Monday, April 8, 2013

அறுசுவை அலசல் பசேரா - ஒரு பரக்காவெட்டி பதிவு (Hotel Basera Review)
என்  நண்பர் ஒருவரின் பிரிவு உபசார விழாவிற்கு (Farewell Party மக்களே)  பசேராவிற்கு போனோம். ECR உள்ள மிகப் பிரபலமான உணவகம். நிறைய மரங்களின் நடுவே இருக்கும் இந்த உணவகத்தில் குயிலின் குரலை கேட்டுகொண்டே சாப்பிடுவது ஒரு நல்ல அனுபவம்.

இடம்

பசெரவில் உள்ள மற்ற வசதிகள் தான் அதை மற்ற உணவகங்களில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. உள்ளே நுழைந்தவுடன் என்னைக் கவர்ந்தது மூன்று விஷயங்கள்.

1) குட்டீஸ் விளயாட Play Area
2) மர வீடுகள்
3) சிறு குளம் மற்றும் நிறைய மரங்கள்.


குட்டீஸ் Play Area

புத்திசாலிததனமாக குட்டீசுக்கு விளையாட ஒரு இடம் விட்டிருகிறார்கள். குட்டீஸ் சாப்பிட்டவுடன் அங்கே விளையாட விட்டு விட்டு குட்டீசின் தொல்லை இல்லாமல் இருக்கலாம்.


மர வீடு


மரவீட்டில்  7 முதல் 10 பேர் அமரலாம். உணவு அங்கேயே வரும்,நமக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஆனால் நீங்கள் ஒன்றிரண்டு பேர் என்றால் மரவீட்டில்  உணவருந்த முடியாது.நாங்கள் மர வீட்டிற்க்கு போகாமல் உணவக கட்டிடத்திற்கு
சென்றோம். சாயங்காலம்  மர வீட்டை முயற்சிக்காமல் இருப்பது நல்லது. 
கொசு, பறவைகள் தொல்லை இருக்க வாய்ப்பு உள்ளது.

குளம்
சின்ன குளம் வெட்டி அதில் வாத்துக்களை விட்டிருக்கிரார்கள். கண்ணுக்கு குளுமையாக இருக்கிறது.


என்ன வேணும் தின்னுங்கடா டேய்

என் நண்பர் Buffet  என்று சொல்லி விட்டதால் அடி தூள் கிளப்பலாம் என்று கைகளை பரபரவென்று தேய்த்துக்கொண்டு காத்திருந்தோம். 10 பேர் சாப்பிடக் கூடிய மேஜையில் ரெண்டு குழிகள் இருந்தன. அவை எதற்கு என்று, அதில் பணியாள் வந்து கரி அடுப்பை வைத்த போது தான் புரிந்தது.

முதலில் சூப் சாப்பிடுவோம் என்றார்கள். நாங்கல்லாம் எங்க ஊரில், நாளைக்கு பக்கத்துதெரு  பாய் வீட்டில் கல்யாணம் என்றால் இன்னையில் இருந்து பட்டினி கிடக்கிற ஆளுங்க. சூப்பு குடிப்பதெல்லம் நமக்கு சரிப்பட்டே வராது. சபை நாகரீகத்துக்காக கொஞ்சமா  எடுத்துகிட்டு வந்து குடித்து முடித்தேன்.

பார்பிக்யு ஸ்டார்ட்டர்

வரிசையா கம்பியில் குத்தி குத்தி சிக்கன், மட்டன், எறா மீன் என்று  கொண்டு வந்து கொண்டே இருந்தார்கள். மேலே தடவ மிளகாய் சாஸும், இனிப்பு சாஸும் வைத்திருந்தார்கள். கொஞ்சம் எடுத்து தடவி அடுப்பில் வேக விட்டு, கொஞ்சம் திருப்பி விட்டு பிறகு  எடுத்து சாப்பிட்டால், கேபிள் ஜியின் பாணியில் சொல்ல வேண்டுமானால் "டிவைன்", வீடு திரும்பல் மோகன் குமாரின் பாணியில் சொல்வதென்றால்  "தாறுமாறு".


முதலில் சாப்பிடும் வேகம் அதிகமாக இருக்கும் அந்த சமயத்தில் நன்றாக வெந்ததும், நேரம் செல்ல செல்ல, முக்கால்வாசி வெந்ததுமாக (நாம் அனலில் காட்டிக் கொள்ளலாம்) சரியாக கொடுத்து அசத்தி விட்டார்கள்.     இந்த மாதிரி சாப்பிடும்போது காலி ஆக  ஆக வந்து கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சம் நேரம் காத்திருந்தாலும் பசி போய் எரிச்சல் வந்து விடும். எங்கள் வேகத்துக்கு சளைக்காமல் கொண்டு  வந்து கொண்டே  இருந்தார்கள். ஒரு வழியா
போதும்யா இனிமே முடியாதுங்குற லெவெலுக்கு வந்தவுடன் (எந்திருச்சு வந்துட்டேன்னு
 நினச்சீங்களா ? தம்பி,உங்கள பாத்தா எனக்கு பாவமா இருக்கு :D  )  அப்புறம் தான் மெயின் சாப்பாடே ஆரம்பிக்கிறோம்.

மெயின் கோர்ஸ்

சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, செட்டிநாடு சிக்கன், சிக்கன் மொஹலாய், தயிர் சோறு, அப்பளம், ஊறுகாய் என்று அசத்தி இருந்தார்கள் மட்டன் பிரியாணியும், சிக்கன் மொஹலாயும் ஆஹா ரகம்.

டெசெர்ட்ஸ்

சாதாரணமாக உணவு இருக்கும் பக்கத்திலேயே டெசெர்ட்ஸும் இருக்கும். இங்கே பார்த்தால் காணவில்லை. அடடா நமக்கு வாச்சது அவ்வளவுதான்னு  சீட்டில் வந்து உக்காந்தா நண்பன் ஹாட் குலோப் ஜமுனை  ஐஸ் க்ரீமில் போட்டு சப்புக் கொட்டிக் கொண்டு இருந்தார்.எங்கடா  இருக்கு என்றால் எதிர் பக்கத்தை கை காட்டினார். டெசெர்ட்ஸ் வெரைட்டி நிறைய இருந்ததால் உணவுடன் வைக்காமல் எதிர் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள். ஏறக்குறைய 20 வெரைட்டி இருந்தது. அவ்வளவையும் டேஸ்ட் பண்ண  நான் மூன்று முறை டெசெர்ட்ஸ் டேபிளுக்கு நடக்க வேண்டி இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.ஐஸ் கிரீம் (வெண்ணிலா, ஸ்ட்ராபெர்ரி, பிஸ்தா), ஹாட் குலோப் ஜாமுன், கேரமல் கஸ்டர்ட்,  கோல்ட்  கேக் வெரைட்டிகள், பாதாம் கீர் என்று போய்க் கொண்டே  இருந்தது. ஹாட் குலோப் ஜாமுனை ஐஸ் கிரீமில் போட்டு சாப்பிட்டால் வரே வாவ் தேவாமிர்தம் எப்படி இருக்குன்னு தெரியும்.

மொத்தத்தில் டீமுடனோ அல்லது  குடும்பத்துடனோ கட்டாயம் போக வேண்டிய ஒரு ரெஸ்டாரன்ட்.

பபெட் விலை

Week Days  :Veg ரூ 549 Non Veg  ரூ 599  
Week End    :Veg ரூ 625  Non Veg  ரூ 675

* Lunch and Dinner Same rate
* Service tax extra & Price subject to change

மிகவும் பிடித்தவை

1) சர்வீஸ்
2) ஸ்டார்டர்
3) டெசெர்ட்ஸ்
4) ப்ளே ஏரியா,மரவீடு, குளம்

பிடிக்காதவை

1) சொந்த வாகனம் இல்லை என்றால் சோழிங்கநல்லூரில் இருந்து  வந்து செல்வது கஷ்டமாக இருக்கிறது.

2) வெளியில் மர டேபிளில் உணவருந்தும் போது கூரை இல்லாததால் பறவை எச்சம் நம் மேல் விழ வாய்ப்பு உள்ளது,

3) வெளியில் மர டேபிளில் உணவருந்தும் போது சாயங்காலம் கொசு தொல்லை இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

பின்குறிப்பு

1) வெளியேவும் உணவருந்த மர டேபிள் போட்டு பரிமாறுகிறார்கள். ஆனால் மேலே கூரை எதுவும் கிடையாது. பறவைகள் தொல்லை இருக்கும். அதனால் அப்படி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

2) மரவீட்டிலும் சாயங்காலம் கொசுத் தொல்லை இருக்கலாம்.

3) ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் ரெஸ்டாரன்ட்டுக்குள் சென்று  உணவருந்தலாம். அப்படி நீங்கள் பிளான் பண்ணினால்  ஒரு நாளுக்கு முன் ரிசர்வ் செய்வது நல்லது.

Image Courtesy

1) Picaso
2) CherrySpace.blogspot.com 
3) OpenRice.com   

* ஸ்டார்ட்டர் மற்றும் டெசெர்ட்ஸ் படங்கள் பசெராவில் எடுக்கப் பட்டவை அல்ல.

Post Comment

12 comments :

 1. நானும் அந்தப்பக்கம் போகும்போது பார்த்திருக்கிறேன். தகவல்களுக்கு நன்றி...

  ReplyDelete
 2. இதே போல திநகர் இல் இருக்கும் பார்பிக்யு நேசன் உணவு விடுதியும் நன்றாக இருக்கும்.
  விலையும் இதே மாதிரி தான் இருக்கும்.

  முக்கியமாக வெஜிடேரியன் எப்படிஇருந்தது என்று கூறுங்கள். எங்களுக்கும் உபயோகமாக இருக்கும் அல்லவா.

  ReplyDelete
 3. @ஸ்கூல் பையன்: வருகைக்கு நன்றி. அடிக்கடி வாருங்கள்.

  ReplyDelete
 4. @திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்: வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 5. @கிருஷ்ணா வ வெ: நானும் பார்பிக்கு நேசன் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். வெஜ்ஜை பொறுத்தவரை ரொம்ப சூப்பரும் இல்லை ரொம்ப சுமாரும் இல்லை ராகம் தான்.

  ReplyDelete
 6. ஆஹா.....டிவைன்!!!!!

  இதுக்குப் பக்கத்துலே இருக்கும் மால்குடிக்குப்போயிருக்கோம். அடுத்தமுறை

  இங்கே. வெஜ் நல்ல ஐட்டம்ஸ் இருக்குதானே? எட்டியாவது பார்த்தீங்களா?

  ReplyDelete
 7. @துளசி கோபால் : ஸ்டார்ட்டர் களில் ஒன்றிரண்டு டேஸ்ட் பார்த்தேன். பன்னீர் மற்றும் பைன் ஆப்பிள் ஸ்டார்ட்டர் நன்றாக இருந்தது. புலாவ் மற்றும் பன்னிர் போட்ட கிரேவி நன்றாக இருந்தது.

  ஆனால் வெஜ் VS நான் வெஜ் என்று கம்பேர் பண்ணினால் நான் வெஜ் ஐட்டங்கள் நன்றாக இருந்ததாக ஒரு பீலிங்.

  ReplyDelete
 8. அட இப்பத்தான் சாப்பிட்டு முடிச்சேன். ஆனா மறுபடியும் பசியை கிளப்பிபுட்டீங்களே!..........

  ReplyDelete
 9. @Erode M.STALIN: சும்மா இன்னொரு தபா சாப்பிடலாம் ஸ்டாலின். :D

  ReplyDelete
 10. பார்ட்டியில் சாப்பிட்டு முடிச்சப்புறம் பேண்ட் பட்டனெல்லாம் தெரிச்சு ஓடியிருக்குமே?

  ஹோட்டலை விட்டு வெளியே வந்தபிறகு எட்டு மாச புள்ளைத்தாச்சி மாதிரி நடந்து போயிருப்பீங்களே?

  ம்ஹூம்!

  எது எப்படியோ, ஹாட் குலோப் ஜாமூனில் ஐஸ்க்ரீமைப் போட்டால் அதுதான் அமிர்தம்னு இன்னிக்கு உங்க மூலமா தெரிஞ்சுக்கிட்டேன் ;)

  உங்க பாணியிலான hot n cool spl விமர்சனத்தை விரைவில் எதிர்பார்க்கலாமா?

  ReplyDelete
 11. @Erode VIJAY: பட்டன் தெரிக்காமா இருக்க 1 சைஸ் லூசா இருக்கிறமாதிரி ஒரு பேன்ட் அன்னக்கி மட்டும் போட்டுகிறது எப்பூடி ?  ஹாட் அண்ட் கூல் விமர்சனம் போட்டோ செசன் இந்த வார இறுதியில் தான் முடியும். அப்புறம்தான் பதிவு.  போன் நம்பர வாங்கிட்டு இன்னமும் போன் பண்ணாம இருக்கீங்க ?

  ReplyDelete