Thursday, October 3, 2013

மதுரை : மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர்

மொதல்ல என் பேக் கிரௌண்ட் பத்தி தெரிஞ்சுக்கங்க

நான் படித்த "அபிராமம் ஆரம்ப பள்ளியில் (கவுண்ட மணியின் "ஐ யாம் குண்டலகேசி, செகண்ட் ஸ்டாண்டர்ட், அவ்வையார் ஆரம்ப  பாட சாலை"  காமெடி நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பு இல்லை), நாலாவது படிக்கும்போதுதான் ஆங்கில பாடமே எனக்கு ஆரம்பித்தார்கள். பாடம் என்றால் "ABCD " அப்போதுதான் படிக்க ஆரம்பித்தோம். அந்த டைமில் LKG , UKG என்றால் ஸ்வீட்டா, காரமான்னு கூட தெரியாது. இது ஒரு பக்கம் என்றால் படம் பார்க்க ஒரு தியேட்டர் வேணுமே.

எங்கள் ஊரில் இருந்தது ஒரே ஒரு தியேட்டர். பேர் "மகமாயி". அதில் MGR , சிவாஜி படங்கள் தான் அதிகம் ஓடும். அப்புறம் கமல் , ரஜினி படங்கள் ஓடும், அவ்வளவுதான். ஒரு 10 கிலோ மீட்டரில் இருக்கும் கமுதியில் ஆங்கிலப் படங்கள் "அன்னை சகாயி" தியேட்டரில் போடுவார்கள். நிறைய பிட் படங்கள் இருக்கும். அவ்வப்போது ஜாக்கி சான், ப்ருஸ் லீ படம் போடுவார்கள். ஆனால் என தந்தை கமுதி சென்று படம் பார்க்க அனுப்ப மாட்டார். உள்ளுரிலும் என் தந்தையும் நானுமே போனது நினைவில் உள்ளது. ஜெனெரேட்டர் கிடையாது, கரண்ட் போனால் பாஸ் கொடுத்து அனுப்புவார்கள், அடுத்த நாள் வந்து பார்த்துக் கொள்ளலாம். அப்படி முரட்டுக் காளை மூன்று முறை பார்த்தேன் :D        

இப்படி ஒரு மாதிரி கட்டுப் பெட்டி யாகவே வாழ்ந்த எனக்கு இளங்கலை படிக்க மதுரை வந்தது பெரிய விடுதலையாக இருந்தது. மதுரை நாகமலை புதுக் கோட்டையில் உள்ள S .V .N  கல்லூரியில் சேரப் போன போதே அதகளமாக இருந்தது. அரசரடியை கடக்கும் போது வினோதமான ஒரு காட்சியைக் கண்டேன். ஒருத்தன் கையில் ஒரு நீளமான குச்சியுடன் நடந்து  கொண்டிருந்தான். அவன் போட்டிருந்த உடையை அது வரை நான் பார்த்தது இல்லை முக்கால் காலுக்கு தொள தொள பட்டாப் பட்டி டவுசர், தொள தொள சட்டை, தலையில் முண்டாசு என்று போய்க் கொண்டிருந்தான். பஸ்ஸில் இருந்து பார்த்த எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. சிறிது தூரம் சென்றதும் சோலைமலை தியேட்டர் வந்ததும் தான் எனக்கு அந்த உடையின் அர்த்தம் புரிந்தது. சோலைமலை தியேட்டரில் ரஜினியின் "அதிசயப் பிறவி " போட்டிருந்தார்கள்  அன்னைக்கு, அதனால் தலைவரின் புகழ் பெற்ற அந்த கெட் அப் பை போட்டுக் கொண்டு நடைப் பயின்று கொண்டிருந்தார். அந்த கெட் அப்.


மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர்

நாகமலையில் இருந்து மதுரைக்கு வர வேண்டுமானால் முதலில் இருப்பது அச்சம்பத்து, விராட்டிபத்து போன்ற சின்னச் சின்ன ஊர்கள். பெரிய ஊர் என்று பார்த்தால் காளவாசல் தான். பேரில் இருந்தே தெரிந்திருக்கும் சுண்ணாம்பு காளவாசல் இருந்ததால் அந்த பெயர். அங்குதான் மதுரையின் "சத்யம்" தியேட்டர் மாப்பிள்ளை விநாயகர், மாணிக்க விநாயகர் தியேட்டர் இருக்கிறது. ஆங்கில படம் மட்டுமே ஒரு தியேட்டரில் ஓட்டுவது கஷ்ட்டம், அதுவும் பிட் படம் போடாமல் ஓட்டுவது மகா கஷ்ட்டம். ஆனால் ஒன்றுக்கு ரெண்டு தியேட்டர்களில் நல்ல ஆங்கிலப் படங்கள் மட்டுமே போட்டு ஓட்டியவர்கள் இவர்கள் மட்டுமே. மிக நல்ல ரசனையை கொண்டவர்கள். அதற்க்கு உதாரணம் "சாப்ளின் வீக்" என்று ஒரு வாரம் முழுவதும் சார்லி சாப்ளினின் வேறு வேறு திரைப்படங்களை வெளியிட்டு சென்னைக்கு முன்னோடியாக இருந்தனர்.மதுரையில் அவ்வளவு பக்காவாக ஒரு தியேட்டரை என் மூன்று வருட தங்கலில் பார்க்கவில்லை. சீட்களை நன்றாக பராமரிப்பது,   படம் முடியும் வரை AC வைத்து இருப்பது, டாய்லட் சுத்தமாக வைத்திருப்பது என நன்றாக வைத்திருந்தார்கள். ஜைஜாண்டிக்காக இருக்கும் அவர்களுடைய மாப்பிள்ளை விநாயகர் கலர் (கூல் ட்ரிங்க்ஸ் பாசு) சூப்பராக இருக்கும் . இடைவேளையின் போது ஒரு கலரை வாங்கி குடிக்க முடியாமல் குடித்து விட்டு வந்தது நினைவுக்கு வருகிறது.     

மாப்பிளை வினாயகரில் ஆக்சன் அதிரடி படங்கள் என்றால், மாணிக்க வினாயகரில் ஸ்லோ, ரொமாண்டிக் படங்கள் என்று போடுவார்கள். மாப்பிள்ளை வினாயகரில் நான் பார்த்த முதல் படம் "The  Spy  Who  Loved  Me " ஜேம்ஸ் பாண்டாக ரோஜர் மூர் கலக்கி இருப்பார். அதுவும் முதல் சாகசம் சான்சே இல்லை, வாயை பிளந்து கொண்டு இப்படி கூட படம் எடுக்க முடியுமா என்று பார்த்தது நினைக்கு வருகிறது. அன்றிலிருந்து ஜேம்ஸின் வெறி பிடித்த ரசிகன். பிடித்த பாண்ட்கள் ரோஜர் மூர், பியர்ஸ் ப்ரோன்சன். 

ஆனால் இப்போது உள்ள பாண்ட் எனக்கு பிடிக்க வில்லை. மற்ற ஹீரோக்களுக்கும் பாண்டுக்கும் வித்தியாசம் உண்டு. ரொம்ப சட்டையை கழட்டி எல்லாம் சண்டை போட மாட்டார். அவர் சட்டையை கழட்டுவது எல்லாம் வேறு இடங்களில் மட்டுமே. :-)  முதலில் வில்லனிடம் சரணடைந்து விட்டு, அந்த மாங்கா வில்லன் சொல்லும் எல்லா ப்ளானையும் கேட்டு விட்டு, புத்திசாலித்தனமாக Q கொடுத்த ஆயுதங்கள் மூலம் தப்பிப்பார். வீணாக வில்லன் சம்பளம் கொடுத்து வைத்திருக்கும் சில இளம் பெண்கள் ஜேம்ஸின் ஆண்மையை (?) கண்டு உதவுவார்கள். ஜேம்ஸ் ஒரு சார்மிங், புத்திசாலி ஆச்சன் ஹீரோ. ஆனால் இப்போ அவர் ஒன்லி ஆக்சன் ஹீரோ மட்டும்தான். அந்த கேரக்டருக்கு இருந்த சார்மிங் போய் விட்டது.

ஒன்று மட்டும் எனக்கு புரிய வில்லை. ஜாக்கி சான் படங்கள் மாப்பிள்ளை வினாயகரில் அவ்வளவாக வருவதில்லை. நரிமேட்டில் உள்ள ஒரு தியேட்டரில் "Operation  Condor " பார்த்தது நினைவில் இருக்கிறது.

மாப்பிளை விநாயகர் தியேட்டரில் நான் பார்த்த படங்களில் நினைவில் உள்ள படங்கள்

Bond Movies
1)      The spy who loved me
2)      Moonraker
3)      For your Eyes only
4)      A view to Kill
5)      The Living Daylights
6)      License to kill
Arnold Movies
1)      Terminator
2)      Terminator -Judgment day
      அடா அடா, தலைவன் அர்னால்ட் கலக்கிய படம், எதனை தடவை பார்த்தேன்னு எனக்கே தெரியாது. சிகப்பு ரோஜா பொக்கேகுள் இருந்து கன்னை எடுக்கும் சீன் ஒண்ணு போதும். விசில் காதை பிக்கும் பாருங்க.   
3)      Commando
4)      Predator
5)      Conan the barbarian
6)      Conan the destroyer
7)      Red Sonja
8)      Raw Deal
9)      Total Recall
10)   Red heat
11)   Twins
Stallone movies
1)      Rocky
2)      Rocky II
3)      Rocky III
4)      Rocky IV
5)      First Blood
6)      Cliff Hanger
7)      Rambo – First Blood Part II
8)      Rambo III
Bruce Willis
1)      Die Hard
2)      Die Hard II
       
James Cameron movies
1)      The Abyss (Wow, What a movie.)
      கமேரோன் யாரென்று அறியாத நிலையில், ரெண்டு மூன்று தடவை பார்த்த படம். சயின்ஸ் பிச்சன் கதைக்குள்,  கணவன் மனைவி சென்ட்டிமென்ட் டிராமாவை புகுத்திய இயக்குனரை பாராட்டலாம்
2)      Aliens
Spielberg movies
1)      Jaws
2)      Indiana Jones – Raiders Of the Last Ark (Wow what a movie. I love Indi)
      நான் முதல் முதலில் பார்த்த ஆங்கில படம். சிறு வயதில் சென்னைக்கு முழுப் பரீட்சை லீவுக்கு வருவது வழக்கம். அப்போது எதாவது படத்துக்கு கூட்டிட்டுப் போடான்னு என் அத்தை கூற, என் அத்தை பையன் பிரேம்குமார் இந்தப் படத்துக்கு கொட்டிக் கொண்டு போனார். காசினோ தியேட்டர் என்று நினைக்கிறேன். இண்டி விஷம் தோய்க்கப் பட்ட பேரீச்சம் பழத்தை மேலே தூக்கி போட்டு வாயில் பிடிக்கப் போகும்போது அவர் நண்பர் அதை பிடித்து இண்டியை காப்பாற்றுவார். அந்த ஒரு சீன் மட்டும் என் நினைவில் இருந்தது. பட   பெயர் நினைவில் இல்லை. இந்த ஒரு சீனை மட்டும் நினைவில் வைத்து நான் பார்க்கும் ஒவ்வொரு படத்திலும் தேடி இருக்கிறேன். இந்த படத்தில் இந்த சீன் வந்ததும் ஓ என்று கத்தாத குறைதான்.என் நெடு நாளைய தேடல் அன்று நிறைவு பெற்றது.       
3)      Back to the future
4)       Back to the future II
5)      Jurassic Park

Others
It is really a big list. I cant remember now
1)      Blob
      ரெண்டு மூணு தடவை பார்த்த திகில் படம். ஒருத்தனை அந்த ஏலியன் ஒரு சின்ன தண்ணீர் பைப்புக்குள் உடைத்து இழுத்துப் போகும் காட்சி, திகிலோ திகில். அப்போ :D   
       அந்த ஏலியண எங்கயோ பாத்த பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சுகிட்டே, கண்ணாடியப் பாக்குறேன், நம்ம நாக்கப் பாத்து அந்த ஏலியண செஞ்சுருக்குக, பய புள்ளக. சீ  இதுக்குத்தானா இவ்வளவு பயந்தோம்     
  
2)      Robo Cop
3)       Robo Cop II
4)      Robo Cop III
5)      Crocodile Dundee
6)      Platoon
7)      Dirty Dozen
     இந்த படம் பார்த்திருக்கிரீர்களா? 
8)      Mackenna's Gold (good old all time hit)
9)      The Fly
10)   Beverly Hills cop
11)   Beverly Hills cop II
12)   Coming to America

      மிக ரசித்த ஒரு படம். மை டியர் மார்த்தாண்டன் என்று பிரபு நடித்து தமிழில் கொலை செய்யப்பட்டு வெளியானது.

13)   Blue Lagoon
14)   Blue Lagoon II
15)   Ghost Busters
16)   Ghost Busters II
17)   Bat Man
18)   Batman returns
19)   Blind Fury
20)   Cat People
21)   Ghost
      
     வித்தியாசமான் பேய்ப் படம் என்ற வகையில் இது எனக்கு ரொம்ப பிடித்த படம். இது இந்தியாவில் சுடப் பட்டதா ?

22)   Teenage Mutant Ninja Turtles J
23)   Robin hood – The prince of thieves
24)   Universal Soldier
25)   Blood Sport
26)   The Fugitive 

      தெலுங்கில் சுடப்பட்டு நாகார்ஜுனா, மனிஷா கொய்ராலா, ரம்யா கிருஷ்ணன் நடித்தார்கள். தமிழில் டப் ஆனது.   ஆந்திர மணவாடுகளா, பேரு செப்பண்டி
27)   Silver Bullet
28) The Jewel of the Nile
29) King Soloman's Mines

டிஸ்கி 

மதியம் 1.45 மணிக்கு நினைத்தவுடன் பேண்ட்டுக்கு மாறி அவசரம் அவசரமாக பஸ் ஏறி சென்று மாப்பிள்ளை வினாயகரில் படம் பார்த்த காலம் மீண்டும் வராதா என்ற ஏக்கம் இன்னும் போக வில்லை. இப்போது இந்த தியேட்டர் எப்படி  இருக்கிறது என்று தெரிய வில்லை.தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Post Comment

23 comments :

 1. theare complex is waiting for demolition for a commercial complex.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப சோகமா இருக்கு நண்பா . அட்லீஸ்ட் அந்த வணிக வளாகத்தில் சென்னையில் இருப்பது மாதிரி தியேட்டர் கொண்டு வந்தால் நல்லது

   Delete
 2. 2000 வருடம் +2 முடித்துவிட்டு நாகமலை புதுக்கோட்டை SVN கல்லூரியில் 2 மாதங்கள் Bsc IT படித்தேன்.

  மிகவும் சந்தோசமான நாட்கள் சேர்ந்த உடனேயே பல நண்பர்கள் சேர்ந்தார்கள்.

  அவர்களுடன் சேர்ந்து அடித்த லூட்டி நான் 4 வருடம் RVS காலேஜில் படித்த பொழுது கூட பண்ணவில்லை.

  அப்படி ஒரு நாள் நண்பர்கள் அனைவரும் காலேஜ் கட் அடித்துவிட்டு முதல் முறையாக ஒரு DTS தியேட்டரில் Gladiator அதுவும் AC யில பார்த்தது மாப்பிள்ளை வினாயகரில் தான், அருமயாக இருந்தது.

  அதிலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது தியேட்டர் அமைந்திருந்த விதமே, அப்படியே செங்குத்தாக சீடிங் arangement இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. இதே போல நான் தஞ்சாவூரில் படித்த பொது .. ஹாஸ்டலில் இருந்து லாரி பிடித்து நைட் ஷோ போவோம் ... நாங்க உக்காருவதற்கு முன் கேபினில் யாரு உண்காந்தாக என்று கேட்க கூடாது :-p இதுக்காகவே ஒரு பெரிய பொலிதீன் ஷீட் போட்டு அதுக்கு மேல உக்காருவோம் :-)

   Twister, The Golden Eye .. எல்லாம் இப்படிப் பார்த்தது !

   Delete
  2. கிருஷ்ணா நீங்களும் கொஞ்ச காலம் அங்கு படித்தீர்களா? நான் பார்க்கும் பொது DTS எல்லாம் இல்லை.

   Delete
  3. ராகவன், தஞ்சாவூரில் எல்லா தியேட்டரும் பக்கத்திலேயே இருக்குமே. ஏன் லாரி ஏறினீர்கள். சாஸ்த்ரா காலேஜா ?

   Delete
 3. பூட்டி கிடக்கு கொமாரு

  ReplyDelete
  Replies
  1. சார் பேர மாத்துங்க. உங்கள் வருகைக்கு நன்றி எருமைன்னு சொல்றதுக்கு என்னமோ மாதிரி இருக்கு. :D

   Delete
 4. //கரண்ட் போனால் பாஸ் கொடுத்து அனுப்புவார்கள், அடுத்த நாள் வந்து பார்த்துக் கொள்ளலாம். அப்படி முரட்டுக் காளை மூன்று முறை பார்த்தேன்//
  படம் முடியறதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி கரண்டு போயிடம்னு வேண்டிபீங்களோ?

  //அவர் சட்டையை கழட்டுவது எல்லாம் வேறு இடங்களில் மட்டுமே. :-) //
  ;)

  பதிவு சூப்பர் ஆகவும், அதே சமயம் சுமாராகவும் உள்ளது! :P பழி வாங்கிட்டோம்ல? ;)

  ReplyDelete
 5. //படம் முடியறதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி கரண்டு போயிடம்னு வேண்டிபீங்களோ?
  //

  நீங்க வேற எங்க அப்பா மூணாவது நாள் கடுப்பாகி "இன்னிக்கிதான் கடைசி, இன்னைக்கி கரண்ட் போச்சுன்னா, திரும்ப இந்த படத்துக்கு வர மாட்டேன்னு" சபதம் செஞ்சுட்டாரு. அப்புறம் சாமி கரண்ட் போயிறக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டே பார்த்தேன். :D

  ////அவர் சட்டையை கழட்டுவது எல்லாம் வேறு இடங்களில் மட்டுமே. :-) //
  ;)
  //
  நல்ல வேளை, இந்த லைன் யாருக்குமே புரியாம போச்சோன்னு நினச்சேன்

  //பதிவு சூப்பர் ஆகவும், அதே சமயம் சுமாராகவும் உள்ளது! :P பழி வாங்கிட்டோம்ல? ;)
  //

  கலாச்சுடாராமாம் :D

  ReplyDelete
 6. //ஜேம்ஸ் ஒரு சார்மிங், புத்திசாலி ஆச்சன் ஹீரோ. ஆனால் இப்போ அவர் ஒன்லி ஆக்சன் ஹீரோ மட்டும்தான். அந்த கேரக்டருக்கு இருந்த சார்மிங் போய் விட்டது.//

  உண்மையில் ஜேம்ஸ் பாண்ட் நாவல்களிலும் ஒரிஜினல் திரைப்படங்களிலும் (ஆரம்ப கால 007 படங்கள்) பாண்ட் ஒரு Manly Hero ஆகவே உருவகப்படுத்தப்பட்டு இருந்தார். அதனால்தான் ஷான் கானரி மிகச்சிறந்த 007 ஆக தெரிந்தார்.

  நடுவில் கமர்ஷியல் இயக்குனர்களின் கைவண்ணத்தால் 007 ஒரு சார்மிங் ஹீரோவாக திரையில் உருவகப்படுத்தப்பட்டார். என்னை பொறுத்த வரையில் மிகவும் மோசமான 007 பியர்ஸ் பிராஸ்னன், அதற்க்கு பிறகு ரோஜர் மூர்.ரோஜர் மூர் ஓரளவுக்கு எனக்கு பிடித்த காரணம் என்னவெனில் முழுக்க முழுக்க ஒரிஜினல் இயன் பிளெம்மிங் கதையை திரைப்படமாக கொண்டு வந்த இரண்டு படங்களில் ஒன்றில் அவர் நடித்ததுதான்.

  இழந்த ஒரிஜினல் Manly 007ஐ மீட்டெடுத்த பெருமை தற்போதைய Rugged 007 டேனியல் க்ரைக்குக்கே சேரும்.

  BTW, இது என்னுடைய கருத்து மட்டுமே.


  என்னடா இது, பதிவில் காரசாரமாக எதுவுமே இல்லை என்று தோன்றியதால் இந்த கருத்து இங்கே இடப்பட்டது. :)

  பின் குறிப்பு: கடந்த பத்தாண்டுகளில் இந்த தியேட்டருக்கு பல முறை சென்று இருந்தாலும் அங்கே ஒரு படம் கூட பார்த்ததில்லை.

  ReplyDelete
  Replies
  1. நான் பார்க்க ஆரம்பித்தது ரோஜர் மூரில் இருந்துதான். அதனால் எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். சிறிது தேவானந்த் சாயலில் வேறு இருப்பார். ஆனால் சீன் கானெரியை அதிகமாக பிடிக்காது. நீங்கள் சொன்னது போல் முதலில் ஆக்சன் ஹீரோ வாகவும் பின் ரோஜர் மூரில் இருந்து ஆக்சன்+சார்மிங் ஹீரோ வாகவும் முன்னிறுத்தி இருக்கிரார்கள் போல இருக்கிறது. ஆனால் ஒன்லி ஆக்சன் ஹீரோ எனக்கு பிடிக்கவில்லை அதுதான் சீன் கானெரியையும் டேனியல் க்ரைக்கையும் எனக்கு பிடிக்க வில்லை போல இருக்கிறது. :D

   Delete
 7. //The Fugitive

  தெலுங்கில் சுடப்பட்டு நாகார்ஜுனா, மனிஷா கொய்ராலா, ரம்யா கிருஷ்ணன் நடித்தார்கள். தமிழில் டப் ஆனது. ஆந்திர மணவாடுகளா, பேரு செப்பண்டி//

  இது ஒரிஜினலாக ஹிந்தி படம். மகேஷ் பட் இயக்கினார். ஹிந்தி,தெலுகு மற்றும் தமிழில் வெளியானது. படம் ரிலீஸ் ஆகும்போது Nurseகள் போராட்டம் நடத்தினார்கள். அதானால் சரித்திர புகழ் வாய்ந்த "அந்த" முதல் பாடல் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. பின்னர் படத்தின் டிவிடியில் கூட வெளிவராமல், Low Resolutionல் ஒரே ஒரு பிரிண்ட் மட்டும் ஆன்லைனில் உலவி வருகிறது. நூறாண்டு காணும் இந்திய சினிமாவுக்கு என்ன ஒரு மகத்தான இழப்பு?

  ReplyDelete
  Replies
  1. சரித்திர புகழ் பெற்ற "தகவலுக்கு" நன்றி. எட்ரா கூகுல :D

   Delete
 8. //Indiana Jones – Raiders Of the Last Ark (Wow what a movie. I love Indi)//

  இந்த படத்தை தழுவி தமிழில் வெளிவந்த மகத்தான காமிக்ஸை படித்து இருக்கிறீர்களா?

  ReplyDelete
  Replies
  1. ஐயையோ தெரியவே தெரியாதே. கொஞ்சம் சொல்லுங்களேன். அல்லது ஏற்கனவே உங்கள் ப்லொகில் போட்டிருந்தால் லிங்க் கொடுங்கள்.

   Delete
 9. மாப்பிள்​ளை விநாயக​ரை மறக்க முடியாது தான். 2.30 ​சோவுக்காக ​கேட் வாசலில் 12.30 ​கெல்லாம் ​சென்று முதலாவதாக நின்று ​கேட் திறந்தவுடன் அடித்து புடித்து 50 அடி ஓடி
  வரி​சையில் நின்று முதுகில் எல்லாம் ஏறி, கம்பிக்கு இ​டையில் தாவி, ​செக்யூரிட்டி​​யையும் மீரி 3 ருபாய்க்கு A/c டிக்​கெட் எடுத்து 5 ருபாய் பாப்கானுடன் படம் பார்த்த சுகமே சுகம் இப்​போது எதிலும் கிட்டாது. Nostalgia.

  ReplyDelete
  Replies
  1. அப்பா காசை ரைட் ராயலா செலவு பண்ணிக் கொண்டிருந்த கல்லூரி சமயம் என்பதால் முதல் வகுப்பு மட்டுமே. அவர்களுடைய பாப் கார்னுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு

   Delete
 10. அவர்கள் இடையிலேயே தமிழ் படங்கள் வெளியிட ஆரம்பித்தார்கள்.
  நான் ராம், 7G ரெயின்போ காலனி, கல்லூரி படங்கள் அந்த தியெட்டரில் தான் பார்த்தேன்.

  இடையில் கொஞ்ச காலம் தியேட்டரே ஓடாமல் இருந்தது. இப்பவும் அப்படித்தான் இருக்குன்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அப்போது வருடத்துக்கு ஒரே ஒரு வரம் ஒரு தமிழ் படம் போடுவார்கள். அப்போது போவதே இல்லை. நல்ல தியேட்டர் மூடப் படுவது சோகமான அனுபவம்.

   Delete
 11. "சங்கம் வளர்த்ததெம் மதுரையின் புகழ்பாடி நீவிர் இப் பொற்கிளியை பரிசில் பெற்றுச் செல்வீராக" - அப்படீன்னு யாராவது உங்களுக்கு உத்தரவு போட்டுட்டாங்களா ராஜ் குமார்? :)
  ஏதோ ஒரு ஏக்கம் கலந்த பெருமூச்சுடன் வெளிப்பட்டிருக்கும் ஒரு ஆதங்கப் பதிவு!
  அந்தத் தியேட்டர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களையெல்லாம் (குறிப்பா பிட்டு பட போஸ்ட்டர்களை) ரசிச்சு ரசிச்சு பார்த்துப்பழகியதால்தான் உங்களிடம் அந்தத் தனித்துவமான 'ஓவியப் பார்வை' உருவாச்சோ என்னமோ? :D

  ReplyDelete
 12. //"சங்கம் வளர்த்ததெம் மதுரையின் புகழ்பாடி நீவிர் இப் பொற்கிளியை பரிசில் பெற்றுச் செல்வீராக" - அப்படீன்னு யாராவது உங்களுக்கு உத்தரவு போட்டுட்டாங்களா ராஜ் குமார்? :)
  //

  அது கிளி இல்லங்க கிழி. நீங்க சொன்னதால மீனாட்சி அம்மன் கோயில் இருக்கும் பொற்கிளியை குடுத்தாலும் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்கிறேன் :D

  //அந்தத் தியேட்டர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களையெல்லாம் (குறிப்பா பிட்டு பட போஸ்ட்டர்களை) ரசிச்சு ரசிச்சு பார்த்துப்பழகியதால்தான் உங்களிடம் அந்தத் தனித்துவமான 'ஓவியப் பார்வை' உருவாச்சோ என்னமோ? :D //

  பதிவை சரியா படிக்கலேன்னு நல்லா தெரியுது. அந்த தியேட்டரில் பிட் படம் போடா மாட்டாங்க. பதிவிலேயே சொல்லி இருக்கேன். :D

  ReplyDelete
  Replies
  1. பதிவை நன்றாகவே படிச்சுட்டுத்தான் கமெண்ட் போட்டிருக்கேன். நான் கேட்ட கேள்வி இப்பதிவுக்கு அப்பாற்பட்டது? :D

   // அது கிளி இல்லங்க கிழி//
   ஓ! நீங்க உங்களுக்கு தமிழில் இவ்வளவு புலமை இருக்கா? பேஷ் பேஷ்! :)

   Delete