Tuesday, July 30, 2013

ஜில் ஜில் கல்யாணம் - பாகம் 2


===================================================================
நண்பர்களே இந்த பதிவு நீளம் கருதி ரெண்டு பாகமாக வருகிறது. முதல் பதிவை நீங்கள் படித்திருந்தாலும், மீண்டும் ஒரு முறை படித்து விட்டு இந்த பதிவை தொடர்ந்து  படித்தால்தான் கல்யாண வீட்டில் இருக்கும் எபக்ட் கிடைக்கும்.
===================================================================

கோவில் மாதிரி கல்யாண மண்டபதுக்கும் தனி வாசம், உற்சாகம் ஒரு பாசிடிவ்  எனெர்ஜி உண்டு. கல்யாண மண்டபத்தில் உங்களுக்கு  ஒரு ஐந்து வயது  குறைவதை உணர்ந்திருகிரீர்களா ?

கட்டுப் பெட்டி பெற்றோர் கூட தங்கள் பெண் பிள்ளைகளை அவ்வளவு இறுக்கி
வைத்திருக்க மாட்டார்கள். அதனால் அவர்கள் அன்றுதான் பட்டு தாவணியில் உற்சாகத்துடன் வலம் வருவார்கள். பெரும்பாலும் ரெண்டு அல்லது மூன்று பேராக செட் சேர்ந்து அதகளம் பண்ணிக் கொண்டு, குறுஞ்சிரிப்புடனும், குத்து விழிப் பார்வைகளுடனும்  குறுக்கும் நெடுக்கும் (வேலை எதுவும் இல்லாமலே) நடந்து கொண்டிருப்பார்கள். அவர்களை ப்ராக்கெட் போடும் போடும் மும்முரத்தில் பசங்களும் ஒரு செட்டாக பின்னாலே சென்று போன் நம்பர் (இப்போ FB ID ) வாங்குவதில் மும்முரமாக இருப்பார்கள். டே அந்த ப்ளு கலரு தாவணி மட்டும் பாக்காதீங்கடா என்று சமாதான உடன்படிக்கை எல்லாம் கையெழுத்தாகி கொண்டு இருக்கும். இதையெல்லாம் உக்கார்ந்து ரசிக்கலைன்னா, அட போங்க சார் நம்ம  இருக்குறதுக்கே  அர்த்தம் இல்ல.

இதுல கண்ணெல்லாம் செகப்பா, லேட்டா வர்றத யாரும் பர்த்துடலையேன்னு சில  மாப்பிள்ளை  தோழர்கள் நேத்து சாப்பிட்ட ஓல்ட் மங்குகளாக வந்து உக்காருவார்கள். இந்த குடிமகன்கள் தான் "மாப்ள நீ  ஜஸ்ட்டு மேடையில உக்காந்தா மட்டும் போதும். நா எல்லாத்தையும்  பாத்துக்கிறேன் " ன்னு ஏழெட்டு தடவை வாக்கு கொடுத்தவர்கள்.

 "ஏய்யா நீ அந்த வெள்ளையம்மா பேரனா?. நாங்கெல்லாம் அப்ப ஒரே  செட்டு தெரியுமா? நா யாருன்னு தெரியுதா உங்க பாட்டியோட அப்பாவோட கூடப்  பிறந்த சித்தப்பாவோட மக" என்று நம் கையை பிடித்துக் கொண்டு நீட்டி முழக்கி முறை  சொல்லும்  அந்த பாட்டிகளும், அப்பத்தாக்களும் கல்யாண வீட்டில் மட்டுமே   கிடைக்கிறார்கள்.

மாப்பிள்ளை அழைப்பு aka Ragging
மாப்பிள்ளை ஊர்வலம் முடிந்து வரும் மாப்பிளையை வரவேற்க ஆரத்தி தட்டுகளுடன் நங்கயரும் சுமங்கலிகளும் நிற்ப்பார்கள். நங்கையருக்கு உண்மையான நோக்கம் மாப்பிள்ளையை ராக்கிங் செய்வது.

மிளகு கோலம் ஆரத்தி, விளக்கு ஆரத்தி என்று வரும் ஆரத்திகளுக்குள்  ஒளிந்து கொண்டு டம்ளர் ஆரத்தி வரும்.ஒடனே மாப்பிள்ளை உசாராகி  நிக்கணும். அஞ்சாறு டம்ளருல வேற வேற ஜூஸ் இருக்கும் ஒரே ஒரு டம்ளரில் சுண்ணாம்பு தண்ணியோ, உப்பு கரைசல் தண்ணியோ, மிளாகாய் கரைத்த தண்ணியோ  இருக்கும். மாப்பிளை கரெக்டா நல்ல ஜூஸ் டம்ளரை  எடுத்து குடிக்கணும்,இல்லேன்னா உப்பு தண்ணிய குடிச்சுட்டு  மாப்பிளை முகம் போற போக்கை பார்க்க பாத்து இளம்  பெண்களின்  நகைப்பை எதிர் கொண்டாக வேண்டும். பார்க்கும்போது எல்லாம் "ஏம் மச்சான் , ஜூஸ் டேஸ்ட் எப்புடி"ன்னு மானத்தை வாங்கி விடுவார்கள்.

கல்யாணத்தை நடத்தி வைக்க ஒரு பிரமுகரை அழைத்திருப்பார்கள். அவர் கொஞ்சம் சபை நாகரீகம் தெரிந்தவரனால் பரவாயில்லை. இல்லையென்றால் அவர் நாலாப்பு படிக்கும் போது என்ன சேட்டை பண்ணி அடி வாங்கினார் என்பதையெல்லாம் கேட்டாக வேண்டும். அப்படி ஓடிக் கொண்டு இருக்கும்போது ஒருவர் பக்கத்தில் வந்து காதை கடிப்பார். முஹூர்த்தம் நெருங்கி விட்டதால் என் பேச்சை முடித்துக்கொ(ல்)ள்கிறேன் என்று  சொல்லி விட்டு  தாலியை எடுத்து மாப்பிள்ளை கையில் கொடுக்க இனிதே திருமணம் நடந்தேரும்.

முதல்ல இந்த மஞ்சள் அரிசியை முதல் ரெண்டு ரோவுக்கு அப்புறம் தடை பண்ணிடனும். இஷ்ட்டதுக்கு கடைசி வரிசை வரை கொடுத்துட்டு போயிட்டு, அவுங்க அவுங்க ரெண்டு ரோ முன்னாடி இருக்கிற ஆளுங்க மேல அட்சதைய தூவுறதும் நடக்குது. நமக்குதான் கல்யாணமோன்னு நினைக்கிற அளவுக்கு ஆயிடுது.

போட்டோ எடுக்கும் கூத்து

போட்டோ வீடியோ எடுக்கும் வீடியோ கிராபர்களின் மேல் பதின் வயதுகளில் ஒரு கோபம் இருந்ததுண்டு. என்னடா நாம ஒரு பொண்ண பாக்குறதுக்கு எவ்வளவு கஷ்டப் பட்டுக்கிட்டு இருக்கோம்.
இவிங்க இப்படியே வர்றாயிங்க, இதுகளும் பல்ல காட்டிக்கிட்டு நிக்குதுங்க. நோகாம சைட் அடிச்சிட்டு போயிராங்கலேன்னு பயங்கர  காண்டா இருக்கும்.பேசாம நாமளும்
போட்டோ புடிக்கிறவனா ஆகிடவேண்டியதுதான்ன்னு சபதம் எல்லாம் எடுத்திருக்கிறேன்.

அதுவும் கூட்டத்தில நல்ல அழகா இருக்கிற பொண்ணு எங்க இருக்குன்னு பாத்து வச்சுக்கிட்டு அங்கேயே கவர் பண்ணிக்கிட்டு இருப்பாய்ங்க. ஆம்பளையா பொறந்துட்டோம் நம்மள கவர் பண்ண மாட்டேங்குறானே
 (போட்டோவுக்குதான் பாஸ், தப்பா  நினைச்சுராதீங்க)   அப்புடின்னு நினைச்சீங்கன்னா  நல்ல அழகான  குழந்தையை பார்த்து தூக்கி வச்சுக்கிட்டு போட்டோ எடுத்துக்கிட்டு வர்ற வரிசைக்கு ஒரு ரெண்டு வரிசை தள்ளி உக்காந்து கிட்டு "இந்தா போட்டோ மாமா பாருன்னு" போட்டோ காரர கைய காட்டினீங்கன்னா, ஒங்க மூஞ்சியும் வீடியோவில்  வருவதற்கு வாய்ப்பு உண்டு.  

முன்னெல்லாம் இந்த வீடியோ எடுப்பவர்கள் தான் பொண்ணு மாப்பிளையை  மறைத்துக் கொண்டு வீடியோ எடுக்கிறார்கள் என்றால், கேமரா போன் வந்த பிறகு ஆளுக்கு ஆள் போனை வச்சிக்கிட்டு இவிங்க படுத்துறபாடு. முடியல

எல்லோரும் ஒரு பக்கமா மேடையில் ஏறினோம்னா, என் வழி தனி வழின்னு எதிர் பக்கமா ஏறுகிற எருமை பிரதர்ச என்ன பண்ணலாம். மேடையில் ஏறி நின்னா, போட்டோ எடுக்கிறதுக்குள்ள என்ன மாதிரி பானை வயிற்ரோன்கள் எல்லாம் தம் பிடித்துக் கொண்டு , குள்ளமாக இருப்பவர்கள் ரெண்டு இன்ச் காலை தூக்கி உயரத்தை கூட்டி சமாளிச்சுரலாம். ஆனால் இந்த பப்பு  வீடியோகாரர்களிடம்  செல்லுபடியாகாது. அவர் யாரை கவர் பண்ணுராருன்னே தெரியாம பிளாஷ் வெளிச்சம் தெரியும். கொஞ்ச நேரம் தம் கட்டிட்டு அட போங்கடான்னு விட்டுற வேண்டியதுதான்.

சாப்பாடு

என் ஊரான அபிராமத்தில் ஒரு காலத்தில் 10 நாள் கல்யாணம் எல்லாம்  உண்டு என்று என் அம்மா சொல்வார்கள். ஊர் சாப்பாடு என்பது ரொம்ப அரிது. ரொம்ப பணக்காரர்கள் வீட்டு  கல்யாணத்தில் மட்டுமே ஊர்  சாப்பாடு கிடைக்கும். பள்ளிவாசலில் இன்னாருடைய வீட்டு  கல்யாணதிற்க்காக ஊர் சாப்பாடு என்று மைக்கில் சொல்லுவார்கள். அது என்ன ஊர் சாப்பாடு என்று கேட்கிறீர்களா? கல்யாணத்திற்கு ஊரையே அழைத்திருக்கிறார்கள், ஊரே போய்  சாப்பிடலாம் என்று அர்த்தம். ஜே ஜே என்று ஊரே சென்று சாப்பிடும்.

சென்னை வந்த பிறகு கல்யாணம் கூட Fastfood ரேஞ்சில் நடப்பதை பார்த்து அதிர்ந்துதான் போனேன். கல்யாணதிற்கு  போனால் நாலு பேரை பார்த்து நலம் விசாரித்து கொஞ்சம் நேரம் பெண் மாப்பிள்ளையை பார்த்து பிறகு சாப்பிடப் போனால் என்ன? வரும்போதே காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்டு வந்து ஓட்டப் பந்தயத்தில் நிற்பவர்கள் போல வாசல் அருகே நின்று விட்டு கெட்டி மேளம் என்று சொன்னவுடன் விழுந்தடித்து கொண்டு ஓடி சாப்பிட செல்பவர்களை என்ன சொல்ல. இப்படி செல்பவர்கள் சாப்பாட்டை ருசித்து சாப்பிடுவார்களா என்ன ? அவக்கு அவக்குன்னு வாயில போட்டுட்டு மண்டபத்தை விட்டு ஓடுவதையே குறியாக வைத்திருப்ப்பார்கள்.

சாப்பிடுரதுலயும் நிறைய வகை இருக்கு. இலையை விட்டு சாப்பாடு ஓடிப் போய்விடும் போலவே அள்ளி வாயில போடுறது ஒண்ணு. ஆற அமர அடுத்த பந்தி ஆரம்பித்த பிறகும் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவது இன்னொரு வகை. "சூது கவ்வும்" படத்துல மாதிரி "அது இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாதுங்குறது" மாதிரி எல்லாத்தையும் பிசைந்து யானைக்கு உருண்டை குடுக்குற மாதிரி உருண்டை  உருண்டையா அடிக்கிற பஞ்சமா பாதகர்களை என்ன சொல்ல. நம்ம பக்கதில்  இருக்கும் நமக்கு தெரியாத ஆள் நல்லா  சாப்பிடுங்கன்னு தம்பின்னு சொல்லி உற்சாகப்படுத்துராருன்னா, நமக்கு கேட்டபது போல அவருக்கு ஏதோ ஒரு ஐட்டம்  கேட்கப் போறாருன்னு அர்த்தம்.

நல்ல வேளை  பாயசத்தை இப்போது சிறு குவளையில் / கிண்ணியில்  கொடுத்து  விடுகிறார்கள்.இலையில் ஊற்றும் காலங்களில் இலையில்
ஊற்றச் சொல்லி அதில் அப்பளத்தை உடைத்துப் போட்டு சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் டெக்னிக்கை பார்க்கும்போது தமிலேண்டான்னு சொல்லி ஆனந்த கண்ணிரே வந்துடும்.

அப்புறம் என்ன மொய்யை செஞ்சிட்டு தாம்பூலத்த போட்டு விட்டு வந்துட வேண்டியதுதான்.

===================================================================
நண்பர்களே. ஏதோ நான் உணர்ந்ததை எழுதி இருக்கிறேன். நிச்சயம் இது உங்களாலும் உணரப்பட்டு இருக்கும் என்று நம்புகிறேன். முதல் பதிவின் ஆரம்பத்தில் கடுப்புடன் ஆரம்பித்து இப்போது எவ்வளவு அழகாக முடிந்திருக்கிறது பாருங்கள். கல்யாணம் முதலிய விசேஷங்கள் நம்மையே நாம் அழகு படுத்திக் கொள்ள முடிகிறது. துணையுடன் சென்று பங்கேற்கும் கல்யாணங்களில் இருக்கும் சந்தோசமே தனிதான். அப்படி சென்று திரும்பும்போது கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்னியோன்யம் அதிகரிப்பதை உணர்ந்திருக்கிறேன். என்னடா இவன் ஆடி மாசத்தில போய் இப்படி சொல்லிக்கிட்டு இருக்கானேன்னு நினைக்காதீங்க "ஆடி போனா ஆவணின்னு " பாட்டு கேட்டதில்ல? ஆவணி மாசம் வர்ற கல்யாணங்களுக்கு ரெடியாகுங்க. கல்யாண  வீட்டில பாப்போம். இப்போதைக்கு டாட்டா
===================================================================

Post Comment

7 comments :

 1. உணர்ந்து எழுதியிருக்கீங்கண்ணோவ்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணோவ் D

   Delete
 2. # பெரும்பாலும் ரெண்டு அல்லது மூன்று பேராக செட் சேர்ந்து அதகளம் பண்ணிக் கொண்டு, குறுஞ்சிரிப்புடனும், குத்து விழிப் பார்வைகளுடனும் குறுக்கும் நெடுக்கும் (வேலை எதுவும் இல்லாமலே) நடந்து கொண்டிருப்பார்கள். அவர்களை ப்ராக்கெட் போடும் போடும் மும்முரத்தில் பசங்களும்#

  எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என்ற நம்பிக்கை இருகின்றது..

  #இதுல கண்ணெல்லாம் செகப்பா, லேட்டா வர்றத யாரும் பர்த்துடலையேன்னு சில மாப்பிள்ளை தோழர்கள் நேத்து சாப்பிட்ட ஓல்ட் மங்குகளாக வந்து உக்காருவார்கள்.#

  கல்யாணம் என்றாலே சீட்டும், சரக்கும் இருக்கும். இல்லையென்றால் அது கல்யாணமாக இருக்காது :). சிறுவயதில் நான் கலந்துகொண்ட அணைத்து கல்யாணத்திலும் இரண்டும் இருக்கும்.


  #ஏய்யா நீ அந்த வெள்ளையம்மா பேரனா?. நாங்கெல்லாம் அப்ப ஒரே செட்டு தெரியுமா? நா யாருன்னு தெரியுதா உங்க பாட்டியோட அப்பாவோட கூடப் பிறந்த சித்தப்பாவோட மக" என்று நம் கையை பிடித்துக் கொண்டு நீட்டி முழக்கி முறை சொல்லும் அந்த பாட்டிகளும், அப்பத்தாக்களும் கல்யாண வீட்டில் மட்டுமே கிடைக்கிறார்கள்#

  கல்யாண வீட்டில் மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்கும். வேறு எங்கு அணைத்து சொந்தங்களையும் சந்தோசத்துடன் பார்க்கமுடியும்?

  ReplyDelete
  Replies
  1. #ஓட்டப் பந்தயத்தில் நிற்பவர்கள் போல வாசல் அருகே நின்று விட்டு கெட்டி மேளம் என்று சொன்னவுடன் விழுந்தடித்து கொண்டு ஓடி சாப்பிட செல்பவர்களை என்ன சொல்ல.#

   இன்றைய நாளில், இரண்டு அல்லது மூன்று கல்யாணத்திற்கு சொல்லவேண்டும், மேலும் விடுமுறை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பந்திக்கு முத்தினால் மட்டுமே பாயசம் கிடைக்கும். :)

   #சாப்பிடுரதுலயும் நிறைய வகை இருக்கு. இலையை விட்டு சாப்பாடு ஓடிப் போய்விடும் போலவே அள்ளி வாயில போடுறது ஒண்ணு. ஆற அமர அடுத்த பந்தி ஆரம்பித்த பிறகும் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவது இன்னொரு வகை.#

   தலைவாழை இலையில் சாப்பிடும்போது இது நடப்பது இயல்பே...

   #நல்ல வேளை பாயசத்தை இப்போது சிறு குவளையில் / கிண்ணியில் கொடுத்து விடுகிறார்கள்.#

   கேரளா கல்யாணத்திக்கு சொன்றால், இரண்டு வகையான பாயசம் கிடைக்கும்... ஹும் ஹும்ம் ரொம்ப நன்னாருக்கே....

   டீன் ஏஜ்ஜில் கல்யாண மண்டபம்தானே அழகான பெண்களின் கூடுமிடம்.

   Delete
  2. //டீன் ஏஜ்ஜில் கல்யாண மண்டபம்தானே அழகான பெண்களின் கூடுமிடம். //
   ஆஹா ரமேஷ் பீல் ஆயிட்டாரு :D

   Delete
 3. மிக மிக அழகாக அருமையாக எழுதி உள்ளீர்கள்.
  வருங்கால சந்தியினர் கல்யாணம் என்றால் இருக்க கூடிய சந்தோசங்களை இழக்க போகிறார்கள்.

  எனது கல்யாணம் உட்பட எங்கள் வீட்டில் கல்யாணம் 3 நாட்கள் நடக்கும்.
  அதன் சந்தோசங்கள் சண்டைகள் சமாதானங்கள் பல முகங்களை பார்ப்பது.
  பல நபர்களை நாம் சந்திருப்போம் ஆனால் என்ன சொந்தம் என்று தெரியாது அவர்களை என்ன சொல்லி அழைப்பது என்று யோசித்து கூறுவதற்கு ஒரே திண்டாட்டம் தான்.

  இப்பொழுதே பல சொந்தங்களை நாம் மறந்திருப்போம் இன்னும் அடுத்த சந்தியினர்
  நண்பர்கள் அப்பொழுதைய சுற்றுவட்டாரங்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்கள் ஆகியோர்கள் தான் கல்யாணத்தில் இருப்பார்கள்.

  நாம் சிறிது அதிர்ஷ்டசாலிகள் தான்.

  ReplyDelete
 4. ஹா ஹா ஹா!

  விரல்விட்டெல்லாம் எண்ணமுடியாது; நான் எத்தனைமுறை வாய்விட்டுச் சிரித்தேன் என்பதை! வரிக்குவரி நகைச்சுவையால் ரகளை பண்ணறீங்க ராஜ் குமார்! ஒரு கல்யாணவீட்டுக்குப் போய்வந்த திருப்தி கிடைக்குது உங்க திரைக்கதையில! :)

  'ரகளை ராஜ் குமார்'னு பெயர் வக்கலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன். ;)

  ReplyDelete