Monday, January 13, 2014

முத்து காமிக்ஸ் ஸ்டாலில் எடிட்டருடன் ரெண்டு நாள்

முதல் நாள்

7 மணியளவில் தான் செல்ல முடிந்தது. NBS ரிலீஸ் அளவு கூட்டமில்லை. NBS வெளியீட்டின் போது குண்டு புத்தக வெளியீடு என்பதால் ஒரே நேரத்தில் கூட்டம் குமிந்து விட்டது. வழக்கம் போல விஷ்வா தான் வரவேற்ப்பு குழு தலைவர். நான் போன போது எடிட்டருடன் ஐந்து பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். நானும் சேர்ந்து கொண்டேன். அவருடன் இவ்வளவு அருகில் கூட்டமில்லாமல் நண்பருடன் அரட்டை அடிப்பது போல் பேசிக் கொண்டிருந்தது நல்ல அனுபவம்.

 நான் : டைகரை இப்படி போடாமல் விட்டுடீங்களே சார் ?



எடிட்டர் : டைகர் கதைகள் குறைவு. கதாசிரியரும், ஓவியரும் மாறிவிட்டார்கள். அதனால்  பழைய டைகர் கதை அளவு நீங்கள் எதிர் பார்த்தீர்கள் என்றால் ஏமாற்றமே மிஞ்சும். ரத்த தடம் கூட நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்களோ என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

நான் : "இருந்தாலும்" என்று இழுக்க ...

எடிட்டர் : அதுதான் மின்னும் மரணம் எல்லா பாகங்களும் ஈரோடு புத்தக கண்காட்சியில் போடப் போகிறோமே என்று சொல்லி என் வாயை கட்டிவிட்டார்.
நான் : "அய்யயோ கண்காட்சியில் வருகிறதா, நம்ம போகணுமே. வீட்டில சொன்னா வேப்பம் குலை எடுக்காம ஆடுவாளே ?" என்று நினைத்துக் கொண்டே  "வரணும் முடியுமோ இல்லையோ என்று சொல்ல

ஷல்லும் : அதெல்லாம் ட்ரைனிங்னு  சொல்லிட்டு வந்திருங்க இப்போ நானே அப்படிதான் வந்திருக்கேன்ன்னு போட்டு உடைத்தார்.  அவர் மனைவிக்கு மட்டும் தெரியுமாம். கொடுத்து வைத்தவர் என்று நினைத்துக் கொண்டேன்

நான் : லைப்ரரி எப்போ திறக்கப் போகிறீர்கள் ?
எடிட்டர் : பிப்ரவரி மாதம்


அப்போது செந்தில் என்ற நண்பர் காரிகன், ரிப் கிர்பி வருமா என்ற பழைய ஹீரோக்களை கேட்டுக் கொண்டிருந்தார். நண்பர் ஒருவர் மனைவி மகனுடன் வந்திருந்தார். அவர் மகனுக்கு லக்கி லுக் தெரிகிறது ஆனால் டெக்ஸ்சை தெரியவில்லை. லக்கி லுக் சுட்டிகளை கவர்ந்த கவ பாய் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நண்பரின் மனைவியும் காமிக்ஸ் விசிறிதான். நான் நினைத்தை போலவே "மாடஸ்டி ப்ளைசி இனிமேல் வருவதற்கு வாய்ப்புண்டா ?" என்று கேட்டார். எடிட்டரின் பதில் பாசிடிவாக இல்லை.

அஸ்லாம் பாஷா எடிட்டரின் ப்லொகில் கமெண்ட்களில் மட்டுமே பார்த்த அவரை நேரில் பார்த்தேன். யுவ ராஜ்  என்ற நண்பர் கொலைகாரர் கழகம் என்ற பாக்கெட் நாவலை பல பிரதிகள் வைத்திருந்தார். அங்கு உள்ள நண்பர்களுக்கு இலவசமாக கொடுத்தார். எனக்கும் ஒரு புத்தகம் கிடைத்தது. ஒரு நண்பர்  என் நண்பருக்கும் ஒரு பிரதி தாருங்கள் என்று சொல்ல, "முடியாது உங்கள் நண்பரை எனக்கு போன் பண்ண சொல்லுங்கள்" என்று உஷாரானார். நெறைய அடி வாங்கி இருப்பார் போல இருக்கிறது. ;)   எத்தனை காப்பி வைத்திருந்தாலும் பதுக்கி வைத்து விலை ஏற்றி விற்கும் கனவான்களுக்கு மத்தியில் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் குணம் பாராட்ட தக்கது.

யுவ ராஜ் 

மடிப்பாக்கம் வெங்கடேஸ்வர உங்களை எங்கோ பார்த்திருக்கிறேனே என்றார். என்னை ராஜ் குமார் என்று அறிமுகப் படுத்திக் கொண்டேன். என் முழுப் பெயர் ராஜ் முத்து குமார்  என்றும் சட்டென பிரகாசம் ஆகி "சார் நான் உங்க ப்ளாக் படிப்பேன் சார். நல்ல நுணுக்கமா எழுதுறீங்க சார்" என்றார். ஹி ஹி நம்மள பத்தி நாமலே சொல்லலேன்ன எப்புடி :D

மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன்

சற்று நேரத்தில் லக்கி தமிழ் வந்தார், அவருடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தேன். பிறகு டெக்ஸ் வில்லர் ஸ்ரீராம் வந்தார். கதை வசனகர்த்தா "பாஸ்கர் சக்தி" நம் எடிட்டரைப் பார்த்து பேசி விட்டு போனார். அய்யம்பாளையம் வெங்கடேசன் வந்திருந்தார்.
லக்கி லுக் ஆன்லைன் என்ற ப்லொக்கில் கலக்கி வரும் யுவக்ரிஷ்னா நம் ஸ்டாலுக்கு வந்திருந்தார். அவருக்கு ஆதரவாக கம்மென்ட் இட்டது கம்மி என்பதால் ஒரு தயக்கத்துடனே அறிமுகப் படுத்தி கொண்டேன். அதிஷாவும் வந்திருந்தார். விஸ்வா முத்து காமிக்சுக்கு மீடியா லைம் லைட் கிடைக்க தன்னாலான அனைத்தையும் செய்து வருகிறார் என்பது முற்றிலும் உண்மை.

ரெண்டாம் நாள்

ரெண்டாம் நாளும் அஸ்லாம் பாஷாவும் ஷல்லுமும் வந்திருதார்கள். வெளியூரில் இருந்து இதற்காக வந்து ரெண்டு நாள் இருந்து பங்கேற்று விட்டு போகும் இவர்களை பாராட்ட வேண்டும். 

சனிக்கிழமை என்பதால் நிறைய 50 வயதை கடந்தவர்கள் உள்ளே நுழைந்து வாங்கிக் கொண்டு போனார்கள். இதில் பெண்களும் அடக்கம். நிறைய ஸ்கூல் பசங்க யுனிபார்முடன் வந்து வாங்கினார்கள். பழைய புத்தகங்களை ரி பிரிண்ட் பண்ண வேண்டும் என்று ஒரு நண்பர் மிக உரிமையுடன் எடிட்டருடன் சண்டை போட்டார். நமக்கே முதன் முதலில் இருந்த மனத்தடையை புரிந்து கொள்ள முடிந்தது.
ரெண்டாம் நாள் நான் வாங்க ஒரு ரவுண்டு அடித்து விட்டு வந்து பார்த்தேன், 8.50 ஆகி இருந்தது எடிட்டர் எகிறி இருந்தார். அதோடு கிளம்பி விட்டேன். இரவுக் கழுகு கிருஷ்ணா பகல் கழுகாகி காலையிலேயே வந்து விட்டு போய் விட்டதால் பார்க்க முடியவில்லை. ரமேஷ், திருப்பூர் ப்ளுபெர்ரி aka நாகராஜ்,  ரபிக் ராஜா வேறு வேறு நேரத்தில் வந்து போய் விட்டதால் பார்க்க முடியவில்லை. நண்பர் RT முருகனை பார்க்க முடியவில்லை.கறுப்புக் கிழவியின் காவலர் ஜானி அவர்களையும் பார்க்க முடிய வில்லை.
NBS வெளியீட்டின்போது இருந்த மாதிரி இல்லாமல் ஒரு நண்பருடன் டீ சாப்பிட்டுக்கொண்டே அரட்டை அடிப்பது மாதிரி எடிட்டருடன் ரெண்டு நாளும் நின்று கொண்டே பேசியது இனிமையான அனுபவம்.           

================================================================================= 

ஒரு ஸ்டாலில் லக்கி லுக் ஆங்கிலத்தில் ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசம். லேண்ட்மாக்கில் (Euro Kids) விற்ற அதே புத்தகம் ரூ 450 விற்றார்கள். ஒவ்வொரு புத்தகத்திலும் நான்கு கதைகள்.
இது வரை வாங்கிய புத்தகங்கள்
1) கிமுவில் சோமு~ சிம்பு தேவன்
2) உயிர் மொழி ~ DR ஷாலினி
3) வட்டியும் முதலும் ~ ராஜு முருகன்
4) லேனாவின் மேலை நாட்டு பயணம் ~ லேனா தமிழ் வாணன்
5) லேனாவின் துபாய் பயணம் ~ லேனா தமிழ் வாணன்
வாங்க இருக்கும் புத்தகம் இயற்கை வேளாண்மை அ முதல் அக் வரை

Post Comment

17 comments :

  1. கடந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் தங்களை சந்தித்தது மறக்க முடியாத ஒரு இனிய அனுபவம் நண்பரே! இந்த ஆண்டு வரமுடியாமல் போனது வருத்தமே!

    நல்ல பதிவு! பொங்கல் வாழ்த்துகள்! :)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன். பொங்கல் வாழ்த்துகள்.

      Delete
  2. நான் உறவினர்களிடம் மீட்டிங் என்றும், ஆஃபீசில் மரணம் என்றும், மனைவியிடம் உண்மையும் சொல்லி அங்கு வந்தேன்

    ReplyDelete
    Replies
    1. கொடுத்து வைத்தவர் நீங்கள் ஷல்லும்

      Delete
  3. I came with lot of josh to meet Edi as he mentioned that he will be there in the stall for 1st 2 days.that too with a camera And few questions... Hmm fate intervines and he escaped.I left the stall with lot of disappointments.I met Johny for the 1st tTime which was a consolation to me.

    ReplyDelete
    Replies
    1. மிஸ் பண்ணிட்டீங்க கிருஷ்ணா

      Delete
  4. கிமுவில் சோமு~ சிம்பு தேவன் ..எந்த பதிப்பகம் ............?

    ReplyDelete
    Replies
    1. நர்மதா பதிப்பகம் Price Rs 60

      Delete
  5. நான் ஞாயிற்றுக் கிழமை சென்றேன். நண்பர்கள் யாரும் இல்லை. சில பிரதிகளில் பிரிண்ட் நன்றாக இருந்தால் வாங்கலாம் என்று நினைத்தேன். ஆனால் என்னிடம் இருந்ததற்கு வித்தியாசமாக இல்லை.

    ReplyDelete
    Replies
    1. அன்று நான் காலையில் குடும்பத்துடன் சென்று சாப்பாட்டுக்கு வீடு திரும்பி விட்டேன்

      Delete
  6. Raj Muthu Kumar,

    The person who gave the comics free of cost is Yuva Raj from Chennai.

    Yuva Krishna is the popular Writer & he also got a book from Yuva Raj.

    If you recall, yuvaRaj was featured in our comics as a Oviya Vasagar in Lime Light. He drew couple of vichu & kichu stories.

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஸ்வா, பெயரை மாற்றி விட்டேன்

      Delete
  7. படிக்கப் படிக்கவே பொறாமை ஏற்படுத்தும்படியாக இருக்கிறது உங்கள் அனுபவங்கள்! உங்கள் வலைப்பூக்கென எடிட்டரிடம் ஒரு பிரத்யேகப் பேட்டி தயார் பண்ணியிருந்தால், அதை உங்கள் ஸ்டைலில் படிப்பது நிச்சயம் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்.

    அடுத்த(சென்னை)புத்தகத் திருவிழாவில் அனேகமாக நானும் உங்களோடு இருந்திட முயற்சிப்பேன். 'மின்னும் மரணம்' வெளியீடு காத்திருக்கிறதே! :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஜய். ஆனால் ஈரோட்டில் தானே அந்த புக் வெளியீடு ?

      Delete
    2. ஈரோட்டில் - 30வது ஆண்டு மலர்;
      மின்னும் மரணம் - சென்னையில் அடுத்த ஜனவரியில்! :)

      Delete
    3. +1
      // உங்கள் வலைப்பூக்கென எடிட்டரிடம் ஒரு பிரத்யேகப் பேட்டி தயார் பண்ணியிருந்தால், அதை உங்கள் ஸ்டைலில் படிப்பது நிச்சயம் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும் //

      Thanks Viswa

      //விஸ்வா முத்து காமிக்சுக்கு மீடியா லைம் லைட் கிடைக்க தன்னாலான அனைத்தையும் செய்து வருகிறார் என்பது முற்றிலும் உண்மை.//

      Delete