Sunday, February 9, 2014

முத்துக்கள் மூன்று ~ காவியில் ஒரு ஆவி & காலத்தின் சுவடுகளில் & நினைவுகளை துரத்துவோம்

என் மன வானில்

இந்த முறை எந்த எதிர் பார்ப்பும் இல்லை. சாகச வீரரைப் பற்றி எனக்கு தெரியாது. ஜானியை அவ்வளவு விருப்பமாக வாசிப்பது இல்லை (பிடிக்கலங்குரத இப்பிடி சுத்தி வளைச்சு  சொல்லுறது?).  ஜில் பையனும் அதே கதைதான்.  அதனால் எப்போது வரும் என்று எந்த எதிர் பார்ப்பும் இல்லை.  கொரியர் வந்த பிறகுதான் ஆஹா புக் வந்துருச்சான்னு நினைவு வந்தது.

காவியில் ஒரு ஆவி  (ஜில் ஜோர்டான் )

எளிமையான துப்பறியும் கதை. இல் வந்த கதையில் டெபுடி அடித்த காமெடி நன்றாக இருந்தது.  பதற்றத்தில் உளறிக் கொட்டும் மேயரும் , அதை நக்கல் பண்ணும் டெபுடியும் அந்த காமெடி ட்ராக்கை எடுத்துக் கொள்கின்றனர். எனக்கு ஓகே ரகம்தான். இளைய வாசகர்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன். நான் படித்துக் கொண்டிருக்கும் போதே பிடுங்கி படிக்க ஆரம்பித்த என் மகளுக்கு பிடித்திருந்தது.

காலத்தின் சுவடுகளில் (ரோஜர் )

எடிட்டர் சொன்ன மாதிரி விசுவல் ட்ரீட்தான். ஏற்கனவே படித்து, மற்றும் ஆங்கில படங்கள் மூலம் நமக்கு மிகவும் பரிச்சயமான கதைதான். ஆனால் சொன்ன விதம் மற்றும் ஓவியங்கள் நம்மை அந்த காலத்திற்கே அழைத்து செல்கின்றன. அதுவும் பெரு மலையோடு ஆற்றில் செய்யும் பயணமும், பாலைவனப் பயணமும் , அடர்ந்த காடுகளும் மிக அருமையான ஓவியங்களால் நம்மை இழுத்து செல்கின்றன.

நினைவுகளை துரத்துவோம் (ஜானி )

எடிட்டரால் கடைசியாக இணைக்கப் பட்ட கதை. ஜானியின் இடியப்ப சிக்கல் கதையும் அதை கடைசி ௪ பக்கத்தில் லாஜிக் இல்லாமல் அவிழ்ப்பதில் கடுப்பானவன் நான். ஆனால் ஜானியின் டாப்  5 கதைகளில் இது ஒன்று என்பதை நிரூபித்து உள்ளது. இடியப்ப சிக்கல் அதிகம் இல்லை போடப்படும் முடிச்சுகளும் சுலபமாக அவிழ்கின்றன. கதைக்காக வலுக்கட்டாயமாக சிக்கலாக்கி மண்டையை குழப்ப வில்லை.

அட்டைப் படம் 

காலத்தின் சுவடுகளின் அட்டைப் படம் கலக்கல். இந்த ஆண்டின் சிறந்த அட்டைகளில் முதல் மூன்று இடத்துக்குள் வரும்.


காவியில் ஒரு ஆவியும், ஜானி கதை அட்டைப் படங்களும் முந்தைய இதழ்களில் உள்ள அட்டைப் படங்கள் மாதிரி இல்லாமல் பளீர் வண்ணங்களோடு இருப்பதை பார்த்தீர்களா? இளம் வாசகர்களை இழுக்கும் யுக்தி?

ரெண்டாம் இடத்தை ஜானியும் மூன்றாம் இடத்தை ஜில்லும் பெறுகிறார்கள்.

 ஓவியப் பார்வை

1) ஆறும் அதன் கரையும்


2) பெருமழையை ஓவியர் எப்படி வரைந்திருக்கிறார் பாருங்கள்


3) பாலைவனத்தில் மறையும் சூரியன்முரண் 

ஜானி கதை அட்டைப் படத்தில் ஒன்றன் மீது ஒன்றாக இருக்கும் பலூன்கள்.

கிளைமாக்ஸ் 

 சாகச வீரர் ரோஜருக்கு பலத்த கைதட்டல்கள். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அடுத்து ஜானி கதை. கடைசியாக ஜில்லு.

ரெண்டை மூன்றாக்கிய எடிட்டருக்கு நன்றி. 

Post Comment

7 comments :

 1. டியர் ராஜ், இங்கு வருவது இதுவே முதல் முறை.
  இன்று ஒரு தகவல் மாதிரி குட்டி குட்டி செய்திகளைப் போல, பதிவு இருக்கிறது. எளிய முறையில், Flash News போல சிறிய அளவுகளில் விமர்சனங்கள், விவரங்கள், வரிசைப்படுத்துதல்கள்.
  தொடருங்கள்.
  நன்றி,
  பாலாஜி சுந்தர்.

  ReplyDelete
 2. ஓவியக் காதலர் ஒருவர் 'காலத்தின் கால் சுவடுகளில்' போன்ற ஓவிய விருந்தளிக்கும் கதைக்கு(?) முதல் மதிப்பெண் வழங்கியிருப்பது நான் எதிர்பார்காததல்ல. ;)

  என்னைப் பொருத்தவரை ஜானி கதை தவிர்த்து மற்ற இரண்டுமே வெகு சுமார் ரகமே!

  ReplyDelete
  Replies
  1. 'ஓவியப் பார்வை'யை ரொம்பவே குறைத்துக் கொண்டீர்களே ராஜ் குமார்? ச்சோ... :(

   Delete
 3. அருமை! இந்த மாத இதழ்களில் ஜானி கதை அருமை! ஜில் ஜோர்டான் பராவாயில்லை!

  ReplyDelete
 4. சிறிய நல்ல பதிவு.
  நேரமின்மை காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறன்.

  இன்னும் ரசிக்க நிறைய இருக்க பாதியில் முடித்துள்ளீர்கள்.
  இருந்தும் சொல்லவேண்டிய கருத்துக்களை சொல்லிவிட்டீர்கள்.

  ReplyDelete
 5. உங்களின் விமர்சனம் சிறியதாக இருந்தாலும் ஓவியப்பார்வை,
  முரண், ஆசிரியரின் யுக்திகள்(டைகரின் யுக்திகளுக்கு மாற்று?) என
  முழுமையாக உள்ளது.

  குட்..

  ReplyDelete