Tuesday, April 16, 2013

ஷெல்டன் - ஒரு ஒப்பந்தத்தின் கதை (The Contract )


என்  மன வானில்

NBS இல் வந்த ஷெல்டனின் முதல் இரு கதைகளின் போது அரை மனதாக ஏற்றுக் கொண்டேன் ஷெல்டனை. இந்த இதழில் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள வைத்து விட்டார். இந்த HOT & COOL Special-லில்  (பெயர் உபயம் : காமிக்கேயன் என்று அன்பாக அழைக்கப் படும் கார்த்திகேயன்), HOT க்கு அர்த்தம் சொல்பவர் ஷெல்டன். இந்த கதையை  படிக்கும் ஒவ்வொருவருக்கும் தன் மனதில் நின்ற அதிரடி ஆக்சன் படம் மனதில் வரவில்லை என்றால் அவர் படம் பார்க்கதவராகதான் இருக்க வேண்டும். அந்த அளவு அதிரடி சண்டைக் காட்சிகளுடன் விறு விறு என்று போகிறது.

கதை

ஷெல்டன் கதைகள் ஒவ்வொன்றும் மூன்று பாகங்களில் முடியும். அதன் பிரகாரம் இது முதல் சாகசத்தின் கடைசி பாகம். முதல் ரெண்டு பாகங்கள் முத்து காமிக்ஸின்  சரித்திர இதழான Never Before Special லில் வந்தது.

முதல் இரண்டு பாகங்களில் லாய்ரெட் என்ற பிரெஞ்ச் டிரைவரை கலாக்ஜிஸ்தானில்  இருந்த தப்புவிக்க தன் குழுவுடன் செல்லும் அந்த சாகசத்தில் தன்
உயிர் நண்பர்களான  சர் ஜோனதான் மற்றும்  ஜுவான்னை இழக்கிறார்.  அந்த குழுவிற்கு  புதியவரான போஜாசிக்கும் பலியாகிறார். அதற்க்கு காரணமான குவெயில் இருக்கும் கட்டிடத்திற்கு வெடி வைத்து விட்டு வருவதோடு ரெண்டாம் பாகம்  நிறைவுற்றது. 

இந்த நிறைவு பாகத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு சேரவேண்டிய தொகையை பட்டுவாடா செய்யப் போகிறார். ஆனால் அவருக்கு தெரியாத  அவர் உயிர் குடிக்கும் ரகசியம் ஒன்று இருக்கிறது. அதனால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தாக்கப் படுகிறார். தாக்கிய கொலையாளிகளுக்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லை. குழம்பி போயிருக்கும் ஷெல்டனை காக்க இன்டர்போல் அம்மணி லுவான் வருகிறார்.

அவர் உதவியுடன் தன்னை கொலை செய்ய நினைக்கும் வில்லனை தன் ஸ்டைலில் கொல்கிறார். அப்படி கொல்ல தன்னை தானே கொன்று  கொள்கிறார்(அப்படி நடிக்கிறார்). செத்தான் ஷெல்டன் என்று வில்லன் மனநிறைவுடன் தன்னை காப்பாற்றிக் கொண்டிருக்கும் கருவிகளை செயலிழக்க வைக்க, திடுமென்று ஷெல்டன் மீண்டு வந்து வில்லனுக்கு அதிர்ச்சி கொடுத்து பரலோகப் பாதையை (ஹி ஹி டைகர்  ஸ்பெஷலையும் சேர்த்து படித்ததின் விளைவு) காட்டுகிறார்.

ஓவியப் பார்வை

1) ஆரம்ப ஓவியமே அசத்தல். ஒரு விமானம் தரை இறங்குவதை எவ்வளவு அழகாக வரைந்திருக்கிறார்.2) அதிரடியான கார் சேஸ்3) ஷெல்டனை முத்தமிட்டு பைக்குடன் கட்டிபோடும் லுவான். "முத்தமிட தோன்றுமளவிற்கு நீ ஒன்றும் மன்மதனல்ல" என்று சொல்லும் லுவான்.4)  அதற்க்கு பதிலடி கொடுக்கும் ஷெல்டன்.5) வில்லனின் இடத்தை காண்பிக்கும் போதெல்லாம் சாவின் நிறமான வெண் சாம்பல் நிறம் தூக்கலாக இருப்பதை பாருங்கள்.6) இரவில் வெடித்து சிதறும் கார் .7) பறவைப் பார்வையில் நகரம்


8) சர் ஜோனதன் மாளிகையில் நடக்கும் துப்பாக்கி சண்டை9) வெடித்து சிதறும் ஹெலிகாப்டர்10) மாளிகையின் மீதி வெடித்து விழும் ஹெலிகாப்டர்.11) இந்த ரெண்டு பிரேம்கள் உங்களுக்கு ஒரு ஹாலிவூட் ஆக்சன் படத்தை நினைவு படுத்த வில்லை என்றால், அட போங்க சார்


12) நியூயார்க் நகரம் உறங்கும் வேளை ...13) பிரிட்ஜ்
13) செத்தான் ஷெல்டன் என்று வில்லனின் முகத்தில்  தோன்றும் நிம்மதியைப் அழகாக வரைந்திருப்பதை பாருங்கள். 14) தன் முடிவை தானே தேடிக் கொண்ட விரக்தியில் உயிர் விடும்  வில்லன்.15) இது ஒரு தனித்தன்மை உள்ள ஒரு பிரேம். திருக்குறளை உதாரணதிற்கு காட்டி  இருக்கிறார். இது வரை யாரும் இப்படி செய்திருக்கிறார்களா ? தெரிந்தால் பின்னூட்டம் இடவும்.

ஒண்ணரை அடிக் குறளை நாலடியாராகியது எனக்கு பிடிக்கவில்லை. பலூனை இழுத்து ஒண்ணரை அடியிலேயே கொண்டு வந்திருக்கலாம்.

 

அட்டைப் படம்

முன்னட்டை

ஒரிஜினல் அட்டை
ஒரிஜினல் அட்டைப்படத்தில் ஒரு காரின் ஹெட் லைட் பின்னணியில் இருக்கும். இந்த அட்டைபடத்தில் சில டிசைன் செய்து மெருகேற்றி இருக்கிறார்கள். எனக்கு பிடித்திருக்கிறது.

பின்னட்டை

முன்னட்டை எவ்வளவு பிடித்ததோ அவ்வளவு பின்னட்டை பிடிக்கவில்லை, சிக்பில் குழுவினரின் அட்டை லோ ரெசொலுசன் ஆக இருந்தது திருஷ்டி பரிகாரம். சின்னதாக கட்டம் கட்டி மூலைக்கு மூலை டிசைன் போட்டு, அந்த டிசைன் சிக் பில்லின் தலையில் உட்கார்ந்து சிக் பில்லை கேலிக் கூத்தாக்கி விட்டது.

ஹை ரெசலுசன் படம் தேவை. மூலைக்கு மூலை டிசைன்  தேவையா ?

 க்ளைமாக்ஸ்

இந்த கதையை படித்து முடித்த பொழுது, அதிரடி ஆக்சன் சினிமாவைப் பார்த்துவிட்டு வெளியே வரும் மனநிலையிலேயே இருந்தேன். க்ளைமாக்சில் வில்லன் அவன் கையாலேயே சாவது எதிர்பாராத ட்விஸ்ட். லயனின் ஆக்சன் ஸ்குவாடிற்கு ஷெல்டனை  முழு மனதுடன் வரவேற்கிறேன்.

____________________________________________________________________________________

தொடர்புடைய மற்ற பதிவுகள்

1) முதல் ரெண்டு பாகங்களுக்கான என்னுடைய பதிவு

2) எடிட்டரின் பதிவு

3) லயன் காமிக்ஸ்: ஹாட் & கூல் ஸ்பெஷல் April 2013

4) டைகர் ஸ்பெஷல் 1 & ஒரு ஒப்பந்தத்தின் கதை

____________________________________________________________________________________

Post Comment

18 comments :

 1. ஒவ்வொரு பதிவுக்கும் உங்கள் உழைப்பு என்னை வியக்க வைக்கிறது. வழக்கம்போல் அருமையான விமர்சனப்பதிவு. ஷெல்டன் ஐ இந்த இறுதி பாகத்தில் எனக்கு பிடித்துவிட்டது.
  தொடர்ந்து அசத்த என் வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
 2. சித்திரங்கள் அனைத்தும் அருமை.
  பதிவு அதனை விட அருமை.

  // லயன் காமிக்ஸ் சரித்திர இதழான Never Before Special லில் வந்தது.//
  மன்னிக்கவும் அது முத்து காமிக்ஸின் சரித்திர இதழ்.
  லயன் காமிக்ஸின் இதழ் இன்னும் வரவில்லை.2014 இல் எதிர்பார்க்க படுகிறது.

  அந்த விமானத்தில் இருந்து பார்க்கும் இரவுநேர லண்டனை நான் படிக்கும் பொழுது கவனிக்க தவறிவிட்டேன்.
  அடுத்த பதிவிலாவது உங்களது பார்வையை ஒத்துப்போக முயற்சி செய்கிறேன்.

  ஆங்கிலத்தில் நான் ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் தமிழில் படிக்கும் பொழுதும் நன்றாகவே இருந்தது.

  எனக்கும் பின்னட்டை பிடிக்கவில்லை முன்னட்டை போலவே பின்னட்டையும் முழு தாக இருந்திருக்கலாம் கட்டம் கட்டி இருக்க தேவையில்லை.

  ReplyDelete
 3. @P.Karthikeyan : நன்றி நண்பரே. பதிவில் சொன்னது போல எனக்கும் ஷெல்டன் பிடித்துப் பொய் விட்டார்.

  ReplyDelete
 4. @கிருஷ்ணா வ வெ: நன்றி கிருஷ்ணா. முத்து காமிக்ஸின் சரித்திர இதழ் என்று மாற்றி விடுகிறேன்.

  ReplyDelete
 5. சித்திரங்களை கூர்ந்து நோக்கி அனுபவிக்கும் உங்கள் கோணம் சிலிர்க்க வைக்கிறது.

  ReplyDelete
 6. வில்லனின் இடம் வெண்சாம்பல் நிறம் தூக்கலாக இருப்பது ! சித்திரங்களை அனுபவித்து பதிவிட்டிருக்கிறீர்கள் .தொடர்ந்து தூள் கிளப்புங்கள் . .

  ReplyDelete
 7. உங்களைப் போலவே எனக்கும் ஷெல்டனை முதலிரண்டு பாகங்களில்விட இதில்தான் பிடித்திருக்கிறது. மனுசன் இளசுகளுடன் ஆட்டம்போடுவதை நிறுத்திக் கொண்டால் இன்னும் கொஞ்சம் பிடித்துப் போவார் என்று நினைக்கிறேன். பொறாமையாருக்கோல்லியோ? (கூடவே, நாற்பத்தைந்திலும் இருபது கிட்டும் என்ற நம்பிக்கையையும் ஷெல்டன் கொடுக்கத் தவறுவதில்லை!) :)

  வழக்கம்போலவே, இந்தக் கதையையும் நண்பர் ரா.மு.கு நன்றாகவே ரசித்து, ருசித்து, புசித்திருக்கிறார். ( சில ஃபோட்டோக்கள் எடுக்கப்பட்ட கோணங்களில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்)

  கார்த்திக்கை புலனாய்வு பதிவர் என்று கூறினோமென்றால், உங்களை தாராளமாக 'கலையாய்வுப் பதிவர்' என்று சொல்லிடலாம்! ஒரு மனுசன் இந்த அளவுக்கா ரசிப்பது?!!

  ரொம்ப நாளுக்குப் பிறகு தோன்றிய ஒரு மொக்கை சந்தேகம் - 'அடிப்படையில், நீங்கள் ஒரு ஓவியரா?'


  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. விஜய் அப்போ நீங்க 'பதிவாய்வு பின்னூட்டர்' :-) :-)

   Delete
  3. பதிவாய்வு பின்னூட்டர்? :) :)

   ராகவன்ஜி, இதிலே ஏதும் உள், வெளி, நடுக் குத்து இல்லையே? :)

   Delete
  4. //(கூடவே, நாற்பத்தைந்திலும் இருபது கிட்டும் என்ற நம்பிக்கையையும் ஷெல்டன் கொடுக்கத் தவறுவதில்லை!) :)//

   நம்பிக்கை தானே வாழ்க்கை :D

   // ( சில ஃபோட்டோக்கள் எடுக்கப்பட்ட கோணங்களில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்)//

   சில சமயம் நானே புத்தகத்தை பிடித்துக் கொண்டு போட்டோ எடுப்பதின் விளைவு அது. இனிமேல் என் மகனை கூட்டு சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

   //கார்த்திக்கை புலனாய்வு பதிவர் என்று கூறினோமென்றால், உங்களை தாராளமாக 'கலையாய்வுப் பதிவர்' என்று சொல்லிடலாம்! ஒரு மனுசன் இந்த அளவுக்கா ரசிப்பது?!!//

   கலா ரசிகன் என்று கூட சொல்லலாம். கலா யாருன்னு கேக்க கூடாது ஆமாம். :D

   //ரொம்ப நாளுக்குப் பிறகு தோன்றிய ஒரு மொக்கை சந்தேகம் - 'அடிப்படையில், நீங்கள் ஒரு ஓவியரா?'//

   மிக அடிப்படை ஓவியம் வரைய தெரியும். ஆர்வம் உண்டு.

   Delete
 8. பின்றீங்க! கலாரசனை காமிக்ஸ்டா ப்ளாக் கண்ணுக்கு விருந்தாக அமைந்து விட்டது! ஷெல்டனை முன்னமே என்கி ரெம்ப ரெம்ப பிட்ச்சிட்டான்! நிம்பள் இப்போ சொல்றான்! பாக்கப் பாக்கப் பலபேர்க்கும் புடிச்சிடும்னு இந்த லால் சேட் சத்யம் பண்றான் சத்யம்! அட்த்த சாகஸத்ல வியட்நாம்ல லெப்டினென்ட்டா பாத்தா அதிரடிக்கும் அழகில் அசத்துவான் நம்மாளு!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜானி ஜி.

   //அதிரடிக்கும் அழகில் அசத்துவான் நம்மாளு!//

   அதிரடி அழகிகள் உண்டுன்னு சொல்லுங்க :D

   Delete
 9. நிறைய மெனக்கெடுகிறீர்கள். வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே. அடிக்கடி வாருங்கள்.

   Delete
 10. வில்லன் மாளிகை - சாம்பல் நிறம். எப்படியய்யா உங்களால் மட்டும் இதனை கவனிக்க முடிகின்றது ?.. சான்ஸே இல்லை.. சூப்பர்.. ஒவ்வொரு பதிவிலும் எதாவது ரசிக்க / மீண்டும் ரசிக்க வைக்கிறீர்கள்..

  ReplyDelete
 11. @RAMG75: நன்றி ராம்ஜி . எழுதாமல் விட்ட ஒன்றை சொல்லட்டுமா ? சர் ஜொனதனின் மாளிகையை பாருங்கள் இரவில் காட்டியிருப்பார். அதை நல்ல விளக்குகளுடன் ஜேக ஜோதியாக வரைந்திருக்கலாம் அப்படி இல்லாமல் மிக குறைந்த விளக்கு களுடன், வெளியே தெரியும் மரங்களும் குச்சி குச்சியாக இருக்கும். இதை சர் ஜொனதனின் மறைவுக்கு அவர் மாளிகையே வருத்ததுடன் இருப்பது மாதிரி வரைந்திருப்பார்.

  போட்டா எடுக்க மறந்து விட்டதால் அதை விட்டு விட்டேன். நாளை மீண்டும் வாருங்கள் கிட்டை பார்க்க.

  ReplyDelete