Friday, April 26, 2013

டைகர் ஸ்பெஷல்


என் மன வானில்

முதலில் டைகர் ரசிகர்கள்/வெறியர்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஆக  கடைசியாக டைகருடைய பதிவை இடுவதற்கு.டைகர் இதழ்களில்  அவருடைய  சர்வைவிங் டெக்னிக்ஸ் நிறைய  கவர்   பண்ண வேண்டி இருப்பதால் சிறிது நேரம் எடுத்துக் கொண்டு விட்டது. போன ரெண்டு பதிவுகளில் எடுத்த போட்டோக்களை ஈரோடு விஜய் கழுவி கழுவி ஊற்றிவிட்டதால் புதிய பதிவில் போட்டோக்களை சரியாக எடுக்க வேண்டி இருக்கிறது. நான் டிஜிடல் கேமெரா வைத்து தான் படங்களை பதிவு செய்கிறேன். அதனால் கிளார் அடிப்பதை தவிர்க்க சூரியன் மேலே எழும்பாத அதிகாலை வேலையை தேடி எடுக்க வேண்டி இருக்கிறது. ஒரு ஸ்கேன்னர் இருந்தால் இந்த பிரச்னை இல்லை. வாங்க முடியுமா பார்க்கலாம்.

அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கும், அந்த பூமி புத்திரர்களான செவ்விந்தியர்களுக்கும்  நடக்கும் யுத்தத்தையே  இந்த இதழின் முன்னட்டை உணர்த்துகிறது. செவ்விந்தியர்கள் விடாமல் துரத்துவது, அவர்களது வீரத்தை காட்டினாலும், ரயிலுக்கு முன்னால் அவர்களது குதிரைகளின் வேகம் ஒன்றுமில்லை எனும்போது அவர்கள் சோக முடிவும் நமக்கு நினைவுக்கு வருகிறது. இனவொழிப்பை ஆதி காலத்திலேயே தொடங்கிவிட்ட அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐ நா சபையில் தீர்மானம் கொண்டு வந்தது ஒரு முரண் நகையாகவே தெரிகிறது.

* இது நிறைய படங்களை கொண்டுள்ள நீண்ட பதிவு, அமைதியான மன  நிலையில் நல்ல இன்டர்நெட் இணைப்புடன் படியுங்கள்.  

ஓவியப் பார்வை

1) ரயில் பாதை போடுவதற்காக ஏற்படுத்தப் பட்ட நகரும் நகரம்.


2) ரயிலை ஆவேசமாக துரத்தும் பூர்வ குடிகள்.


3) பற்றியெரியும் தண்டவாளத்தில் பறக்கும் ரயில்


4) அந்தக் கால நகரம் - கிட்டப் பார்வை


5) மலைகளுக்கிடையே கோச்சு வண்டிகளை துரத்தும் பூர்வ குடியினர்.


6) தண்டவாளம் இல்லாமல் தரையில் சரியும் ரயில்


7) மலை முகப்பு பார்வை - ரயிலை பிடிக்க மலை சரிவில் இறங்கும் பூர்வ குடியினர். இந்த தாக்குதலுக்கு நிழலாய் பின்னிருக்கும் ஜெத்ரோவை நிழலாகவே வரைந்திருக்கிறார் ஓவியர்.8) பாலத்தில் வெடித்து சிதறும் ரயில்- ஒரு டாப் ஆங்கிள் ஷாட்


9) பார்த்து தள்ளி நில்லுங்கள் குதிரை உங்கள் மீது ஏறி விடப் போகிறது


10) வெருண்டோடும் எருதுகளின் நடுவே ஒரு வேங்கை 


11) பறவைப் பார்வையில் இறந்த எருதுகள்12) கயவர்களை வேட்டையாடும் பூர்வ குடிகள்


13) மழையில் நகரம்14) மலை சரிவில் வேகமாக இறங்கும் பூர்வ குடிகள். உயிரோட்டமுள்ள மிக அழகான ஓவியம்.

15) பாலத்தை தகர்க்கும் முயற்சியில் பூர்வ குடியினர். கீழே தீ மூட்டுவதை பாருங்கள்.


______________________________________________________________________________________

சமீப காலமாக ஒருவர் தன் கிரியேட்டிவிட்டியை வைத்து பேஸ் புக்கில் கலக்கி கொண்டு இருக்கிறார். அவர் சண்முக சுந்தரம். மிக ப்ரொபெசனல் ஆன அவரது அட்டைகள் ஆங்கிலத்தில் வெளிவந்த கதைகளின் அட்டைகளுக்கு சவால் விடுபவை. இதில் 3D அட்டை வேறு. நிச்சயமாக பாராட்டப் படவேண்டியவர். அவர் இதுவரை கொடுத்த அட்டைகளை தொகுத்துள்ளேன். பார்த்து ரசியுங்கள், பாராட்டுங்கள்.

      தங்க கல்லறை                           ரத்த தடம் - 3D அட்டை
டெக்ஸ் வில்லர் - பூத வேட்டை                           ஷெல்டன் - ஒரு ஒப்பந்தத்தின் கதை


தவமணி மணியும் இதுவரை மூன்று அட்டைகளை வெளியிட்டு உள்ளார்.
______________________________________________________________________________________

யுக்திகள்

டைகரின் கதைகளில் யுக்திகள் இல்லாமலா இதோ நான் ரசித்த யுக்திகள்

1) இது யுக்தி அல்ல என்றாலும் தனியே தன் நண்பன் ஜிம்மியை சாக விடாமல் தப்புவிக்க நினைக்கும் டைகர்.


2) வெருண்டோடும் எருது மந்தைக்குள் அடிபாடாமல் இருக்க தீயை உருவாக்குதல்.
தீக்கு எல்லா மிருகங்களும் பயப்படும்.அதன் அரணிலும்,துப்பாக்கி உதவி கொண்டு தப்பித்தல்
நல்ல சாகசம்.
3) இன்னும் சிறிது நேரம் இருந்தால் செவ்விந்தியர்களின் உயிருக்கு  ஆபத்து என்பதால் குதிரைக்கு முன் சுட்டு  வெருண்டோட செய்தல்.


4) தீயில் இருந்து தப்பிக்க கீழே உள்ள மரப் பலகையை பிளந்து அதன் வழியே தப்பி வெளியேறுதல்
5) கோச்சு வண்டிகளை துரத்தி வரும் பூர்வ குடிகளின் கவனத்தை சிதறடிக்க வண்டியில் இருக்கும் ஆடை அணிகலன்களை எடுத்து வீச சொல்லிகிறார். அதனால் அவர்கள் வண்டியை துரத்தாமல் கீழே விழுந்த பொருட்களை சேகரிக்க நிற்கிறார்கள்.6) பணத்தை பெட்டகம் இருக்கும் கோச்சில் ஏற்றாமல் தன் சேணத்தில் மறைத்து வைக்கிறார். கொள்ளை அடிக்க வருபவர்கள் பெட்டகம் இருக்கும் கோச்சை தாக்குவார்கள் என்ற முன் யோசனையே காரணம்.


7) முன்னும் பின்னும் என்று ரெண்டு என்ஜினை கொண்டு சென்றதால் முன் எஞ்சின் கழன்ற பொது பின் என்ஜினை இயக்கி பின்னால் போக நினைக்கிறார்.


8) பாலத்தில் அகப் பட்டுக் கொண்ட போது வெடி வைத்து விட்டதாக சொல்லி கொஞ்சம் நேரம் கடத்தி, பின் வெடி வைத்து விட்டு ஆற்றுக்குள் பாய்கிறார்.


9) ஆற்றில் இருந்து வெளியேறிய பின் கொண்டு போன பணத்தை ஓரிடத்தில் மறைத்து வைத்து விட்டு செல்கிறார். போகும் வழியில் இவர் மாட்டிக் கொண்டாலும் பணம் பத்திரமாக இருக்கும்.


10) ஜிம்மி மற்றும் ரெட்டுடைய காலணிகளை வைத்து ஆற்றில் இருந்து மலையை நோக்கி ஓடி இருப்பது போல் தடங்களை ஏற்படுத்துகிறார். அதனால் பின்தொடர்பவர்கள் அதை பின்பற்றி போய் விடுவார்கள்


11) தப்பி ஓடும்போது குதிரைகளில்  ஏறிக்கொண்டு, சும்மா இருக்கும் மற்ற குதிரைகளையும் துரத்தி
விடுகிறார். இதனால் துரத்துபவர்கள் தங்கள் குதிரைகளை கண்டு  பிடித்து துரத்துவதர்க்குள் டைகர் எங்கோ போய் இருப்பார்.


12) ஜிம்மியையும் ரெட்டையும் மலை வழியே போக சொல்லி விட்டு தான் மட்டும் மற்ற ரெண்டு குதிரைகளுடன் செல்கிறார். இதனால் பின்னால் வருபவர்கள் மூன்று குதிரைகளின் காலடிதடத்தை மட்டும் பார்த்து மற்ற ரெண்டு பேர் பிரிந்து செல்வதை கண்டு பிடிக்க முடியாது.


13) ஏற்கனவே உள்ள காலடி தடத்தை வைத்து மற்ற ரெண்டு குதிரைகளை வெவ்வேறு திசைகளில் விரட்டி விடுகிறார். அதனால் எதிரி குழம்பி தேவை இல்லாத திசையில் தன் பயணத்தை மேற்க் கொள்வான்.ஜிம்மியின் யுக்திகள்

ஜிம்மி பூர்வ குடிகளுடான பேச்சு வார்த்தை விபரீதத்தில் முடிந்தால் துரத்தும் பாதையை தடுக்கும் படி மரங்களை பாதிவெட்டி அதில் டைனமைட்டை சொருகி வைத்திருக்கிறான். அப்படிப்பட்ட ஒரு சமயம் வரும்போது அதனை வெடிக்க செய்து துரத்துபவர்களை தாமதிக்க வைக்கிறான்.ஜெத்ரோவின் யுக்திகள் 

1) பூர்வ குடிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும் இடத்திற்கு  தப்பி போய்  அங்கு இருக்கும் காவலாளிகளை முடக்கி விட்டு , பேச்சு வார்த்தை  தொடங்கும் போது சுட  தொடங்குகிறான்.  அதனால் பூர்வ குடிகள், வெள்ளையர் தங்களை வஞ்சித்து விட்டதாக  நினைத்துக் கொள்கின்றனர்.2) சூபியிடம் இருந்து அதிர்ஷ்ட வசமாகப் பெற்ற கடிதத்தை வைத்து  சம்பளப் பணத்தை கொள்ளை அடிக்க திட்டம் போடுகிறான்.

3) வீரர்கள் இருக்கும் கோச்சை வெளியில் இருந்து பூட்டுவதற்கு ஏற்பாடு செய்கிறான்.4) மற்றொரு கோச்சில் இருப்பவர்களுக்கு விஸ்கியில் மயக்க மருந்து கலந்து தூங்க வைத்து விடுகிறான்.


5) தண்டவாளத்தை உடைத்து விட்டு, உடைத்தது தெரியாமல் வைத்து விட்டு, ரெண்டு தண்டவாளத்தை கயிறு கொண்டு கட்டி விடுகிறான். அதனால் தூரத்தில் இருந்து பார்க்கும்போது தண்டவாளம் நல்ல நிலையில் இருப்பது போல் தெரியும், பக்கத்தில் வந்ததும் கயிற்றை இழுத்து விட்டால் தண்டவாளம் உடைந்து ரயில் தடம் புரளும்.


6) ரயில் ஆற்றில் கவிழ்ந்து விடவும், பணமும் பெட்டகத்தில்  இல்லாமல் போக, தன்னை கொல்ல துடிக்கும் பூர்வ குடிகளிடம், டைகரிடமுள்ள பணத்தை வைத்து  ரைபிள் வாங்கி தருவதாக  ஆசை காட்டி தன் பக்கம் இழுக்கிறான்.

முரண்1) இந்த இதழின் தலைப்பின் டிசைன் மற்றும் எழுத்துரு எனக்கு பிடிக்கவில்லை. ரொம்ப அமேச்சூராக தெரிகிறது. இது எனக்கு மட்டும் தானா? உங்களுக்கும் அப்படி தெரிகிறதா?

2) இந்த இதழில் சில பக்கங்களில் வண்ணம் அதிகமாகவும் சில பக்கங்களில் நார்மலாகவும் தெரிகிறது. உதாரணத்துக்கு பக்கம் 92
மற்றும் 93 ஐ ஒப்பிட்டு பாருங்கள். இதுவும் எனக்கு மட்டும் தானா?

கிளைமாக்ஸ்

டைகர் ரசிகர்களுக்கு திகட்டாத விருந்து. டைகர் தொடர்கள் ஆரம்பித்த பொழுது வந்த கதை என்பதால் ஓவியம் எப்படி இருக்குமோ என்று நினைத்த எனக்கு சியோக்ஸ்கள் துரத்தும் காட்சிகள் கண்ணுக்கு விருந்தாக இருந்தன.


Post Comment

26 comments :

 1. யப்பா ரொம்ப வேல பாத்துருக்கீங்க போல

  ReplyDelete
 2. நகரும் நகரம் , கிட்டப்பார்வை போன்ற உங்கள் வார்த்தை பிரயோகங்கள் அருமை

  ReplyDelete
 3. @லக்கி லிமட் : ஆமாங்க. இதுக்கு நடுவுல அப்ரைசல் வேற. நேத்து தான் ஒரு வழியா அப்ரைசல முடிச்சுட்டு , நகாசு வேலைய முடிச்சு போஸ்ட் பண்ண முடிஞ்சுது.

  ReplyDelete
 4. அப்பறம் எனக்கு இந்த சன்ஷைன் லைப்ரரி லோகோ சுத்தமா பிடிக்கல

  ReplyDelete
 5. நண்பர்கள் சண்முக சுந்ததரம் மற்றும் தவமணி மணி அவர்களின் அட்டைப்பட டிசைன்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன! பிரம்மிக்க வைத்த உங்கள் க்ரியேடிவிட்டிக்கும், உழைப்பிற்கும் தலைவணங்குகிறேன் நண்பர்களே!

  மண்டையிலே ரெண்டு குட்டு குட்டின பிறகு இப்போ ராஜ் குமார் எடுத்திருக்கும் படங்களின் அழகும், நேர்த்தியும் கூடியிருக்கு! இந்த மொத்தப் பதிவையுமே அழகா காட்டுது! அதனால இப்போ போறேன்; ஆனா திரும்பி...

  மறுவெளியீட்டையே இவ்வளவு அனுபவிச்சுப் படிக்கறீங்களே, 'ரத்த தடம்' வந்தா உங்க கதி என்னாகும்னு தெரியலை! :)

  எப்பவும் இளையோடும் உங்க நக்கலான வார்த்தைகளுக்கு தற்காலிக லீவு கொடுத்துட்டீங்களா? :(

  ReplyDelete
  Replies
  1. // நண்பர்கள் சண்முக சுந்ததரம் மற்றும் தவமணி மணி அவர்களின் அட்டைப்பட டிசைன்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன! பிரம்மிக்க வைத்த உங்கள் க்ரியேடிவிட்டிக்கும், உழைப்பிற்கும் தலைவணங்குகிறேன் நண்பர்களே //

   சத்தியமான வார்த்தைகள் ... நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் ...

   Delete
 6. @Erode Vijay : திரும்பி வாங்க விஜய். அப்பாடி விஜய் கிட்ட இருந்து தப்பிச்சாச்சு :D

  ஹி ஹி பரலோகப் பாதையை நான் இப்போ தான் படித்தேன் நண்பா. கருப்பு வெள்ளையில் படிக்க வில்லை

  நக்கல் நைய்யாண்டியாய் ஒரு பதிவு மனதில் இருக்கு அது வந்தவுடன் பாருங்க. பதிவின் பேர் கல்யாண கலாட்டா

  ReplyDelete
  Replies
  1. // கல்யாண கலாட்டா //

   ஏதோ ஒரு கல்யாணத்துக்குப் போய் ஏக கலாட்டா பண்ணியிருக்கீங்க போலிருக்கு!

   தூள் பண்ணுங்க, am waiting! :)

   Delete
 7. // முதலில் டைகர் ரசிகர்கள்/வெறியர்கள் என்னை மன்னிக்க வேண்டும். //

  இதை பார்த்தவுடன் மனது ஒரு நிமிடம் பக் என்று அடித்தது. (டைகரை போட்டு கிழித்து தொங்க விட்டுடாரோ என்று) அப்புறம்தான் தெரிஞ்சுது இது நம்ம நண்பர் 'ராஜ்' லேட்டா பதிவு போட்டதுக்குன்னு :)

  சீக்கிரம் ஒரு scanner வாங்கிடுங்க ராஜ். இதிலும் கூட புத்தகத்தின் ஓரங்கள் வளைந்து ஒரு மாதிரி இருக்கிறது.

  நண்பர்களே, பாருங்கள் நண்பர் ராஜ் பயன்படுத்திய வார்த்தைகள் நமது லயன்/முத்து புத்தகங்களுக்கு பெயர் சூட்ட நன்றாக இருக்கும் போல இருக்கே ?

  "நகரும் நகரம்"
  "தண்டவாளம் இல்லாமல் தரையில் சரியும் ரயில் "
  "அந்தக் கால நகரம் - கிட்டப் பார்வை "
  "பற்றியெரியும் தண்டவாளத்தில் பறக்கும் ரயில் "
  "வெடித்து சிதறும் ரயில்- ஒரு டாப் ஆங்கிள் ஷாட்"
  "வெருண்டோடும் எருதுகளின் நடுவே ஒரு வேங்கை "
  "பறவைப் பார்வையில் இறந்த எருதுகள் "
  "மழையில் நகரம்"

  ஹி .. ஹி ... ஹி இப்போ நண்பர் செய்த டைப்பிங் 'மிஷ்டக்குகள்' :)

  //வீரர்கள் இருக்கும் கோச்சை வேலையில் இருந்து பூட்டுவதற்கு ஏற்ப்பாடு செய்கிறான்.//
  வெளியில் என்பது வேலையில் என்றாகிவிட்டது.

  //தண்டவாளத்தை உடைத்து விட்டு, உடைத்து தெரியாமல் வைத்து விட்டு,//
  உடைத்தது என்பது உடைத்து என்றாகிவிட்டது.  ReplyDelete
  Replies
  1. @ ப்ளூ

   குறைந்தபட்சம் ஒரு லிட்டர் விளக்கெண்ணையாவது செலவாகியிருக்குமே? ;)

   Delete
 8. @திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் :

  தவறுகளை திருத்தியாகி விட்டது நன்றி.

  இப்போது வரும் புத்தகங்களில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஒன்று கூட கண்டு பிடிக்க முடியவில்லை பார்த்தீர்களா ? நல்ல முன்னேற்றம்.

  ReplyDelete
 9. படங்கள் செம தூள். கலரோ கலர். அள்ளுகிறது போங்க.

  ReplyDelete
  Replies
  1. நன்றி kadaisibench. அடிக்கடி வாருங்கள்

   Delete
 10. சூப்பர் ! அட்டகாசம் ! தொடர்ந்து கலக்குங்கள் !

  ReplyDelete
  Replies
  1. நன்றி கார்த்திகேயன் :D

   Delete
 11. அன்பிற்கினிய நண்பர்கள் அனைவருக்கும்,

  இனிய மே தின நல்வாழ்த்துக்கள் !!!!!

  திருப்பூர் ப்ளுபெர்ரி

  ReplyDelete
 12. அருமையான விமர்சனம்...நண்பர்களது கிரியேட்டிவான அட்டைப்படங்கள் அட்டகாசம்.

  ReplyDelete
 13. புத்தகம் படித்து முடித்த உடன் உங்கள் விமர்சனம் படிக்க வேண்டும் என்று வெயிட் செய்தேன்..

  ம்ம்ம்ம்ம்

  புத்தகம் படிப்பதை விட உங்களின் இந்த பதிவு மிக அருமை.

  இறுதிபாகத்தின் விமர்சனம் நீங்கள் எழுத மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 14. @Raja babu: நன்றி ராஜா பாபு

  ReplyDelete
 15. @RAMG75: நன்றி ராம்ஜி. நீங்கள் தான் ராம்குமார் கோபால கிருஷ்ணனா அல்லது வேறு நபரா ? இறுதி பாகம் இன்று பதிவிட்டுள்ளேன் பாருங்கள்.

  ReplyDelete