Sunday, October 20, 2013

ரத்தப் படலம் (மறுபடியும் மொதல்ல இருந்தா ) & ஆகாயத்தில் அட்டகாசம் (ஆகா அட்டகாசம்)

என் மன வானில்

ரத்தப் படலம் மற்றும் ப்ளூ கோட் கனவான்கள் ஆகாயத்தில் அட்டகாசம் பண்ணும் புத்தகங்கள் வந்தவுடன் படிக்க மட்டுமே எனக்கு நேரம் இருந்தது. அதைப் பற்றிய பதிவு எழுதலாம் என்று நினைக்கும்போது என் மகனை டெங்கு காய்ச்சல் தாக்கி புதனில் இருந்து வெள்ளி வரை ஹாஸ்பிட்டலில் வைத்து பார்த்து விட்டு வந்தேன். சனியில் இருந்து எனக்கு வைரஸ் ஃபிவெர் அதனால் அந்த வாரம் ஆஸ்பிடல் வாரம் என்று நிர்மலா பெரியசாமி டோனில் சொல்ல வேண்டி இருந்தது. செவ்வாயில் இருந்து மறுபடி அலுவலக ஓட்டம், இந்த வாரம் தான் சற்றே நேரம் கிடைத்தது.
ரத்தப் படலம்

எந்த நேரத்தில் ரத்தப் படலம் என்று வைத்தார்கள் என்று தெரியவில்லை, XIII போகுமிடமெல்லாம் ரத்தம் தான். அவருக்கு யாரும் உதவி செய்தாலோ, அவருக்கு நெருக்கமானாலோ பரலோகப் ப்ராப்தி நிச்சயம். அந்த துரதிர்ஷ்டம் அவருக்கு இந்த இதழிலும் தொடர்கிறது. மே ப்ளவர், ப்யுரிட்டன்கள், XIII அவர்களது தலைமுறையில் கடைசி வாரிசு என்று பூ சுற்றல் போய்க் கொண்டே இருக்கறது.
ஒரு மனிதனை கொல்ல பெரிய கட்டிடம் கட்டி அதில் ப்ரெசிடெண்ட், வைஸ் ப்ரெசிடெண்ட் என்று பதவிகள் வேறு வைத்துக் கொண்டு FBI  யை, போலிசை கைக்குள் போட்டுக் கொண்டு கொல்ல முடியாமல் திண்டாடும்போது அடப் போங்கடான்னு கத்தணும் போல இருக்கிறது.

முதல் தடவை படிக்கும்போதே கொஞ்சம் ஸ்லோவா போகுதுங்கிற மாதிரி பீலிங். உடனே XIII டிக்ஸ்னரி புக்கை (கலெக்டர்ஸ் எடிசன் பாஸ். ஒடனே எந்த ஊர் கலெக்டர்ன்னு கேக்க கூடாது ஆமா) தூசி தட்டி முதல் ரெண்டு பாகங்களை படித்துப் பார்த்தேன்.  அதே வேகம் தான், வேகத்தில் மாற்றம் இல்லை. ஆனால் நாம் XIII வேகத்தை விட அதிவேகமாக பயணிக்க லார்கொவிடமும், ஷெல்டனிடமும் கற்றுக் கொண்டு விட்டோம். அதுதான் என்னை அப்படி உணர வைத்தது. ஆர்ட் வொர்க் சொல்லவே வேண்டாம். ரொம்ப நன்றாக இருக்கிறது.  

ஆனால் கதை "எங்கே செல்லும் இந்தப் பாதை" என்கிற மாதிரி இழுத்துக் கொண்டே போனால் படிப்பவர்களுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பும் ஆயாசமும் தான் மிஞ்சும். ரெண்டு பாகம் படித்து முடித்த பிறகும் ஒரு திருப்தி ஏற்படாதது அதனால்தான். அடுத்தடுத்த பாகங்கலாவது சற்று வேகத்துடன் போகுமா? XIII ஒருத்தரே அறிவார். ஒரு வேளை முதல் 18 பாகங்களையும் படித்தால் வந்த ஆயாசமாய் இருக்குமோ ? ஆனா ஒண்ணு இந்த 18 பாகங்களையும் தனித்தனியே காத்திருந்து வாங்கி படித்த நண்பர்களுக்கு கோவில் கட்டிதான் கும்பிடணும். என்ன அடிச்சாலும் தாங்கி இருக்கீங்க மக்களே.

ஆகாயத்தில் அட்டகாசம்

ஆங்கிலத்தில் இதை படிக்கவில்லை. தமிழில் ஸ்கேன்லேசன் பண்ணி நண்பர் தங்க வேல் (தானே?) இட்டபோதும், தரவிரக்கியதுடன் சரி. படிப்பதற்கு நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறேன். அதனால் எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் இந்த புத்தகத்தை அணுகினேன். எனக்கு வந்த ஆகாயத்தில் அட்டகாசம் புத்தகத்தில் 3 பக்கங்கள்  திரும்ப திரும்ப வந்தன அதனால் ப்ளூ கோட்ஸின் முதல் பக்கங்களையும், லக்கிலூக் கதையின் முதல் பக்கங்களையும் காணமல் குழம்பி விட்டேன்.

முதலில் படிப்பதற்கு எடுத்த புத்தகமும் இதுதான். ஆனால் பக்க குழப்பம் காரணமாக  முதல் ரெண்டு பக்கங்கள் முடிப்பதற்குள் என்னடா இது என்று ஆகி விட்டது. நிறைய வசனங்கள் குழப்பி அடித்தன.சார்ஜெண்டை சுருக்கி சார்ஜ் என்று செல்லமாக கூப்பிடுவது சரிதான், ஆனால் தளபதியும் "சார்ஜ்" கத்திக் கொண்டு போரிட பாய்கிறார். போரிட சொல்கிறாரா சார்ஜென்ட்டை கூப்பிடுகிறாரா என்ற குழப்பத்தில் மூடி வைத்து விட்டு ரத்தப் படலத்தை முடித்து விட்டே இதை மறுபடி கையில் எடுத்தேன். ஆனால் மறுபடி படித்த போது சிரித்து சிரித்து மாளவில்லை ரெண்டு பேர் அடிக்கும் கூத்துக்களை நினைத்து. ஷெரிப் டாக் புல்லுக்கும் அவரது டெபுடி ஆர்டினுக்கும் நல்ல போட்டி இந்த ரெண்டு பேர் என்பதை வந்த முதல் கதையிலே நிரூபித்து விட்டனர். என் மகனுக்கு நல்ல சைடு எபக்ட்சுடன் கதை சொல்ல நல்ல ஒரு கதை கிடைச்சாச்சு.  

வாசகர்களுக்கு ஏன் புரியாது ?

வாசகர்களுக்கு அமெரிக்க உள் நாட்டு யுத்தம் புரியாது என்பதெல்லாம் போங்கு ஆட்டம். அப்படியே இருந்தாலும் இரு தரப்பை, ராணுவ வீரர்கள், புரட்சியாளர்கள் என்று சொல்லி விட்டு போகலாம். இல்லை நம் நாட்டு வீரர்கள் எதிரி நாட்டு வீரர்கள் என்று சொல்லி விட்டு போயிருக்கலாம். கதை சூழல் புரியாது என்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. Wild West சூழல்  தமிழ் நாட்டின் கடைக் கோடியில் இருக்கும் ஒரு  சிற்றூரில் இருப்பவருக்கு எப்படி தெரியும்? ப்ளுபெரியும், டெக்ஸ்சும் படித்த பின்னால்தான் அறிந்து கொண்டோம். அதே மாதிரிதானே இதுவும். போட்டா தெரிஞ்சுக்கிறோம். சாதரணமான ஒரு காரணத்துக்காக இந்த மாதிரி ஒரு கதையை இழக்க இருந்தோமே என்ற வருத்தத்தில் தான் இதை குறிப்பிடுகிறேன்.

கேப்டன் டைகர் கதைகளிலும் இந்த உள்  நாட்டு யுத்தம் பற்றி குறிப்பிடப் படுகிறது,  லக்கி லுக் கதைகளில் பல அந்த கால கட்டங்களில் நடந்த சம்பவங்களோடு தொடர்புடையது. அதனால் அந்தகதைகளை படிக்கும்போது அந்த சரித்திர நிகழ்வுகளையும் தெரிந்து  கொள்கிறோம். அதே போல் தானே இதுவும்.  

===========================================================================

இந்த புத்தகம் தொடர்பான நண்பர்கள் பதிவுகள் 

2) சௌந்தரின் 106 - XIII - Ratha Padalam - Lion New Release

===========================================================================
அட்டைப் படம் 


XIII க்கு ஒரிஜினல் அட்டைப் படத்தையே போட்டது அருமை. ஆனால் அடியில் வந்த சிகப்பு பட்டை ஒரு அமெச்சூர் தனமான முயற்சியாகவே இருந்தது.

ஆகாயத்தில் அட்டகாசம் 

உண்மையிலேயே அட்டகாசமான அட்டைபடம்.ரூ 50 புத்தகங்கள் அட்டை படமும், கதைகளும் (வில்லன்னுக்கோர் வேலி , சுட்டி லக்கி) நன்றாக இருப்பது லயன் காமிக்ஸின் ரீச்சை அதிகப் படுத்தும்.

 
===========================================================================

படித்து விட்டீர்களா, இப்போது விற்பனையில் :D 

முந்தைய காமிக்ஸ் பதிவுகள் 


முந்தைய அனுபவ பதிவுகள் 


===========================================================================

ஓவியப் பார்வை 

நாம் மிகவும் எதிர் பார்த்ததும் , எடிட்டர் மிகவும் சிலாகித்து சொன்னதும் இந்த தொடரின் ஆர்ட் வொர்க்கைப் பற்றிதான். ஆனால் லார்கொ போலவோ, ஷெல்டன் கதைகள் போலவோ நல்ல ஒவியங்க ஹைலைட் பண்ணி காண்பிக்கப் படவில்லை. தோண்டிதான் எடுக்க வேண்டி இருந்தது.

1) மஞ்சள் வெயில் அடிக்கும் டெக்ஸ் மாநில (அரிசோனா) பாலைவனம் 


 2) மலைகள் ஊடே பறக்கும் ஹெலிகாப்டர்கள் 3) அடி பட்ட பறவையாக கீழிறங்கும் ஹெலிகாப்டர்


 3) ஒரு வட இந்திய பாணி முகத்தை பார்ப்பது, இந்த கதையினூடே எவ்வளவு அருமையாக உள்ளது.


4) பிரெஞ்சு கோட்டை 


 5) அந்த காரின் விளக்கு எவ்வளவு உயிரோட்டமாக வரையப் பட்டுள்ளது பாருங்கள். 6) அதே போல் இந்த ஆட்டோவும், நாம் தினம் பார்க்கும் ஒரு சாலையை போல் உயிரோட்டமாகஇருக்கிறது.


 7) இந்த பேனல்களில் தெரியும் லைட்டிங்கை கவனியுங்கள். அட்டகாசம்.


 8) வெடிக்கும்  லாரி


 9) இந்த ரயிலையும் , அதன் விளக்கையும் பாருங்கள். எவ்வளவு உயிரோட்டமாக உள்ளது.


 10) மே பிளவர் II கப்பல், பின்னணியும் லைட்டிங்கும் மிக நன்றாக உள்ளது.


11) ஹெலிகாப்டரின் மேலே தெரியும் மாலை நேர சூரியன் 


முரண் 

1) XIII இல் ஆங்காங்கே வண்ணச் சிதறல்கள் ரத்த தடத்தில் வந்த மாதிரி இருந்தன.

2) கேப்டன் ஜோன்ஸ் தாக்கப் படும் பகுதியின் பெயரை பன்சிஸ்தான் மற்றும் பான்சிஸ்த்தான்  (பக்கம் 60 ) என்று வழக்கம் போல பெயர் குழப்பி உள்ளனர்.

3) எனக்கு வந்த ஆகாயத்தில் அட்டகாசம் புத்தகத்தில் 3 பக்கங்கள்  திரும்ப திரும்ப வந்தன அதனால் ப்ளூ கோட்ஸின் முதல் பக்கங்களையும், லக்கிலூக் கதையின் முதல் பக்கங்களையும் காணமல் குழம்பி விட்டேன். வேறு புத்தகம் கேட்க வேண்டும்.
க்ளைமாக்ஸ்
ரத்தப் படலம்                      - (அதிகம்) எதிர்பார்த்து ஏமாற்றம் 
ஆகாயத்தில் அட்டகாசம்   -                எதிர்பாராத சந்தோஷம் 

டிஸ்கி 

கார்த்திகேயன் இப்போது தொடர்ந்து பதிவிட ஆரம்பித்து இருக்கிறார். அவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம். :-D 

Post Comment

7 comments :

 1. இந்த முறை உங்கள் "ஓவிய பார்வை "அதிகம் காண வில்லை நண்பரே ... ( ஆகா ...அட்டகாசத்தில் )

  ReplyDelete
 2. வைரஸ் ஃபீவரிலிருந்து விரைவில் நீங்கள் மீண்டது மிகுந்த சந்தோஷத்தை தருகிறது ராஜ்!

  //கார்த்திகேயன் இப்போது தொடர்ந்து பதிவிட ஆரம்பித்து இருக்கிறார். அவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.//

  வணங்கவெல்லாம் வேண்டாமே! அதற்கு பதிலா பழைய காமிக்ஸ் ஒரு ஐம்பது புக்ஸ் பார்சல போட்டுவிடுங்க நண்பரே. :)

  ReplyDelete
 3. காய்ச்சலின் பிடியிலிருந்து நீங்களும், உங்கள் குழந்தையும் மீண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

  கூட்டலோ, குறைச்சலோ இல்லாமல் கச்சிதமாக விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள்.

  இப்போதெல்லாம் புதிதாக எந்த காமிக்ஸைப் படித்தாலும் - குறிப்பாக அதிலுள்ள ஓவியங்களை ரசித்தாலும்- உங்கள் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடிவதில்லை, ராஜ் குமார்! அந்த அளவுக்கு உங்களின் ஓவியப் பார்வை எங்களை ஆட்கொண்டிருக்கிறது. :)

  நல்ல பதிவு! (இரண்டு புத்தகத்தையும் தனித்தனிப் பதிவாகப் போட்டிருந்தால் உங்கள் காமெடி வசனங்களும் எங்களுக்கு நிறையவே கிடைத்திருக்குமில்லையா?)

  பக்கங்கள் மாறிப்போயிருக்கும் புத்தகம் பற்றி எடிட்டருக்கு ஒரு மெயில் தட்டிவிடுங்களேன், நிச்சயம் வேறொன்று அனுப்பிவைப்பார்!

  ReplyDelete
 4. உண்மைதான். ஆனால் பலூனில் இருந்து பார்க்கும் படங்களை தவிர வேறு படங்களை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.

  ReplyDelete
 5. @P.Karthikeyan : நன்றி கார்த்திகேயன். 50 பழைய காமிக்ஸ் புக்கா? இருந்தா குடுக்க மாட்டோமா ? 2012 கதைகளில் இருந்துதான் இருக்கிறது :D

  ReplyDelete
 6. @Erode VIJAY:

  //கூட்டலோ, குறைச்சலோ இல்லாமல் கச்சிதமாக விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள்.

  இப்போதெல்லாம் புதிதாக எந்த காமிக்ஸைப் படித்தாலும் - குறிப்பாக அதிலுள்ள ஓவியங்களை ரசித்தாலும்- உங்கள் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடிவதில்லை, ராஜ் குமார்! அந்த அளவுக்கு உங்களின் ஓவியப் பார்வை எங்களை ஆட்கொண்டிருக்கிறது. :)

  //

  நன்றியோ நன்றி !

  //நல்ல பதிவு! (இரண்டு புத்தகத்தையும் தனித்தனிப் பதிவாகப் போட்டிருந்தால் உங்கள் காமெடி வசனங்களும் எங்களுக்கு நிறையவே கிடைத்திருக்குமில்லையா?)

  //

  இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிடுறீங்க :D

  ReplyDelete