Sunday, August 11, 2013

The Hunger Games - சினிமா விமர்சனம்


கதை


இந்த சயின்ஸ் பிக்சன் கதை,முதலில் புத்தகமாக வந்து பின் படமாகப் பட்டது. பனெம் (Panem) என்ற நாட்டில் நடந்த உள்  நாட்டு கழகத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. பனெம்  நாட்டின் பணக்கார ஸ்டேட் ஆனா கேப்பிடல் மீது மற்ற 12 ஏழை எஸ்டேட்களும் படை எடுத்தன. அதில் கேப்பிட்டல் வெற்றி பெற்றது. மற்ற 12 ஸ்டேட் களின் அடிமைத்தனத்தை குறிக்கும் வகையில் ஒரு விபரீத விளையாட்டு வருடா வருடம் நடத்தப்படும்

அதில் அடிமைப் பட்ட 12 ஸ்டேட்டில் இருந்து 12 வயதில் இருந்து 18 வயதுக்கு உட்பட்ட இருவர் லாட்டரி குலுக்கல்  மூலம் தேர்வு  செய்யப் பட்டு கேப்பிட்டலுக்கு கொண்டு வரப் படுவார்கள். அங்கு அவர்களுக்கு உயிர் தப்பி பிழைப்பதற்கான பயிற்சிகள் துவங்கும். ஏன் அந்த பயிற்சி ? அவர்கள் நம் IPL மாதிரி ஒரு விளையாட்டு விளையாட போறாங்க அது கொலைகார விளையாட்டு. நம்ம IPL மாதிரி போட்டியை டிவி யில் ஒளிபரப்புதல், ஸ்பான்சர்கோச் மற்றும் காஸ்ட்யும் டிசைனர் எல்லாம் உண்டு.

தேர்ந்தெடுக்கப் பட்ட 24  பெரும் ஒரு தீவில் விடப் படுவார்கள். அங்கு அவர்கள் தங்களுக்கு தேவையான ஆயுதத்தையும், உயிர் வாழ தேவையான பொருட்களையும்  சேகரித்து  கொள்ள வேண்டும். பிறகு மற்ற வீரர்களை கொல்லும் முயற்சியில்  இறங்க வேண்டும்.  கடைசிவரை உயிரோடு இருப்பவருக்கு அவர் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு செல்வமும் மரியாதையும் கிடைக்கும்.

======================================================================================
நான் Action/Adventure ரகப் படங்களை மட்டுமே விரும்பி பார்ப்பவன். லாரா கிராப்ட் மற்றும் கேட் உமன் தவிர்த்து, பெண் முக்கியப் பாத்திரமாக நடித்த படங்கள் பார்த்ததில்லை. ஆக்சன் அந்த அளவுக்கு இருக்காது என்ற எண்ணம் எனக்குண்டுஅந்த எண்ணத்தை  மாற்றிய படம் இதுயதார்த்தமாக ஒரு பதின் வயது பெண்ணை முக்கிய பாத்திரமாக வைத்து என்னை கவர்ந்த படம் இது.
======================================================================================இந்த ஸ்டேட்டுகளிலேயே ஆக ஏழையான 12 ஆவது ஸ்டேட் டில் இருக்கிராள் நம் கதாநாயகி கேட்னிஸ் எவர்டீன். இவள் தன அம்மாவுடனும், தங்கை ப்ரிம் ரோஸ் எவர்டீன் உடனும் வசித்து வருகிறாள். அவள் வசிக்கும் இடம் காட்டுக்கு அருகாமையில் இருக்கிறது. மரம் ஏறுவதும், வில்லை வைத்து மிருகங்களை வேட்டை ஆடுவதும் அவள் பொழுதுபோக்கு.


விளையாடப் போகும் இருவரை தேர்வு செய்ய கேட்னிஸ் இருக்கும் நகரத்திற்கு வருகிறார்கள் காவலர்கள். கேட்னிஸ் ஸின் தங்கை இந்த வருடம் தான் 12 வயதிற்குள் அடி எடுத்து வைப்பதால் இந்த வருட லிஸ்ட்டில் அவள் பெயரும் இருக்கிறது. லாட்டரியில் ரெண்டு பெயர் வாசிக்கப் படும் திக் திக் நிமிடங்கள். கேட்னிஸ் வேண்டிக் கொண்டது பலிக்கவில்லை. அவள் தங்கை பெயர் முதல் பெயராக படிக்கப் படுகிறது.பூஞ்சையான தன் தங்கையைக் காப்பாற்ற தானே போக முன் வருகிறாள்.தேர்தெடுக்கப் பட்ட இன்னொரு நபர் இவளுக்கு சுத்தமாக பிடிக்காத பீட்டா மெல்லார்க். இவன் தன அம்மாவின் மீதுள்ள கோபத்தில் அவள் தந்த ரொட்டியை வீச அது கேட்னிஸ் முன்னால் விழ, அவள் அதை தான் பசியாயிருப்பதை கேலி செய்யும் விதமாக நாய்க்கு போடுவது போல் போடுகிறான் என்று நினைத்து வெறுக்க ஆரம்பிக்கிறாள்.


ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் ஒரு மென்ட்டர் கொடுத்திருப்பார்கள். அவர்தான்  தேர்ந்தெடுக்கப் பட்ட வீரர்களுக்கு பயிற்சி மற்றும் டிப்ஸ் தருபவர்கள்இவர்களுக்கு கிடைத்தவர் முன்னைய விளையாட்டு சாம்பியன். ஆனால் மனித உயிரோடு விளையாடும் இந்த விளையாட்டின் கொடூரத்தால் குடிக்கு அடிமை ஆகி இருப்பவர். இவர்கள் இருவரும் ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்று முதல் சந்திப்பிலேயே முகத்தில் அடிதார்ப் போல் சொல்லுவார். தான் அவர்களுக்கு மென்டர் ஆக இருப்பது அதற்க்கு கிடைக்கும் சம்பளதிற்காக தான், அவர்களை ஜெயிக்க வைக்க இல்லை ன்பார்.
 கேப்பிடல் போனவுடன் கோலாகலமான விழாவுடன் பரேட் ஆரம்பிக்கும். ஒவ்வொரு ஸ்டேட் டில் இருந்தும் வந்த வீரர்கள் ந்த அணிவகுப்பில் கலந்து கொள்வார்கள்அதில் தீ வரும் உடை அணிந்து மக்களை கவர்கிறார்கள் கேட்னிசும் பீட்டாவும்.


ஸ்பான்சர்கள், வீரர்களுக்கு முக்கியமாக தேவை. ஸ்பான்சர்கள் தான் தாங்கள்  ஸ்பான்சர் பண்ண விரும்பும் வீரர்களுக்கு ஆயுதமும், உயிர் காக்கும் மருந்தும்  போட்டியின் போது  கொடுக்க முடியும்இந்த ஸ்பொன்சர் களை  கவர்வதற்காக அவரவர் தனி திறமையை காட்ட வேண்டும். அதில் கேட்னிஸ் விட்ட முதல் அம்பு குறி தவற, ஸ்பொன்சர்கள் அவள் மீது நம்பிக்கை இழந்து அவளை சட்டை  செய்யாமல் பேச  ஆரம்பிக்க சிறிது நேரம் பொறுமையாக இருந்துவிட்டு, தூரத்தில் ஸ்பொன்சர்கள்  அமர்ந்திருக்கும் இடத்தில் வைக்கப் பட்ட பன்றியின் வாயில் இருக்கும் ஆப்பிளை அம்பினால் குறி தவறாமல் அடித்து விட்டு "Thank You for your consideration" என்று சொல்லி விட்டு கம்பீரமாக  நடக்கும் அழகே தனிஅதனால் கவரப்  பட்ட ஸ்பொன்சர் கள் இந்த ஜோடிக்கு உதவ முன் வருகிறார்கள்.  
டிவி பேட்டின் போது பீட்டா கேட்னிசை தான் காதலிக்கிறேன் என்று சொல்ல, கேட்னிஸ் கோபமாகிறாள். அவன் அவளை கேவலப் படுத்த அன்று ரொட்டியை தூக்கி எரியவில்லை என்று சொல்ல அமைதியாகிறாள். இருவருக்கும் இடையே நட்பு உருவாகிறது. காதல் ஜோடிகள் என்று சொல்லி ஸ்பான்சர்களிடத்தில் ஒரு ஹைப் உண்டாக்க முடியும் 
என்று கோச் சொல்லுகிறார். 
குறிப்பிட்ட நாளில் அந்த அதி பயங்கர விளையாட்டு ஆரம்பிக்கிறது. அந்த போட்டியில் கேட்னிஸ் வெற்றி பெற்றாளா? அப்படி வெற்றி பெற்றால் பீட்டா உட்பட மற்றவர்களை கொன்றால்தான் முடியும். ஒரு மிடில் கிளாஸ் மென்ட்டாலிட்டி உள்ள  ஒரு பெண்ணால்  மற்றவர்களை கொல்ல முடிகிறதா ? பீட்டாவுடன் ஏற்ப்பட்ட நட்பு என்ன ஆனது ? என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அந்த போட்டியில் இருக்கும் ஒரு சின்னப் பெண். இந்த பெண்ணை தான் சகோதரியாகவே பாவிப்பாள் கேட்னிஸ் .
======================================================================================

Game Of Death என்ற இந்த கான்செப்டில் ஏகப் பட்ட படங்கள் வந்துள்ளன. ஆனால் ஒரு கதாநாயகியை முன்னிறுத்தி வந்ததற்காக இந்த படத்தை பாராட்டலாம். மற்ற படங்களில் வீரர்கள் சிறு வயதில் இருந்து தற்காப்பு கலை படித்து வருபவர்களாகவும், போட்டியின் போது  கொலைக்கு அஞ்சாதவர்களாகவும் இருப்பார்கள்.  வீரர்கள் போடும் சண்டைதான் படத்தில் பிரதானமாக இருக்கும். மற்ற காட்சிகளை சும்மா உப்புக்கு சப்பாணியாக எடுத்து வைத்திருப்பார்கள். சண்டையை நீக்கி விட்டு பார்த்தால் படமே இருக்காது. இது அந்த மாதிரி படம் இல்லை என்பதாலேயே எனக்கு பிடித்தது.


இந்த படத்தின் ட்ரைலர் 


======================================================================================


மற்ற படங்களில் இருந்து இந்த படம் வேறுபடும் இடங்கள் 

1) சண்டைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தது.


2) இப்படி வலுக் கட்டாயமாக போட்டியில் ஈடுபடுத்தப்படும் போது அவர்களது உணர்வுகளை பதிவு செய்தது.

3) ஒரு வேளை உணவே கேள்விக் குறியாக இருக்கும் குப்பத்தில் இருந்த பதின்ம வயதுப் பெண்ணை திடீரென்று ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு கூட்டிக் கொண்டு போனால் என்ன மிரட்சியை அந்த பெண் காட்டுமோ அதை அழகாக பதிவு செய்தது.

4) போட்டியென்று வந்து விட்டாலும் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கொல்லாமல், தன்னை தாக்குபவர்களுக்கு மட்டும் தக்க பதிலடி கொடுக்கும் ஒரு மிடில் கிளாஸ் மென்டாலிட்டியை பதிவு செய்தது.

5) எந்த ஒரு இடத்திலும் கதாநாயகியை சூப்பர் கேர்ள் ஆகவோ, அழிக்கவே முடியாத சக்தியாகவோ காண்பிக்காமல் படம் முழுவதும் சாதரணமாக காண்பித்தது. 

6) கடைசியில் தன் நண்பனைக் கொன்றால்தான் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில் கேட்னிஸ் எடுக்கும் முடிவு என்ன? என்று நிறைய உண்டு.

பிடிக்காத இடங்கள் என்று பார்த்தால் 

1) அந்த போட்டி நடக்கும் காடு போன்ற இடம், போட்டி நடத்துபவர்கள் உருவாகிய செயற்கை இடம் என்கிறார்கள். ஆனால் அங்கே குருவி, குழவி எல்லாம் இருக்கிறது.


2) சரி உண்மையான இடந்தான் போல இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே கம்ப்யூட்டரில் தட்டி நாலு ஓநாயை கதாநாயகி முன்னால் வரவைக்கிறார்கள். அந்த இடம் இயற்கையா செயற்கையா என்பதில் குழப்பமோ குழப்பம்.  


கிளைமாக்ஸ்

Game Of Death வகைப் படமானாலும் டெம்ப்ளட்டாக இல்லாமல் வித்தியாசம் காட்ட முயற்சித்திருப்பது, பெண்ணை முன்னிறுத்தி எடுத்திருந்தாலும் விறுவிறுப்பில்  குறைவில்லாதது  என்ற வகையில் எனக்கு பிடித்திருக்கிறது ஒரு தடவை பார்க்க கூடிய டைம் பாஸ் படம்.


Post Comment

7 comments :

 1. Its A nice movie thats the first movie i saw in Dolpy Atmos in Satyam Cinemas.

  It was a Nice Experiance.As you rightly said It gives importance to the Story instead of Graphics.

  The Actions Sequence also done neatly.

  The 2nd Part is Coming Soon and the trailer looks promising.

  I could not able to type in tamil using google, I donot know why thats why this english comments.

  ReplyDelete
 2. நானும் ஆர்வமில்லாமல் பார்க்க ஆரம்பித்து சிறிது நேரத்தில் மிக ஆர்வமாய் பார்க்க தொடங்கிய படம்.
  எனக்கும் google input tools வேலை செய்ய வில்லை. Quillpad என்ற தளத்தில் இருந்து எழுதுகிறேன்.

  ReplyDelete
 3. நானும் மற்ற இதே போல் கதையுள்ள மற்ற படம் போல தான இருக்கும் என பாக்க ஆரம்பித்து பிடித்த படம். முக்கியமாக கதாநாயகி தான் மற்ற படங்களில் இருந்து வேறு படுத்தி காட்டியது.

  ReplyDelete
  Replies
  1. உண்மை இதுபோல் இன்னுமொரு கதை. பெண்ணால் எழுதப் பட்டு பெண்ணை கதாநாயகி ஆக்கி வெற்றி பெற்ற கதை ஹாலிவூடில் சீக்கிரம் வர இருக்கிறது

   Delete
 4. இரண்டாம் பாகம் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.

  underworld series பாருங்கள் நன்றாக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. நானும் ரெண்டாம் பாகத்தை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு என்னமோ underworld அவ்வளவாக பிடிக்கவில்லை.

   Delete