Sunday, August 25, 2013

கிரீன் மனோர் - The Green Manor

என் மன வானில்

நண்பர்களே !. மன்னியுங்கள் பணிச்சுமை காரணமாக சில காலம் உங்களை சந்திக்க முடிய வில்லை. எடிட்டருடைய வலைப்பூவிலும் அதனால் தான் கமென்ட் போட முடியவில்லை. சரி கடந்த மாதம் வந்த ரெண்டு புத்தகங்களுமே எனக்கு பிடித்திருந்தன. ஒவ்வொன்றும் ஒரு வகை என்றாலும்.ரெண்டுமே ஹிட்அடித்து இருப்பது மகிழ்ச்சியே.

கிரீன் மனோர்

ஆல்நியூ ஸ்பெஷல்லில் அறிமுகமான போது சற்று திடுக்கிட்டு போகும் அளவுக்கு ஆதி கால தமிழில் புழிந்து எடுத்திருந்ததால் எனக்கு ஈடுபாடு இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த இதழில் அது நிவர்த்தி செய்யப் பட்டு இருத்தால் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் ஒன்றுக்கு மூன்று முறை படிக்க வேண்டும் ஒவ்வொரு முறையும் போன தடவை கவனிக்க தவற விட்டதை இப்போது கண்டு பிடிக்கும் அனுபவம்.எனக்கு ஏற்பட்டது. உங்களுக்கு எப்படி.

மன்மத லீலை என்று பாலச்சந்தர் இயக்க கமல் நடித்த படம். அதில் கமல் ஒரு ப்ளேபாய். அவர் செய்யும் கில்மாக்களை எல்லாம் அவர் கம்பெனியில்வேலை பார்க்கும் ஒருவரிடம் சொல்லி பாவ மன்னிப்பு கேட்ப்பார். அந்த நல்ல நபரோ நாளாக நாளாக கமல் சொல்லும் கதைகளை கேட்டுக் கேட்டு தாடியும் மீசையும் வைத்துக் ஒரு கிறுக்கனை போல ஆகி விடுவார். இந்த பட்லர் பிலோ வின் நிலைமையை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது அந்தக் காட்சிதான்

அட்டைப் படம்

 இந்த இதழ் அட்டைப் படம் சூப்பர். ஆல் நியூ ஸ்பெஷல் அட்டைப் படம் நன்றாக இருந்தாலும் அந்த டார்க் பீலிங்கை கொண்டு வரவில்லையோ என்று சிறு உறுத்தல் இருந்தது. இந்த இதழ் அந்த உறுத்தலை போக்கி விட்டது என்றே சொல்லலாம். இந்த கதைகளின் மூடுக்கு ஏற்ப அமைந்து இருந்தது. சிவப்பு கலர் எம்போசிங் அதி சிறப்பு.

என்னுடைய பார்வையில் கிரீன் மனோரில் வந்த சிறு கதைகளில் நிரம்ப பிடித்த கதைகள்

1) ஒரே ஒரு எதிரி
2) சூது கொல்லும்
3) சிங்கங்கள் சாவதில்லை.
4) ஒரு பின் குறிப்பு
5) சிறு கொலையும் கைப் பழக்கம்
6) கொலை செய்வீர் கனவான்களே
7) போதையில் வந்த போதனை

1) ஒரே ஒரு எதிரி

  தலைக்கு கீழே எதுவும் இயங்காத ஒரு மனிதன், தன்னை அந்த நிலைமைக்கு ஆளாக்கியவன் யாரென்றே   தெரியாத நிலையிலும் அவனை கொல்வதற்காக திட்டம் போட்டு நிறைவேற்றும் இந்தக் கதை எனக்கு மிக பிடித்தது.


2) சூது கொல்லும்

 பணத்தினால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கும் ஒரு கனவான் ஒரு நேர்மையான ஏழை பட்லரை தவறு செய்ய தூண்டும் கதை.

பட்லர் தவறு செய்து விட்டான் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது அதை சாமர்த்தியமாக அந்த கனவானுக்கு எதிராக திருப்பி விடும்  தந்திரம்தான் இதில் ட்விஸ்ட். தானே தன்னை கொலை செய்ய பணம் கொடுக்க வைக்கும் போது கத்தியை எடுத்தவனுக்கு கத்தியாலேயே சாவு என்ற பழமொழி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.


3) சிங்கங்கள் சாவதில்லை.

ஆதிக்க வெறி  ஒரு அளவுக்கு மேலே போகும் போது அது தன்னை மட்டுமல்லாது தன்னை சார்ந்து இருப்பவர்களையும் அழித்துவிடும் என்பது ஹிட்லரின் செய்தி. இந்த கதையிலும் தன் குடும்பத்தை தான் இறந்த பிறகும் ஆள நினைக்கும் ஒரு ஆதிக்க வெறி கொண்ட கனவானின் (தகப்பன் என்று சொல்ல மனம் வரவில்லை) கதை.

உயிலில் எழுதியபடி பணம் பெறுவதற்காக தங்கள் கனவுகளை மறந்து அப்பாவின் வீட்டிலேயே இருக்க ஆரம்பித்து ,செத்துப் போன  அப்பா தங்களுடன் இருக்கிறார் என்று நம்பும் அளவுக்கு வந்து விடுகிறார்கள். அதில் தப்பி பிழைத்த தம்பி கடைசியில் உயில்வைத்திருக்கும் வக்கீலிடம் போய் எங்கள் அப்பா எங்களை கட்டுக்குள் வைத்திருக்கவே அப்படி உயில் எழுதினாரா ? என்று கேட்கும் போது அந்த வக்கீலின் உடல் மொழியை கவனியுங்கள். அவர் வாயைத் திறந்து சொல்லா விட்டாலும் தன் உடல் மொழியால் சொல்லி விட்டதை கவனித்தீர்களா?


சட்டைப் பாக்கெட்டில் இருக்கும் இடக்கை உயில் மீது இருக்கும் வலக்கையை காட்டுகிறது. உயிலின் மீதி இருக்கும் வலக்கை ஆதிக்கத்தை குறிக்கும் படி மூடி வைத்திருக்கிறது. இதிலிருந்தே நாம் அந்த உயில் எதற்காக எழுதப் பட்டிருக்கிறது என்பது இந்த ஒரு பேனலில் இருந்தே காண்பிக்கப் படுகிறது.

4) ஒரு பின் குறிப்பு

இது ஆல் நியூ ஸ்பெஷலில் வந்த கதை. தன்னை வெறுக்கும் ஒரு பெண்ணை, ஒரு இன்ஸ்பெக்டரின் ஈகோவை தூண்டி விட்டு அந்த பெண்ணின் கணவன் மூலமே அந்த பெண்ணைக் கொல்ல வைக்கும் கனவானுக்கு அந்த இன்ஸ்பெக்டர் விட்டுச் சென்ற பின் குறிப்பு எனக்கு மிக பிடித்திருக்கிறது. உங்களுக்கு?


5) சிறு கொலையும் கைப் பழக்கம்

இந்தக் கதையை இப்போதைய சமூகத்தின் அவனே தப்பு செய்றான் நம்ம செஞ்சா என்ன என்ற மனப்பான்மையை வைத்து பின்னி இருப்பதைக் காணலாம். முதலில் நடந்த ஒரு கொலையில் இருந்த ஒரு அடையாளத்தை வைத்து ஆளாளுக்கு கொலை செய்து கொண்டிருக்க, அந்த உண்மை தெரிந்த இன்ஸ்பெக்டர் அதை எப்படி தடுப்பது என்று தெரியாமல் கொலைகாரனுக்கு ஒரு முகம் கொடுத்தால்தான் இந்த தொடர் கொலைகள் அடங்கும் என்ற நிலையில், தானே அந்த கொலைகாரன் என்று மற்றவர்களை நம்ப வைப்பதன் மூலம் அந்த தொடர் கொலைகளையும், நடக்க இருந்த ஒரு கொலையையும் தடுக்கிறார். கடைசி பேனலில் கிழித்துப் போடப் பட்ட பேப்பர் என்ன சொல்கிறது என்று தெரிகிறதா?


6) அவலத்தில் குதூகலம்

  மற்றவர்களின் அவலத்தை தங்களின் குதூகலமாக எடுத்துக் கொள்ளும் கனவான்களுக்கு நல் நேர நஞ்சு நல்ல மருந்துதான். அவர் சொன்னது பொய்யோ உண்மையோ அந்த கனவான்கள் இனிமேல் சாவு பற்றிய பயத்திலேயே சீக்கிரம் செத்துப் போவது உறுதி. திரும்ப அந்த கிரீன் மனோருக்கு அவர்கள் வந்திருப்பார்கள் என்று நினைகிறீர்கள்?7) போதையில் வந்த போதனை

தான் செய்த கொலையை தானே துப்பு துலக்கி தானே மாட்டிக் கொண்ட புத்திசாலியின் கதை. ஒவ்வொரு முறையும் பிணம் இருக்கும் சூழலும் அதற்க்கு கிடைக்கும் விளக்கங்களும் சுவாரஸ்யமானவை.

க்ளைமாக்ஸ்

ஒரு முறைக்கு மும்முறை படிக்க வேண்டிய இதழ். இது போன்ற புதிய முயற்சிகள் தொடர வேண்டும்.

Post Comment

10 comments :

 1. நாங்களும் பஸ்ட் வருவோம்.

  ReplyDelete
 2. அருமையான விமர்சனம்.
  நான் ஒரு ஆர்வகோளாரில் முன்பே ஆங்கிலத்தில் படித்துவிட்டதால் இதுவே எனக்கு இரண்டாவது முறை தான்.

  அனைத்து கதைகளின் கருவும் அருமையாக இருக்கும்.
  எனக்கு முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம்தான் பிடித்திருந்தது மொழிபெயர்ப்பு மட்டும் அல்ல கதையின் தரத்திலும் மேம்படுத்தி இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நானும் ஆங்கிலத்தில் படிக்கணும்னு டவுன் லோடி வைத்தேன். ஆனால் படிக்கவில்லை. எனக்கும் ரெண்டாவது பாகத்தில் வந்த நிறைய கடைகள் பிடித்திருந்தன.

   Delete
 3. // கடைசி பேனலில் கிழித்துப் போடப் பட்ட பேப்பர் என்ன சொல்கிறது என்று தெரிகிறதா?// தம் அடித்துக் கொண்டிருக்கும் அந்த மேடம்?

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள்.தம் அடித்துக் கொண்டிருக்கும் அந்த மேடத்தை போட்டு தள்ளத் தான் ப்ளான் பண்ணிக் கொண்டிருப்பார்.

   Delete
 4. சான்ஸே இல்லை ராஜ் குமார்!!
  அந்த 'இடக்கை, வலக்கை' பற்றிய உடல்மொழி நான் கதையை படித்தபோது மேலோட்டமாகப் படித்துச் சென்றதால் அப்போது புரியவில்லை (கொஞ்சம் அவசரமாகப் படித்ததும் காரணமாக இருக்கலாம்). இப்போது உங்களின் ஷெர்லக்ஹோம்ஸ் பார்வையில் நிறையவே ஆச்சர்யப்படுத்துகிறது!!

  ஒரு புத்தகத்தை எப்படி நிதானமாக மேய்வதென்று உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்!

  முயற்சிக்கிறேன்!! :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி விஜய். ரெண்டாவது தடவை படிக்கும்போது கண்ணில் பட்டது அது.

   Delete
 5. Excellent review .I liked stories more in second book than in ANS

  ReplyDelete
  Replies
  1. நன்றி அருண் ஜி , எனக்கும் ரெண்டாம் பாகம் பிடித்திருந்தது.

   Delete