Sunday, September 1, 2013

சுட்டி லக்கி –மேற்கே ஒரு சுட்டிப் புயல் - Kid Lucky

சுட்டி லக்கி –மேற்கே ஒரு சுட்டிப் புயல்

என் வீட்டில் காமிக்ஸ் கட்சியில் ஏற்கனவே நானும் , என் பெண்ணும் இருந்தோம். என் மனைவியும், மகனும் எதிரணியில். எதிரணியில் இருந்த என் மகனை என் அணிக்கு இழுத்து காட்டியது சுட்டி லக்கி. இந்த கதையில் வந்த பெயர்களும் சிறுவன் முள்ளங்கி மண்டயன் விளையாடும் விளையாட்டுக்களும் என் மகனுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அதிலும் தர்ப்பூசணி தபிதா என்ற பேரைக் கேட்டவுடன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டான்.இப்போது சூப்பர் சர்க்கசைமுடித்து விட்டோம். அடுத்து பொடியன் பில்லி. சாதாரணக் கதை சொன்னால் கூட ஹீரோ பேரு லக்கி லுக் என்று இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறான்.

அட்டைப் படம்

அட்டைப் படம் இந்த இதழிலும் பார்க்க கண்ணுக்கு ரெப்ரஷிங் ஆக இருந்தது. கதையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியைத்தான் அட்டைப் படமாக போட்டிருந்தாலும், அப்படியே கதையில் இருப்பது மாதிரி போடவில்லை. கதைப்படி அவர் செவ்விந்திய உடையில் இருப்பார். அட்டைப்படத்தில் ஜீன்ஸில் இருப்பார். எவ்வளவு பேர் இதை கவனித்தீர்கள் என்று தெரியவில்லை.

ஓவியப் பார்வை
லக்கி கதை ஓவியங்களில் நான் மிகவும் ரசிப்பது அவர் சுடும்போது நடக்கும் நிகழ்வுகளை. எவ்வளவு வேகமாக சுடுகிறார் என்பதை காண்பிக்க ஓவியர் மெனக்கேட்டிருப்பார்.

1) பக்கம் 6ல் குதிரையின் சேணத்தை கீழே வைக்காமலே கவண் கல்லை சிங்கத்தை அடித்து விட்டு அந்தரத்திலேயே பிடித்துக் கொண்டு நடக்கும் லக்கி


2) பக்கம் 8ல் கையில் இருக்கும் வாளி கீழே விழுவதற்குள் பாம்பை அடிக்கும் லாவகம்.ஈரோடு புத்தக கண்காட்சி

ஆகஸ்ட் முதல் வாரம் நடந்த புத்தக திருவிழாவில் நம் காமிக்ஸ் ஸ்டால் ஆறு பந்திலும் சிக்ஸ் அடித்திருக்கிறது. நிறைய வாசகர்களுக்கு நம் காமிக்ஸ் வருவதே தெரியவில்லை. பார்த்தவுடன் ஆச்சர்யத்துடன் பழைய நண்பனை பார்த்த பரவசத்துடன் வாங்கிச் சென்ற அழகை நம் ஈரோடு ஸ்டாலின் மற்றும் கிறுக்கும் பூனையார் ஈரோடு விஜய் யும் மிக நன்றாக கவர் பண்ணி இருந்தனர். ஒவ்வொரு நாளையும் ஒருவர் மாற்றி ஒருவர் கவர் பண்ணி இருந்தனர். அதனால் ஒவ்வொரு நாள் படிக்கும் போதும் நாமே அங்கு சென்று பார்ப்பது போன்ற உணர்வை தந்தது.

ஒவ்வொரு நாளும் கவர் பண்ணி இருக்கிறார்களே என்று பாராட்ட போன் பண்ணிய போதுதான் அவர்களின் உழைப்பு தெரிந்தது. ஸ்டால் வாங்க ஹெல்ப் பண்ணி, கடையை ரெடி பண்ணி,வந்த வாசகர்களுக்கு தக்க புத்தகங்களை ரெகமண்டு பண்ணி, குட்டிகளை கவர் பண்ண டைம் டேபிள் இலவசமாக கொடுக்கும் ஐடியா கொடுத்து , பணி நேரம் போக மற்ற நேரம் எல்லாம் ஸ்டாலில் இருந்து, கடை பூட்டும் வரை ஹெல்ப் பண்ணி என்று அவர்கள் செய்த உதவிகளுக்கு நன்றி என்ற ஒரு சொல்லை சொல்லி அவர்களை அவர்களை நோகடிக்க முடியவில்லை. நானும் உங்களுடன் இருந்திருக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை தவிர என்னிடம் கொடுக்க எதுவுமில்லை. ஹாட்ஸ் ஆப் டு யு ஈரோடு ஸ்டாலின், விஜய், செயின்ட் சாத்தான் சோம சுந்தரம், சேலம் டெக்ஸ் விஜய ராகவன் மற்றும் மற்ற ஈரோடு நண்பர்கள்.

ஸ்டாலின் ஈரோடு புத்தக கண் காட்சியை கவர் பண்ணி போட்ட பதிவுகள்

==================================================================

க்ளைமாக்ஸ்


சுட்டி லக்கி சுட்டிகளை கவர்ந்து விட்டது. மீண்டும் சுட்டிகளை காமிக்ஸ் உலகத்திற்கு இழுத்து வருவதற்கு உண்டான நல்ல முயற்சி. புத்தக திருவிழாவிலும் நிறைய வாசகர்களை இழுத்து வந்திருக்கும் என்பதில் சந்தேக மில்லை

Post Comment

12 comments :

 1. //லக்கி கதை ஓவியங்களில் நான் மிகவும் ரசிப்பது அவர் சுடும்போது நடக்கும் நிகழ்வுகளை. எவ்வளவு வேகமாக சுடுகிறார் என்பதை காண்பிக்க ஓவியர் மெனக்கேட்டிருப்பார்.//
  உண்மைதான் ராஜ்! இது போன்ற சிறு சிறு ஆனால் முக்கியமான அம்சங்கள் புதிய வாசகர்களால் கவனிக்கப் படாமலேயே போய்விடும் என்பதுதான் இதில் உள்ள பிரச்சினை

  ReplyDelete
 2. பதிவின் தலைப்பை 'சுட்டி லக்கி' என்று போட்டுவிட்டு, ஈரோடு புத்தகத் திருவிழாவை பத்தி பத்தியாக விவரித்திருப்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது! ;)

  பாராட்டுக்கு நன்றி நண்பரே! ஈரோடு புத்தகத்திருவிழா உங்களைப் போலவே நண்பர்கள் பலரையும் 'நானும் உங்களுடன் இல்லாமல் போய்விட்டேனே' என்று அவர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. நேசமிகு நண்பர்களை அடையாளம் காட்டியிருக்கிறது.

  ஒரு திருவிழாவைப் போலவே நடைபெற்ற அந்நாட்கள் அதற்குள் முடிந்துவிட்டதே என்ற ஏக்கம் எனக்குள்!

  அடுத்த பதிவிலாவது வழக்கமான உங்கள் பாணியை வெளிப்படுத்துங்கள்! :)

  ReplyDelete
 3. என் சுட்டிக்கு கிட் லக்கியை கொடுத்து படம் பாரு என்றால் எனக்கு பெரிய புக் கிரீன் மெனார் தான் வேணும் என அதை புடுங்கி கொண்டாள்.

  ReplyDelete
 4. நான் வாளியை விழாமல் பிடிப்பதை கவனித்தேன்...ஆனால் சேணத்தை கவனிக்கவில்லை நீங்கள் சொன்ன பிறகு தான் பார்க்கிறேன்

  ReplyDelete
 5. இந்த முறை பதிவு சற்று சிறியதாக உள்ளதே?

  ReplyDelete
 6. @Karthik Somalinga
  //உண்மைதான் ராஜ்! இது போன்ற சிறு சிறு ஆனால் முக்கியமான அம்சங்கள் புதிய வாசகர்களால் கவனிக்கப் படாமலேயே போய்விடும் என்பதுதான் இதில் உள்ள பிரச்சினை //

  அதைக் கவனிப்பதற்குதான் நான் இருக்கிறேனே கவலையை விடுங்கள். நம்ம மக்களுக்கு கவனித்து சொல்லி விடலாம். :D

  ReplyDelete
 7. @கிறுக்கும் பூனைக்குட்டி Erode VIJAY

  நான் பயப்படுற ஆள் நீங்க ஒருத்தர் தான் (ஹி ஹி உண்மைதான் உங்கள தவிர யாருமில்லை, நம்புங்கப்பு). கடைசியில ஒரு இக்கன்னா வச்சிர்ரீங்களே. அதுக்குதான்

  கிரீன் மனோர் பதிவுடன் சேர்த்து போடலாம் என்று நினைத்து எழுதினேன். ஆனால் அந்த பதிவு பெரிதாகிவிடும் என்று நினைத்தால் தனியே ஒரு சிறிய பதிவு.

  ReplyDelete
  Replies
  1. // நான் பயப்படுற ஆள் நீங்க ஒருத்தர்தான் //

   ஹேஏஏ... எல்லோரும் பார்த்துக்கங்க! நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்! :)

   Delete
 8. @லக்கி தமிழ்

  போனி எக்ஸ்ப்ரஸில் எடிட்டரே சில இடங்களை சுட்டி காட்டி இருப்பார்.கிரீன் மனோர் பதிவுடன் சேர்த்து போடலாம் என்று நினைத்து எழுதினேன். ஆனால் அந்த பதிவு பெரிதாகிவிடும் என்று நினைத்தால் தனியே ஒரு சிறிய பதிவு. ;)

  ReplyDelete
 9. @கிறுக்கும் பூனைக்குட்டி Erode விஜய்:

  //ஹேஏஏ... எல்லோரும் பார்த்துக்கங்க! நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்! :)
  //

  :D பாத்து, ரவுடியப் பிடிச்சு கொரில்லா கூண்டில போட்டுறப் போறாங்க.

  ReplyDelete
 10. Raj Muthu Kumar S, also try reading Smurfs to your kids !

  ReplyDelete
 11. @Comic Lover : Yes, I will try. But cant spend much on buying. Need to download. :D

  ReplyDelete