Thursday, December 5, 2013

மிஷ்க்கின்னா இளப்பமா ? ~ ஓநாயும் ஆட்டுக் குட்டியும்


மிஷ்கினுடைய எல்லா படங்களையும் (முகமூடி தவிர. ஜீவா அடிக்கும் பல்டியை பார்த்தவுடனே போகக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்) பார்த்திருக்கிறேன்.
அவருடைய படங்களில் ஹீரோ அல்லது முக்கிய வேடத்தில் நடிப்பவர் கத்தி பேசுவார். தீடீரென்று தப தபவென்று ஓடுவார்கள்.  (அஞ்சாதே படத்தில் அந்த ஸ்கூல் சிறுமிகள் ஓடும் போது காலை மட்டும் காடும் ஷாட் ரொம்ப பிடிக்கும்). தலையை விரித்து போட்டுக் கொண்டு ஒரு பெண் குத்துப் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவார். ஒரு நெகடிவ் எனெர்ஜி இருக்கக் கூடிய ஒரு சம்பவம் இருக்கும்.

நடிகனாக மிஷ்கின்னை பார்ப்பதற்கு நந்தலாலாவிற்குபின் கொஞ்சம் பயமாக இருந்தாலும் இந்தப் படம் பார்க்க வேண்டும் என்று காத்து இருந்து பார்த்தேன். வாவ் இது படம்யான்னு கத்தி சொல்லணும் போல இருந்தது.

முழுக்க முழுக்க இரவில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் இந்த கதை.

கதை 

வுல்ப் என்று அழைக்கப்படும் (படம் முழுவதும் அவர் பேர் என்ன என்றே தெரியாது) வாடகைக் கொலையாளி ஒரு இரவில் போலீசால் சுடப் பட்டு தப்பிக்கும் போது சாலையில் விழுந்து கிடக்கிறார். அவரை டாக்டருக்கு படிக்கும் ஸ்க்ளைமாக்ஸ்   ரீ  மிஷ்கினை தன்  வீட்டிற்கு எடுத்து சென்று தன் ப்ரொபசர் உதவியுடன் ஆப்பரேஷன் செய்து பிழைக்க வைக்கிறார். மறுநாள் எழுந்து பார்க்கும்போது வுல்ப் இல்லை. காலையில் போலிஸ் அவரது வீட்டை முற்றுகை இடுகிறது. ஸ்ரீ காப்பாற்றியது 16 கொலை செய்த ஒரு வாடகைக் கொலையாளி, அவனைக் காப்பற்றியதர்க்காக ஸ்ரீக்கு சிறையும், டாகடர் ஆக முடியாமல் போகலாம் என்றும் பயமுறுத்தி ஸ்ரீயையே வுல்பை கொலை செய்ய சொல்கிறார்கள். ஸ்ரீ வுல்பை கொன்றாரா அல்லது வுல்ப் ஸ்ரீயைக் கொன்றாரா என்பது படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.   :D
நான் ரசித்த காட்சிகள்

1) பொது ஜனங்கள் அடிபட்ட ஒருவனை எவ்வளவு அலட்சியப் படுத்துகிறார்கள் என்பதைக் காட்டும் முதல் ஷாட். பேஸ்புக்கில் போட்டோ போட அடிபட்டவனை போட்டோ எடுக்கும் மனப் பான்மை.

2) காப்பற்றியவனையே கொல்லச் சொல்லும் குடும்பத்தாரிடம் பரிதாபமாக ஸ்ரீ பேசுமிடம்.

3) தான் தப்பி விட்டதால் சென்னையை போலிஸ் வளையம் வளைத்து இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு, ஸ்ரீ யை வைத்தே தான் வெளியேற வழி அமைத்துக் கொள்வது.

4) ஓடும் ரயிலில் இருந்து காற்றால் நிரப்பப் படும் தலையணையை வைத்து அடிபடாமல் குதித்து தப்பிப்பது. மொத்த போலீஸும் ரயில்  ஓடும் திசையில் போய்க் கொண்டிருக்க, இடையில் குதித்து எதிர் திசையில் பயணிப்பது.

5) காப்பற்றப் போகும் குடும்பத்தை ஒரே இடத்தில வைத்திருக்காமல், யாருக்கும் சந்தேகம் வராமல் கோவிலில், பார்வையற்றோர் பாடகர் குழு, அரவாணியிடம் என்று பிரித்து வைத்திருப்பது.

6) ஸ்ரீ துப்பாக்கியைக் காட்டி ஒண்ணு ரெண்டுன்னு எண்ணுவேன் , உன் துப்பாக்கியை கீழே போடுன்னு சொல்லிட்டு "ஒண்ணு"ன்னு சொல்ல, ரெண்டுன்னு வுல்ப் சொல்லி தான் கடத்தி வைத்திருக்கும் பெண்ணின் தலையில் கன்னை வைக்க ஸ்ரீ பதற்றத்துடன் துப்பாக்கியை கீழே போடும் காட்சி.

7) பார்வையற்ற பெண்ணின் காலில் சூடு வைத்தவர்களை காலை கட்டி கத்தியால் குத்தி பிளப்பது.      

8) மறைந்து நிற்க வேண்டிய நிலையிலும், அடிபட்ட போலிஸ்காரர்  தண்ணீர் தண்ணீர் என்று முனங்க பார்வையற்ற பெண் அவருக்கு தண்ணீர் தரச் சொல்ல தண்ணீர் கொடுப்பது. அப்போது ஸ்ரீ அவரை அடித்து போட்டு விட, மீண்டும் எழுந்து ஸ்ரீயை அடித்துப் போட்டு விட்டு மறைந்து நிற்க. அதே போலிஸ் காரர் மீண்டும் தண்ணீர் கேட்க மறுபடியும் வுல்ப் தண்ணீர் கொடுப்பது, ஆனால் அதை குடிக்காமல் அந்த போலிஸ் உயிர் விடும்போது தண்ணி பாட்டிலில் இருந்து நீர் சொட்டு சொட்டாக வடித்து பின் நிற்கும் ஷாட் அந்த போலிஸ் காரரின் உயிர் நிற்பதை உணர்த்துகிறது.

9) பார்வையற்ற இசைக் குழுவினருக்கு வுல்ப் குடுத்த பணத்தை அவர்கள் தேவை இல்லை என்று குடுத்து விட்டு செல்லும்போது பணத்தை விடவும் நிறைய விஷயங்கள் நமக்கு தெரிகிறது.

10) வுல்ப் தன்னை கொல்ல வந்த வாடகை கொலையாளி கடத்திப் காரில் போகும்போது கார் ஒட்டிக் கொண்டு இருக்கும் ஸ்ரீ காலில் இருக்கும் கத்தியை எடுக்க, வாடகை கொலையாளி முகத்தில் துப்பி அவர் அடிக்கும்போது குனிந்து அடி வாங்குவதுபோல் வாங்கி ஸ்ரீயின் கால் கத்தியை எடுப்பது. (நல்ல யுக்திதான் ஆனால் ஸ்ரீ கார் ஒட்டிக் கொண்டு இருப்பதால் இது நிஜத்தில் சாத்தியம் இல்லை.)

12) அய்யா என்று எல்லோருக்கும் சல்யுட் அடிக்கும் கான்ஸ்டபிள், துப்பாக்கிமுனையில் நிற்கும்போது அந்த கொலையாளியின் பைக் சத்தமே நம்ம இதய துடிப்பை எகிற வைக்கும்.

13) கண்ணை மூடாமல் தன்னைப் பற்றிய கதையை காட்டில் இருக்கும் ஓநாய்க் கதையாக அந்த சிறுமியிடம் சொல்லுமிடம் அல்டிமேட். கடைசியில் ஸ்ரீ யைப் பற்றி சொல்லுமிடத்தில் கண்ணீர் பனித்து கண்ணை மூடுவார். மிக நெகிழ்ச்சியான இடம். அவர் முன்னே ஏற்றி வைத்திருக்கும் மெழுகுவர்த்தி காற்றில் எப்படி அலைகிறது பாருங்கள். நம்மை அறியாமல் அது அணைந்து விடக் கூடாது என்று நினைப்போம். பிளாஸ் பேக் வைக்காமல் இந்த கதையிலேயே வுல்ப் ஏன் அந்த குடும்பத்தை காப்பாற்ற முயல்கிறான் என்று சொல்லியிருப்பது நல்ல முயற்சி.

14) பார்வையற்ற நபர் சுடப் பட்ட நிலையில், போலிசை திசை திருப்புவதற்காக வுல்ப் அவரிடம் ஒரு துப்பாக்கியை கொடுத்து சும்மா சுட்டு திசை திருப்புங்கள் என்று சொல்லிவிட்டு செல்ல, அவர் சுட முயற்சித்து விட்டு, தன்னால் யாரும் கொல்லப் படக்  கூடாது என்று நினைத்து வானத்தைப் பார்த்து சுடுவது. நல்லவர்கள் என்றும் நல்லவர்களே.

15) கடைசியில் ஸ்ரீ, வுல்ப்பிடம் நான் அந்த கொலையாளி வருவதைப் பார்த்தும் உன்னிடம் சொல்லவில்லை ஆனா பாரதி அக்கா ஒரு நொடி கூட யோசிக்காம உங்க முன்னாடி பாஞ்சி உங்களைக் காப்பாத்தி செத்துப் போய்ட்டாங்க நா நினைச்சிருந்தா அவங்கள காப்பாத்தி இருக்கலாம்ன்னு சொல்லுற இடத்தில மிஷ்கினின் ரியாக்சன் சான்சே இல்லை. ஷாக் ஆகி முகம் பிரீஸ் ஆகும், பின் மெல்ல மெல்ல மெல்ட் ஆகும் சான்சே இல்லை. இந்த படத்தின் ரெண்டாவது அல்ட்டிமேட் சீன்.

இந்த படம் பார்க்கும்போது ஒரு இடத்தில கூட போரடிக்க வில்லை. மிஷ்கினின் உடல் மொழி சான்சே இல்லை. அந்த நீளமான டயலாக் தவிர அதிகமான டயலாக் கிடையாது. எல்லா உணர்சிகளையும் முகத்திலும், உடலிலும் மட்டுமே காட்டி இருக்கிறார். தமிழ் சினிமாவில் வுல்ப் ரோலை பண்ண கமலால் மட்டுமே முடியும் என்று அடித்து சொல்லலாம்.
 ஸ்ரீ வழக்கு எண்ணுக்கு பின் கனமான வேடம். மிஷ்கின் ட்ரைனிங்கில் மின்னுகிறார்.  ரெண்டாவது படத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது அரிது.
இசை தேவையான இடங்களில் அசத்தியும், தேவை இல்லாத இடங்களில் இசையே இல்லாமலும் அசத்தி இருக்கிறார் ராஜா சார்.


உறுத்தலான விஷயங்கள் 

1) பார்வையற்ற பெண் இயல்பான முகமாக இல்லை. நன்றாக  புருவத்தை திருத்தி சின்னத் திரை நடிகை போல இருக்கிறார். 

2) பார்வையற்ற பெண்ணும், சிறுமியும் பேசும் உணர்ச்சியே இல்லாத டயலாக்குகள். சிறுமி ஒவ்வொருவரிடமும் கதை  சொல்ல சொல்லி கேட்க்குமிடம்.


க்ளைமாக்ஸ்      

இதே படத்தை கமலை வைத்து எடுத்து ஒரு குத்துப் பாட்டும், கமலுக்கு ஒரு இறந்த காதலியைப் பற்றிய சோக பிளாஷ் பேக்கும் வைத்து நூறு நாள் ஓடும் வெற்றிப் படமாக்கி இருக்க முடியும். எந்த காம்ரமைசும்  பண்ணாமல் இந்த படத்தை கொடுத்தற்க்காக மிஷ்கின்னுக்கு ஒரு சல்யுட்.    

இந்த படத்துக்கு மரியாதை செய்யும் விதமாக, ரி ரிலீஸ் ஆனால் மிஷ்கின்னுடன் போஸ்டர் ஒட்ட நான் ரெடி.


Post Comment

7 comments :

 1. எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது மிஷ்கின் கிரேட்

  ReplyDelete
  Replies
  1. எனக்கும்தான். நன்றி

   Delete
 2. வித்தியாசமான படம் !

  ReplyDelete
  Replies
  1. நிறையவே வித்தியாசமான படம். ஒரு நடிகராக மிஷ்கின் அசத்திய படம்.

   Delete
 3. ஒவ்வொரு காட்சியையும் ரசித்துப் பார்த்திருக்கிறீர்கள் (அப்படியென்றால் நீங்கள் குடும்பத்துடன் படம் பார்க்கவில்லை என்றாகிறது) ;)
  மற்றபடி நல்ல படங்களையெல்லாம் பார்த்துவிட எப்படியோ உங்களுக்கு நேரம் கிடைத்துவிடுகிறதே என்ற வயிற்றெரிச்சலும் எனக்குக் கொஞ்சம் எட்டிப்பார்க்காமலில்லை! :)

  இந்த மாதம் (ராஜ் குமார் புகழ்) ஓவியப் பார்வை கிடைக்குமா? :)

  ReplyDelete
 4. @Erode VIJAY:
  நன்றி ,ஆமாம் தனியேதான் பார்த்தேன்.

  முதலில் புக் வரட்டும்ங்க . இன்னும் எனக்கு புக் வரவே இல்லை. :(

  ReplyDelete
 5. ஓ இந்த வலைத்தளம் உங்களுடயதுதானா.நீங்க ஷேர் செய்த பொழுது வேறு ஒருவருடைய விமர்சனத்தை செய்கிறீர்கள் என்று படிக்கவில்லை.

  இன்று தான் படித்தேன்..தங்கள் வலைதள முகவரி பிரெச்சனை காரணமாக புது முகவரியா?

  புது முகவரி நன்றாக இருக்கிறது.
  படத்தை பொறுத்தவரை திரையில் பார்க்க நினைத்தேன் முடியவில்லை.
  விஜய் டிவியில் பார்த்தேன்.மிக நன்றாக இருந்தது.

  கமர்சியல் விஷயங்கள் இல்லாமலேயே ஒரு திரைப்படத்தை போர் அடிக்காமல் பார்கவைக்க முடியும் என்று நிரூபித்துள்ளார்.

  கண்டிப்பாக அவரை ஆதரிக்க வேண்டும்.

  நான் கூட அதிகாரபூர்வமான DVD ரிலீஸ் ஆனால் வாங்க வேண்டும் என்று இருக்கிறேன்.
  விமர்சனம் மிக நன்றாக இருக்கிறது.

  ReplyDelete