Thursday, November 28, 2013

ஏமாற்றும் பிச்சைக்காரி(ரர்)கள் ~ (பிச்சை புகினும் நேர்மை நன்றே )நேற்று மாலை அலுவலக பஸ்சில் இருந்து லிபர்ட்டி பஸ் ஸ்டாப்பில் இறங்கியவுடன் பணம் எடுக்க வேண்டியது நினைவுக்கு வந்தது. ATM லிபர்ட்டி ஹோட்டலுக்கும் சற்றே தள்ளி, ஸ்டேஷன் வியு ரோடு தண்டி இருந்ததால் போய் எடுத்துக் கொண்டு வந்தேன். வரும் வழியில் இரு பெண்கள் (உடனே பரபரக்காதீர்கள்). ஐம்பது வயது மதிக்கத் தக்க பெண் சாலை ஓரம் கொட்டி இருந்த மணலில் குளிருக்கு அடக்கமாக தலையில் முக்காடிட்டு அமர்ந்திருந்தார். முப்பத்தைந்து வயது மதிக்கத் தக்க மற்றுமொருவர் கையில் ரெண்டு வயது குழந்தையை வைத்திருதார். அது தூங்கிக் கொண்டிருந்தது.என்னை பார்த்தவுடன் "ஐயா தர்மம் பண்ணுங்க, சாப்பிடவே இல்லை" என்று கேட்க , நானும் எப்போதும் கேட்கும் கோஷம் தானே என்று கையில் கிடைத்த ரெண்டு ரூபாயை இருவருக்கும் கொடுத்தேன். கொடுக்கும் போது "ஐயா, பிள்ளை சாப்பிடவே இல்லை, சாப்பிட ஏதாவது வாங்கி குடுங்க" என்று கேட்டார். எங்கே போய் வாங்கி கொடுப்பது, பக்கத்தில் தள்ளு வண்டி கடை கூட இல்லை. அதனால் நான் ஒன்னும் சொல்லாமல் நடை கட்டினேன்.

பழைய சினிமாவில் பார்த்திருப்பது மாதிரி என் மனம், நல்ல மனம் ஒன்று தீய மனம் ஒன்று என்றாகி ஒன்றுக் கொன்று சண்டையிட ஆரமபித்தன.

நல்ல மனம்  : ஒன்னோட அப்பா எவ்வளவு தர்மவான். நீ ஏன் இப்படி இருக்கே? அந்த பிள்ளைக்காவது ஒரு ஒரு சாப்பாடு வாங்கி கொடுக்க கூடாதா?

கெட்ட மனம்  : ஆமாம். இந்த மாதிரி ஆயாக்கள் பக்கத்து கிராமங்கள்ள இருந்து இருந்து வந்து, இங்க பிச்சை எடுத்து ஊருக்கு அனுப்பி வைக்கிற கதையை கேட்டதில்லை? இவுங்கல்லாம் பிராடு. நம்பாதே

நல்ல மனம் : எல்லாருமா அப்பிடி ? இப்போ அவங்களுக்கு உதவுறது ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. காசு இருந்தாலும் இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைப்பது ஆண்டவனின் அருள். வாங்கி தராமல் போகாதே.
நல்ல மனம் வென்றது.  ஆற்காடு ரோடு போயி அங்கே நாங்கள் உண்ணும் உணவகத்தில் ரெண்டு ப்ளேட் சப்பாத்தி பார்சல் என்றேன். எண்பது ரூபா சார் என்றார் கல்லா. நம்ம பண்ணுற காரியம் அவ்வளவுக்கு ஒர்த்தா என்று கெட்ட மனம் கிண்டியது. இன்னைக்கு அந்த மூணு பெரும் நைட்டு நம்மளாலதான் சாப்பிடனும்னு நினச்சிக்கிட்டே வாங்கி கொண்டேன்.
சற்று தூரத்தில் இருந்து பார்த்தேன் போற வர்றவங்களை அந்த ஆயா பிச்சை கேட்டுக் கொண்டு இருந்தது. அதன் அருகில் சென்றேன் "ஐயா சாப்பிட வாங்கி கொடுங்க " . "ஒனக்காகதான் போய் வாங்கிட்டு வர்றேன்" என்று வாங்கி போயிருந்த பார்சலை நீட்டினேன். வாங்கி கொண்டே "மகராசன் நல்ல இருக்கணும், நாங்க செய்யாறுல இருந்து வர்றோம், ஊருக்கு போறதுக்கு பணமில்லை அதான் " என்று இழுத்தது. "அய்யய்யோ என்னால அதுக்கு எல்லாம் பணம் குடுக்க முடியாது" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே , சரி உக்காந்து சாப்பிடுங்கள் என்று சொன்னவுடன், கூட இருந்த ஆயாவுக்கு சாப்பிட கொடுத்தது.

அத்துடன் நான் திரும்பி வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தேன். சிறிது தூரம் தள்ளி சென்று திரும்பி பார்த்த போது அந்த பெண் கையில் குழந்தையுடன் போற வர்றவங்களை அந்த ஆயா பிச்சை கேட்டுக் கொண்டு இருந்தது.

கெட்ட மனம் : ஹி ஹி பாத்தியா நா சொல்லல இது பிராடுன்னு. 
இன்னைக்கு புல்லா நீ நின்னு பார்த்தாலும் இது பிச்சை எடுத்துக் கிட்டே தான் இருக்கும்.

நல்ல மனம் : சரி, அவ பிராடுன்னே வச்சிக்கிருவோம். அந்த சாப்பாட்ட இப்போ இல்லேன்னாலும்,  சாப்பிடதானே செய்வா, நல்ல சாப்பிட்டுட்டு "மகராசன் நல்ல இருக்கணும்"ன்னு ஒரு தடவை நினைச்சா போதாதா? ஒண்ணு ஒண்ணையும் கிட்ட நின்னு பாத்துக்கிட்டு இருக்க முடியாது. சில விசயங்களில் சிலரை நம்பித்தான் ஆக வேண்டும். அப்படி நம்பியவர்கள் ஏமாற்றினால் உன் நம்பிக்கைக்கு அருகதை இல்லாதவர்கள் அவர்கள். அவர்கள் நிலை இன்னமும் மோசமாகும். இப்போ ஒரு வேளை சாப்பாட்டுக்கு போற வரவங்க கிட்ட பிச்சை கேக்கிறது அவ நிலைமை, அவளுக்கு பசியாத்தனும்ன்னு நீ பசியோட அவ்வளவு தூரம் போய் வாங்கிட்டு வந்திருக்க இது உன் நிலைமை. இப்போ சொல்லு யார் உயர்ந்த இடத்தில இருக்கா ? எதனால நீ உயர்ந்த இடத்தில இருக்கேன்னு தெரியுதா ? நம்பிக்கை துரோகிகளால் நம்பிக்கை வைப்பதை நிறுத்தி விடாதே. நம்பிக்கை துரோகிகளை அவனவன் செயலே கொல்லும்.  இப்படி நல்ல மனம் சொல்லி முடித்தும் பழைய படங்களைப் போலவே கெட்ட மனம் சொய்ங் என்று காணாமல் போனது.

"பிச்சை என்று யாராவது கேட்டால் உதவி செய்யுங்கள். உதவி செய்யும்போது இதயத்தால் செய்யுங்கள், மூளையால் செய்யாதீர்கள். "

Post Comment

6 comments :

 1. Nice Post.

  Kindly look into the Font Size.

  ReplyDelete
 2. Hi,

  I Have posted a comment at 7.15 PM (Now) and it shows that the comment was made at 5.45 AM.

  The Time settings need to be changed, i believe,

  ReplyDelete
 3. எது எப்படியோ, நீங்க காசு பணமா கொடுக்காம சாப்பாடு வாங்கிக் கொடுத்ததால யாராவது ஓரிரும் சாப்பிட்டுப் பசியாறலாம் என்ற வகையில் நீங்கள் அதிகம் ஏமாறாதவராகவே கொள்ளலாம்தான்.( காசு பணமாகக் கொடுத்திருந்தால் அது பீடி-சிகரெட், பிராந்தி, புகையிலை இவற்றில் ஒன்றாக மாறி இருக்கலாம்) ;)

  தர்மம் தலைகாக்கும். உங்கள் இளகிய மனம் வாழ்க!

  (ஈரோட்டில் காமிக்ஸ் பசியால் வாடும் ஒரு ஏழை உண்டு. உங்களிடமிருக்கும் பழசு-பட்டை காமிக்ஸ்களை அவருக்குக் கொடுத்து உதவலாமில்லையா? ஹி ஹி)

  அய்யா, சாமே, தர்மவான்...

  ReplyDelete
 4. நன்றி விஜய். நான் உங்களுக்கு என்னிடம் இருக்கு பழைய காமிக்ஸ் (கொஞ்சம்தான் இருக்கு) லிஸ்ட் அனுப்புறேன். பிடித்ததை சொல்லுங்க. ப்ளுபெர்ரி கிட்ட குடுத்து விடுறேன்.

  ReplyDelete