Monday, May 20, 2013

ஜில் ஜில் கல்யாணம் - பாகம் 1

கல்யாண கலாட்டா


ஆனந்த விகடனில் இரு வாரங்களுக்கு முன் கல்யாணத்தை வைத்து ஒரு காமெடி கட்டுரை எழுதி இருந்தார்கள். அதன் பாதிப்பில் எழுத ஆரம்பித்ததுதான் இந்த பதிவு. பெரிய பதிவா போயிட்டதால் தொடரும் போட்டு ரெண்டு பதிவா போடுறேன். சில அனுபவங்கள் உண்மை. சில சுவாரஸ்யத்துக்காக நானாக போட்டுக் கொண்டது. (ஹப்பா தப்பிச்சேன் ).  இது நிச்சயம் என் அனுபவங்கள் மட்டுமில்லை உங்கள் அனுபவமும் தான் என்பதால் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.
_________________________________________________________________________________

"கல்யாணம் வேணும் வாழ்வில் கல்யாணம்
உல்லாசமாகவே உலகத்தில் வாழவே
மாப்பிளை ஆகி மணமாலை சூடிடும் கல்யாணம்
ஆஹா கல்யாணம் ஆஹா கல்யாணம்

ஆண்டவன் எனக்கே அருள் புரிந்தானே
ஆகும் என் மணமே, அன்றைய தினமே
ஆகும் என் மணமே, அன்றைய தினமே

ஜலஜா வனஜா கிரிஜா,சரோஜா  ராகினி ரோகினி
எவளோ ஒரு பெண்மணி அவளே என் கண்மணி.
பட்டினப் பெண்ணோ பட்டிக்காடோ
கட்டின ராஜா ஹனிமூன் போவார் "

இது நகைச்சுவை மன்னர் சந்திர  பாபு பாடிய பாடல். கல்யாணத்தைப் பற்றி வந்த காமெடிப் பாடல். இன்றைய கல்யாணங்கள் எப்படி நடக்கின்றன,அதில் பங்கேற்க்கப் போகின்ற
நம் மன நிலை எப்படி இருக்கின்றது  என்பதை என் பார்வையில் நகைச்சுவையாக (?) பதிவு செய்வதே இதன் நோக்கம்.
_________________________________________________________________________________

ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு வரதுக்குள்ள நமக்கு தாவு தீர்ந்து போயிடுது மக்கள்ஸ். சொந்தக்காரங்க முக்கியம் அதிலும், மனைவியின் சொந்தக்காரர்கள் மிக முக்கியம். மனைவி வந்து "ஏங்க என் ஒண்ணு விட்ட சித்தப்பாவோட மச்சினியோட ஓரகத்தியோட நாத்தனாருக்கு கல்யாணமாம். பத்திரிக்கை வச்சிருக்காங்க  நாம  கட்டாயம் போகணும்"ன்னு சொல்லும் போதே ஒண்ணு விடலாம் போல தோணும். விட்ட பிறகு நிகழும் சுனாமி(அழுகை) யையும், நில நடுக்கத்தையும் (பாத்திரங்கள் பறத்தல்) நினைத்து சிவாஜி கணேசன் மாதிரி உதட்டை கடித்து (யோவ் என் உதட்டதான்யா, சீரியஸ் சீனச் சொன்னா சிம்பு மாதிரி யோசிக்கிற ) , கையை நெற்றியில் ரெண்டு தடவை குத்தி உணர்சிகளை கட்டுப் படுத்தி "அதுக்கென்ன போயிடுவோம்ன்னு" ஒரு பிட்ட போட்டு வைப்போம்.

எனக்கு என்ன ஒரு கெட்ட பழக்கமுன்னா எனக்கு பிடிக்காத விஷயத்தை மறந்துடுவேன். அப்பாடா  நாளைக்கு சண்டே லீவுன்னு சந்தோசமா வீட்டுக்கு வந்தா "ஏங்க அன்னைக்கு சொன்னேனே என் ஒண்ணு விட்ட சித்தப்பாவோட மச்சினியோட ஓரகத்தியோட நாத்தனாருக்கு கல்யாணம்னு" அது நாளைக்கு தான் போகணும் சீக்கிரம் படுங்க காலையில சீக்கிரம் 3.30 மணிக்கு எந்திரிக்கணும்ன்னு சொன்னவுடன நமக்கு கண்ணு முழி பிதுங்கிடும். என்னது 3.30 க்கா என்றால் ஆமாம் கல்யாணம் நடக்கிறது ரெட் ஹில்ஸ்ல இங்கிருந்து 45 கிலோ மீட்டர் ரெடியாகி போக வேண்டாமா". அடங் கொன்னியா வைக்கிறதுதான் 
வைக்கிறீங்க எங்க வீட்டுக்கு கொஞ்சம் கிட்டதுல வையுங்க , இல்ல காலை 7.30 - 9.00 முஹூர்த்தமாவது   வைக்காதீங்கன்னா கேக்குறாய்ங்களா.

CSK விளையாடுற மேட்ச்ச 11.30 வரைக்கும் பாத்துட்டு தூங்குனா 3.30 மணிக்கு "மேச்ச பாத்துட்டு தூங்குறத பாரு. யோவ் எந்துரியா" னு எனக்கு தெரியாதுன்னு ஒரு உதை விழும். திரும்ப 3.45 மணிக்கு எனக்கு கொஞ்சம் முழிப்பு வந்த பிறகு "அய்த்தான் சீக்கிரம் எழுந்திரிங்க அய்த்தான் " ன்னு இப்பத்தான் என் காலை தொட்டு கும்பிட்டுட்டு போன  எபெக்ட் கிடைக்கும்.  

குளிச்சுட்டு வந்து ட்ரஸ் பண்ணலாம்ன்னு பார்த்தா "நான் இங்கே எடுத்து வச்சிருக்கேன்னு" அசரீரி வரும். அங்க பார்த்தா ஆகப் பழசா ஒரு டிரஸ் இருக்கும். "இதுதாங்க நான் போன வாரம் வாங்கின என் சேலைக்கு மேட்சா இருக்கும்ன்னு" மேடம் சொன்னா தட்ட முடியுமா?. இதில் சீரியல் ஆக்ட்ரஸ் லதா ராவும் அவ புருஷனும் இதே மாதிரிதாங்க கட்டுறாங்கன்னு வியாக்கியானம் வேற. அந்த   ராவ முதல்ல ராவனும்னு மனசுக்குல கருவிகிட்டே வண்டியை எடுத்தேன்.

ஒரு வழியா மண்டபத்த கண்டு புடிச்சு போய் சேர்வோம். அதிலும் என் ராசி இருக்கே , நா மட்டும் மல்லு வெட்டி மைனர் மாதிரி தனியா போற கல்யாணதுல எல்லாம் "ஏம்பா வெள்ளையம்மா பேரனா நீயி" ன்னு கேக்குற பல்லு போன பாட்டிகதான் பன்னீர் தெளிக்குது. என்னமோ போடா ராஜ குமாரா (ஹி ஹி என்னையதான் சொன்னேன்).

வாசலில் தெரிந்தவர்கள் யாருமில்லை என்றால், பேனரில் பொண்ணு மாப்பிளை பேரை பார்த்து உறுதி படுத்திக் கொண்டுதான் போவேன். அந்த பேனரில் என்னா அதகளம். பேனரில் மேல் போர்சனில் இருந்து இஷ்ட தெய்வங்கள் பூ மற்றும் தண்ணீரை (ஆசியை) மாப்பிள்ளை பொண்ணு படங்கள் மீது பீய்ச்சி அடித்து கொண்டிருக்கும். நடு போர்சனில் போக்கிரி தளபதியோ, மங்காத்தா தலயோ ஸ்டெப் போட்டுக் கொண்டு இருப்பார்கள். அரசியல் சம்பத்தப் பட்டவர்கள் கல்யாணமாக இருந்தால் அய்யன் அய்யா இருப்பார், இல்லையென்றால்  தமிழன்னை கண்ட அன்னை கும்பிட்டு கொண்டு இருப்பார்கள். கீழ் போர்சனில் தான் உண்மையான காமடி இருக்கும். நிச்சயமாக இந்த பேனர் நண்பர்கள் வைத்ததாகதான்  இருக்கும். அவர்கள் அடைமொழிதான் குபீர் சிரிப்பை வரவழைக்கும். போக்கிரி சுரேஷ், ரெட் ராஜேஷ் ஒரு வகை என்றால் நாய் சேகர், பாம்பு நாகராஜ், நண்டு ஜெகன் , கிளி சண்முகம் , சீரும் சிங்கம் ராதா கிருஷ்ணன் மற்றொரு வகை.

மண்டபத்துக்குள்ள போயி, மனைவி அறிமுகப் படுதுரவங்க எல்லார்ட்டையும் பொறக்குறதுக்கு மின்னாடி இருந்தே பழக்கம் மாதிரி "எப்பிடி இருக்கீங்க எப்பிடி இருக்கீங்க"
ன்னு பல்லவியை  விடாமல் பாடி முடிச்ச பிறகு  பேனுக்கு கீழ போய்  உக்காந்தமுன்னா உயிர் போய் உயிர் வந்திருக்கும்.
                                    
                                                                                                                              - தொடரும்


Post Comment

11 comments :

 1. // சீரும் சிங்கம் ராதா கிருஷ்ணன் //

  யாரு அது நம்ம ராதா அண்ணாட்சியா ?

  போஸ்டர்ல இருந்த 'ராக்கிங் ஸ்டார் ராஜ்' அப்படின்ற பெயர் இதுலே விடுபடுதே ... என்ன நடக்குது ?  ReplyDelete

 2. ///போஸ்டர்ல இருந்த 'ராக்கிங் ஸ்டார் ராஜ்' அப்படின்ற பெயர் இதுலே விடுபடுதே ... என்ன நடக்குது ?

  //

  நம்ம பெர நாமலே பப்ளிக்குட்டி பண்ணக் கூடாதுன்னுதான் போடல ;D

  ReplyDelete
 3. // இது நிச்சயம் என் அனுபவங்கள் மட்டுமில்லை உங்கள் அனுபவமும் தான் என்பதால் ரசிப்பீர்கள் என நம்புகிறேன். //

  நன்றாக ரசித்தேன் நண்பரே தொடருங்கள் உங்கள் சேவைகளை :))

  // (யோவ் என் உதட்டதான்யா, சீரியஸ் சீனச் சொன்னா சிம்பு மாதிரி யோசிக்கிற ) , //

  ஹா ஹா ஹா :))


  .

  ReplyDelete
 4. மனைவி வீட்டு கல்யானம்னாலே எனக்கும் கண்ண கட்டிடும்

  ReplyDelete
 5. // எனக்குப் பிடிக்காத விசயங்களை மறந்துவிடுவேன் //
  ஓ! நீங்களுமா?

  // தெரியாதுன்னு ஒரு உதை விழும் //
  ஓ! உங்களுக்குமா?

  // அந்த ராவ முதல்ல ராவணும் //
  ஹா! ஹா! ஹா!

  சுவாரஸ்யம்! சீக்கிரமா இதன் அடுத்த பாகத்தைப் போடுங்க!

  ReplyDelete
 6. @Lucky Limat லக்கி லிமட் :நன்றி லக்கி உண்மையா சொன்னதுக்கு.

  ReplyDelete
 7. @Erode VIJAY :என்னடா வழக்கமாக பின்னோட்டம் இடுபவர்களை காணோமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை இந்த பதிவு பிடிக்கவில்லையோ என்று நினைக்க வைத்து விட்டது. உங்கள் வருகை அந்த சந்தேகத்தை நிவர்த்தி பண்ணி விட்டது. நன்றி விஜய்.

  பூனைக் குட்டி, நாய் குட்டி போய் இப்போ சிக்காகோ புல் வந்து விட்டதே? :D

  ReplyDelete
 8. சிறப்பாக கட்டுரையை தந்துள்ளீர்கள்

  ஜில் ஜில் கல்யாணம் - பாகம் 1 +பாகம் 2
  அன்புடன்

  ReplyDelete
 9. நன்றி முஹம்மதலி. அடிக்கடி வாருங்கள்

  ReplyDelete