Sunday, September 22, 2013

தஞ்சை பயணம் : குடி மகன்களுடன் ஒரு குண்டக்க மண்டக்க பயணம்

"ஏன் நைட்டு பத்தே முக்காலுக்கு டிக்கெட் எடுத்தீங்க? கொஞ்சம் சீக்கிரம் எடுக்க கூடாதா?"

 என்ற மனைவியின் கேள்விக்கு "அப்போதான்மா ட்ராபிக் கம்மியா இருக்கும், சீக்கிரம் போகலாம்"ன்னு கெத்தா (ரொம்ப யோசிச்சு எடுத்தாராமாம்) சொன்ன நேரம் என் தலைக்கு மேல விதி நக்கல் சிரிப்பு சிரித்தது எனக்கு கேட்கவில்லை.     

மழை பெய்ததால் ஆட்டோவுக்கு 120 ரூ அழுது விட்டு 9.30 க்கே கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போய் விட்டேன். நேரத்தை கொல்ல ஆனந்த விகடனை வாங்கி விட்டு உட்க்கார இடம் தேடி அலைந்தேன்.  ஒரு கான்ஸ்டபிள் குடித்து விட்டு மட்டையாகி இருக்கும் ஆளுக்கு மனிதர்களை காலிலேயே அடித்து எழுப்பிக் கொண்டிருந்தார். விகடனையும், எதிரில் இருந்த மூன்று இளம் பெண்களையும், அந்த பெண்களை சைட் அடித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞனையும் (+1 ஹி ஹி ) பார்த்துக் கொண்டிருதேன்.  முழு விகடனையும் முடித்து விட்டு நிமிரும்போது 10.30 ஆகி இருந்தது. பஸ் நிற்கும் என்று சொன்ன இடத்துக்கு சென்றேன்.

 தஞ்சாவூருக்கு ஒரே ஒரு எக்ஸ்பிரஸ் பஸ் மட்டுமே நின்று கொண்டிருந்தது. நான் புக் பண்ணி இருந்தது அல்ட்ரா டீலக்ஸ். சரி நம்ம பயக தான் வெள்ளக்காரன் டைமுக்கா வரப் போறாய்ங்க நினச்சாலும் உள்ளுக்குள் ஒரு உதறல் இல்லாமல் இல்லை. 10.40 ஆகவும் ரொம்ப பதட்டமாகி சார் இந்த பஸ் வந்துருச்சா வந்துருச்சான்னு காக்கி மற்றும் நீல வண்ண உடை அணிந்தவர்களிடம் எல்லாம் கேட்க்க ஆரம்பிக்க, "சார், எனக்கு எழுதப் படிக்க தெரியாது சார், கக்குஸ் கழுவ வந்திருக்கேன் சார். வேலையப் பார்க்க உடுங்க சார்ன்னு" எகிற அட ராமா இப்படி பொலம்ப வுட்டுட்டியே ன்னுநொந்து கொண்டே செல்ல, கடைசியில் ஒரு கண்டக்ட்டர் டிக்கட்டை வாங்கி பார்த்து விட்டு சார் இந்த பஸ் அப்பவே வந்துருச்சே , இந்த கடைசியிலே போய் பாருங்க என்று கை காட்ட போய் பார்த்தால் 13 நம்பர் பிளாட் பார்மில் நிக்க வேண்டிய பஸ் 25 ஆவது  பிளாட் பார்மில் நிக்குது. சார் நிப்பாட்டுரதுதான் நிப்பாட்டுறீங்க கொஞ்சம் 14,15, 16 லயுலாம் நிப்பாட்டக் கூடாதா என்றால், சாரி சார் இடம் இல்ல என்றார் கூலாய் கண்டக்டன்.  என்ன மரியாதை வேண்டி கிடக்கு. கிர்ர் 


சிறிது நேரத்தில் 10.50 க்கு பஸ் புறப்பட்டது. அப்படா கடைசியா புடிச்சாச்சுன்னு நிம்மதியில ஒரு தூக்கத்த போட்டேன். 11.45 போல பஸ் சத்தங்கள், பேச்சு சத்தம் அதிமா இருக்கவே, சரி தாம்பரம் வந்துருச்சு போலன்னு நினச்சுகிட்டு, ஜன்னல் வழியே பார்க்க "அரசு பேருந்து நிலையம் உங்களை வரவேற்கிறது" என்ற போர்டுடன் பெரிய பஸ் ஸ்டாண்ட் இருந்தது. அட தாம்பரத்லயும் புதுசா பஸ் ஸ்டாண்ட் கட்டிடாங்க போல இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு பக்கத்தில் இருந்தவரிடம் 
"சார், பஸ் ஸ்டாண்ட் சூப்பரா இருக்குல்ல. தாம்பரத்துக்கு இது கொஞ்சம் பெரிசு தான் என்று சொல்ல",


அவர் என்னை கேவலமாக பார்த்து விட்டு "நானே இப்போதான் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட விட்டு வெளிய வருதுன்னு குமுறிக்கிட்டு இருக்கேன், நீ வேற " என்று கழுவி கழுவி ஊத்தினான். 

அடப் பாவிங்களா! பஸ் ஸ்டாண்ட விட்டு வெளிய வர்றதுக்கு ஒரு மணி நேரமா? ன்னு நினைச்சுகிட்டே, சரி ரன்னிங் டைம் 7 மணி நேரம், காலைல 7 மணிக்காவது போடலாம்ன்னு நினச்சுகிட்டு,  தூக்கத்தை கண்டினுயு  பண்ண ஆரம்பித்தேன். நம்ம     ராசிதான், நம்ம டிவிஎஸ் 50 ல போனா, பிரச்னை நமக்கு முன்னால பல்சர்ல போகுமே.  


சில சீட் காலியாக இருந்ததால் ஆட்கள் கை காட்டினால் நிறுத்தி ஏற்றிக் கொண்டிருந்தார்கள். திரிசூலத்தில் ரெண்டு பேர் கை காட்டினார்கள். ஒருவர் வெள்ளை வேட்டி சட்டையில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆளும், பேன்ட் சர்ட் போட்ட ஒரு பையனும் ஏறினார்கள். அவர்கள் ஏறியதும் எங்களுக்கு ஏறி விட்டது. அவ்வளவு மப்பில் இருந்தார்கள். ஏறி கண்டக்டர் சீட்டில் வெள்ளை வெட்டி அமர அவர் மடியில் பேன்ட் சட்டை அமர்ந்து கொண்டது.

கண்டக்டர் : சார் எங்க போகணும்
வெள்ளை வேட்டி : ழே. நீ யங்க வேணா போ. நா என்ன ஒன்ன கேட்டுகிட்டா போய்க் கிட்டு இருக்கேன்.
கண்டக்டர் :  ஙெ
டிரைவர் : (புத்திசாலிதனமா பேசுறாராமாம்) இந்த பஸ் தஞ்சாவூர் போவுது, நீ எங்க போகணும்.
வெள்ளை வேட்டி :ழே, திலும்ப திலும்ப கேட்டுகினு.  நீ தஞ்சாவூல் போனா போக வேண்டியது தானே.

கண்டக்டர் : நீ எங்க தான் போகணும்?
வெள்ளை வேட்டி : தஞ்சாவூல் போகணும்

இது ஆவுறது இல்லன்னு டிரைவர் எகிற ஆரம்பித்தார்.


டிரைவர் : யோவ் குடிச்சுட்டு வர்ற ஆளுங்கள ஏத்தக் கூடாதுன்னு சட்டம் இருக்கு தெரியுமா
வெள்ளை வேட்டி : ழே, வட்டம் ஒழு இலுட்டலைன்னு அண்ணா சொல்லி இருக்கலு ழே
பேன்ட் சட்டை : (வெள்ளை வேட்டி மடியில் இருந்து எழுந்து) அல்லே. ஒழு குழி மகனுக்கு இல்லாது பஸ்சு எதுக்கு நமக்கு?

அடப் பாவிகளா ! தீய கீய வச்சு தொலைஞ்சுராதீங்கடான்னு நெனச்சுகிட்டு
டிரைவர் : எப்பா, எரங்குரீன்களா இல்ல போலிஸ் டேசனுக்கு விடட்டுமா?
வெள்ளை வேட்டி : ழே, வுழுலா வுழுலா, லாம் பாக்கால டேசனா? ன்னு எகிறினார்.

போலிஸ் என்றவுடன் கூனா மானாக்கள் எல்லாம் கழிந்து விடுவார்கள். "சால் இப்போ என்ன எலங்க சொன்ன எலங்கப் போலோம்ன்னு" சொல்லிட்டு இறங்கிவிடுவார்கள் என்று நினைத்திருந்த எனக்கும், டிரைவர் & கண்டக்டருக்கும் அதிர்ச்சி.


டிரைவரும், கண்டக்டரும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பஸ்ஸை எடுத்தனர். தூக்கம் கெட்டுப் போனாலும் ஒரு சண்டையைப் பார்க்கும் ஆவல் வந்து மனதில் உட்க்கார்ந்தது.  

டிரைவர் நேரே பல்லாவரம் போலிஸ் ஸ்டேசன் எதிரே நிப்பாட்டினார். வெளியே நின்று கொண்டிருந்த காவலர்களை அழைத்து அவர்கள் சலம்புவதை சொன்னார். கான்ஸ்டபிள் டிக்கெட் வாங்கினார்களான்னு விசாரித்து விட்டு, வாங்கவில்லைன்னதும் கீழ  இறங்குன்னு சொல்லி இறக்கி கூட்டிட்டு போனார். அன்று இரவு அவர்களுக்கு நல்ல மண்டகப் படி கிடைத்திருக்கும் இருவருக்கும் என்று நினைக்கிறேன். ஆனா கெத்தாவே நடந்து போனார்கள். வெள்ளை வேட்டி அரசியல்வாதி போல இருக்கு.  
  
___________________________________________________________________________

இதே மாதிரி ஒரு சில்லிட வைக்கும் சிவ ராத்திரி பயணம் 


___________________________________________________________________________

இதில ஒரு 45 நிமிஷம் காலி. பெருங்களத்தூரில் ஒரு ஜோடி ஏறினார்கள், ஆன்லைன் டிக்கெட் வைத்திருந்தும், கண்டக்டரிடம் உள்ள சார்ட்டில் அவர்கள் பேர் இல்லை என்பதால் ஏற்ற முடியாது என்று சொல்ல. அவர்களோ உங்கள் சிஸ்டத்தில் தவறு என்றால் நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்று வாதிட்டனர். கடைசியில் மிகுந்த கோபத்துடன் கஸ்ட்டமர் கோர்ட்டுக்கு போவோம் என்று சொல்லி விட்டு சென்றனர். இந்த களேபரத்தில் ஒரு 45 நிமிஷம் காலி. திரும்ப வண்டி பெருங்களத்தூரில் இருந்து கிளம்பிய போது மணி 1.20 .

அடங் கொய்யாலே நைட்டு 11 மணிக்கு கேளம்புனாலும் சென்னையை தாண்டுவதுக்கு 2.30 மணி நேரமாடா? ன்னு தலையில் கை வைத்துக்கொண்டு உட்க்கார்ந்தேன். அப்போது சம்பந்தமில்லாமல் "அப்போதான்மா ட்ராபிக் கம்மியா இருக்கும், சீக்கிரம் போகலாம்"ன்னு  மனைவியிடம் சொன்ன  டயலாக்  நினைவுக்கு வந்து தொலைத்தது.  என்னமோ போடா ராஜ் குமார்.Post Comment

6 comments :

 1. //நம்ம டிவிஎஸ் 50 ல போனா, பிரச்னை நமக்கு முன்னால பல்சர்ல போகுமே.//
  :) :)

  பெங்களூரிலும் ட்ராவல்ஸ் வண்டிகளில் பயணிக்கும் போது இதே பிரச்சினைதான்! கலாசிப்பாளயத்தைத் தாண்ட அரை மணி நேரமாகும்! அப்புறம் ஆங்காங்கே பயணிகளை ஏற்றிக் கொண்டு பெங்களூர் எல்லையைத் தாண்ட சில மணி நேரங்களாகும்!

  ReplyDelete
 2. தஞ்சாவூரு சேர்ந்தீங்களா இல்லை நடுல இது மொபைல் பதிவா :-) இந்த online டிக்கட் களேபரம் ஒருமுறை KPNல் எனக்கு நடந்திருக்கு. அப்புறம் அடுத்த வண்டியில் ஏத்தி விட்டாங்க - தப்பிச்சேன் :-)

  ReplyDelete
 3. @Karthik Somalinga :

  சென்னையின் பரப்பளவு விரிவடைந்து வருவதும் ஒரு காரணம். என் சிறு வயதில் சென்னைக்கு வரும்போது பல்லாவரதுக்கும் கிரோம்பேட்டைக்கும் இடையே பொட்டல் காடாக கிடக்கும், அதே மாதிரிதாம் தாம்பரத்துக்கும் கிரோம்பேட்டைக்கும் இடையேவும்.

  ReplyDelete
 4. @ராகவன் : தஞ்சாவூர் ஒரு வழியாக 9.30 மணிக்கு போய் சேர்ந்தேன். கிட்டத்தட்ட 10.30 மணி நேரம் பயண நேரம். காலை விடிந்த பிறகும் பஸ் பயணம் செய்வது எனக்கு பிடிக்காத விஷயம்.

  நானும் ஆன்லைனில் தான் புக் பண்ணி இருந்தேன். நல்ல வேலை தப்பிச்சோம்டா சாமின்னு பெரு மூச்சு விட்டேன். 1 மணிக்கு மேல் (பெருங்களதூரில்)என்னத்த அடுத்த பஸ்ச புடிச்சு.

  ReplyDelete
 5. // ( +1 ஹி ஹி) // :D :D

  கார்த்திக் ரசிச்ச அதே வரிகளை (டிவிஎஸ்50 - பல்சர்) நானும் ரசித்தேன்! ஒரு மணிநேரப் (தூக்கப்)பயணத்திற்குப் பிறகும் பஸ் கோயம்பேடைத் தாண்டாதிருந்ததும் நல்ல காமெடி! மதுரைக்காரங்களுக்கு காமெடி இயல்பிலேயே வரும்னு யாரோ எனக்குச் சொன்னது ஞாபகம் வருகிறது!

  பதிவு பயங்கர காமெடியாக ஆரம்பித்து சோகமாக முடிந்துவிட்டது!
  பாவம் அந்த 'ஆன்-லைனில்' பதிவு செய்து ஏமாந்த ஜோடி! :(


  ReplyDelete
 6. @Erode VIJAY :நன்றி விஜய்.

  அந்த +1 ன்ன போட்டுட்டு எங்க வுட்டு அம்மணிகிட்ட இடி வாங்குன கத எனக்குதான் தெரியும் :D

  ReplyDelete