Tuesday, January 14, 2014

முத்து காமிக்ஸ் ~ முத்து முத்தாய் நாலு புக்

என் மன வானில்

எனக்கு சனியன்று மதியம் தான் புத்தகம் கிடைத்தது. சாயந்திரம் எழுந்தவுடன் புத்தக கண்காட்சிக்கு போய் விட்டதால் இரவு தான் படித்தேன்.அறுபது ரூபாய்க்கு இந்த சைசில் கலரில் கொடுப்பது நல்ல ஸ்ட்ரேட்டஜி. அதிலும் சின்ன லக்கி லுக்கை சேர்த்திருப்பது நல்ல பலன் கொடுக்கும்.

கொமான்சே

முதலில் அதிரடியை கையில் எடுத்தேன். நிறைய அரைப் பக்க மற்றும் முழுப் பக்க ஓவியங்களுடன் கலக்கலாக இருந்தது. ஆனால் மிக எளிய கதையுடன் ஒரு திருப்பமும் இல்லாமல் பிளாட்டாக போகிறது.போன கதையிலாவது யார் மெயின் வில்லன் என்ற ஒரு சஸ்பென்ஸ் இருந்தது. இதில் அதுவும் இல்லாமல் "யுத்தம் உண்டு எதிரி இல்லை" என்று எதிரி இல்லாமல் ஒரு இலக்கில்லாமல் போகிறது. இதே மாதிரி பல தடவை டைகரின் கதையில் நடந்திருக்கும், அதை எவ்வளவு விறுவிறுப்புடன் கொண்டு செல்வார்கள். ஹ்ம்ம் டைகர் டைகர்தான்.
 
பயங்கர புயல் 

அடுத்தது ஏற்கனவே அறிமுகமான ப்ரின்சை தேர்ந்தெடுத்தேன். நல்ல ஆர்ட் வொர்க் மற்றும் கதை என்று இதுவும் சோடை போக வில்லை. கோட் சூட்டில் பார்னே கலக்குகிறார் இல்லையா. சண்டையை தேடி அலையும் லோபோவின் என்ற அதிரடி குணமும் எனக்கு பிடித்தது.
 
சாக மறந்த சுறா

பிரேசிலின் கதை இது வரை ஒன்றே ஒன்று மட்டுமே படித்திருக்கிறேன். அதில் ஒரு டீம் ஆக சென்று தாக்குவார்கள். இதில் தனியாளாக போராடுகிறார். 15 பில்லியன் தங்கம்  இருக்கிற இடம் எனக்கு தெரியும்என்று பித்தலாட்டம் ஆடும் ஒரு நாஜியை நம்பி நிறைய நாட்டின் உளவாளிகள் அவனை துரத்துகிறார்கள். அவர்களில் பிரேசிலும் ஒருவர். இது மிகப் பழைய கதை என்று சில இடங்கள் உணர்த்தினாலும் இப்போதும் அதிரடியை ரசிக்க முடிகிறது. ஆமா பிரேசிலின் முடி வெள்ளை தானே, போலிஸ் என் செம்பட்டை முடியனை தேடுகிறார்கள். அப்புறம் அந்த காலத்தில் ஒரு நாள் தான் முடியை டை பண்ண முடியும் போல இருக்கிறது. கலக்கல் அதிரடி ;)

தோர்கல்  
இந்த புத்தகத்தை வாசிப்பதை தள்ளிப் போட்டு தள்ளிப் போட்டு கடைசியாக வாசித்தாலும், ஒரு தயக்கம் இல்லாமல் இல்லை. ஆனால் ஏமாற்றம் அடைய வில்லை என்பதே நிஜம். ரெண்டு கதையும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருப்பதும்  மற்றும் தோர்கல் யார் என்று தெரியாமல் இருப்பதும் சற்று குழப்புகிறது. அட்டையில் ஒரு சின்ன அறிமுகம் இருந்தாலும் கதையை படித்த பின்பே அதை பார்த்தேன். ஏமாற்றவில்லை.

அட்டைப் படம் 
1) கோமான்சே

   நம் ஓவியரின் கை வண்ணம். ஒரிஜினலை விட ஷார்ப்பாக நன்றாக இருந்தது. 2) பயங்கர புயல் 

நண்பர் பிரதீப்பின் டிசைன், நன்றாக இருக்கிறது.


3) சாக மறந்த சுறா 


முன் அட்டையை விட பின் அட்டை சூப்பர். பின் அட்டை ஒரிஜினல்.


4) தோர்கல்    முன் அட்டை டிசைன் மிக நன்று. ஆனால் அந்த முன்னட்டை படம் எனக்கு பிடிக்க வில்லை. லோகோ மிக சுமார். அதையும் டார்க் பின்னணியில் போட்டு லோகோ எங்கே என்று தேட வைத்து விட்டார்கள்.


ஓவியப் பார்வை 

1) 666 பண்ணையின் வாடி வாசல் 


 2) கோபத்துடன் செவ்விந்தியர்கள்


 3) செவ்விந்திய பெருந்தகை கூட்டம்


 4) விரைந்தோடும் ரெட் டஸ்ட். வண்ணங்கள் திப்பி திப்பியாய் அப்பி இருப்பதை பாருங்கள்


 5) சரிவில் பாய்ந்தோடும் குதிரை .வண்ணங்கள் திப்பி திப்பியாய் அப்பி இருப்பதை பாருங்கள்


 6) ரயில் தண்டவாளம் போடுபவர்கள்


 7) மறையும் சூரியனைப் போலவே மறையும் நம்பிக்கையுடன் டோபியும் க்ளமும்  

8) பறவைப் பார்வையில் பண்ணை

 9) அருமையான கடல் புறத்து காட்சி

 10) மாலை சூரிய ஒளியில் பிரின்ஸ்


11) பனிக் கடலில் பயங்கர காட்சி


 12) நண்பர்களை வழியனுப்பும் லோபோ


13) பனிக் கடல் படகு 


 14) பயங்கர கணவாய்


15) வசியக்காரிகளின் சொர்க்கம்  அப்போ எல்லாமே சூப்பரா?
தம்பி இது சும்மா ட்ரைலர்தான் மெயின் பிக்சர் இனிமே தான் வருது

முரண்

நிறைய தடவை எழுத்துப் பிழைகளை சுட்டிக் காட்டி இருக்கிறோம். ஆனால் இந்த இதழ்களில் எழுத்துப் பிழைகளோடு கருத்துப் பிழையும் சேர்ந்தே வந்தது சற்று நகைப்பிற்குரிய விஷயமாகி விட்டது.

1) ப்ருனோ பிரேசில் கதையில் "நேர் மாறாக" என்பதற்கு பதிலாக "போர் மாறாக " என்றிருக்கிறது.


2)  பிரின்ஸ் கதையில் "டெட்டியொடு சமரசமாக போய் விடுவோம் " என்று அந்த பெண் தன் அண்ணனிடம் சொல்கிறாள். சரி டெட்டி தான் வில்லன் என்று நினைத்தால், அவள் அண்ணன் தான் டெட்டியாம். அடுத்த பக்கத்திலேயே டெட்டி பெட்டியாகி  விடுகிறார்.
3) தோர்கல்லில் இரு சகோதரிகளின் பெயர்கள் இங்கிரிட் மற்றும் ராக்னில்ட் என்று சொல்லப் படுகிறது. ஒரே பேனெல்லில் ஒருவரை மற்றொருவர் இங்கிரிட்என்று அழைத்துக் கொள்கிறார்கள். வேறு வேறு பேனெலில் என்றாலும் பரவாயில்லை,  ஒரே பேனலில் இந்த தவறு நேர்ந்திருக்கிறது.5) கொமான்சேவில் க்ளம், டோபி என்பது டஸ்ட்டின் உதவியாளர்கள் பெயர். அந்த வெள்ளையன் எனக்கும் டோபிக்கும் என்கிறான். அதன் படி வெள்ளையன் க்ளம் என்று நினைக்கிறோம். ஆனால் அப்படியே மாற்றி சொல்கிறார்கள்.  யாருப்பா க்ளம், யாருப்பா டோபி?
           


     
     6) கால் காசு கால் காக ஆகி இருக்கிறது    

         

7) அந்த டாக்டர் பேரு வாட்சினா வெட்சினா    ?


 

 8) 3D பக்கம்


 க்ளைமாக்ஸ் 

நச்சுன்னு நாலு புக்கு. ஆனால் 3D பக்கங்களும், எழுத்துப் பிழைகளும் , கருத்து பிழைகளும் இன்னும் முன்னேற வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லுகின்றன.

Post Comment

9 comments :

 1. அருமை! பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. பொங்கல் நல்வாழ்த்துக்கள் P.Karthikeyan

   Delete
 2. Nice.I have read only prince story so couldn't comment on others.I like the story very much.

  ReplyDelete
 3. 'யு.உ.எ.இ' படிக்கும்போது அந்த செவ்விந்திய குடிசைகளோடு உங்கள் முகமும் வந்துபோனது (ஓவியப் பார்வைக்காகத்தானுங்க)! சிதறிக்கிடந்த எழுத்துப் பிழைகள் நல்ல வாசிப்பு அனுபவத்திற்குத் தடையே! ஹம்ம்... :)

  ReplyDelete
 4. ஏறத்தாழ சொர்க்கம் ? அல்லது ஏறத்தாள சொர்க்கம்?
  எது சரி?

  பல நாட்களுக்குப்பின் உங்கள் காமிக்ஸ் ஓவியபார்வையை கண்டு மகிழ்ந்தேன்.
  எனக்கு என்னவோ மின்னும் மரணத்தில் வரும் டைகருக்கும் இப்போது வரும் டைகருக்கும் விறுவிறுப்பு குறைவாகப்படுகிறது.

  ஓநாய் கணவாய் கமான்சேயை விட யு.உ.எ.இ கமான்சே பெட்டர்.

  ReplyDelete
 5. @COMICSPRIYAN@SALEM.AMARNATH:

  ஏறத்தாழ சொர்க்கம் என்பதே சரி என்று நினைக்கிறேன். ஏற்றம் தாழ்வு என்ற சொற்களில் இருந்து இந்த சொல் வந்திருக்க வேண்டும்.

  உண்மைதான். கதாசிரியர் மற்றும் ஓவியர்களின் மாறுதலால் டைகர் கதைகள் சற்று வேகம் குறைவாக உள்ளது.

  ஊடே ஒரு மாதம் தான் நான் போஸ்ட் போடவில்லை என்று நினைக்கிறேன். :D

  ReplyDelete