Sunday, June 16, 2013

நச்சுன்னு நாலு புக்கு - > (லக்கி ஸ்பெஷல் , குற்ற சரித்திரம்,நிலவொளியில் ஒரு நரபலி, பூத வேட்டை)

என் மன வானில்

ஜூன் மாதம் ரெண்டு புத்தகங்கள் என்று ஆரம்பித்தார் எடிட்டர். ரெண்டு மூணாகியது. பின் அவருடைய கட்டை விரலை வாயில் நுழைக்கும் கங்னம் ஸ்டைலால் மூணு நாலாகியது. அவர் கடைசியாக கங்னம் ஸ்டைலாக ஆடிய புத்தகம் "நள்ளிரவில் ஒரு நரபலி". டெக்ஸ் கலரில் என்றவுடன் டெக்ஸ் ரசிகர்கள்/வெறியர்கள் தனியாக கங்னம் டான்ஸ் ஆடியிருப்பது உறுதி. நண்பர் ஸ்ரீராம் ஆடியிருப்பது உறுதியோ உறுதி.

வீட்டில் காமிக்ஸ் என்றாலே கலவரமாக (ஹி  ஹி ) இருப்பதால் அலுவலகத்திற்கு வரும்படி வைத்திருந்தேன். எப்பவும் வாங்கி வைத்து மெயில் டெஸ்க்  எனக்கு மெயில் அனுப்புவார்கள். இந்த தடவை உங்களுக்கு வரும் பெர்சனல் கொரியர் எல்லாம் நீங்களே வாங்கி கொள்ளுங்கள் என்று விட்டதால் நானே நேரில் சென்று கொரியர் பையனிடம் வாங்கினேன்.

கொரியர் இருந்த தலையணை சைஸை பார்த்தவுடன் மனம் குதூகலத்தில் குத்தாட்டம் போட ஆரம்பித்து விட்டது. பிரித்துப் பார்த்தால் ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு சைசில் என்று கிறங்கடித்தது. அலுவலகத்தில் இருந்ததால் ஒவ்வொரு புத்தகமாக புரட்டி பார்ப்பதைத் தவிர எதுவும் செய்ய முடியவில்லை. ஒரு மணிநேரம், புத்தகங்களை  வைத்துக் கொண்டு  ஒரு பெரிய சாக்லேட் புதையல் கிடைத்த  குழந்தையின் மனநிலையில் இருந்தேன்.

எப்படி எப்படி புத்தகங்கள் எப்படி


லக்கி ஸ்பெஷல்


அலுவலக பேருந்தில் சரியாக லைட் இருக்கும் இடத்திற்கு கீழே உட்க்கார்ந்து லக்கி புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். ஏற்கனவே சூப்பர் சர்க்கசும், மா டால்டனும் ஆங்கிலத்தில் படித்து விட்டதால், பயங்கரப் பொடியனுடன் என் பயணத்தை ஆரம்பித்தேன். நிறையவே வித்தியாசமான கதை. எப்பொழுதும் வில்லன்களுக்குதான் லக்கியால் மண்டை காயும் , இந்த தடவை அப்படியே தலை கீழாக முக்காலே மூணு வீசம் லக்கி சின்னப் பயலை அடிக்கவும் முடியாமல் அவன் செய்யும் சேட்டைகளை பொறுக்கவும் முடியாமல் அவஸ்தை பட்டிருக்கிறார். இதே மாதிரி நமக்கும் வாண்டுகளிடம் ஏற்பட்டிருக்கும். செம சேட்டை  பண்ணுவாங்கள், லேசா அடித்தால் கூட அழுது ஊரைக் கூட்டி விடுவார்கள். சொல்லவும் முடியாம  மெல்லவும்  முடியாம ஒரு அவஸ்தை வரும்  பாருங்க. அதே அவஸ்தை லக்கிக்கு. கடைசியில் குப்புறப் படுக்கப் போட்டு பின்னாடி நாலு போடு போட்ட பிறகுதான் லக்கியின் ஆத்திரம் அடங்குகிறது. தன்னைவிட கெட்டவன் லக்கி என்று கேட்டவுடன் பில்லி பொருமும் போது, என் முதல் ஹீரோ "குற்றச்சக்கரவர்த்தி" ஸ்பைடர் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

டேஞ்சர் டயபாலிக் 


பஸ்சிலேயே லக்கி ஸ்பெஷல்லை முடித்து விட்டு வீட்டுக்கு வந்ததும் எடுத்த புத்தகம் மிகவும் எதிர் பார்க்கப் பட்ட குற்ற திருவிழா.நண்பர் ஷண்முக சுந்தரத்தின் அட்டைப்படத்துடன் வந்திருக்கும் டேஞ்சர் டயபாலிக் புத்தகம் அசத்தல்.ஒரு இண்டர்நேசனல் மாஸ்டர் பீசை கையில் வைத்திருப்பது போல் இருந்தது. வித்தியாசமான சித்திரங்கள் இந்த கதையின் பலம். முகத்தில் பெண்மை மிளிரும் கதாநாயகன் ஒரு புது முயற்சி. புதிதாய் ஒரு குற்ற தலைவன் என்று கேப்சன் போட்டு குற்ற சக்கரவர்த்தி ஸ்பைடரை நினைவு படுத்திவிட்டார்கள். வங்கிக் கொள்ளை, அடிக்கடி நிஜம் போன்ற முகமூடி அணிந்து காரியம் சாதித்தல் என்று மிசன் இம்பாசிபிள் படத்தை நினைவு படுத்த தவற வில்லை.அறிமுக நாயகனாக  (எனக்குப்பா, ஏற்கனவே படித்திருப்பவர்கள் மன்னிச்சு ), என் மனதை கவர்ந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். குற்ற சரித்திரம் தொடரட்டும். 

நிலவொளியில் ஒரு நரபலி 


அடுத்து கையில் எடுத்தது நிலவொளியில் ஒரு நரபலி. 13th Warrior என்று ஒரு படம்  ஆண்டானியோ பண்டேராஸ் நடித்தது. அந்த படத்தின் கதையும் இதைப் போலவே இருக்கும் கோட்டையை காப்பாற்றிய பின், அந்த எதிரி வீரர்களை அவர்களின் மலைக்கே சென்று வேட்டை ஆடுவார். இந்த புத்தகத்தில் இருந்து சில சீன்களை உருவி இருப்பார்கள் போல இருக்கிறது. 

டெக்ஸ் கலரில் என்று டெக்ஸ் ரசிகர்கள் கொண்டாடும் புத்தகம். சைஸ் ஏமாற்றமளித்தது. நம் பழைய கருப்பு வெள்ளை புத்தககங்களின் சைஸை விட சற்று சிறியது என்று நினைக்கிறேன். கலரில் படித்தாலும் பெரிய சைசில் வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற ஏக்கம் வராமல் இல்லை.ஓவியப் பார்வைக்கு ஓவியங்கள் இருந்தது எனக்கு ப்ளஸ். 

கோட்டை முற்றிலும் சுற்றி வளைக்கப் பட்ட நிலையில், டெக்ஸ் குழுவினர் போராடும் திக் திக் நிமிடங்கள் அருமை. டெக்ஸ்ஸின் கதைகளில் யுக்திகளை எதிர் பார்க்க முடியாது என்றாலும் (:D ), எதிரிகள் கால் நடையாக வருகிறார்கள் என்று தெரிந்து கொண்டு டைகர் குதிரைகளை விரட்டி அவர்களின் கவனத்தை திருப்புதல், டைனமைட்டை கண்ணி வெடி மாதிரி உபயோகித்தல் என்று சில யுக்திகள் உண்டு. பழைய டெக்ஸ் ரசிகன் என்ற முறையில் எனக்கு பிடிச்சிருக்குப்பா. இந்த புத்தகத்தை முடித்த போது இரவு 11.30 மணி. இனிமேல் படித்தால் வேலைக்கு ஆகாது என்று பூத வேட்டையை நாளைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று படுத்து விட்டேன் 


பூத வேட்டை 

அடுத்த நாள் காலையில் எழுந்தவுடன் இந்த புத்தகத்தில் தான் முழித்தேன். டையபாலிக் புத்தகத்தை விட சைஸ் பெரியது. அட்டைபடம் நன்றாக இல்லை என்று எடிட்டருடைய ப்லோகிலேயே அடித்து துவைத்து காயப் போட்டு விட்டோம். பின் அட்டை சூப்பர், நம்முடையது அல்ல. இந்த மாதிரி இருந்தால் தானே வாங்குவார்கள். இதை பின் அட்டையில் போட்டு என்ன பயன், முன் அட்டையில் அல்லவா இருக்க வேண்டும்.   டெக்ஸ்ஸின்  முக பாவத்திற்கு (நிஜமாவே பாவம் :D )காரணம் அவர் ஷு வில் இருந்து பின்னாடி குத்தும் முள்ளா ? :D யாராவது சொல்லுங்கப்பா?

இரவுக் கழுகு Eagle of the Night என்ற கேப்சன் ஓகே. "பெயரைக் கேட்டாலே புலியும் பதறும் உதறும்"  கிரதுல்லாம்  ரொம்பவே ஓவர்.கருப்பு வெள்ளையில் அருமையான சித்திரங்கள். கலரில் இருந்தால் கலக்கி இருக்குமே என்ற எண்ணம் எழாமல் இல்லை. கதையைப் பொறுத்த வரை இதுவும் அனுமாஷ்ய எதிரியை சுற்றி சுழலுகிறது. ஒரே நேரத்தில் ஒரே மாதிரி அனுமாஷ்ய எதிரிகள் ரெண்டு புத்தகத்தில் என்றாலும், சலிக்கவில்லை. நீளம் அதிகம் என்றாலும், போரடிக்கவில்லை என்றே சொல்லுவேன்.டெக்ஸ் ரசிகர் நண்பர் கிரிதரன் கூட பூத வேட்டையை  சற்று குறைவாக மதிப்பிட்டு இருந்தாலும், என்னால் இந்த கதையை குறைத்து சொல்ல முடியவில்லை என்பதே நிஜம். ஒரு வேளை  கதை நீளம் என்பதால் அப்படி தெரிகிறதோ என்னமோ.

ரெண்டு கதைகளிலும் கதாசிரியர் அதிர்ஷ்ட அதிர்ஷ்ட தேவதை டெக்ஸ்க்கு உதவுதாக கார்சன் மூலமாக சொல்லி   லாஜிக் ஒட்டைகளை மறைக்கிறார்.

=======================================================================
சென்னை காமிக்ஸ் வாசகர் சந்திப்பு

ஸ்பென்சர் ப்ளாசா வில் நண்பர் லக்கி லிமிட் ஆரம்பித்து வைத்த சந்திப்பில் நேற்று கலந்து கொண்டேன். திருப்பூர் ப்ளுபெர்ரி நாகராஜ் என் வீட்டின் அருகாமையில் இருப்பதால் அவர் காதிலும் போட்டு வைத்திருந்தேன். ஸ்பென்சர் வளாகத்தில் நுழையும் போதே அவரை பார்த்து விட்டு ஒண்ணாக போனோம். ஒரு டீயைப் போட்டு விட்டு இரவுக் கழுகு கிருஷ்ணாவுக்கு  போன் செய்தால் லேண்ட்மார்க் உள்ளே அவரும், பாலாஜி சுந்தர், தணிகை செல்வன், இருப்பதாக சொன்னார். லேண்ட்மார்க்கில் புத்ததக செக்க்ஷனில் தான் இருப்பார்கள் வேண்டுமென்றால் பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே நுழைந்தோம். நினைத்தது போலவே கிராபிக்ஸ் நாவல் பக்கம் நின்று  கொண்டு இருந்தார்கள். சிறிது நேரத்தில் லக்கியும், டெக்ஸ் ஸ்ரீராமும் வந்த வுடன் ஆட்டம் களை கட்ட ஆரம்பித்தது. ஜானி உயரதிகாரிகளின் மீட்டிங்குக்கு சென்று விட்டதால் வரமுடியாது என்று சொல்லிவிட்டார். ஆளுக்கு ஒரு லெமன் ஜூஸை குடித்த படியே ஒருவரை ஒருவர் கலாய்த்த படியே நன்றாக சென்றது.ஆறு மணிக்கு முடித்து விடுவோம் என நினைத்தது ஆறே முக்கால் வரை சென்றது. இந்த தடவை வர முடியாதவர்கள் அடுத்த தடவை கட்டாயம் வாருங்கள்.
மேல் வரிசை :"திருப்பூர் ப்ளுபெர்ரி" நாகராஜன், ஸ்ரீராம் லக்ஷ்மன், தணிகை செல்வன், பாலாஜி சுந்தர்
கீழ் வரிசை : "காமிக்ஸ்டா" ராஜ் குமார் , "இரவுக் கழுகு" கிருஷ்ணா வா வே.
மேல் வரிசை :"திருப்பூர் ப்ளுபெர்ரி" நாகராஜன், ஸ்ரீராம் லக்ஷ்மன், தணிகை செல்வன், பாலாஜி சுந்தர்
கீழ் வரிசை : "காமிக்ஸ்டா" ராஜ் குமார் , காமிக்ஸ் கலவரத் தலைவர் "லக்கி லிமட்" பொன் தமிழ் செல்வன்பெங்களுர் காமிக் கான் 


டெக்ஸ் வில்லராக உருமாறிய நண்பர் ஸ்ரீராம் லக்ஷ்மன் 


வாயிற்குள் கால்கட்டை விரலை நுழைத்திடும் நம் எடிட்டருக்காக நண்பர் ஷல்லும் பெர்னாண்டஸ் கொடுத்த ஆலிலைகிருஷ்ணர் பொம்மை.


காமிக் லவர் ராகவன் , ரமேஷ் சண்முக சுந்தரம். ஸ்ரீனிவாசன், பெரியார் பூர்னேஷ் குமார்,விஜயன் சார்,  ப்ரசன்னா, ப்ளேட்பிடியா கார்த்திக் சோமலிங்கா, கீழே ஸ்ரீராம் லக்ஷ்மண் டெக்ஸ் கெட் அப்பில்.    =======================================================================

ஓவியப் பார்வை

நிலவொளியில் ஒரு நரபலி

பின்னட்டை

மிக அருமையான ஓவியம். டெக்ஸ்சை தடுப்புக்கு பின் நின்று சுட முயன்ற எதிரியை சரியாக தடுப்பை தாண்டி சுட்டு விட்டு ஸ்டைலாக  நின்று கொண்டிருக்கிறார்.தடுப்பில் அவர் சுட்ட துளையின் வழியே சூரியனின் கதிர்கள் உள்ளே நுழைவதை பாருங்கள். எதிரியும் துப்பாக்கியும் கீழே கிடக்கிறார்கள்.


1) நிலவொளியில் ஒரு செவ்விந்திய கிராமம்.

 2) வெடித்து சிதறும் டைனமைட்


3) கோட்டையை சுற்றி வளைக்கும் பிசாசுகள்4) வெடித்து சிதறும் எரிமலை5) எரிமலை பின்னணியில் டெக்ஸ்


பூத வேட்டை

பின்னட்டை

உதயமாகும் சூரியன் டெக்ஸ். எதிரிகளின் அறைகூவலான மண்டை ஓட்டைப் பார்த்து முகம் கடுமையாக இருக்கிறது.குதிரையின் முகத்தை பாருங்கள் நிஜமாக பார்ப்பது போலவே உள்ளது.ஹ்ம்ம் முன்னட்டையில் வந்திருக்க வேண்டிய ஓவியம்.


* வண்ண சித்திரங்கள் தந்து உதவிய ஸ்ரீராம் லக்ஷ்மனுக்கு நன்றிகள் பல.
1) கருப்பு ஊசிகளாய் இறங்கும் மழையினூடே பயணிக்கும் கோச்சுவண்டி


2) நெடிதுயர்ந்த மலையின் கீழே ஒரு வீடு
முரண் 

லக்கி ஸ்பெஷல் பின்னட்டையில் உள்ள லோ ரெசொலுசன் ஓவியம்.

க்ளைமாக்ஸ் 

நாலு புத்தகம் கொடுத்து நாலும் ஹிட் அடித்திருகிறது. நாலு புத்தகத்தை கொடுக்க துணையாய் இருந்த டீமுக்கு பாராட்டுக்கள். 

Post Comment

20 comments :

 1. அவர் பிரசன்னா ஜி! நல்லதொரு பதிவு!

  ReplyDelete
 2. தமிழ் மணத்தில் இணைவது எப்படி ஜி?

  ReplyDelete
 3. பதிவு லேட்டா வந்தாலும் சூப்பர்!

  இரண்டு டெக்ஸ் கதையிலும், முன்னட்டை & பின்னட்டையை swap பண்ணியிருந்தால் இன்னும் சூப்பர்


  முதல் Comi-con முதல் புகைப்படத்தில் எனது வலப்புறம் நிற்பது நமது "Srini vasan" not அருண் பிரசாத் :)

  ReplyDelete
 4. Super snaps as usual! The 'peyar theriyavillai' guy is Prasanna!

  ReplyDelete
 5. @Johny : அப்டேட் பண்ணிட்டேன். பிரசன்னா, ஸ்ரீனிவாசன் மன்னிச்சு. இந்த ப்ளாக் போஸ்ட்டை பாருங்கள் எல்லா போஸ்டையும் படித்து பாருங்கள் உங்களுக்கு தேவையான எல்லா விசயமும் இருக்கு.


  http://www.bloggernanban.com/2010/12/2.html

  ReplyDelete
 6. @பெரியார் : நன்றி பெரியார். பிரசன்னா என அப்டேட் பண்ணிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

  ReplyDelete
 7. @Comic Lover (a) சென்னை ராகவன் :நன்றி ராகவன்.

  ReplyDelete
 8. //ஒரு மணிநேரம் கையில் புத்தகங்களை வைத்துக்கொண்டு, ஒரு பெரிய சாக்லேட் புதையல் கிடைத்த குழந்தையின் மனநிலையில் இருந்தேன் //

  அழகு! அழகு! இதைவிட தெளிவாக, அழகாக அந்த மனநிலையை வேறெப்படி விளக்கிவிட முடியும்?!!

  நான்கு புத்தகங்ளைப்பற்றியும், ஒரு காமிக்ஸ் சந்திப்புப்பற்றியும், காமிக்-கான் பற்றியும், வழக்கமான உங்கள் ஓவியப்பார்வையுடனும் கலந்துகட்டி ஒரு நிறைவான விருந்து கொடுத்திருக்கிறீர்கள் ராஜ் குமார்!

  சூப்பர்!

  ReplyDelete
 9. யப்பா என்னா review சூப்பர் ராஜ், எவ்ளோ பொறுமையா அணு அணுவா ரசிச்சு பண்ணி இருக்கிங்க great :)

  //டெக்ஸ் ரசிகர் நண்பர் கிரிதரன் கூட பூத வேட்டையை சற்று குறைவாக மதிப்பிட்டு இருந்தாலும், என்னால் இந்த கதையை குறைத்து சொல்ல முடியவில்லை என்பதே நிஜம்//

  எனக்கு என்னொவோ ரெண்டு டெக்ஸ் கதைகளும் same kind of plot என்பதாலோ, என்னை கவரவில்லை நண்பா :(


  சென்னை காமிக்ஸ் வாசகர் சந்திப்பு:
  Photos பாக்கும்போதே ரொம்ப சந்தோசமா இருக்கு :)

  ReplyDelete
 10. Superb post raj. Yday itself I typed one big comment but due to a call that browser got closed.then I got fed up to type again.

  So now again my post for u.you reflect the thoughts of most people.

  But I strictly oppose you comment palaya TeX rasikan..ippo TeX rasigan illai yenbathai naan vanmayaaka kandikiren

  I too felt that thik thik moment when I read demons of the north.

  Peyara ketal puliyim patharum that is not over the top comment that's fact fact fact

  ReplyDelete
 11. @ Erode VIJAY :
  //அழகு! அழகு! இதைவிட தெளிவாக, அழகாக அந்த மனநிலையை வேறெப்படி விளக்கிவிட முடியும்?!! //

  நன்றி விஜய்.

  ReplyDelete
 12. @Giridharan V: நன்றி கிரிதரன்.

  //சென்னை காமிக்ஸ் வாசகர் சந்திப்பு:
  Photos பாக்கும்போதே ரொம்ப சந்தோசமா இருக்கு :)//

  அடுத்த தடவை சீக்கிரம் பிளானை முன்னாடியே சொல்லி விடுகிறோம். பிளான் பண்ணி வந்து விடுங்கள்.

  ReplyDelete
 13. @கிருஷ்ணா வ வெ:

  நன்றி கிருஷ்ணா. பழைய டெக்ஸ் ரசிகன் என்பதை பழைய காலத்தில் இருந்து டெக்ஸ் ரசிகன் என்றும் எடுத்து கொள்ளலாம். :D

  //Peyara ketal puliyim patharum that is not over the top comment that's fact fact fact//

  ஹா ஹா டெக்ஸ் ரசிகரான உங்கள் ரியாக்சன் எனக்கு பிடிச்சிருக்கு.

  ReplyDelete
 14. நன்றி ஜி! இன்னும் புரியவில்லை! அப்புறமா நேர்ல வந்து கேட்டுக்குறேன்!

  ReplyDelete
 15. @johny : goto tamilmanam.net there you can see tamilmanathil fungal valaipoovai inaika kind of link. Click that and give your blog address if the ad mins are OK with your site they will accept your reg.

  Also you have to add tamilmanam address bar to your blog.
  That steps will also be there.

  ReplyDelete
 16. நண்பர்கள் பட்டாளம் ...... சூப்பர் ...

  ReplyDelete
 17. @John Simon C : புரியலேன்னா கால் பண்ணுங்க உங்களுக்கு சொல்லுறேன் .

  ReplyDelete
 18. @Erode M.STALIN: நன்றி ஸ்டாலின். ஈரோடு புத்தக கண்காட்சி எப்போது?

  ReplyDelete
 19. டயபாலிக்கும் , பூதவேட்டையும் என்னை மிகவும் கவர்ந்தது. சூப்பர் சர்க்கசும் , பொடியனும் ஏற்கனவே பிடித்தது தான். நரபலி இன்னும் படிக்கவில்லை.

  லக்கி ஸ்பெஷலில் பின்னட்டை மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. பலமுறை சொல்லியும் ஏன் இப்படி செய்கிறார்கள் எனத்தெரியவில்லை

  கலரில் பூதவேட்டை இன்னும் சூப்பராக உள்ளது.

  ReplyDelete
 20. நரபலி படித்துப் பாருங்கள். நன்றாக இருக்கும். பூத வேட்டை கலர் லிங்க் இருந்தால் கொடுங்கள். பூதத்தை கலரில் பார்க்கலாம். :D

  ReplyDelete