Sunday, November 10, 2013

சிப்பாயின் சுவடுகளில் டெக்ஸ்சின் பயணங்கள் (சிப்பாயா VS கவ் பாயா ?)


என் மன வானில்


தீபாவளியோடு வரும் புத்தகங்கள் என்பதால் பலத்த எதிர் பார்ப்பு இருந்தது. வீட்டில் இருந்து வரும் காமிக்ஸ் எதிர்ப்பு கோஷம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்க ஆரம்பித்து விட்டது. (ஹி ஹி தண்ணி தெளித்து விட்டு விட்டார்கள் ) அதனால் இந்த தடவையிலிருந்து வீட்டிற்க்கே அனுப்பி விட சொல்லி இருந்தேன். (என்னா ஒரு தைரியம் ). அதனால் வியாழக் கிழமை சாயந்திரம் வீடிற்கு போன் பண்ணி வந்து விட்டதா என்று கேட்க்க "வந்துருச்சு ஆனா வரலைன்னு " ஒரே கலாசல் நடந்தது. 

வீட்டிற்குப் போய் கவர் கிழிந்திருந்தாலும்  புத்தகம் கிழியாமல வந்ததைப்  பார்த்தவுடன்தான் மூச்சு வந்தது.

முதல் பார்வையில் 

"சிப்பாயின் சுவடுகளில்" நிற்கும் சிப்பாய் ரொம்ப மங்கி தெரிந்தார். லோ ரெசலுசன் ஓவியம் அதுவும் அட்டைப் படத்தில், முடியல நண்பர்களே.  இதற்கு அதை போடாமலே இருந்திருக்கலாம். உள்ளே இருந்த ஒரிஜினல் ஓவியமான சவப் பட்டிகளுக்கு பக்கத்தில் அந்த நிருபர் நிற்கும் படமும் தெளிவில்லாமல் இருந்தது.

டெக்ஸ் புக் சைஸைப் பார்த்து சற்று மிரண்டுதான் போனேன். புக் மார்க் அருமை.சரின்னு டெக்ஸ் புக்கப் பார்த்தா ஒளியிழந்து போயிருந்தார் டெக்ஸ் முன்னட்டையில். தங்கக் கல்லறை முன்னட்டை ஊதா பின்னணி தெளிவுக்கும்  இதற்கும் சம்பந்தமே இல்லை. உள்ளே இருக்கும் பேப்பரின் தரமும் சொல்லும்படி இல்லை. சாரி டெக்ஸ் ரசிகர்களே. 

ஆனால் பின் பக்கத்தில் உள்ள ஓவியங்கள் முன் பக்கத்தில் தெரிந்து தலைவலி ஏற்படுத்தவில்லை. அதனால் எனக்கு ஓகே தான். ஆனால் நீண்ட காலம் கழித்து எடுத்து பார்க்கும்போது எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை.

உள்ளே இருந்த  2014 முன்னோட்டமும் சாதாரணமான தாளில் அச்சிடப் பட்டு இருந்தது.
சரி, போதும் புலம்பல் புராணம். கொஞ்சம் வேற விசயங்களையும் பார்ப்போம்.

சிப்பாயின் சுவடுகள்

காணாமல் போன ஒரு சிப்பாயைப் காணாமல் தவிக்கும் ஒரு தாய்க்கு உதவ தன் உயிரையே பணயம் வைக்கும் நிருபரின் கதைதான் இது.  சுவடுகளை பின்பற்றி வேகமாகப் போக முடியாது. அதை போலவே கதை மெதுவாகவே நகர்கிறது. அந்த நிருபரின் நிலையையும் , அவர் அந்த சிப்பாய்க்காக தன்னிடம் உள்ள  எல்லாவற்றையும் இழக்க துணியும் அவரது துணிவையும் புரிந்து கொண்டால் கதையில் ஒன்ற முடியும்.

இது ஒரு அதிரடி சாகச கதை இல்லை. சாதாரணமாக நம் சம கால சூழலில் நடக்கும் யதார்த்தமான கதை. "பிரளயத்தின் பிள்ளைகள்" மாதிரி அழுவாச்சி காவியம் இல்லை. ஆனால் அந்த சிப்பாய்க்கு என்ன ஆயிற்று  என்ற ஒரு சஸ்பென்ஸ்சை வைத்து கதையை நகர்த்திக் கொண்டு போயிருக்கிறார் கதாசிரியர். ஒரு கட்டத்தில் அந்த சிப்பாயை கொன்று தூக்கி எறிந்ததை கேட்டு அந்த தேடலுக்கு ஒரு முடிவு வந்து விட்டது என்று நினைக்கிறார் அந்த நிருபர்  . 

ஆனால் எப்பொழுதும் ஒரு ஆச்சர்யத்தை தனக்குள் கொண்டிருப்பதே இந்த உலகின் இயல்பு. அந்த சிப்பாயைப் பற்றி எடுத்த ஆவண படத்தை தொலை காட்சியில் ஒளிபரப்ப முடியாமல் நொந்து போயிருக்கும் போது அந்த சிப்பாயின் தரிசனமே தன் வீட்டு வாசலில் கிடைத்தால் அந்த நிருபர் ஆனந்தத்தினால் கண்ணீர் விடுவதை தவிர என்ன செய்ய  முடியும். கடைசி பகுதி சற்றே நம் கற்பனைக்கே விடப் படுகிறது. சுடப் பட்டு குழியில் தள்ளப் பட்டதாக சொன்னாலும், குழியை மூடப் பட்டதாக சொல்லப் படவில்லை. எனவே அந்த சிப்பாய் கொல்லப்  படவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம். உயிர் பிழைத்து வேறு பெயரில் வாழ்ந்து வருகிறார். தன்னை பற்றி தன் ஊரில் அந்த நிருபர் விசாரிப்பதையும் பைனாகுலரில் நோட்டம் விடுகிறார். கடைசியில் நிருபருக்கு காட்சி தருகிறார்.அத்துடன் அந்த நிருபரின் தேடல் நிறைவுறுகிறது.


டெக்ஸ் ஸ்பெஷல் 


ரெண்டு கதைகளும் நீண்ட தேடல் கதைதான். ஆனா எனக்கு பிடித்தது "நீதியின் நிழலில்".

"மரண தேசம் மெக்ஸிகோ" வில் காணமல் போன செவ்விந்திய சிறுவனை நோக்கிய தேடல். மிக சீரியசாக போகிறது. டெக்ஸ் மற்றும் கார்சனிடையே நக்கல் பேச்சு கூட இல்லை.

"நீதியின் நிழலில்" பிடிக்க முக்கிய காரணம் அதில் உள்ள ஆர்ட் வொர்க் மற்றும் டெக்ஸ்,கார்சன் நக்கல் உரையாடல்கள். சும்மா நக்கல் உரையாடல்களுக்கு மட்டும் கார்சனை "சந்தானம்" மாதிரி உபயோக்கிரார்களோ என்ற  வருவதை தவிர்க்க முடிய  வில்லை. கார்சனின் கடந்த காலம் கலரில் வரும் (எடிட்டரின் மவுனம் அப்படிதான் சொல்கிறது).

===========================================================================

தொடர்புடைய பதிவுகள் 

1) கனவுகளின் காதலன் எழுதிய
2) எடிட்டர் தானே எழுதிய விமர்சனம்.
3) சௌந்தரின் மின்னல் பதிவு 
4) புதுவை புயல் கார்த்திகேயனின் பதிவு    
5) முதலை பட்டாளம் கலீல் அவர்களின் அட்டவணை பற்றிய பதிவு 
===========================================================================

ஓவியப் பார்வை  


1) பிரான்சில் பூத்துக் குலுங்கும் ஒரு பூங்கா


2) மலைகளின் ராணி யை நினைவுபடுத்தும் ஒரு ஓவியம்


3) இளம் சிப்பாய்

4) பைனாகுலர் வழியே கண்காணிக்கும் இவரை தெரிகிறதா?


5) அறைக்கு வெளியே இருந்து ஒரு ஷாட். வெளியில் பெய்யும் மழை தூறலையும், அறை உள்ளே நடக்கும் நிகழ்சிகளையும் ஒரே ஷட்டில் காண்பிக்கிறார்.


 6) அருமையான கடல் ஓவியங்கள் 


7) மாலை வெய்யிலில் பயிற்சி எடுக்கும் வீரர்கள் 


8) மரத்தின் பின்னணியில் வீடு9) நிருபரின் ஒழுங்கற்ற அறையும் ஒரு ஓவியமே .


10)  குதிரையின் வனப்புக்கு எந்த மிருகமும் ஈடு செய்ய முடியாது.11) வியெட்நாமின் அழகிய துறைமுகம்


12) வியெட்நாமின் மக்கள் நெருக்கமிக்க மார்க்கெட்


13) இரவு தொடங்கும் தன்  வாழ்க்கையின் தேடல் மறு நாள் காலையில் சூரியனின் கதிர்களோடு முடிவடைவதை பாருங்கள்
14) வியெட்நாமின் ரயில் நிலையம்


16) வியெட்நாமின் ஆகிய ரயில் பாதை


17) ஆற்றின் ஓரம் ஓர் அழகிய காட்சி


18) பாட்டியும் பேத்தியும் சேரும் காட்சி. ஒரு வார்த்தை கூட பேசாமல் இருவரும் இணைந்து செல்வதைப் பாருங்கள்.


19) உங்கள் ஆவணப் படத்தை ஒளி பரப்ப முடியாது என்று சொல்லும்போது நிருபரின் முகம் கண்ணாடியில் தலை கீழாக தெரிகிறது. ஒளிபரப்ப முடியாமல் போவது நிருபரை தலை கீழாக திருப்பி போடும் என்பதை சொல்லாமல் சொல்கிறார் ஓவியர்.20) அற்புதமான க்ளைமாக்ஸ் , ஆனால் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

டெக்ஸ் 

1) செவ்விந்திய கிராமம் தாயும் மகவும்


2) தோழனைக் காப்பாற்ற உயிரை பணயம் வைக்கும் டெக்ஸ்


3)  அருமையான சதுப்பு நில ஓவியம்


4) அடர்ந்த கானகத்தை ஊடுருவும் சூரிய ஒளி


5) சதுப்பு நிலக் காட்சி6) சூரியனின் பின்னணியில் ஒரு காட்சி7) செவ்விந்திய கிராமம்


8) ஒற்றைக்கு ஒற்றைக்கு கிளம்பும் டெக்ஸ்


9) பகைவன் ஆனாலும் காப்பாற்றும் டெக்ஸ்


10) இது மிக அருமையான ஓவியம்


11) டெக்ஸ் கார்சன் நக்கல் காட்சிகள்
12) எவ்வளவு பெரிய ஆளாய் இருந்தாலும் புரட்டி எடுக்கும் டெக்ஸ் 

 


க்ளைமாக்ஸ் 

முதல் கிராபிக் நாவலில் இருந்த ஒரு பஞ்ச் "பிரளயதிலும்", "சிப்பாயிலும்" இல்லை. ஆனால் அற்புதமான ஆர்ட் வொர்க். ஹீரோவை அவன் செய்யும் நற்செயல்கள்தான் தீர்மானிக்கிறது என்ற வகையில் நரை மண்டை நிருபரும் ஒரு ஹீரோவே.


டெக்ஸ் ஸ்பெஷலைப் பொறுத்தவரை "நீதியின் நிழலில்" ஒரு ஜெம்.  மூலம் கலரில் இருந்தால் அப்படியே போட்டிருக்கலாம் என்ற ஏக்கம் வருவதை தவிர்க்க முடியவில்லை.


சிப்பாயின் சுவடுகள் - வான வேடிக்கை காட்டும் வர்ணஜாலம்

டெக்ஸ் ஸ்பெஷல்    - 1000 வாலா வெடிச் சரம்    

Post Comment

11 comments :

 1. // ஆனால் எப்பொழுதும் ஒரு ஆச்சர்யத்தை தனக்குள் கொண்டிருப்பதே இந்த உலகின் இயல்பு. அந்த சிப்பாயைப் பற்றி எடுத்த ஆவண படத்தை தொலை காட்சியில் ஒளிபரப்ப முடியாமல் நொந்து போயிருக்கும் போது அந்த சிப்பாயின் தரிசனமே தன் வீட்டு வாசலில் கிடைத்தால் அந்த நிருபர் ஆனந்தத்தினால் கண்ணீர் விடுவதை தவிர என்ன செய்ய முடியும். கடைசி பகுதி சற்றே நம் கற்பனைக்கே விடப் படுகிறது. சுடப் பட்டு குழியில் தள்ளப் பட்டதாக சொன்னாலும், குழியை மூடப் பட்டதாக சொல்லப் படவில்லை. எனவே அந்த சிப்பாய் கொல்லப் படவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம். உயிர் பிழைத்து வேறு பெயரில் வாழ்ந்து வருகிறார். தன்னை பற்றி தன் ஊரில் அந்த நிருபர் விசாரிப்பதையும் பைனாகுலரில் நோட்டம் விடுகிறார். கடைசியில் நிருபருக்கு காட்சி தருகிறார்.அத்துடன் அந்த நிருபரின் தேடல் நிறைவுறுகிறது.//

  ஒ.சி.சு. முடிவு பற்றிய உங்கள் புரிதல் தவறு என்பது என் கருத்து!

  என்னுடைய புரிதலை அறிய, கீழ்க்கண்ட லயன் ப்ளாக் போஸ்டில், Load More செய்து நான் இட்டிருக்கும் பின்னூட்டங்களைப் படிக்கவும்!

  ReplyDelete
  Replies
  1. //என்னுடைய புரிதலை அறிய, கீழ்க்கண்ட லயன் ப்ளாக் போஸ்டில், Load More செய்து நான் இட்டிருக்கும் பின்னூட்டங்களைப் படிக்கவும்!//

   http://lion-muthucomics.blogspot.in/2013/11/blog-post.html

   Delete
  2. நேற்று மீண்டும் ஒருமுறை படித்த போது நீலக் காருடன் அந்த கிழவர்( அவரையாவது கொஞ்சம் யூத்தான அலா போட்டிருக்கக் கூடாது ? ) வேறு வேறு இடங்களில் இருக்கக் கண்டேன்.
   So நல்ல நினைத்த முடிவிலிருந்து, கேட்ட முடிவாகி விட்டது. இதை லயன் ப்லொகில் சொல்லி அனைவருக்கும் அறிவித்ததற்கு நன்றி. எடிட்டர் பதில் சொல்லி இருந்திருக்கலாம்.

   Delete
  3. நன்றி ராஜ்!

   //அவரையாவது கொஞ்சம் யூத்தான அலா போட்டிருக்கக் கூடாது ?//

   அதற்கான பதில் இதுவாக இருக்கலாம் - என் லயன் ப்ளாக் கமெண்டுகளில் இருந்து:

   அந்தக் கொலையாளி, //வியட்நாம் படுகொலை சம்பவத்தில் கார்பினுக்கு துணை நின்ற கீழ்மட்ட இராணுவ அதிகாரியாகவும் இருக்கலாம்! ஏனெனில், அந்தக் கொலையாளி வயதானவராகவும், மிடுக்கானவரகாவும் காணப் படுகிறார்.//

   // எடிட்டர் பதில் சொல்லி இருந்திருக்கலாம்.//
   ஹ்ம்ம்... :(

   Delete
 2. My first thoughts were similar to what Raj had written - after reading Karthik's comments and that of Puthuvai Senthil - I had to rethink :-(

  This way it is great fun - we can have the end we want and be happy with it :-D

  ReplyDelete
  Replies
  1. //This way it is great fun - we can have the end we want and be happy with it :-D//

   உண்மை :D

   Delete
 3. புத்தகத்தில் பார்த்ததை விட உங்கள் படங்கள் அழகாக இருக்கின்றன..

  ReplyDelete
  Replies
  1. நன்றி கனக சுந்தரம். தொடர்ந்து வாருங்கள்

   Delete
 4. தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete
 5. ஒரே புத்தகத்துக்கு புதுசு புதுசா கதையக் கிளப்பறாங்களே... நான் படிச்ச வரைக்கும் க்ளைமாக்சில் அந்த பத்திரிக்கைப் பெரியவருக்கு ஏற்படும் முடிவைத்தான் கொஞ்சம் மறைமுகமா சொல்லியிருக்காங்க. மற்றபடி பூடகமாட செய்திகள் ஏதுமில்லைனுதான் நினைக்கிறேன். (சரிதானே கார்த்திக்?)

  நாம டிவி-ல கிரிக்கெட் பார்க்கும்போது, கிரிக்கெட்டில் பயங்கர ஆர்வமுடைய யாரவது வந்து கூட சேர்ந்துகிட்டாங்கன்னா ஒரு உற்சாகம் கிளம்புமே... அது மாதிரி இருக்கு உங்க ஓவியப் பார்வை! மேலே கனகசுந்தரம் சொல்லியிருப்பதைப்போல் புத்தகத்தில் பார்ப்பதைவிட உங்க பதிவில் அழகாகவே இருக்கின்றன!
  டெக்ஸின் அந்த சதுப்புநில ஓவியங்கள் - breath taking!!! சதுப்பு நிலங்களை அழகா வரைஞ்ச ஓவியருக்கு மனித முகங்களை (குறிப்பா டெக்ஸ்) இறுக்கமாவும், கருப்பாவும் காட்டியதில் அப்படி என்ன இரசணையோ!.... :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி விஜய். நீதியின் நிழலில் கலரில் வந்திருந்தால் சூப்பர்ராக இருந்திருக்கும். பலி வாங்கும் மூடில் இருப்பதால் அப்படி காட்டி இருப்பாரோ?

   மரண தேசத்தில் சற்றே சிரித்த டெக்ஸ்சை காணலாம் :D

   Delete