Monday, July 22, 2013

All New - Almost New Special - அலசல் (லயன் காமிக்ஸின் 29வது ஆண்டு மலர்)

என்  மன வானில்

இந்த புத்தகம் வந்த நாள் எனக்கு ஒரு முக்கியமான நாள். அன்றிலிருந்து சில நாட்களுக்கு லீவ் எடுத்திருந்தேன். அன்றைக்கு படிக்க முடியாவிட்டால் ஒரு பத்து நாட்களுக்கு படிக்க முடியாது. அதனால் குரியர் பையனிடம் அலுவலக வாசலில் இருக்கும் ரூமில் போய்  வாங்கி வந்த கையோடு  அலுவலக நூலகத்தில் போய் படிக்க ஆரம்பித்த விட்டேன். படித்து முடித்தவுடன் (ஹி ஹி கோமாஞ்சே தவிர ஆல் கம்ப்ளீட் அப்பவே) நேரத்தை பார்க்க செல் போனை பார்த்தால் காணவில்லை.   நூலகத்திலும், குரியர் வாங்கிய ரூமில் உட்கார்ந்த சோபாவிலும் பார்த்தால் காணவில்லை. கடுப்பாகி கார்பரேட் செர்விசெஸ்க்கு மெயிலை தட்டி விட்டு விட்டு வந்து விட்டேன். வீட்டில் வேறு "காமிக்ஸ் வந்தாதான் கண்ணு மண்ணே தெரியாதே" என்று அர்ச்சனைகள்.  "காமிக்ஸ் படிக்கிறது ஒரு குத்தமாடா?" என்று மனத்தில் எழுந்த கேள்வியை பின் விளைவுகளை எண்ணி  அப்படியே அமுக்கிவிட்டு செகண்ட் ரிவிசன் விட்டு விட்டு படுத்து விட்டேன். (அர்ச்சனையை கேட்டாப்புல நாங்க அடங்கிருவோமா?). அடுத்த நாள் ஒரு நேர்மையான பெருக்கும் அம்மா செல் போனை எடுத்து கொடுத்திருப்பாதாக அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. நன்றி அம்மா. ( ஹி ஹி நம்ம ADMK லாம் இல்லீங்க.)

முதல் பார்வை 

ஹையோ சூப்பரா இருந்தது முன் அட்டை. ஒரிஜினல் ஓவியத்தை பின்வண்ணமான (ஹி ஹி நாங்களும் சேர்த்து எழுதுவோமில) ரத்த சிவப்பு நன்றாக எடுத்து காட்டியது. பின் அட்டை அவ்வளவாக எடுபட வில்லை. கிரீன் மனோருக்கு முன் அட்டையை ஒதுக்கி விட்டதால் பின் அட்டையில் அதற்க்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்திருந்தால் கொஞ்சம் இடம் மற்ற கதைகளுக்கு கிடைத்திருக்கும். இதழும் செம வெயிட்டா இருந்தது ஆகா நூறு ரூபாய்க்கு இவ்வளவு வெயிட்டா அப்படின்னு ஒரு நிமிஷம் ஏமாந்து போயிட்டேன் 

கதைகள் 

மாறுபட்ட நாலு சித்திரக் கதைகள் என்ற கேப்சனுக்கு ஏற்ற மாதிரி நாலும் நாலு மாதிரி. சாதா நகைச்சுவை  (ஸ்டீல் பாடி ஷெர்லாக்),  ஸ்பெல் சாதா நகைச்சுவை (கிரீன் மனோர்), கவ்பாய் கதை (கோமாஞ்சே) மற்றும் சோகம் (பிரளயத்தின் பிள்ளைகள்) என்று கலந்து கட்டி இருந்தது நன்றாகவே இருந்தது.

கிரீன் மனோர் 

கருப்பு நகைச்சுவைன்னா இன்னாப்பா ? டார்க் சாக்லேட் யாராவது சாப்பிட்டு இருக்கிறீர்களா? சாக்லேட் என்றால் இனிக்க வேண்டும் ஆனால் டார்க்  சாக்லேட் கசக்கும் .  கசப்பு சுவை மேலோங்கி இருக்கும். நகைச்சுவைன்னா சிரிப்பு வரணும் அது வராமல் மற்ற உணர்வுகள் மேலோங்கி நின்றால் அது கருப்பு நகைச்சுவை. அம்புட்டுதேன்.  தெரியாமல் டார்க் சாக்லேட் வாங்கி சாப்பிட்டுவிட்டு  அவஸ்தை படும்போது வந்த  சீரியஸான சிந்தனை துளிகள். ஹி ஹி 

இது தேவையா அட போங்கயா 

புத்தகத்தை வாங்கியவுடன் நண்பர் கார்த்திக் எப்படி மொழி பெயர்த்திருக்கிறார் என்று பார்க்கலாம் என்று எடிட்டர்  சொன்ன பக்கங்களுக்கு போனால் அந்த பக்கம் பாதி கதையில் இருக்கிறது. என்னடா மதுரைக்கு வந்த சோதனை என்றுநினைத்துக் கொண்டே, சரி முதலில் இருந்தே ஆரம்பித்து விடலாம் என்றால் ஒரு பக்கம் முடிக்கும் முன்னே "ஸ்ப்பா  முடியல என்று ஆகி விட்டது". ஒரு தடவை புத்தகத்தின் முன் அட்டைப் பார்த்து லயன் காமிக்ஸ தான் படிக்கிறோமா என்று உறுதி படுத்திக் கொண்டேன். கரடு முரடான தமிழில் புழிந்து எடுத்திருந்தார்கள். தமிழில் 70 வருடங்களுக்கு முன் உபயோகப் பட்ட சொற்கள் அதையும் சேர்த்து எழுதி இன்னமும் கடினமாக இருந்தது. 

 என்னை பொறுத்த வரை ஊடகம் மூலமாக ஒரு விஷயத்தை பொதுவில் வைக்கும் போது அது எல்லோராலும் புரிந்து கொள்ளப் பட வேண்டிய வகையில் இருக்க வேண்டும்.இல்லையென்றால் சிறு இலக்கியப் பத்திரிக்கைகள் போல ஒரு சிறு வட்டத்துக்குள் அடங்கிவிடும் உதரணத்துக்கு வீர பாண்டிய கட்ட பொம்மன் திரைப் படத்தை எடுக்கும் போது அவர் திருநெல்வேலியில் வாழ்ந்தவர் என்பதால் அந்தக் கால தமிழில்/நடையில் தான் வசனம் இருக்க வேண்டும் என நினைத்து "ஏலே ஜாக்சன் துர , இங்கிட்டு வாலே ..." ன்னு வசனம் எழுதி இருந்தாங்கன்னா திருநெல்வேலியில் மட்டும் அந்த படம் ஓடிக் கொண்டிருக்கும். காலாகாலதிற்கும் நிற்கும் ஒரு எபிக் ஆக மாறி இருக்காது. விக்டோரியா காலத்து கதைக்கு இப்படிப் பட்ட நடை நன்றாக இருக்கும் என்று நினைத்து தோல்வி அடைந்த முயற்சி என்றே இதைக் கருதுகிறேன். ANS சே ஒரு பரீட்சார்த்த முயற்சிதான் எனும்போது இதையும் அப்படியே எடுத்துக் கொள்வோம். 

_________________________________________________________________
கார்த்திக் சோம லிங்காவின் மொழிபெயர்ப்பு கிரீன் மனோரில் ஒரு ஆறுதல். தேவை இல்லாத வீண் ஜோடனைகள், விளங்காத வார்த்தைகள் என்று இல்லாமல் மிக கச்சிதமாக இருந்தது எனலாம். இந்த மொழி பெயர்ப்பில் மட்டுமில்லாமல், இந்தியா டுடே யிலும் காமிக்ஸ் பற்றிய அவருடைய ஆர்டிகிள் ஒன்று வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் கார்த்திக். கலக்குங்க.   
_________________________________________________________________

தோட்டா தேசம் (Comanche )

கேப்டன் டைகருக்கு மாற்று என்ற வாதங்கள் வந்த உடனே இதை ஆங்கிலத்தில் படித்து விட்டேன். டைகர் ரேஞ்சுக்கு டெக்ஸ்ஸே வர முடியலேங்கும் போது ரெட் டஸ்ட் வர முடியுமா என்ன. :-)

ரெட் டஸ்ட் டைகர் மாதிரியே அண்டர் ப்ளே பண்ணுகிறார் சுடுவதில் கில்லியாக இருக்கிறார். ஜிம்மி மாதிரியே ஒரு வழுக்கை மண்டை கிழவன் டெபுடி. கோமாஞ்சே என்னும் இளம் பெண்ணின் பண்ணையை சிலர் அபகரிக்க முயற்சிப்பதை தடுப்பதற்காக அவள் பண்ணையில் சேருகிறார். ஓவியங்கள் அருமை. அரைப் பக்க ஓவியங்கள் அனைத்தும் அருமை. ஆனால்  முகங்கள் சரியான அளவுகளில் வரையப் பட்டிருக்கிறதா என்று சந்தேகமாக இருக்கிறது. உதாரணத்திற்க்கு கென்டக்கியின் தலை. கதையையும் கதையின் நாயகனையும் எனக்கு பிடித்திருக்கிறது. ஒரு வேளை டைகர் எபக்டோ?

பிரளயத்தின் பிள்ளைகள் (Batchalo) 

இந்த புத்தகத்துக்காக ஓவியர் பெடெண்ட் நாலு ஆண்டுகளை இந்த புத்தகத்துக்காக செலவிட்டிருக்கிறார். வெறும் Sepia மற்றும் கருப்பு வண்ணங்களை மட்டுமே வைத்து ஒரு முழு புத்தகத்தையும் வரைவது சாதனைதான்.  முதல் ஓவியமே சொல்லிவிடும் இந்த கதையின் ஜீவனை. பின்னணியில் ஒரு வெடி குண்டு வெடித்த ஒளியினூடே வரிசையாக செல்லும் நாடோடி கூட்ட வண்டிகள். இந்த ஓவியத்தை பார்க்கும்போது இந்த உலக பந்த பாசங்களை துச்சமாக மதித்து அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் நடக்கும் ஞானியை போல இருந்தார்கள் இந்த நாடோடிகள்.

ஓவிய ரசிகன் என்று முறையில் இது ஒரு விசுவல் ட்ரீட்  என்றே சொல்ல வேண்டும். லைட்டிங், வண்ணங்கள், முகத்தில் காட்டப் படும் உணர்சிகள் என்று செதுக்கி இருக்கிறார் மனுஷன். சில இடங்களில் ஓவியம் உயிர் பெற்று 3D யில் வரும் அற்புதமும் நடந்திருக்கிறது.  கதை ஒரு டாகுமெண்டரியைப் போல இருந்தாலும் உலக யுத்தம், வலுத்தவர்களின் ஆணவம், இளைத்தவர்களின் கதறல், நாடோடிகள், அவர்களது சுதந்திரம், என்று பல விஷயங்களை இந்த கதை சொல்கிறது. டமால் டுமீல் அதிரடி ஆக்சன் ரசிகர்களுக்கு இந்த கதை எவ்வளவு தூரம் பிடிக்கும் என்று தெரியவில்லை. எனக்கு? சொல்லவும் வேண்டுமோ? ரொம்ப பிடித்திருக்கிறது.   

ஸ்டீல் பாடி ஷெர்லாக் 

சிரிப்பு போலிஸ். முந்தைய கதைகளுக்கு இது பரவாயில்லை . இட நிரப்பியாக மட்டும் உபயோகப் பட்டிருக்கிறது.


_________________________________________________________________
 
இந்த இதழின் அட்டைக்காக உருவாக்கப் பட்ட அட்டை டிசைன்கள்

நண்பர் ஷண்முக சுந்தரம் கொடுத்தது.
 

பொன்னனுடைய மற்ற டிசைன்கள்.
எனக்கு மிகப் பிடித்த டிசைன்_________________________________________________________________
 
ஓவியப் பார்வை

1) குறும்புதர்கள் மண்டிய இடத்தில பாய்ந்து வரும் கோச்சு வண்டி 


2) துள்ளும் குதிரை. 666 என்ற என்னில் ஒரு 6 ஒன்பதாகி இருப்பதை பாருங்கள் அதுவே பண்ணையின் நிலைமையை சொல்லுகிறது. 


 3) வேகமாக வரும் கோச் வண்டி. டென் தன் துப்பாக்கி சுடும் திறமை போய்விடவில்லை என்று நினைத்துக் கொண்டு கையில் எப்போதும் துப்பாக்கியை தூக்கி கொண்டு திரிகிறார்.


 4) வீட்டிற்கு முன் உள்ள ஒரு மரம். இது Lord Of The Rings - The Return of the King படத்தில் வரும் கோட்டைக்கு முன் உள்ள ஒரு மரம் போல தெரிகிறது.


 5) பறவைப் பார்வையில் ஒரு மாட்டு மந்தை 


6) டேஞ்சர் டயபாலிக் புத்தகத்தில் உள்ளது போன்ற ஒரு ஓவிய பாணி 


7) பண்ணை வீடு 


பிரளயத்தின் பிள்ளைகள் (Batchalo) 

1) கதாநாயகன் முகத்தில் தோன்றும் உணர்ச்சிக் குவியலைப் பாருங்கள் 


2) முழு நிலவினூடே நகர்ந்து செல்லும் ஒரு கூட்டு வண்டி. இதன் மேகங்களுடனே உங்கள் பார்வையை சற்று நேரம் வைத்திருந்தால் 3D ஓவியமாக மாறுவதைப் பாருங்கள்.


3) சிறு குழந்தையின் கை விரல்களை பாருங்கள். ஒரு வயது வரும்வரை நம்மை மாதிரி ஒழுங்காக நீட்ட தெரியாது. அதை கவனமாக பார்த்து வரைந்திருக்கிறார்.

 

4) வயலினை வாசிக்கும் கதாநாயகன். கதாநாயகியின் கண்களை கவனியுங்கள். ஆயிரம் கதைகள் சொல்லும்.5) கதாநாயகி வயலினை தன் நெஞ்சோடு அனைதிருப்பதைப் பாருங்கள். அது அவளுக்கு எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். அதை கதாநாயகனுக்கு கொடுப்பதன் மூலம் தன காதலை வெளிப் படுத்துகிறாள்.

கீழே உள்ள படத்தில் அவள் கண்ணை பாருங்கள். அதுவே அவள் காதலை எடுத்து சொல்லும்.

6) நாஜிக்கள் என்றவுடன் அவர்கள் முகத்தில் தோன்றும் மரண பீதியைப் பாருங்கள்.

7) கடைசிப் படத்தில் உள்ள கதாநாயகியின் முகத்தில் தெரியும் உறுதியைப் பாருங்கள்.


8) அடையாள அட்டையைக் காணாமல் தவிக்கும் கதாநாயகன், அவன் அட்டையை மறைத்ததை எண்ணி பீதிக் குள்ளாகும் கதாநாயகி.


9) வார்த்தைகள் இல்லாமல் வெறும் உடல் மொழியை மட்டும் வைத்து அவர்களுக்கும் ஏற்ப்படும் நெருக்கத்தை சொல்லி இருக்கிறார் ஓவியர்.

 

10) தன் மகனை உயிரோடு கண்ட ஆனந்தத்தில் உருகும் தந்தை.


11) தன் மகனை கண்டுபிடித்து விட்டதால் தன் நிலை என்னாகுமோ என்ற கவலையுடன் கதாநாயகி. அதை உணர்ந்து அவளை நோக்கி கையை நீட்டும் கதா நாயகன், கவலை மறைந்து மகிழ்ச்சியுடன் அவன் கையில் அடைக்கலமாகும் கதாநாயகி.


12) தீர்மானமான் முகத்துடன் சிலான்கா

13) கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை.
 

14) வெடித்து சிதறும் கட்டிடம்.15) பின்னணியில் உள்ள நகரத்தின் டீட்டெய்லை பாருங்கள்.


முரண் 

1) பக்கம் 122 "குழந்தைகள் அகப்பட்டார்களா? என்றிருக்க வேண்டியது "கப்பட்டார்களா ?" என்று இருக்கிறது.

க்ளைமாக்ஸ் 

All New Special (ANS) கிரீன் மனோர் மொழி நடையை தவிர கலக்கலான முயற்சி.

Post Comment

19 comments :

 1. நான்தான் பர்ஸ்ட்டு! (அப்பாடா அந்த ஆளுக்கு முன்ன கமண்ட் போட்டசுப்பா) :-)

  ReplyDelete
  Replies
  1. ஆஹா முந்திடீங்களே காமிக் கேயன்

   Delete
 2. //டைகர் ரேஞ்சுக்கு டெக்ஸ்ஸே வர முடியலேங்கும் போது ரெட் டஸ்ட் வர முடியுமா என்ன. :-)//

  That's All Dear Friend :)

  ReplyDelete
  Replies
  1. உண்மைய சொன்னேன் :)

   Delete
 3. //டைகர் ரேஞ்சுக்கு டெக்ஸ்ஸே வர முடியலேங்கும் போது ரெட் டஸ்ட் வர முடியுமா என்ன. :-)//


  இந்த ஒரு கருதிர்க்காகவே இந்த பதிவில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்.
  டெக்ஸ் ரசிகர்கள்(வெறியர்கள்) அனைவரும் இதனை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. என் தளத்தை தானே பின்பற்ற சொல்லுறீங்க கிருஷ்ணா ? ;-)

   Delete
  2. +1

   இந்தப்பதிவு நன்றாக இருந்தபோதிலும், -5 marks

   என்னா தைரியம்? டெக்ஸ்வில்லரோடு டைகரை (ப்ளுபெர்ரியை) ஒப்பிட்டது

   Delete
 4. TEX SUPER STAR THALAIVARE! NAAN UNGA KARUTHTHAI VANMAIYAAGA AAMOTHIKKIREN CHE CHE CHE ETHIRKIREN! PHOTOVAI ELLAM POTTU THOOL PANNITINGAL! PATHIVUKKU NANRI! AANA TEXAI VAMBUKKU IZHUKKAATHINGA! AVAR PAATHAI VERA ENGA THALAI TIGER RR RRRR RRRRR PATHAI VERA RED DUST PUTHITHAAI POOTTHTHA SIRU MALAR! COMPARE PANNINAA VIDAMAATTOMLA!!!!

  ReplyDelete
  Replies
  1. ஓகே ஜி. ஆனா கம்பேர் பண்ணி ஆரம்பிச்சது எடிட்டர் ஜி

   Delete
 5. வழக்கம் போல ஓவியப் பார்வையில் உங்கள் ரசனையை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்! பி.பி.க்கு நிஜமான ஓவியப் பார்வை போட வேண்டுமானால் முழுக்கதையையும் வெளியிட வேண்டி இருக்கும்!!! :) ஒவ்வொரு பேனலுமே அழகுதான்!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் மிக அற்புதமான ஓவியங்கள். சிலருக்கு பிடிக்காமல் போனது வருத்தம்தான்.

   Delete
 6. ஊப்ஸ்!! என்ன ஒரு அழகான ஓவியப்பார்வை!! படிக்கும்போதே ரசித்த ஓவியங்களை உங்களோடு சேர்ந்து மீண்டும் ரசிக்கும்போது இன்னும் மிளிர்கிறது; இந்த சுகமே அலாதிதான்! கமான்சே கதையில் அந்தப் பெரிசு கையில் துப்பாக்கி வைத்திருக்கும் காரணத்தைக்கூட எவ்வளவு நுட்பமாக ரசித்திருக்கிறீர்கள்!!

  ஓவியப் பார்வையோடு 'க்ரீன் மேனர்' மொழிபெயர்புக்கு ஒரு கோபப்பார்வையும் பார்த்திருக்கிறீர்களே!! ஆனால், சிலர் கோபப் பார்வை பார்த்தால்கூட அதுவும் காமெடியாகவே தெரிவதுதான் ஏனென்று புரியவில்லை! ;)

  ReplyDelete
  Replies
  1. நன்றி விஜய்.

   //சிலர் கோபப் பார்வை பார்த்தால்கூட அதுவும் காமெடியாகவே தெரிவதுதான் ஏனென்று புரியவில்லை! ;)//
   ஹலோ. நான் கொஞ்சம் கோபபட தரை பண்ணா அதையும் விட மாடீங்களே

   Delete
 7. ஜில் ஜில் கல்யாணம் பாதியிலே நிக்குதே? கல்யாணமானவங்களுக்கு குழந்தை பிறக்கறதுக்குள்ள மீதக் கதையை முடிச்சுடுவீங்களா? ;)

  ReplyDelete
  Replies
  1. முக்கால்வாசி முடிந்தது. இந்த வாரமே வரும். :D

   Delete
 8. Alagana oviya rasanai nanbaray...

  #Tiger rangeku tex a varamudiyatha pothu#
  unmai thaan nanbaray.,tiger rangukallam enga tex vara maatar.. :-)

  ReplyDelete
 9. @ Paranithan K

  நன்றி பரணிதரன். யாரிடம் சொல்லி உங்களை இந்த போஸ்ட்டை படிக்க சொல்வது என நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த போஸ்ட்டை நீங்கள் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆசிரியருக்கு லெட்டர் எழுதியது நீங்கள் தானே. இந்த போஸ்ட் உங்களை பிரளயத்தின் பிள்ளைகள் கதையை மீண்டும் ஒரு முறை படிக்க வைத்தாலே நான் மிக மகிழ்வேன். கிரீன் மனோரை பொருத்தவரை அடுத்த கதையோடு முடியப் போகிறது என்பது உங்களுக்கு ஒரு ஆறுதல்.

  ReplyDelete
 10. Kandipaga ungal padivai padithavuden meendum oru murai intha kadaiyai padithu paarkalama endra ennam vanthadu unmai...
  Paarkalam nanbaray...

  ReplyDelete
  Replies
  1. உங்களுடைய இந்த கமெண்ட் ஸ்பாமில் இருந்ததை இப்போது தான் பார்த்தேன். திரும்பவும் படித்தீர்களா என்பதை தெரிவியுங்கள்.

   Delete