Tuesday, September 10, 2013

சிப்பாய் VS ப்ளே பாய் (லார்கோ - The Makiling Fortress & The Hour Of The Tiger)


என் மன வானில் 

இன்ப அதிர்ச்சி என்றால் என்ன என்பதை எடிட்டரின் பதிவு வந்த நாள் அன்று அனைவரும் உணர்ந்திருப்பார்கள். தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் தெரிந்த கதா நாயகர்கள் இல்லாமல் வருவதை உணர்ந்த எடிட்டரின் அதிரடி முடிவுதான் சிப்பாயை பின்னுக்கு தள்ளி விட்டு ப்ளேபாயின் செப்டெம்பர் வருகை. லார்கோவின் அதிரடி என்றும் மறக்க முடியாது அத்துடன் நீண்ட நாளுக்கு பின் வரும் பிரின்ஸ் & கோ வின் அதிரடியும் என்றால் சொல்லவா வேண்டும். தீபாவளி அன்னிக்கு வெடியை எடுத்துக் கொண்டு வெளியே போகும் பொது ஏற்படும் சந்தோஷம் போல இருந்தது.

அட்டைபடம்

ஒரிஜினலை ரி டச் பண்ணி போடும் அட்டைப்படங்கள் தான் ஒரு ப்ரொபெசனல் லுக்குடன் இருப்பது போல் தெரியும். எடிட்டரின் ப்லொகில் இரு தடவை சொல்லியும் இருக்கிறேன். ஆனால் இந்த தடவை நம் ஓவியர் வரைந்த ஓவியமாக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

லார்கோ அட்டை

   லார்கோ வின் ஒரிஜினல் அட்டையே தேவலை,  நம் அட்டை ஆக்சன் கதையின் அட்ட மாதிரியே இல்லை, காதல் கதையின் அட்டை போல தேமே என்று இருக்கிறது என்ற வாதம் வந்தவுடன் ஒரிஜினலைப் பார்த்தால், ஒரிஜினலிலும் தேமே என்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல் உட்கர்ந்து கொண்டு இருக்கிறார்கள். என்ன ஒரு வித்தியாசம் மிலிடரி யுனிபோர்மில் இருக்கிறார்கள் அவ்வளவுதான். நம் அட்டையாவது சற்று கலர்புல் ஆக இருக்கிறது.ஆனால் பின் புல வண்ணமாக கருப்பையே போட்டிருக்கலாம்.   
பிரின்ஸ் அட்டை

ஒட்டகத்தின் மீது அமர்ந்து பார்னே போகும் முன் அட்டை மிக நன்றாக இருந்தது. பின் அட்டையில் பிரின்சின் முகம் காலை கடன் முடிக்க செல்லும்போது இருக்கும் ரியாக்சனில் இருந்தது. அந்த ஒரு குறையை தவிர மற்றதெல்லாம் சூப்பர். அதற்க்கு ஒரிஜினலிலும் ஒரு குழப்பமான ரியாக்சன் இருப்பதே காரணம்.
அச்சு தர "அர்ச்சனை"

என் கைகளுக்கு புத்தகம் வருமுன்னேயே விஸ்கி சுஸ்கி எடிட்டருடைய ப்ளோகில் அச்சு தரத்தை பற்றி கேள்வி எழுப்பி விட்டார். என் புத்தகத்தில் பார்க்கும் போது சில பக்கங்களில் மோசமாக இருந்தது (பக்கம் 23). சில பக்கங்களில் வண்ணம் திப்பி திப்பியாக இருந்தது. இந்த குறைகள் எல்லாம் ரத்த தடத்தில் வந்த அதே பிரச்சனைகள் தான். லார்கோ இதழில் மட்டும் தான் இந்த குறைகளைப் பார்க்க முடிந்தது. பலூனில் உள்ளதை மட்டும் படிக்காமல் சித்திரங்களையும் ரசிக்கும் என் போன்றோருக்கு இந்த குறைகள் கடுப்பாகத்தான் இருந்தன. ஆனால் ரத்த தடம் அளவுக்கு மோசம் இல்லை என்பதால் தப்பினோம். இது போன்ற பிரச்சனைகளின் மூலத்தை கண்டு பிடித்து சரி செய்தால் ஒழிய இவை திரும்ப முளைக்க வாய்ப்பு உண்டு.    
ஓவியப் பார்வை

லார்கோ வருகிறார் என்றாலே எனக்கு சித்திரங்களும் அவர் அடிக்கும் ஷார்ப் பஞ்ச் டயலாக்குகளும் தான் நினைவுக்கு வரும். பர்மாவின் கானகத்தையும், ஹெலிகாப்டர் சாகசங்களையும், ஆல்ப்ஸ் மலை மற்றும் இமய மலையின் அழகையும் சித்திரங்கள் கண் முன்னால் நிறுத்துகின்றன.       

1) புத்த மத கோவிலின் முன் காவல் சிங்கம் 
2) ஆல்ப்ஸ் மலை அழகு 

3) சரியும் பாதையினூடே நகரும் ட்ரக்குகள் 

4) வின்ச் குழும கட்டிடம் 

5) அமெரிக்காவின் நாடாளு மன்றம்?

6) கண் முன் விரியும் பச்சை மலை 

7) புத்தரின் தங்க கோவில்

8) புத்த கோவில் ஒரு பறவைப் பார்வை 

9) சூரியனின் கதிர்கள் மலையை சிவக்க வைத்திருப்பதை பாருங்கள் 

10) காட்டினுள்ளே உள்ள ஒரு வீடு மற்றும் ஒரு அருவி
11) சூரிய உதயத்தின் போது ஒரு ஹெலிகாப்டர் 

12) ஆதவன் தன் பொன் கரங்களால் தழுவும் நதையின் மேல் செல்லும் ஒரு ஹெலி காப்டர் 

13)  பலத்த காவலுள்ள பர்மாவின் சிறைச்சாலை 

14)  அட்டகாசமான ஹெலி சாகச சித்திரங்கள் 15)  கிடு கிடு பள்ளத்தினூடே ஒரு பாலம் 

16)  ஆதவனில் பொன் கரங்களால் தீண்டப் பட்ட நதியோர வீடு 
சைமனின் பஞ்ச் டயலாக்ஸ் 

சில நாளில் தூக்கு உறுதி என்ற போதிலும் சைமன் அடிக்கும் லூட்டியை பாருங்கள். இந்த டயலாக்குகளில் எடிட்டரின் கைவண்ணத்தை காணலாம். சிறையில் இருந்த தப்பும் போதும் சைமனின் சுற்றுலாவில் சேர்ந்து கொள்ள யார் வர்றா? எட்ன்று கேட்க்கும் தைரியம் வாவ் கலக்குற சைமன் பையா !சைமனுக்கு "நீ லார்கொவை தீவட்டி தடியன்னுல சொன்ன" என்று பல்பு கொடுக்கும் பர்மீய பெண்   
லார்கோவின் பஞ்ச் டயலாக்ஸ் 

லார்கோவின் பஞ்ச  டயலாக்ஸ் என்றே போட்டிருக்கலாம் போல, அவ்வளவு பஞ்ச் டயலாக் பஞ்சம் லார்கொவுக்கு.
1) காதலை என்றைக்குமே நன்றிக் கடனுக்கு ஈடாக்கி விடாதே என்ற சென்டிமென்ட் டயலாக் மட்டுமே லார்கொவின்   டயலாக்கில் எனக்கு பிடித்தது.  
பிரின்ஸ் கதை

இரு கதைகளுமே ஒரு பின் புலத்தை வைத்து கதை அமைத்து  இருந்தது வித்தியாசமாக இருந்தது. எப்போது கடலோடி இருக்கும் பிரின்ஸ் குழுவினரை "பற்றி எரியும் பாலைவனம்" கதையில் மணல் கடலில் மிதக்க விட்ட கதாசியரின் கைவண்ணத்தை என்ன சொல்ல. இந்த கதையில் பார்னே கலக்கி விட்டார், ப்ரின்சை ஓரம் கட்டி விட்டார் என்றே சொல்லலாம். நான் இந்த கதையில் பார்னேயின் ரசிகனாகி விட்டேன். ஒட்டகத்துடன் அவர் அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது.
அடுத்த கதையில் திட்டமிட்டு வாங் ஓவினால் மாட்டி விடப்படும் பிரின்ஸ் மற்றும் பார்னே, ஜின்னின் உதவியால் சதுப்பு நிலத்தில் கோடிக்கணக்கான கொசுக்களையும், முதலை களையும் தாண்டி எப்படி தப்பி வருகிறார்கள் என்று திகட்ட திகட்ட சொல்லி இருக்கிறார்கள். முதலைகள் வரும் இடங்களில் உள்ள சித்திரங்கள் அருமை. 
முரண்

1) மீண்டும் பெயர் குழப்பம் இவர் பேர் "பெர்குஸ்" சா "பெர்சனா" யாராவது சொல்லுங்கப்பா !.
2) அச்சு தரம் சில பக்கங்களில் கும்மி அடித்து விட்டது. எடிட்டர் சரி பண்ணுவார் என்று நம்புவோம்.
3) முதல் பக்கத்தில் "You  are  dissmissed " என்பது உன் சீட்டை கிழிக்கிறேன் என்று மொழி பெயர்த்திருப்பதாக ஒரு நண்பர் FB சொல்லி இருந்தார். ராணுவத்தில் இதற்க்கு அர்த்தம் "நீ போகலாம்".
க்ளைமாக்ஸ்

வரிசையா ரெண்டு ஜாக்கி சான் படத்தையும், ரெண்டு அர்னால்ட் படத்தையும் பார்த்த திருப்தி கொடுத்தது.மாலையப்பன் மற்றும் பொன்னன் அட்டைப் படங்களில் அதகளம் செய்திருக்கிறார்கள். Great  

Post Comment

13 comments :

 1. உங்கள் சித்திரபார்வைக்காகவே நான் உங்கள் விமர்சனங்ளின் ரசிகன். :) நீங்கள் சொல்லும் ஓவிய நுணுக்கங்களை படித்துவிட்டு மீண்டும் புத்தகத்தை எடுத்தால் இன்னும் கதைகள் அபாரமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்&நன்றி! :)

  ReplyDelete
 2. மீண்டும் அட்டகாசம் பண்ணியிருக்கீங்க ராஜ் குமார்! குறிப்பா ஓவியப்பார்வை; உங்க பார்வையில பார்க்கும்போது புத்தகத்தில் பார்த்ததைவிட கொள்ளை அழகாத் தெரியுது(கான்ட்ராஸ்ட் அதிகம் பண்ணியிருக்கீங்களா?!)

  நானும் பார்னேக்கு ரசிகனாயிட்டேன் (நல்லா கவனிங்க கவுண்டமணியின் சாயல் நிறையவே தெரியும்; முக அமைப்பிலும், நக்கலான வசனங்களிலும்). அதேபோல, சைமனின் எகத்தாளமான வசனங்களையும் ரொம்பவே ரசிச்சேன். சீரியஸான ஹீரோக்களைவிடவும் அவர்களது சகாக்களே அதிகம் ஈர்க்கிறார்கள்!

  // நீ போகலாம் என்று அர்த்தம் //
  மிலிட்டரில வேலை பார்த்திருக்கீங்களா? ;)

  ReplyDelete
 3. Boss.. printing in your book is fine compared to mine :-)

  Asusual I will enjoy the drawings after reading your post.. very good.

  ReplyDelete
 4. @cap tiger : நன்றி cap டிகர். மீண்டும் உங்களின் பின்னூட்டத்தை பார்த்ததில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 5. @ERODE விஜய் :

  பாராட்டுகளுக்கு நன்றி விஜய். கூகுள் பிக்காசோவில் சிறிது டச் அப் பண்ணுவேன்.

  //மிலிட்டரில வேலை பார்த்திருக்கீங்களா? ;)//

  ஹி ஹி மிலிடரி ஓட்டலில் :D

  ReplyDelete
  Replies
  1. :D

   லயன் ப்ளாக்கில் ஸ்பைடர்-மாயாவி கமெண்ட் போட்டில உங்க நகைச்சுவை உணர்வை காட்டலாமே ராஜ் குமார்? சிரிக்க ஆவலா இருக்கேன்!

   Delete
 6. @RAMG75 : நன்றி ராம்ஜி. சில இடங்களில் அச்சு தரம் சரி இல்லை தான். ஆனால் ரத்த தடம் அளவுக்கு மண்டை காய வைக்க வில்லை. :D

  ReplyDelete
 7. இன்னும் லார்கோ படிக்கவில்லை.ஏற்கனவே கலரில் ஆங்கிலத்தில் படித்தால் வந்த வினை.
  பிரின்ஸ் கதைகள் இரண்டுமே அட்டகாசம். சித்திரங்கள் கலரில் அருமையாக இருந்தன.
  நீங்க சொன்னது போல பார்னே கலக்கி இருப்பார்.

  ReplyDelete
 8. டியர் ராஜ்,
  உங்க புக்குல பிரிண்டிங் பரவாவில்ல மாதிரி தெரியுது! என்னது இன்னமும் கொஞ்சம் மோசம்!

  பட் எனக்கு இந்த பிரிண்டிங் குழறுபடிகள விட அந்த முத பக்கத்து வசனம் ஷாக்கிங்கா இருந்துச்சு!

  "உன்னுடைய சீட்டு கிழிக்கப்பட்டது " இந்த வசனத்த படிச்சுட்டு நான் புக்கு பூரா தேடுனேன். அந்த ஆளோட சீட்டு கிளிக்கப்பட்டதுக்கும் கதைக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமான்னு! அப்படி ஒன்னும் கிடையாதுன்னு தெரிஞ்சபோது என்னால நம்ப முடியல, நம்ம ஆசிரியரா இப்படி கோட்டை விட்டார்னு!

  பிரிண்டிங் குளறுபடிகளை காட்டிலும் இது ரொம்ப சீரியஸ் ஆனா தவறு!

  ReplyDelete
 9. @கிருஷ்ணா வ வெ : அடப் பாவி . அதுக்குதான் நான் ஆங்கிலத்தில் படிக்கவே இல்லை :D

  ReplyDelete
 10. @விஸ்கி-சுஸ்கி :
  //"உன்னுடைய சீட்டு கிழிக்கப்பட்டது " இந்த வசனத்த படிச்சுட்டு நான் புக்கு பூரா தேடுனேன். அந்த ஆளோட சீட்டு கிளிக்கப்பட்டதுக்கும் கதைக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குமான்னு! அப்படி ஒன்னும் கிடையாதுன்னு தெரிஞ்சபோது என்னால நம்ப முடியல, நம்ம ஆசிரியரா இப்படி கோட்டை விட்டார்னு//

  நானும் தேடித் பார்த்தேன். எனக்கும் அந்த மொழி பெயர்ப்பு சரியில்லை என்றே தோன்றியது.அப்படியே மொழி பெயர்த்தால் வந்த வினை. :(

  ReplyDelete
 11. தோழா.....உம் ஓவிய ரசனைக்கு எம் வாழ்த்துக்கள் ....

  ReplyDelete