Thursday, March 21, 2013

காதல் தீவிரவாதியின் சிவராத்திரி சேட்டைகள்
நீங்கள் இந்த கழிவறை ஜோக்கை மூக்கை பொத்திக் கொண்டு ரசித்திருப்பீர்கள்


ஒருவர்: மாப்ளே நல்லா இருக்கீயா ?
 மற்றொருவர் : நல்லா இருக்கேன்.
 ஒருவர் : சுகப் பிரசவம் தானே ?
மற்றொருவர் : ஹிம் அந்த மாதிரிதான்.
 ஒருவர் : மாப்ளே நான் அப்புறம் கால் பண்ணுறேன். பக்கத்துல டாய்லெட்டுல உக்காந்துகிட்டு ஒருத்தன் ஓங்கிட்ட கேக்குற கேள்விக்கு பதில் சொல்லி தொல்ல பண்ணிக்கிட்டு இருக்கான்.

இதே மாதிரி அனுபவம் எனக்கு போன வாரம் கிடைத்தது. ஹுஹீம் கழிவறையில் இல்லை. உடனே ரொம்ப  இமேஜின் பண்ணிருவீங்களே. :D

இரு வாரம் முன்பு மஹா சிவராத்திரிக்கு சொந்த ஊருக்கு போக வேண்டி இருதது. ரயிலில் முன்பதிவு செய்ய மறந்து விட்டதால், பஸ்ஸில் பின் பதிவு செய்ய வேண்டி இருந்தது. பின்  பதிவு செய்ததால்  பின்னால் தான் சீட் கொடுத்தார்கள். வண்டி கொஞ்சம் கொஞ்சமாக நிரம்ப ஆரம்பித்தது. வண்டி மதுரவாயல் பைபாசில் ஏற ஆரம்பித்தவுடன் தான் அது நடந்தது.

காதல் தீவிரவாதி

நான் சீட்டினை பின் பக்கம் தள்ளி விட்டு விட்டு மனதிற்குள் "ஆண்டவா  ரொம்ப  நாளைக்கு  அப்புறம்  பஸ்ஸில் போறேன் நல்லபடியா போய்ச்.... " என்று  என் பிரார்த்தனையை நிறைவு செய்யும் முன்னதாகவே ஒரு (அவலக் ) குரல் "என்னடா நல்லா இருக்கியா?" என்று குழைந்தது. நானும்  "நல்லா  இருக்கேன் " என்ற படியே திரும்பினேன். பார்த்தால் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த "அவன்" போனில் பேசியபடியே  என்னை புதிராக பார்த்தான். நல்ல பிலிப்ஸ்  CFL பல்பா வாங்கிட்டு முன்னே திரும்பினேன். என் சீட் பின்னாடி தள்ளி இருந்ததாலும், அவன் சீட்டை பின்னே தள்ளாமல் இருந்ததாலும் அவன் போனில் பேசுவது, என்னிடம் பேசுவது போலவே இருந்தது.

அப்புறம் அந்த காதல் தீவிரவாதி தன் காதலியிடம் போனில் பேசுவது என் காதில் விழுந்து கொண்டே இருந்தது. சிவ சிவா. சிவராத்திரி  கொண்டாட வரும் உன் பக்தனுக்கு இப்படி ஒரு சோதனையா? அவனை வழி அனுப்ப வந்து இப்போது தான் பார்க்கிங் போயிருக்கிராளாம். அதற்குள் அண்ணே போன் பண்ணி "என்னடா எப்படி இருக்கே?" வாம். வந்த கோபத்தை  அடக்கிக் கொண்டேன். பொன்னியின் செல்வனில்  வரும்  ஆழ்வார்க்கடியான், வீர சைவரை சாத்துவது போல  இவனை நாலு  திருச்சாத்து சாத்தலாமா என்று யோசித்தேன்.

கவரிமான் ராஜா

பின்னர் இந்த கதை, அந்த கதை என்று ஓடிக் கொண்டே இருந்தது. எனக்கு, நமக்கு மட்டும் சிக்னல் அப்பப்போ போகும் இவனுக்கு போகவே மாட்டேங்குதே என்று 
கடுப்பில் மனதில் வந்த செல் போன் கம்பெனி  ஓனர்களை  எல்லாம் போன் பண்ணாமலே திட்டிக் கொண்டு வந்தேன். இதற்க்கு இடையில் (அட அந்த இடையில் இல்லப்பா) அந்த ராஜேசுக்கு மெசேஜ் அனுப்புவியே பதில் அனுப்புரானா ன்னு கேட்டாம் பாருங்க அப்புடியே எமெர்ஜென்சி எக்ஸிட் வழியா வெளிய குதிச்சிடலாமன்னு ஆயிடுச்சு. மைனா படத்துல வர்ற கவரிமான் ராஜாவாவாடா நீயின்னு மனதில் நினைத்துக் கொண்டேன்.

சுமார் ஒண்ணரை மணி நேரம் கடலை போட்டு விட்டு,  அடுத்த நாள் அவன் காதலிக்கு பிறந்த நாளாம்  அதனால் 11.30 PM க்கு கால் பண்ணுவேன் கட்டாயம் எடுக்கணும் எடுக்கல அவ்வளவுதான்னு சொல்லிட்டு. வைத்தான். சிவராத்திரி கொண்டாட வந்த என்ன ஏண்டா இப்படி வதைக்கிறீங்க. அப்பாடின்னு சிறிது சாய்ந்து படுத்தால் மறுபடியும் "ஹாய் மேன் ஹௌ ஆர் யு ?" என்று தன் நண்பனுக்கு போன் பண்ணி ப்ளேடை போட ஆரம்பித்தான். ஒரே ஓங் கம்பெனியில என்ன நடந்தது ஏங் கம்பனியில இது நடந்ததுன்னு ஒரே டாக்கிங் டாக்கிங். 11.30PM  ஆனதும் "ஓகே யா வி வில் மீட் லேட்டர் திஸ் வீக் " ன்னு சொல்லிட்டு வச்சுட்டான். அந்த பக்கம் இருந்தவன் "இவன் எதுக்கு போன் பண்ணினான், எதுக்கு இப்போ அவசரமா வைக்கிறான்னு" மண்டையை பிச்சுக்கிட்டு இருப்பது உறுதி.

திரும்ப மறுபடியும் "என்னடா எப்பிடி இருக்க?" என்றான். "மறுபடியும் மொதல்ல இருந்தாடான்னு" ஒரு படத்தில் வடிவேலு சொல்லுவார் பாருங்க, அதன் முழு அர்த்தம் அந்த நொடியில் விளங்கியது. இந்த தடவை ரொம்ப மோசம் (சீச்சீ அந்த மாதிரி இல்ல) ஐயாவுக்கு பேசுறதுக்கு  விசயம் இல்ல. அதனால் அப்புறம் அப்புறம் என்று  ஆயிரெத்தெட்டு  அப்புறம் போட்டுக் கொண்டிருந்தான். திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம் நெற்றிக் கண்ணால் அந்த மன்மதனை எரித்த நீ , இந்த மடையனையும் எரிக்க கூடாதா என்று வேண்டி கொள்வதை கொள்வதை தவிர வேறு வழி இல்லை.

இடையில் (அட இப்பவும் அந்த இடை இல்லப்பா) அழகன் படத்தில் வரும் சங்கீத ஸ்வரங்கள் பாட்டு வேறு நியாபகம் வந்து தொலைத்தது. அப்படி மட்டும் நடந்தால் சிவராத்திரியை ஒரு நாள் முன்னால் கொண்டாடிய ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன். ஒரு வழியாக 12 மணி அடித்ததும் " ஹாப்பி பர்த்டே டா" என்றான். அப்புறம் பத்து நிமிஷத்தில் போனை ஆப் பண்ணி வைத்து விட்டான். அப்பாடான்னு கண் அயர்ந்தேன்.

காலை 6 மணிக்கு மதுரை மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்டில் நுழைந்தது. மதுரக்காரெங்க மதுரக்காரெங்க  தான், மாட்டுக்கு கூட தாவணி போட்டு அழகு பாத்திருக்காங்கே.  மெல்ல திரும்பி அந்த காதல் தீவிரவாதியைப் பார்த்தேன், அவன் போனை எடுத்து  "என்னடா எப்பிடி இருக்கே?" என்றான்.

அப்போ ஒரு உருவம் அந்த பஸ்ஸில் இருந்து கையில் கிடைத்த தன் பேகை எடுத்துக் கொண்டு  "ஐயோ யம்மா, சிவராத்திரி கொண்டாட வந்தது ஒரு தப்பாடா ?" என்று அலறிக் கொண்டே,  தலை தெறிக்க ஓடியதாக பஸ்ஸ்டாண்டில் நின்றிருந்தவர்கள் சொன்னார்கள்.

_______________________________________________________________________________

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்தக்களை தெரிவியுங்கள்.

என்னுடைய  பதிவுகள் உங்களுக்கு பிடிக்குமானால் இந்த தளத்தை "Follow" பண்ணலாமே?

_______________________________________________________________________________

Post Comment

15 comments :

 1. பதிவு மிக அருமையாக இருந்தது ராஜ்.
  நகைச்சுவையாக கூறி உள்ளீர்கள்.

  அதிர்ஷ்டசாலி தான் இரண்டு நாட்கள் சிவராத்திரி கொண்டாடிறுக்கிரீர்கள்.
  அதனால் சிவன் உங்களை தனியாக கவனிப்பார்.

  பதிவின் தலைப்பை பார்த்த சற்று எதிர்பார்ப்புடன் வந்த எனக்கு ஏமாற்ற்றம் தான்.

  ReplyDelete
 2. @Lucky Limat : வருகைக்கு நன்றி லக்கி

  ReplyDelete
 3. @கிருஷ்ணா வ வெ:

  வருகைக்கு நன்றி கிருஷ்ணா. கொஞ்சம் சுண்டி இழுக்க கூடிய தலைப்பு வைக்கனும்னு அப்படி வைத்தேன். அதை படித்து விட்டு என்னோவோ ஏதோ என்று நீங்கள் வந்ததால் உங்களுக்கு ஏமாற்றமாகிவிட்டது என்று நினைக்கிறேன். :D

  ReplyDelete
 4. ஹா ஹா ஹா ஹல்லோ! ஹால்லோவ் உங்க லொள்ளு கதை சூப்பர்! மர்ம மனிதன் நீங்கதான்னு விசாரித்ததில் தெரிஞ்சது! அதுக்குன்னு இப்படியா ஓடுவீங்க? சிரிப்பில் வீடே அதிர்ந்தது ஜி!

  ReplyDelete
  Replies
  1. நானேதான் ஜி. வேற என்ன பண்ணுரது, :D

   Delete
 5. நண்பா ஊருக்குள்ளே நிறைய பயபுள்ளைக இந்த மாதிரி இருக்காங்க ....நீங்க பரவாயில்ல ..நான் தினம் காலை மாலை வேலைக்கு போக வர மூனு மணி நேரம் பஸ் பிரயாணம் செய்கிறேன் ...நிறைய அனுபவிக்க வேண்டி உள்ளது .....பாவம் அவர்களுக்கு நட்பு, காதல், காமம் என எல்லா பிரயாசைகளும் இப்படி பேசுவதிலே தணிகிறது போலும் ..... நாம்தான் ஒரு நல்ல இசையின் (Head Phone)உதவியுடன் அவர்களை தவிர்க்க வேண்டும் ..............

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ESH. நானும்தினம் மூணு மணிநேரத்தை என் IT அலுவலகத்துக்கு போக செலவழிக்கிறேன். தெரியாத்தனமாக இன் கெனல் ஹெட் போன் வாங்கி தொலைத்து விட்டேன். எனக்கு செட் ஆக மாட்டேங்குது. :D

   Delete
 6. காதல் தீவிரவாதியின் சிவராத்திரி சேட்டைகளும் ஒரு சாமியாரின் பதிவும் :)

  ReplyDelete
  Replies
  1. நம்ம சாமியார் ஆகணும்னு நினைக்கிறதே எப்பவோ, அப்பவும் இந்த மாதிரி நடந்தா இந்த முத்தானந்தா என்ன பண்ணுறது. நானும் இப்போ இருக்கிற பிரபலமான சாமியார் ஆகிடுவேன்னு பொறாமை :D

   Delete
 7. என்னங்க எப்படி இருக்கீங்க?
  அட, நீங்க பல் வலிக்காக டாக்டரைப் பார்த்ததைப் பற்றிக் கேட்டேங்க! :)

  பின்பதிவுன்னா என்னனு இன்னிக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். :)

  'மாட்டுத்தாவணி' பற்றி நானும் ஆச்சர்யப்பட்டிருக்கேன். 'எருமை உள்ளாடை', 'பன்னி பாவாடை', இப்படிப் பேர்களிலும் தமிழ்நாட்டில் ஏதாவது ஊர்கள் இருக்குமோ?! :)

  க்ளைமாக்ஸ் நல்ல முடிவு! ஹா!ஹா!ஹா!

  ReplyDelete
  Replies
  1. பல் வலி நினச்ச அளவுக்கு இல்லை. அடுத்த நாளே பக்கோடா சாப்பிட முடிந்தது.

   //எருமை உள்ளாடை', 'பன்னி பாவாடை', இப்படிப் பேர்களிலும் தமிழ்நாட்டில் ஏதாவது ஊர்கள் இருக்குமோ?! :)
   //

   ஹா ஹா பன்னி பாவாடை

   Delete
 8. . மதுரக்காரெங்க மதுரக்காரெங்க தான், மாட்டுக்கு கூட தாவணி போட்டு அழகு பாத்திருக்காங்கே.
  சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அமர்நாத் . நீங்கள் சிரித்தது உங்கள் ஐக்கானிலேயே தெரிகிறது. :D

   Delete