Wednesday, March 6, 2013

காமிக்ஸ் கடத்தல் படலம் !சூளைமேட்டில் ஒரு ரகசிய (ரகசியா ன்னு வாசிச்சவுங்க எல்லாம் கைய  தூக்குங்க)  இடம். ஒரு மர்ம உருவம் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு தன் மொபைலை எடுக்கிறது. இன்று எப்படியாவது கடத்திவிட வேண்டும் நெடு நாளாக ஆட்டம் காட்டிக் கொண்டு இருக்கிறார் என்று நினைத்தவாறே மொபைலில் அந்த ரகசிய எண்ணை எடுத்து கால் பண்ணுகிறது....

மொபைல் சட்டென எடுக்கப் பட, மர்ம உருவம் 1 பட படப்புடன்

மர்ம உருவம் : ஹலோ ஹலோ
மறுமுனை : ஹிஸ்

மர்ம உருவம் : (மனதில்) வாட்டர் பைப்புல தான்  காத்து வரும்னு பாத்தா  மொபைலிலேயே   வர ஆரம்பிச்சுருச்சா" என்று நினைத்தபடி மீண்டும்  ஹலோ ஹலோ என்கிறது.
மறுமுனை :  ஹிஸ்

மர்ம உருவம் :  சார் ஹலோ
மறுமுனை :  யோவ் ஹிஸ் ங்குறது என்னோட கோடு வேடுயா

மர்ம உருவம் :  சாரி, நான் உங்கள உடனே பாக்கணுமே
மறுமுனை :  சரி சரி , பிள்ளையார் கோவில் முதல் சந்துக்கு வந்துரு.

மர்ம உருவம் : அங்க வந்து உங்கள எப்பிடி கண்டு பிடிக்கிறது?
மறுமுனை :  ஹிம் . வந்துட்டு என் கோடு வேட சொல்லு. நானே வருவேன்.

மர்ம உருவம் :  சரி சார்.

மர்ம உருவம் உடனே தன பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்புகிறது. பிள்ளையார்   கோவில்  முதல் சந்துக்கு அருகில் போய் நின்று கொண்டு  "ஹிஸ்" என்கிறது. டீனேஜ் மகளுடன் சென்று கொண்டிருந்த ஆண்ட்டி ஜெர்க்காகி தன் மகளையும் மர்ம உருவத்தையும் முறைத்துக் கொண்டு செல்கிறார்.

இதைக் கண்ட மர்ம உருவம் "ச்சே காமிக்ஸ் வாங்க வந்து, அடி வாங்கிடுவோம் போல " என்று நொந்து கொள்கிறது. சிறிது நேரம் கழித்து ஒரு உருவம் மர்ம உருவம் 1 ஐ நெருங்குகிறது. அதை மர்ம உருவம் 2 என்று வைத்துக் கொள்வோம்.

மர்ம உருவம் 2 : வந்துட்டீங்களா 
மர்ம உருவம் 1: வந்துட்டேன். அடி வாங்க தெரிஞ்சேன்.

மர்ம உருவம் 2 : காமிக்சுக்காக  என்னென்னோவோ  பண்ணலாம்.வாங்க.

மர்ம உருவம் 2 வழி  காட்ட மர்ம உருவம் 1 மாடிப் படிகளில் தட்டு தடுமாறி ஏறுகிறது.

மர்ம உருவம் 2 : உட்க்கருங்க எடுத்துட்டு வர்றேன்.
மர்ம உருவம் 1  போடப் பட்டிருந்த சேரில் அமர்கிறது.

உள்ளே போன மர்ம உருவம் 2, ஒரு பெட்டியுடன் வருகிறது. அதில் காமிக்ஸ் புத்தகங்கள் இருக்கின்றன. மர்ம உருவம் 1 பரபரப்புடன் அந்த பெட்டியை பார்க்க முயல மர்ம உருவம் 2 "இருங்க முதல்ல என் நிபந்தனை கேட்டுட்டு போட்டி மேல கை வைங்க". மர்ம உருவம் 1 பரிதாபத்துடன் மர்ம உருவம் 2 ஐ பார்க்கிறது.

"நான் கொடுக்கிறது உங்களுக்கு தான் நீங்க யாருக்கும் உள்  வாடகைக்கு விடக்கூடாது. இப்போ மணி இரவு 8, ஒரு 9.30 வரைக்கும் தான் உங்களுக்கு டைம். அதுக்கப்புறம் ஒரு நிமிசம் கூட  
இங்க இருக்க கூடாது. அப்பிடி இருந்தா டைம் பாம் வெடிச்சிடும்.ஓகே யா?"  என்று கேட்க   மர்ம உருவம் 1 அவசர அவசர மாக தலையாட்டுகிறது. "சரி இப்போ பாருங்க" என சொல்ல மர்ம உருவம் 1 பெட்டியை கவிழ்த்து தனக்கு பிடித்த புத்தகங்களை எடுத்துக் கொள்கிறது.

மர்ம உருவம் 1: நான் ரொம்ப செலக்டிவாதான் படிப்பேன்.
மர்ம உருவம் 2 : (மனதில்) "செலக்டிவாதான் படிப்பேன், செலக்டிவாதான் படிப்பேன்ன்னுட்டு இம்புட்டு புக்க அமுக்குரானே ங்கொய்யாலே" என்று பார்க்கிறது. ங்கொய்யாலே என்றவுடன்  மூளையில் ஒரு குத்து விளக்கு எரிய (அட , எத்தன நாளைக்கு தான் பல்பு எரியன்னே   சொல்லிக்கிட்டு  இருக்கிறது?) இருங்க வர்றேன்னுட்டு உள்ளே போய்  ஒரு கொய்யா பழத்தை கூறு போட்டு கொடுக்கிறது. மர்ம உருவம் 1 சாப்பிடுகிறது.

பிறகு மணி 9.30 நெருங்குவதை பார்த்து மர்ம உருவம் 1  அவசர அவசரமாக கிளம்புகிறது. மர்ம உருவம் 2 வாசல் வரை வந்து வழி  அனுப்புகிறது. போகும்போது "நீங்க வந்து தொல்லை கொடுத்த மாதிரி நானும் உங்க வீட்டுக்கு வருவேன் , வரும் போது "ஜா" வில் ஆரம்பித்து "ன்" னில்  முடியும் பிரபல காமிக்ஸ் பதிவரையும் அழைத்துக் கொண்டு வருவேன்" என்று பயம் காட்டி அனுப்பி வைக்கிறது மர்ம உருவம் 2.

==================================================================================


நண்பர்களே !

போன வார இறுதியில் நண்பர் திருப்பூர் ப்ளுபெர்ரி நாகராஜ் அவர்களை சந்தித்தேன். அந்த அனுபவம் தான் இது. 9.30 மணிக்கு மேல் அவுங்க வீட்டு ஓனர் கேட்ட பூட்டி விடுவாராம். அதனால் ரொம்ப நேரம் மொக்க போட  முடியாமல் சீக்கிரம் (1.30 மணி நேரம் தான்) வரும்படியாகி விட்டது.  எனக்கு என்னமோ என் மொக்கையை தவிர்ப்பதற்காக அப்படி  அள்ளி  விட்டிருக்கிராரோன்னு  டவுட்டு வருது. :D

2012 கம்பேக் ஸ்பெஷலில் இருந்துதான் புத்தகம் சேகரிக்க ஆரம்பித்தாராம்.ஆனால் நிறைய  புத்தகம் வைத்திருக்கிறார். நானும் அப்போது இருந்து தான்  சேகரிக்க ஆரம்பித்தேன். நான் இன்னும் புக்குக்கு நிறைய அலைய வேண்டும் போல. சில புத்தகங்களை இரவலாக   கொடுத்தார். ராஜ் முத்து குமார்ன்னு பேர் இருக்கிரவுங்களுக்கு மட்டும் தான் இரவல் கொடுக்கிறதுன்னு குல தெய்வம் மேல சத்தியம் பண்ணிட்டு வந்திருக்கிறாராம். உடனே என் பேர்ல பேக் ஐடி க்ரியேட் பண்ணி கேட்க்க ஆரம்பிக்க கூடாது. :D   

காமிக்ஸ் க்ளாசிக்ஸின்  சின்ன உள்ளங்கை அகல இதழை  அப்போதுதான் பார்த்தேன்.     ஆனா படிக்க சிரமமாக இருக்கிறது. மீண்டும் ஸ்பைடரின் "கொலைப் படை" படித்தேன். பூ சுற்றலாக இருந்தாலும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

நான் கொண்டு போயிருந்த ராணி காமிக்ஸை தொடவே இல்லை. லயன் லயன் , லயன் இல்லையேல் ரயில்வே லைன் என்ற அளவுக்கு லயனின் தீவிர ரசிகர். புத்தக கண்காட்சியில் நான் வாங்கி இருந்த மாற்று வெளியின்  "சித்திரக் கதை" என்ற புத்தகத்தை மட்டும் எடுத்துக் கொண்டார். அதில் நம்ம ரபிக் ராஜா, முருகன், கலீல் , சரவணா RSK, சங்கர் என்று நிறைய பேரின் காமிக்ஸ் அனுபவங்கள்/புரிதல்கள்  இருந்தது.

இதில் வரும் மர்ம உருவங்கள் இப்போது யார் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனா "ஜா" வில் ஆரம்பித்து "ன்" னில்  முடியும் பிரபல காமிக்ஸ் பதிவர் யாருன்னுதான் தெரியல. யாருப்பா அது :D ஒங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. :-D


டிஸ்கி #1

இந்த முயற்சிக்கு கார்த்திக்கின் இந்தப்  பதிவும்  ஒரு காரணம்

ப்ளூபெர்ரியும் ரெண்டு ஷாட் லெமன் டீயும்!


டிஸ்கி #2

மர்ம உருவம் 1 இந்த வாரமும் உங்களில் ஒருத்தருக்கு போன் பண்ணப் போகிறது. ஜாக்கிரதையாக இருங்கள். உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி? ஹா ஹா ஹி  ஹி

==================================================================================

Post Comment

29 comments :

 1. Replies
  1. வந்தோம்ல பஸ்ட்ன்னு நான் பப்ளிஷ் பண்ணுறதுக்கு முன்னாடியே போட்டுரீங்களே எப்படி அது ?
   லைக்லிலுக் பெரியார் மாதிரி ஒங்களுக்கு ஒரு [இரு வைக்கணும். :D

   Delete
 2. // "ஜா" வில் ஆரம்பித்து "ன்" னில் முடியும் பிரபல காமிக்ஸ் பதிவர் //

  அவர் எப்பவும் கையில துப்பாக்கியோட சுத்திக்கிட்டு இருப்பார். :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க கார்த்திகேயன் . துப்பாக்கி வீறன இன்னும் காணோமே.

   Delete
 3. அந்த இருவரோடு மூன்றாவதாக என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்

  ReplyDelete
  Replies
  1. தாராளமா வாங்க லக்கி

   Delete
 4. "ஒரு கொய்யாப் பழமும், ஒரு ங்கொய்யாலேவும்" என டைட்டில் வச்சிருக்கலாமோ?! ;)

  //நான் கொண்டு போயிருந்த ராணி காமிக்ஸை தொடவே இல்லை//
  எனக்கு அனுப்பி வைங்க! ;)

  ReplyDelete
  Replies
  1. "ஒரு கொய்யாப் பழமும், ஒரு ங்கொய்யாலேவும்" என டைட்டில் வச்சிருக்கலாமோ?! ;)

   வைக்கலாம் ஆனா ஒரு வரியில் வரும் கொய்யாவுக்கு இந்த தலைப்பு தேவையான்னு நம்மள பத்த போட்டுட்டாங்கன்னா ?

   Delete
  2. //'ஒரு கொய்யாப்பழமும், ஒரு ங்கொய்யாலேவும்'//

   ஹா ஹா ஹா! கார்த்திக் பஞ்ச்! :)

   Delete
 5. மக்களே ...

  இந்த பதிவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இல்லை, இல்லை

  அப்படி நினச்சு நீங்க யாரவது ஏமாந்து போனா அதுக்கு நான் பொறுப்பில்லை மக்களே ...

  உஷாரா இருந்துக்குங்க :)

  ஆமா ராஜ், அந்த போட்டோவில இருக்கிற பையன் (!) என்னைய மாதிரியே இருக்கிறானே ?
  ReplyDelete
  Replies

  1. ஐ புக்கு குடுத்தது நீங்க இல்லயா ? அப்போ திருப்பி கொடுக்க தேவை இல்லை

   //ஆமா ராஜ், அந்த போட்டோவில இருக்கிற பையன் (!) என்னைய மாதிரியே இருக்கிறானே ?//

   பையனாமா :d

   Delete
 6. சற்று இடைவெளிக்குப் பிறகு வாய்விட்டு சிரிக்கவைத்த மற்றுமொரு காமெடிப் பதிவு! இரண்டு மூன்று முறை படிச்சாலும் சிரிக்க முடியும்!

  உங்க Sense of humour அபாரம்!

  மொத்தத்தில், நாலு பேரை சிரிக்க வைக்கலாம்னா நாகராஜன் வீட்டைக் கொள்ளையடிச்சாலும் தப்பில்லை! :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி விஜய் ஏதோ உங்கள மாதிரி, கார்த்திக் மாதிரி எழுதணும் ன்னு ட்ரை பண்ணுறேன்.

   Delete
 7. // "ஜா" வில் ஆரம்பித்து "ன்" னில் முடியும் பிரபல காமிக்ஸ் பதிவர்//

  அந்த பிரபலமான பதிவருக்கு கருப்பாக இருக்கும் கிழவிகளையும், பல்லு போன ஆயாக்களையும் உயிருக்கு உயிராக நேசிக்கும் குழந்தை உள்ளம் கொண்டவர்!

  ReplyDelete
  Replies
  1. இப்போ அவர் ரொம்ப பிஸி. ஆளை காணோம்

   Delete
 8. // "ஜா" வில் ஆரம்பித்து "ன்" னில் முடியும் பிரபல காமிக்ஸ் பதிவர்//

  அவர் வந்து போன பின்னால், நாகராஜன் அவர்களின் பரணிலோ, அக்கம் பக்கத்து வீட்டின் திண்ணையிலோ, வாசலிலோ படுத்திருக்கும் கருப்பான கிழவிகளை, கதைசொல்ல வா, என்று கூட்டிப் போய்விடுவார். அப்புறம் எங்கு போய் கம்ப்ளைண்ட் கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள்!

  ReplyDelete
  Replies
  1. நண்பர் பாலாஜி சுந்தர்,

   // நாகராஜன் அவர்களின் பரணிலோ, அக்கம் பக்கத்து வீட்டின் திண்ணையிலோ, வாசலிலோ படுத்திருக்கும் //

   இங்கே 'நாகராஜன்' என்ற இடத்தில் 'கோவை ஸ்டீல் க்ளாவ்' என்று வந்திருக்க வேண்டும்.

   http://tamilcomicskadanthapaathai.blogspot.in/2013/01/blog-post_31.html


   :)

   Delete
 9. அருமையான 'நச்' பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பொடியன், மனமார்ந்த வாழ்த்துக்கள் KBடீ இல் வென்றதுக்கு

   Delete
 10. தல உலவு vote button widgetஐ தூக்குங்கள். ப்ளாக் லோட் ஆக வெகு நேரம் ஆகிறது

  ReplyDelete
  Replies
  1. உலவ உலவாமஆக்கியாச்சு

   Delete
 11. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ என்னா பதிவுப்பா இது? பத்த வச்சிட்டீரே புலியாரே! அப்றம் வச்சிக்கிறோம் கச்சேரியை! சிரித்ததில் சுளுக்கிக்கிச்சு! பல்லுதேங்! எல்லாம் பயங்கர துப்பறியும் சிங்கங்களாவே இருக்கப்பா! முடியல! சிரிக்காத உம்மணாம்மூஞ்சிகளைக்கூட அசைத்துப்பார்த்துவிடும்! அதுசரி அதென்ன பிரபல பதிவர்? நானெல்லாம் டம்மி பீசய்யா! டம்மி பீஸு! அதத் தெரிஞ்சிக்குங்க முதல்ல! ஆமா சொல்லிப்புட்டேன்!

  ReplyDelete
 12. //2012 கம்பேக் ஸ்பெஷலில் இருந்துதான் புத்தகம் சேகரிக்க ஆரம்பித்தாராம்.ஆனால் நிறைய புத்தகம் வைத்திருக்கிறார்.//
  அமா இந்த புத்தகங்கள் எந்த மர்ம மனிதனிடம் வாங்கியதோ ? :)

  ReplyDelete
 13. //சிரிக்காத உம்மணாம்மூஞ்சிகளைக்கூட அசைத்துப்பார்த்துவிடும்! //

  நன்றி நண்பரே.

  //அதுசரி அதென்ன பிரபல பதிவர்? நானெல்லாம் டம்மி பீசய்யா! டம்மி பீஸு! அதத் தெரிஞ்சிக்குங்க முதல்ல! ஆமா சொல்லிப்புட்டேன்! //

  நிச்சயமாக பிரபலமான பதிவர் நீங்க தானுங்களே. ரெண்டு தடவை மாதம் ஒரு வசகரில் வந்திருக்கீங்களே

  ReplyDelete
 14. @Erode M.STALIN

  ஈரோடு திருப்பூரில் இருக்கும் சில நண்பர்கள் மூலம் கிடைத்தது என்றார். அங்குள்ள

  கடைகளிலும் சில வாங்கினேன் என்றார். அந்த ஈரோடு நண்பர் நீங்கள் தானா ?

  ReplyDelete
 15. //அந்த ஈரோடு நண்பர் நீங்கள் தானா ?//
  புனித சாத்தானிடம் கேட்கவேண்டிய கேள்வி. நாமெல்லாம் அந்த அளவுக்கு ஒர்த் இல்ல :)

  ReplyDelete
  Replies
  1. நண்பர்களின் கவனத்திற்கு:

   //ஈரோடு திருப்பூரில் இருக்கும் சில நண்பர்கள் மூலம் கிடைத்தது//

   அன்பு நண்பர்கள் மூலம் நான் படிக்காத புத்தகங்கள் கிடைத்தது என் பாக்கியமே (?)

   ஆனால் அந்த புத்தகங்கள் அனைத்தும் இப்பொழுது நண்பர்களிடமே திருப்பி கொடுக்கப்பட்டது.

   அப்படியும் புத்தகம் வேண்டும் என நினைக்கும் நண்பர்கள் ஆட்டையை போட சிறந்த இடங்கள் :


   ஈரோடு = ரஷ்ய சர்வாதிகாரி மற்றும் சமீபத்தில் ஒரு மொக்கை வலைபூ ஆரம்பித்தவர் ஆகியோரது வீடுகள் (இளைய தளபதி பற்றி இன்னும் உளவுத்துறை ரிப்போர்ட் வரவில்லை)

   திருப்பூர் = நண்பர் சிபி அவர்களது வீடு, (ப்ளுபெர்ரி வீட்டுக்கு போயி ஏமாற்றத்துடன் திரும்பாதிர்)

   கோவை = மரண சர்க்காஸ் ஸ்டீல் கிளா இல்லம் (பாதுகாவலர்கள் ஜாக்கிரதை - போறவங்க கொஞ்ச ஜாக்கிரதையா போங்கய்யா)

   சென்னை = காவலர் வீட்டிலேயே ஆட்டையை போட கூடியது சென்னையில் மட்டும்தான்.


   நண்பர்களுக்கு இந்த தகவல்கள் போதுமென்று நினைக்கிறேன் (குறிப்பாக " நாலு பேரை சிரிக்க வைக்கலாம்னா நாகராஜன் வீட்டைக் கொள்ளையடிச்சாலும் தப்பில்லை!" என்று தெரியாமல் சொன்ன ஈரோடு இளைய தளபதிக்கு)   Delete