Thursday, October 24, 2013

சினிமா கொட்டாயி திருடன்அப்போ நா சின்னப் பையன். அப்பா கூட "மகமாயி" தியேட்டர்ருக்கு படம் பாக்க போயிருந்தேன். தியேட்டர்ன்னு  சொன்னவுடன கட்டடம் கட்டி DTS ஜில்பான்ஸ் எல்லாம் காட்டுற சத்யம் தியேட்டர் மாதிரி பீல் பண்ணிடக் கூடாது. ஏழைக்கு ஏத்த எள்ளுருண்ட மாதிரி, எங்க ஊருக்கு ஏத்த கொட்டாயி. முதலில் கூரை வேய்ந்து இருப்பார்கள். அப்புறம் ஆஸ்பெட்டாஸ் சீட் கூரை போட்டார்கள்.  உள்ளே மண்ணு, பெஞ்சு, சேருன்னு மூணே கிளாஸ். மண்ணுல புளுதியுன்னி கேடக்கும்ன்னு பெஞ்சு இல்லேனா சேருள்ள உக்காருவோம். ரெண்டே ஆட்டந்தான். நைட்டு 7.30 மணிக்கு ஒண்ணு, அப்புறம் 9.30 க்கு ஒண்ணு.

உள்ள நொழஞ்சவொடன நா பண்ற மொத வேல ஆப்பெரேட்டேர் ரூமுக்கு போய் அவர் கையால் ரீல் சுற்றுவதைப் பாக்குறது, அப்புறம் டிக்கெட் கவுன்ட்டர் பக்கத்தில் நின்று எப்படி டிக்கெட் கொடுக்குறாங்கன்னு பாக்குறது. டிக்கெட் கொடுக்குற வேல எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு. தெனம் சினிமா பாக்கலாம்ன்னா சும்மாவா. அப்போ எனக்கு ஏரோப் ப்ளேன் வோட்டனும்ன்னு ஒரே ஆச. அது முடியலன்ன இத பாப்போம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.

இப்படி திரு திருன்னு முழிச்சுகிட்டு குறுக்கால மறுக்கால போய்கிட்டு இருந்தத பாத்துக்கிட்டு இருந்த டிக்கெட் குடுக்குரவரு, ஆளு யாரும் வராத நேரம் பாத்து "தம்பி இங்கிட்டு வாடா " ன்னு கூப்பிட்டு ஒரு பத்து டிக்கெட்ட கையில திணிச்சு "அந்தா அங்கிட்டு கவுன்டருல டிக்கெட் குடுக்குராருல (அவருதான் தியேட்டர் ஓனர்) அவரு கிட்ட குடுத்து, "டிக்கெட் எடுத்துட்டோம், ஆனா ஆளு வரல, அதுனால காசக் குடுங்கன்னு" கேட்டு வாங்கிட்டு வாடான்னு சொல்லி அனுப்பிசாரு.

நானும் போய் ஓனரு கிட்ட சொன்னேன் "ஒங்க அப்பா எங்கன்னு" கேட்டாரு ஓனரு. "அவரு அப்பயே கொட்டாயிக்குள்ள போட்டாறேன்னேன்". "அப்ப இந்த டிக்கெட் யாரு குடுத்தான்னு?" கேக்க "அந்தா அந்த கவுன்டருல டிக்கெட் குடுக்குராருல அவருதான் குடுத்தாரு" ன்னு சொன்னேன். ஓனரு மோகத்தில எள்ளும் கொள்ளும் வெடிச்சது. "சரி, அவங்ககிட்ட நான் குடுக்துகிறேன். நீ போயி படம் பாருன்னு" அனுப்பிச்சு வச்சுட்டாரு. அடுத்த தடவ படம் பாக்க போகும்போது டிக்கெட் கவுண்டரு கிட்ட போய் பாத்தா, என்கிட்டே டிக்கெட் கொடுத்த அண்ணன காணோம். வேற அண்ணன் டிக்கெட் கொடுதுக்குட்டு இருக்காப்பல. எனக்கு ஒண்ணுமே புரியல.  :-)                     


==========================================================================
முந்தைய அனுபவ பதிவுகள் 
 ==========================================================================

Post Comment

10 comments :

 1. ஹா ஹா! சீட்டுக் கிழிக்கிறவர் சீட்டையே கிழிச்சு அனுப்பிட்டீங்க! :D
  அந்தக் காலத்து சினிமா கொட்டாயில் படம் பார்த்து எனக்கும் நிறையவே பரிட்சயம் உண்டு என்பதால், இதைப் படிக்கும்போது ரீலை ரிவர்ஸில் சுத்தி நானும் என்னோட மலரும் நினைவுகளுக்குத் தாவிட்டேன்.

  கொட்டாயிக்கு தகுந்த மாதிரியே எழுத்து நடையில மாற்றத்தக் காமிச்சு ரசிக்க வச்சுட்டீங்க, ராஜ் குமார்!

  சுவாரஸ்யமா இருந்ததாலோ என்னவோ ரொம்பக் குட்டிப் பதிவு மாதிரி ஒரு ஃபீலிங்கு! :)

  ReplyDelete
 2. ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜா என்றொரு கொட்டாய் உண்டு - சில ரீல்களுக்கு ஒரு முறை படப்பெட்டியை மாற்ற வேண்டிய சிங்கள் ப்ரொஜெக்டர் அங்க உண்டு.

  அங்க போய் vacation பொது பல படங்கள் பார்த்திருக்கேன். சில ரீல்களுக்கொரு முறை interval, மெயின் interval, கரண்டு போனால் வர்ற வரைக்கும் இண்டர்வல் என்று 3 மணி நேரப் படத்தை கிட்டத் தட்ட 4.5 மணி நேரம் பார்த்த அனுபவங்கள் பல - நான் சொல்றது சகலகலா வல்லவன் போன்ற படங்கள் - அப்போவெல்லாம் செகண்ட் ரிலீஸ் என்று இந்த மாதிரி கொட்டாய்களில் வரும்.

  இடையே விற்கப்படும் கடலை மிட்டாய், கம்மர் கட், முறுக்கு, இஞ்சி மரப்பா, கோலி சோடா என்று டிக்கெட் காசை விட அதிகம் காசு கறக்கும் ஐட்டங்கள் சூழ்ந்திருக்கும் ....!

  ஹ்ம்ம் ... 5 ருபாய் கடச்சா ஒரு நாள் முழுக்க கொண்டாடலாம் அப்போ !

  கிளப்பி விட்டுடீங்களே ராஜ் !

  ReplyDelete
  Replies
  1. இன்னிக்கி க்ரெடிட் கார்ட்ல 50,000 சொய்ய்ய்ய்னு தேச்சாலும் அன்னிக்கி அந்த அஞ்சு ரூபாய்க்கு அப்பா அம்மா கிட்ட தொங்கி - அப்புறம் தாத்தா பாட்டி, மாமா, அத்தை எல்லார்கிட்டயும் சினிமாவுக்கு போறேன்னு சொல்லி ஆளுக்கு ரெண்டு ருபாய் வாங்கி மொத்தமா பத்து-பதினைந்து ரூபாய்கள் வேட்டு விட்ட அந்த காலங்கள் .. அதில் ரெண்டு - மூணு மிச்சம் பண்ணி வர்ற வழியில வாங்கின லயன் காமிக்ஸ் ... !

   Delete
 3. திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்: வாங்க நாகராஜ். வந்து ரொம்ப நாளாச்சு ?

  ReplyDelete
 4. @Erode VIJAY : இது நடந்து ரொம்ப நாள் கழித்தும் அவர் ஏன் அப்படி சொன்னார், ஏன் நம்மிடம் பணம் தரவில்லை என்று என் சின்ன மனதுக்குப் புரியவில்லை. வளர்ந்த பிறகே புரிந்தது அவ்வளவு பழமாக இருந்திருக்கிறேன்.;)

  //கொட்டாயிக்கு தகுந்த மாதிரியே எழுத்து நடையில மாற்றத்தக் காமிச்சு ரசிக்க வச்சுட்டீங்க, ராஜ் குமார்!//

  நன்றி விஜய்

  //சுவாரஸ்யமா இருந்ததாலோ என்னவோ ரொம்பக் குட்டிப் பதிவு மாதிரி ஒரு ஃபீலிங்கு! :) //

  இது ஒரு போஸ்ட் கார்ட் பதிவுதான் ;)

  ReplyDelete
 5. //அடுத்த தடவ படம் பாக்க போகும்போது டிக்கெட் கவுண்டரு கிட்ட போய் பாத்தா, என்கிட்டே டிக்கெட் கொடுத்த அண்ணன காணோம். வேற அண்ணன் டிக்கெட் கொடுதுக்குட்டு இருக்காப்பல. எனக்கு ஒண்ணுமே புரியல. :-) //

  எப்படிப் புரியும்?! எப்படிப் புரியும்னேன்!!! :D

  ஆனா, லாஜிக் கொஞ்சம் உதைக்குது! பத்து டிக்கெட்டை கிழிச்சு கொடுத்தாலே, அவரு அதுக்குண்டான கணக்கை ஓனர் கிட்ட எப்படியும் காட்டித்தானே ஆகணும்?!

  ReplyDelete
 6. @Raghavan :ஆஹா உங்க அனுபவம் சூப்பர் ஆ இருக்கே?. எங்கள் ஊரிலும் சிங்கள் ப்ரொஜெக்டர் தான். இடையிடையே வரும் முறுக்கையும், கடலை மிட்டாயையும் நொறுக்கிக் கொண்டே பார்க்கும் அனுபவமே தனிதான்.

  ReplyDelete
 7. @Karthik Somalinga:

  //எப்படிப் புரியும்?! எப்படிப் புரியும்னேன்!!! :D//

  நா ரொம்ப நல்ல பைய்யன் :D

  நம்ம ஆளு, ஓனருக்குதெரியாமல் திருடி விட்டு , அந்த காட்சிக்கு ஓனரிடம் இருந்து வாங்கின டிக்கெட்டுக்கு மட்டும் கணக்கு காட்ட நினைத்திருக்கலாம்.

  ReplyDelete