலக்கினார். 2015 லும் கலக்குவார்.

   Delete
 2. //பேசாம மின்னும் மரணத்தை ரீமேக் செய்ய சொல்லாமோ//

  IN COLOUR +1

  ReplyDelete
  Replies
  1. கலரில்தான் 2015 சென்னை புத்தக கண்காட்சியில் வெளிவருவது உறுதி ஆகிவிட்டதே.

   Delete
 3. //இந்த டைகர் கதைத் தயாரிப்பாளர்கள் ஏம்ப்பா இப்படி இருக்காங்க? //

  மொத்த ஆதங்கத்தையும் ஒற்றை வரியில் கொட்டியிருக்கிறீர் ஓவியக் காதலரே! :)

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்யுறது. தங்க முட்டை இடுற வாத்த இப்படி அருக்கிராங்கலேன்னு ஒரு ஆதங்கம்தான்

   Delete
 4. நான் சொன்னா யாரு கேட்டாங்க ....

  ஒரு டைகர் ரசிகரே சொல்லிய பிறகு மக்கள் உணர்ந்தால் நல்லது ... :-)

  ReplyDelete
  Replies
  1. ஒடனே வாழைப்பூ வடைய கடிக்க ஆரம்பிசிருவீங்களே பரணி. நாங்க ரிப்ரின்ட் கேப்போம்ல

   Delete