Monday, May 27, 2013

ஆயிரம் தலை கேட்ட தங்க தலையன் (General Golden Mane)


என் மனவானில்

இந்த இதழ் வருவதற்கு முன் நண்பர்கள் சில பேர் இந்த இதழுக்காக , டைகருக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காக பத்து  வருடங்களுக்கு மேலாக காத்திருந்து இப்போதுதான் படிக்கப் போகிறோம் என்று முக நூலில் பதிந்திருந்தார்கள்.பத்து  வருடங்களுக்கு பின் வந்த இரு பாகங்களும் ரசிகர்களை திருப்தி படுத்தியதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

முதல் பிரச்னை அச்சு தரம் சரியில்லை. பல பக்கங்கள் 3D க்கு அச்சிட்டது போல இருந்தது. ஏற்கனவே ஆங்கிலத்தில் கொஞ்சம் பக்கங்கள் படித்திருந்த எனக்கு அதிர்ச்சி. இதே பிரச்சனையை நான் நெவெர் பிபோர் ஸ்பெஷலில் வந்த "இருளில் ஒரு இரும்புக் குதிரை" இதழில் சுட்டிக் காட்டி இருந்தேன்.

ரெண்டாவது கதையின் போக்கு.

இரும்புக் கையன் ஜெத்ரோவை ஓவர் பில்ட் அப் கொடுத்து முதல் ரெண்டு  இதழில் காட்டி
விட்டு  இந்த இதழில் அவன் முடிவு எப்படி நடந்தது என்பதைப் பற்றி சொல்லாமலே விட்டிருப்பது மிகப் பெரிய ஏமாற்றம். டைகர் கையால் சாகாமல் செவிந்திய தலைவர் சிட்டிங் புல் கையால் கொல்லப் பட்டதையே டைகர் ரசிகர்களால் ஒத்துக் கொள்ள முடியாது. அது எப்படி நடந்தது என்பதை காட்டாததை ஒத்துக் கொள்ளவே முடியாது. ஒரு வேளை  அப்படி காட்டி விட்டால் கதை முடித்த பீலிங் வந்து விடும், அடுத்த பாகத்தை ரசிகர்கள் ரசிக்க மாட்டார்கள் என்று கதாசிரியர் நினைத்து விட்டாரோ என்னமோ?.

அப்படி ஜெத்ரோவின் முடிவை காட்டாமல் விட்டு விட்டாலும் அலிஸ்டர் வரும் "தலை கேட்ட தங்க தலையன்" பாகம் ஜவ்வென இழுக்கிறது. ஒரு வேளை ரத்தக் கோட்டை போல நாலு பாகம் கொடுக்க வேண்டிய கட்டாயமோ என்னமோ. இயல்பாக பொருந்தாமல் துருத்திக் கொண்டு தெரிகிறது. உடைந்த மூக்கர்  மீது செவ்விந்தியர் வைத்த  மரியாதையை தகர்த்ததையும், அலிஸ்டரரின் போர் வெறியை  காட்டியதை தவிர வேறு எதையம் இந்த பாகம் சாதிக்க வில்லை.

ஓவியப் பார்வை

1) செவ்விந்தியப் பெரும் படை


2) டைகரை விரட்டும் செவ்விந்தியர்கள்


3) பனியில் செவ்விந்திய முகாம் - ஒரு பறவைப் பார்வை


4) மேற்கில்  சிகப்பாய் ஒரு அஸ்தமனம்


5) அலிஸ்டர் கொண்டு வந்து குவித்த படை - பறவைப் பார்வை


6) செவ்விந்தியர்களின் வேட்டை நடனம்.


யுக்திகள்

1) ஜெத்ரோ மற்றும் செவ்விந்தியர்களிடம் அகப்பட்டுக் கொண்ட டைகர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, வேறு ஒரு இடத்தில் புதைத்து வைத்திருப்பதாக பொய் சொல்கிறார்.
ஆனால் வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறார். அதனால் கிடைக்கும் மூணு நாளில் ஜூல்ஸ் பெர்க் கோட்டையை காப்பற்றலாம் என நினைக்கிறார்.


 
2) பணத்தை தன்  இரு நண்பர்களிடம் கொடுத்து விட்டு விட்டதாக பொய் சொல்கிறார். அவர்களை தாமதப் படுத்தவே அப்படி செய்ததாக சொல்கிறார். கோபமடைந்த  செவ்விந்தியர்கள் ஜெத்ரோவை நெருக்குகிறார்கள்.


3) தன்னை தாக்க ஊரே திரண்டு இருக்கும் போது துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்களை பயமுறுத்தி வெளியே அனுப்பு கிறார்.4) வெளியே போனவர்கள் எண்ணையை ஊற்றி எரிக்க வரும்போது, பீப்பாயை சுட்டு ஓட்டை ஆக்கி தப்பிக்கிறார்.


5 ) மறுநாள் காலை இதற்க்கு மேலும் தாக்குப் பிடிக்க முடியாது என்று தெரிந்து, ஆபத்து என்றாலும் சரணடைகிறார்.6) ரெட் மற்றும் ஜிம்மியை செவ்விந்தியர் ஆற்றை கடக்கும் இடமாக பார்த்து வெடி வைத்து வர அனுப்புகிறார். இதனால் செவ்விந்தியர் வருவது மிகவும் தாமதம் ஆகும்.7) தாங்கள் ஆற்றை கடந்த பிறகு, செவ்விந்தியர் அதே வழியில்  வராத படி ஒரு கோச்சு  வண்டியை இழுத்து வரும்வழியில் போடுகிறார். இதனால் செவ்விந்தியர் வருகை தாமதமாகும்.


8) செவ்விந்தியர் தன்னை தொடர்வதை தெரிந்து கொண்ட பின், அவர்களை தாமதப் படுத்தும் விதமாக வேறு வழியில் செல்லுகிறார்.9) தனியே வரும் செவ்விந்தியனை மடக்க ஒரு மரக் கிளையை வளைத்து கட்டி வைத்து, அவன் அருகில் வந்ததும் அதை வெட்டி விடுகிறார். அதனால் வேகத்துடன் விடுபட்ட கிளை செவ்விந்தியனை சாய்க்க, அவனை கட்டிப் போட்டு விட்டு அவன் குதிரையை எடுத்து கொண்டு கம்பி நீட்டுகிறார்.10) வெடி மருந்து, கூழாங்கல் மற்றும் புகையை வைத்து தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஒரு போர் நடக்கும் எபக்ட் கொடுக்கிறார். இதனால் செவ்விந்தியர் தாங்கள் போகும் திசையில் இருந்து விலகி புகை தெரியும் இடத்துக்கு ஓடி வருகிறார்கள். அதனால் அமெரிக்கப்  படையை தாக்குவது மேலும் தாமதமாகிறது.11) ரெட்டை மட்டும் படையில் இருந்து பிரிந்து போய் ஜெனரல் டாட்ஜை  அழைத்து வர செய்தல். 200 பேர் ஆயுதங்களுடன் என்பது சிறிய  படைபிரிவுக்கு சமம்.


12) ரெட்டை படையில் இருந்து நழுவ செய்ய ஊளையிட்டு கண்காணித்துக்
கொண்டு வரும் அதிகாரியை கீழே விழ செய்து அந்த குழப்பத்தில் ரெட்டை  நழுவச் செய்கிறார்.


13) கடைசியில் தாங்கள் உயிருடன் இருப்பதை குறிக்க ப்யுகிளை ஊதி
டாட்ஜ் தன்னைக் கண்டு பிடிக்குமாறு செய்கிறார். ஜெத்ரோ

1) செவ்விந்தியர்களிடம் இருந்து தப்பிய ஜெத்ரோ, இதனால் டைகர் விடுவிக்கப் படுவார், அவர் பின்னால் சென்றால் பணத்தை அடையலாம் என்று காத்து கிடந்து பணத்தை கைப்பற்றுகிரான்.


2) பணத்துடன் தப்பி ஓட வேண்டிய நிலையில், சிறிது பணத்தை மயங்கி கிடக்கும் டைகரின் பையில்  திணித்து விட்டு செல்வதால், டைகர்தான் திருடி விட்டதாக மற்றவர்கள் நினைக்கும் படி செய்கிறான.

3)  செவ்விந்தியர்கள் ஜெத்ரோவை பணயக் கைதியாக இருக்க வேண்டும் என்று சொல்ல அங்கிருந்து தப்பிக்க கடிதத்தில் "செவ்விந்திய வீரர்களை தாக்கி விட்டு தன்னை கூட்டிக் கொண்டு போகுமாறு எழுதி கொடுக்கிறான்.


4) அவனுடைய சகாக்களுக்கு விஷக் காளான் விஸ்கி யைக் கொடுத்து விட்டு, ஏமாற்ற நினைக்கும் க்ரிசுக்கு துப்பாக்கி குண்டுகளை கொடுக்கிறான்.ரெட்

1) ரெட் பெரிய படை ஒன்று காப்பாற்ற வருவதாக பொய்யாக ஒரு தந்தியை அனுப்பி ஒரு பெரிய திருப்பத்தை ஏற்ப படுத்துகிறார்.


முரண்

இந்த இதழை பாழடித்தது அச்சு தரம் தான்.3D கண்ணாடி போட்டு பார்க்க வேண்டிய  அளவுக்கு மிக மோசமாக இருந்தது. ஒரு பிரதி எடுத்து நன்றாக வந்திருக்கிறதா என்று பார்த்த பின்பே மற்ற பிரதிகளை அச்சடிக்க வேண்டும். தவறாக இருந்தால் வாசகர்களிடம் பிரச்னையை சொல்லி விட்டு, நாள் சில ஆனாலும் புதிதாக அச்சடித்து கொடுத்திருக்க வேண்டும். அதை செய்யாமல்  அப்படியே கொடுத்திருப்பது ரொம்ப வெறுப்பாக இருக்கிறது.

ஆசிரியருடைய வலைப் பூவிலும் இது பற்றிய கேள்விகளுக்கு வெகு நாளாய் பதில் இல்லை. குறைந்த பட்சம் "இது என் கவனத்திற்கு  வந்திருக்கிறது"  என்று சொன்னாலாவது அனைவரும்  அது  பற்றி  பின்னூட்டம் இடுவது குறையும்.

க்ளைமாக்ஸ்

ரொம்ப ஆவலாய் எதிர் பார்த்து ஏமாற்றமாய் முடிந்தது.


Post Comment

13 comments :

 1. மிக நேர்மையான விமர்சனம் - கருத்துக்களை பொறுத்தவரை. வழக்கமான உங்கள் ஆழ்ந்த பார்வை பிரமிக்க வைக்கிறது.

  ஆனால் படங்களை ஆங்கில பொஸ்தவத்துலிருந்து சுட்டது போங்கு - கள்ளாட்டை :-)
  நா ஒத்துக்க மாட்டேன்பா. தமிளு பொஸ்தவத்துக்கு தமிளு டயலாக் இருக்குற ஓவியம்தான் கரீட்டு !

  ReplyDelete
  Replies
  1. 3D பக்கங்களின் கடுப்பில் தான் அப்படி ஆங்கிலத்தில் இருந்து சுட்டு போட்டேன். நன்றி ராகவன்

   Delete
 2. நான் சொல்ல நினைத்ததை மேலே சொல்லியிருக்கும் காமிக் லவருக்கு நன்றி!

  வாக்குத்தவறிய எந்த உறுத்தலுமின்றி நூற்றுக்கணக்கான செவ்விந்தியர்களைக் கொன்றதோடு, அலிஸ்டரை ஆற்றில் மூழ்காமல் டைகர் காப்பாற்றியபோதே அடச்சே என்றாகிவிட்டது!
  கதையின் இறுதியில் குறைந்தபட்சம் டைகர் தனது ராணுவப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீறுநடை போட்டிருந்தாலாவது சந்தோஷப்பட்டிருக்கலாம். மாறாக, விடுமுறை கேட்டு அலிஸ்டர் முன் நிற்கும் டைகரைப் பார்த்தபோது எனக்கு அழுகையே வந்துவிட்டது! ;)

  * இக்கதையின் சிறந்த வில்லனுக்கான விருதை கேப்டன் டைகர் பெறுகிறார்!
  * சிறந்த அறிமுக வில்லனுக்கான விருதை ஜெனரல் அலிஸ்டர் தட்டிச்செல்கிறார்!
  * சிறந்த நாயகனுக்கான விருதை ஜிம்மியும், ரெட்டும் இணைந்து பெறுகிறார்கள்!
  * விஷூவல் எஃபெக்ட்டுக்கான சிறப்பு விருதை திரு. விஜயன் அவர்கள் தட்டிச்செல்கிறார்.
  *பல வருடங்களாக எதிர்பார்த்து ஏமாந்து கதைநெடுக குழப்பத்தையும், சோகத்தையும் இயல்பாய் வெளிப்படுத்திய வாசகர்கள் இந்த வருடத்தின் 'சிறந்த குணச்சித்திர விருதை' பெறுகிறார்கள்!

  சுபம்! :)

  ReplyDelete
  Replies
  1. சிறந்த பின்னுட்ட விருதை ஈரோடு விஜய் பெறுகிறார். :D. நன்றி விஜய்

   //பல வருடங்களாக எதிர்பார்த்து ஏமாந்து கதைநெடுக குழப்பத்தையும், சோகத்தையும் இயல்பாய் வெளிப்படுத்திய வாசகர்கள் இந்த வருடத்தின் 'சிறந்த குணச்சித்திர விருதை' பெறுகிறார்கள்!//

   சிறந்த காமெடி நடிகர்கள் விருது கரெக்டா இருக்கும்

   Delete
 3. பலரும் இப்படியே சொல்வதால் நான் கதையை இன்னும் படிக்கவில்லை. நீங்களும் இப்படி சொல்லிவிட்டதால் படிக்கும் ஆர்வமே போய்விட்டது. டைகர் கதையில் இந்த சொதப்பலான முடிவு ஏமாற்றமே

  ReplyDelete
  Replies
  1. கதயஇன்னும் படிக்கலயா? உங்களால எப்படி ஒரு புத்தகத்த வாங்கிட்டு படிக்காம இருக்க முடியும்ம்னு தோணுது

   Delete
 4. ஆங்கில ஸ்கேன்களை போட்டு நமது காமிக்ஸில் படங்கள் தெளிவாக இல்லை என்பதை கூறிவிட்டீர்கள்

  ReplyDelete
  Replies
  1. 3D பக்கங்களின் கடுப்பில் தான் அப்படி ஆங்கிலத்தில் இருந்து சுட்டு போட்டேன்.

   Delete
  2. 3D பக்கங்களின் கடுப்பில் தான் அப்படி ஆங்கிலத்தில் இருந்து சுட்டு போட்டேன்.

   Delete
 5. நச்சென்று ஒரு பதிவு வாழ்த்துக்கள். இந்த கதையில் இன்னும் ஒரு பாகம் இருப்பதாக எனக்கு படுகிறது. கதை எதற்காக ஆரம்பித்து டைகர் எதற்க்க வரவழிக்க பட்டரோ அதற்கான முடிவு சொல்ல படவில்லையே.. பசிபிக் ரயில்வே கதி என்னவாயிற்று????? எடிட்டர் எதோ விழுங்கி விட்டதாக கருதுகிறேன்.?!?!?!?!?!

  ReplyDelete
  Replies
  1. நன்றி வரத தேசிகன். எனக்கு தெரிந்து கதை அவ்வளவுதான். ஆங்கில மூலத்திலும் அப்படி தான் இருக்கிறது. பசிபிக் கம்பனிக்கு தொல்லை கொடுத்த ஸ்டீல் பிங்கர்ஸ்ச் இறந்துவிட்டான். அத்துடன் கதை முடிந்திருக்க வேண்டும். மேலும் ஒரு பாகம் போட்டு இழுத்ிருக்கிறார்கள்.

   Delete
 6. As usual your review is too good.

  ReplyDelete