Thursday, April 18, 2013

சிரிப்பு போலீஸ் - ஜென்டில்மேன் ஆன கோமாளி


என் மன வானில் 

ஷெரிப் டாக் புல் மற்றும் அவரது டெபுடி கிட் ஆர்ட்டின் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். கவுண்ட மணி செந்தில் ஜோடி போல உட்  சிட்டியில்  இவர்கள் அடிக்கும் கூத்து மிக பிரபலம். கவுண்ட மணி செந்தில் ஜோடியில் கவுண்டர் எவ்வளவுதான் கத்தினாலும் வெகுளியாக முகத்தை வைத்துக் கொண்டு செந்தில் அடிக்கும் பதில் டயலாக்குகள் / செயல்கள் நம்மை குபீர் சிரிப்பில் ஆழ்த்தும். அதே போல் இந்த சிரிப்பு போலிஸ் ஜோடி இந்த கதையில் நின்று விளையாடி இருக்கிறார்கள்.

முதல் பக்கத்தில் ஆரம்பிக்கும் சிரிப்பு தோரணம் கடைசி பக்கம் வரை தொடர்கிறது. ஷெரிப் டாக் புல் தன் டெபுடிக்கு கல்யாணமே ஆகாது என்று சாபம் கொடுத்தும் ஒரு அழகு தேவதை மணப் பெண்ணாக கிடைத்ததில் வயிறேரிகிறார். அதுவும் மணப்பெண் ஒரு கோடீஸ்வரி என்றதும் இவர் அடிக்கும் கூத்துக்களுக்கு எல்லையே இல்லை.

போலீஸ் என்று கூப்பிட்டவுடன் எங்கே தன்னை பார்த்து ஒரு ரவுடியை பிடிக்க கூப்பிட்டு விடுவார்களோ என்று சடன் பிரேக் போட்டு பதுங்குவதாகட்டும், வேறு  வழியில்லை  ரவுடியை கைது செய்தே  ஆக வேண்டும் என்ற நிலையில் அந்த வேலையை டெபுடி இடம்  ஒப்படைத்து விட்டு "எதுவும் ஹெல்ப் வேணும்னா கேளுப்பா" என்று  கிளம்புவதாகட்டும், டெபுடி ரவுடியை கட்டி கொண்டு வந்தவுடன் "சட்டம்  தன்  கடமையை செய்யும்" என்பதாகட்டும் அதிரடி அட்டகாசம்  பண்ணுகிறார் டாக் புல். ரவுடியிடம் பேசும் போது ஷெரிப் பின் மண்டையில் ஓட்டை போட்டால் நிறைய பணம் கிடைக்கும் என்று கேட்டவுடன் டரியலாகும் டாக் புல் முக பாவனைகள் அருமை.

கிட் ஆர்ட்டின் பெண்ணின் அருகாமை இல்லாததால் ஒரு அழகி தன் மனைவியாக வரப் போகிறாள் என்றவுடன் காதல் பித்து கொண்டு எதுவும் செய்யாமல் பேஸ்த்து அடித்து ஆர்ஹியு என்று மட்டும்  உளறிக் கொண்டு  நிற்பது அருமை. கடைசியில் வேறு ஒருவனை மணப் பெண் விரும்புகிறாள் என்று தெரிந்ததும், அவனை காப்பதற்காக தான் மணமகனாக நடித்து பின்பு இருவரையும் சேர்த்து வைத்து ஜென்டில் மேன் ஆகிறார். அடித்து சொல்கிறேன் ஆங்கிலத்தில் இந்த அளவு நகைச்சுவையாக இருக்கவே முடியாது.

நான் ரசித்த பக்கங்கள் என்று போட ஆரம்பித்தால் அந்த புத்தகம் முழுமையுமே ஸ்கேன் பண்ணி போட வேண்டும். அந்த அளவு பிரேமுக்கு பிரேம் சிரிப்பு மழை. அதனால் சில சாம்பிள் மட்டும் கொடுக்கிறேன்.

நான் ரசித்த பக்கங்கள்

1) தன்னை சீண்டும் ஷெரிப்பை "இவ்வளவு கிழடு தட்டியும் நீங்க ஒண்டிக் கட்டையாக இருக்கும் காரணம் எனக்கு இப்போ தெரிஞ்சிருச்சு. அதில பாருங்க உங்கள மட்டம் தட்டுவதற்கு இதை சொல்லவில்லை " என்று சொல்லிவிட்டு வெற்றி நடை நடக்கும் கிட் ஆர்ட்டின்.2) ரவுடி, "வரட்டும் அந்த போலீஸ் நடு மண்டையில் நச்சுன்னு போடுகிறேன்" என்றதும் நம்மாளு முகம் போகும் போக்கை பாருங்கள்.
3) சடன் பிரேக் போட்டு யு டர்ன் எடுப்பதுர்ற்குள் டெபுடியிடம் மாட்டிகொள்ளும் அழகை  பாருங்கள். கிட்டின் வசனங்கள் சூப்பர்.
"அசலூர் தடிமாட்டை பார்த்தவுடன் நம்மாளுக்கு மூச்சா  முட்டிகிட்டு வருது " என்று நக்கல் சிரிப்பு சிரிக்கும் கிட் ஆர்ட்டின்.4) கிட் மனதிற்குள் பேசிடும் வசனங்களை பாருங்கள். கடைசியில் அந்த தடி மாட்டை காட்டி இழுத்துவரும் பெருமையை உனக்கு கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டு கம்பி  நீட்டுகிறார் சிரிப்பு போலீஸ். 5) ஷெரிப்பை போதல் போட்டால் நிறைய  கிடைக்கும் என்று ரவுடி சொன்னவுடன் டரியலாகும் ஷெரிப்.6) அழகியின் போட்டோவை பார்த்தவுடன் கிட்டின் முகத்தைப் பாருங்கள்.7) அச்சச்சோ நான் வாயை பிளக்கப் போறீங்கன்னு சொன்னது வேற அர்த்தத்துல என்று டைமிங் காமெடி பண்ணும் கிட்.
8) கோடீஸ்வரி என்றவுடன் டாக் புல் நாக்கை தொங்க விட்டுக் கொண்டு நானே கட்டிக் கொள்கிறேன், அந்த பெண்ணுக்கும் என்னை பிடிச்சிருக்கு என்று சைக்கிள் கேப்பில் கெடா வெட்டுவதை பாருங்கள்.

"தாத்தா மாதிரின்னு சரியா சொல்லுங்கன்னு" பின்னாடி இருந்து ஒருத்தன் குரல் கொடுக்க நம்மாளு முகம் எப்படி கொடூரமா மாறுகிறது பாருங்கள்.9) ஊமைக் கொட்டான்களை எனக்கு அறவே பிடிக்காது என்று சொல்லிவிட்டு மணப் பெண் லானாவும் ஊமை என்று தெரிந்தவுடன் பல்பு வாங்கிய மூஞ்சியுடன் டாக் புல்10) லானாவை முதன் முதலில் பார்க்க மிக்க டென்சனுடன் நிற்கும் கிட்11) கையில் வில்லுடன் ஷெரிப் நிற்கும் கோலம் மன்மதனாட்டம் இருக்கு  என்று கேலி  செய்யும் கிட்க்ளைமாக்ஸ்

ROFL என்று நெட்டிசன்கள்  யூஸ் பண்ணுவார்கள். Rolling On Floor, Laughing என்று அர்த்தம். அது எப்படி என்று இந்த புத்தகத்தை வாசித்தால் தெரியும். வெளியே பிரயாணத்தில் வாசித்து விடாதீர்கள், உங்களை சுற்றிலும் உள்ளவர்கள் தவறாக நினைக்க வாய்ப்புண்டு. எடிட்டர் மொழி பெயர்ப்பில் ஊடு கட்டி விளையாண்டு இருக்கிறார். Thank You Sir  

Post Comment

16 comments :

 1. அருமை.
  தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி kadaisibench. அடிக்கடி வாருங்கள்

   Delete
 2. //அடித்து சொல்கிறேன் ஆங்கிலத்தில் இந்த அளவு நகைச்சுவையாக இருக்கவே முடியாது.//

  ஆங்கிலத்தில் வந்து இருந்தால் தானே சொல்வதற்கு?

  வந்தாலும், நீங்கள் சொல்வது போல கண்டிப்பாக இந்த அளவுக்கு நகைச்சுவையாக இருக்கவே முடியாது.

  நான் ஏற்கனவே சொன்ன மாதிரி - சமீப காலங்களில் வந்த சிக்பில் குழுவுனரின் கதைகள் காமெடியில் சற்றே பின் தங்கியிருப்பதாக எனக்கு ஒரு அவதானிப்பு உண்டு. குறிப்பாக நீலப்பேய் மர்மம்,விண்வெளியில் ஒரு எலி, விற்பனைக்கு ஒரு ஷெரிப், இரும்புக் கவ பாய், கொலைகாரக் காதலி என்று மினி லயன் கிளாசிக் வரிசையில் லயன் காமிக்ஸ் இதழ்களில் வந்த கதைகள் எதுவுமே இல்லை. நெவர் பிஃபோர் ஸ்பெஷல் இதழில் வந்த கதையும் இதே ரகத்தில் சேர்த்தி என்பதால் இந்த கதையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தேன். என்னுடைய காத்திருப்பு வீண் போகவில்லை.

  கண்டிப்பாக இந்த கதையானது மினி லயன் கிளாசிக் சிக்பில் கதைகள் பட்டியலில் இடம் பிடிக்கும். மிகவும் எளிமையான கதையோட்டம், ஜாலியான சம்பவங்கள், கவுண்டமணி-செந்தில் காமெடி கலாட்டா, குள்ளனின் குறும்புகள் என்று கதை ரெகுலரான டெம்பிளேட்டில் நகர்ந்து எதிர்ப்பார்க்கப்பட்ட முடிவுடன் பயணிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி விஸ்வா, ஆங்கிலத்தில் வந்திருக்கும் என்று நினைத்தேன். நீலப்பேய் மர்மம்,விண்வெளியில் ஒரு எலி, விற்பனைக்கு ஒரு ஷெரிப், இரும்புக் கவ பாய், கொலைகாரக் காதலி கதைகள் எல்லாம் நான் படிக்கவே இல்லை :(

   Delete
 3. நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை நண்பரே .சிக் பில் கதையை விரைவில் இரண்டாவது முறை படித்தது இது மட்டுமே .

  ReplyDelete
  Replies
  1. நன்றி Paranitharan K. தோன்றும் போதெல்லாம் படித்து கொண்டே இருக்கிறேன்.

   Delete
 4. வந்த கதைகளில் முதலில் இதை தான் படித்தேன். எனக்கு முதலில் சுமாரான கதைகளை படித்து விட்டு அப்புறம் சூப்பரான கதைகளை படிப்பது வழக்கம். ஆனால் இம்முறை கணிப்பு தவறி விட்டது. கடந்த வந்து போன கதைகளால் சிக்பில் கதைகளை அறவே பிடிக்கவில்லை. ஆனால் இக்கதை அருமை. டரியல் ஷெரிப் நல்ல பேர்

  ReplyDelete
  Replies
  1. நன்றி லக்கி லிமட்

   Delete
 5. அருமை ராஜ்! சிரிப்பொலி அரங்கமெங்கும் நிறைந்து விண்ணை முட்டியது என்கிற மாதிரி டக்கரான கதையைப் போட்டு அசத்திட்டார்! பதிவு சிறப்பாக இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜானி ஜி. கண்ணா கலீபா தின்ன ஆசையாவும் ரொம்ப பிடிச்சு இருந்தது.

   Delete
 6. நான் படித்த சிக்பில் கதைகளில் இதைத்தான் நம்பர் ஒன் என்று சொல்வேன்! ஷெரீப் டாக்புல் ஒன்மேன் ஆர்மியாகக் கலக்கிடும் அட்டகாசமான காமெடி விருந்து! இப்படி பக்கத்துக்குப் பக்கம் காமெடியில் கலக்கிய புத்தகம் படிச்சு ரொம்ப நாளாச்சு! ரொம்பவே ரசித்தேன்! சிரித்தேன்!

  இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்துப் படிப்பவர்களையும் சிரிக்க வைத்திடும் கதையும், சித்திரங்களும், மொழிபெயர்ப்பும்!

  எடிட்டர் விஜயன் தனது உச்சபட்ச நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி மொழிபெயர்த்திருக்கறார்!

  உங்க எழுத்துநடை மேம்பட்டிருக்கு ராஜ் குமார்! ஆனால் ஸ்கான்கள் கீம்பட்டிருக்கு! :D

  ReplyDelete
  Replies
  1. //எடிட்டர் விஜயன் தனது உச்சபட்ச நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி மொழிபெயர்த்திருக்கறார்!//

   உண்மை

   //உங்க எழுத்துநடை மேம்பட்டிருக்கு ராஜ் குமார்! ஆனால் ஸ்கான்கள் கீம்பட்டிருக்கு! :D//


   இதுவும் உண்மை. இதற்க்கு முந்தைய பதிவிற்கு எடுக்கும்போதே எடுக்கப் பட்ட படங்கள் தான் இவை. scanner இல்லாமல் கேமரா வினால் படம் பிடிப்பதின் விளைவு அது. அடுத்த தடவை அப்படி நிகழாது.

   Delete
 7. சமீபத்திய சிக் பில் கதைகளில் இதுதான் டாப்.........

  ReplyDelete
 8. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு கன்னாபின்னா என்று மெகா ஹிட் அடித்த சிக் பில் கோஷ்டி.

  ReplyDelete
 9. ஆரம்பத்தில் இருந்தே பல நண்பர்களுக்கு இருக்கும் ஆசை தான் எனக்கும்.
  இனி இக்கதைகளை சிக் பில் கதைகள் என்று கூறுவதற்கு பதில் டாக்புல் - ஆர்டின் காமடி கலாட்ட என்றே இனி கூற வேண்டும் என்று ஆசிரியரிடம் கூறவேண்டும்.

  ReplyDelete