Tuesday, February 12, 2013

விஜய் டிவி : நீயா நானா VS கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்

நீயா நானா"தமிழகத்தின் தலையாய பிரச்னை என்ன?" 

போன வாரம் நீயா நானா "தமிழகத்தின் தலையாய பிரச்னை என்ன?" என்பதைப் பற்றி இளைஞர்கள் எவ்வளவு புரிந்திருக்கிறார்கள் என்பதை பற்றியதாக இருந்தது. ஒருபக்கம் இளைஞர்கள் கூட்டம், மறுபக்கம் அந்த பிரச்சனைகளை நீக்குவதற்காக போராடிக் கொண்டு இருப்பவர்கள் கூட்டம்.

மிக விறுவிறுப்பான ஒரு ஷோவை எதிர்பார்த்த எனக்கு கொட்டாவி தான் வந்தது. பொதுவாக இளைஞர்கள் பக்கம் மிக நன்றாக பேச தெரிந்தவர்களை, நிறைய பாயிண்டுகளை கூறுபவர்களை கூட்டி வருபவர் கோபிநாத். அப்படி ஒருவர் இந்த தம்பி. பெயர் சாக்ரடீஸ் என்று நினைக்கிறேன். எனக்கு பிடித்த தலைவர் என்ற தலைப்பில் "அம்பேத்க்கரை" பற்றி இவர் பேசிய பேச்சு எல்லோராலும் பாராட்டப் பெற்றது.


இந்த தடவை காலேஜில் அரைவேக்காட்டு தனமாக சுற்றிக் கொண்டு இருக்கும் 30 பேரை பிடித்துக் கொண்டு போட்டிருக்கிறார். எல்லோரும் மூணு படத்தில் ட்யுசன் கிளாசில் பார்முலா கேட்டவுடன் முழிக்கும் சிவகார்த்திகேயன் மாதிரி இருந்தார்கள். அதட்டி கேட்டால் என்ன உட்ருங்க நான் வெளியே போய் விடுகிறேன் என்கிற மாதிரியே உட்கர்ந்து இருந்தார்கள்.

ஒரு 30 நிமிடம் கடந்த பொழுது எனக்கு இந்த படம்தான்  நியாபகம் வந்தது.தமிழகத்தின் தலையாய பிரச்னை என்ன? என்ற கேள்விக்கு அவர்களின்  பதில்கள்

1) லஞ்சம்

ஒரு பெண் கிராமத்தில் இருப்பவர்கள் தான் வேலையே சீக்கிரம் முடிக்க வேண்டிலஞ்சத்தை ஊக்குவிக்கிறார்கள் என்றார்.இது தவறான கருத்து அந்த வேலையை எப்படி முடிப்பது என்று தெரியாமல் முழித்து லஞ்சம் கொடுத்திருக்கலாம்.

2) கல்வி சம உரிமை வேண்டும்

என்ன உரிமை என்று கேட்டபோது அஞ்சாங் கிளாசில் பயனையும் பெண்ணையும் பேச உட மாட்டேன்கிறாங்க என்றார் ஒருத்தர்.

3) ட்ராபிக் ரூல்ஸ் மீருறாங்க, சாலையில் குப்பை போடுறாங்க என்றார் ஒரு பெண் - தமிழகத்தின் தலையாய பிரச்னை இதுவா சகோதரி  என்று கத்த வேண்டும் போல இருந்தது.

4) தமிழ் மொழி அடக்கப்படுகிறது

தமிழ் மொழி அடக்கப் படுகிறது என்றார் ஒருவர். எப்படி என்று கேட்ட போது ஸ்கூல் எல்லாம் ஆங்கில மயமாக்கப் பட்டுவிட்டது என்றார். உண்மைதான். ஆனால் தமிழ் இலக்கியத்துக்கு பணிபுரிந்த ஐந்து எழுத்தாளர்களை சொல்லுங்க என்ற போது மு.வ வுடன் நிப்பாட்டி எனக்கு தெரியவில்லை என்றார். அவர் M.A தமிழ் படிக்கிறாராம், வெளங்கிடும் தமிழ்.

மற்றும் சில சிறு பிள்ளைத்தனமான பிரச்சனைகளும் சொன்னார்கள். எனக்கு நியாபகம் இப்போது இல்லை

மது 

கொடுமை என்னவென்றால் ஒருவர் கூட மது  ஒரு பிரச்னை என்று சொல்லவில்லை. மருந்து கடைகளை விட டாஸ்மாக் கடைகள் அதிகமாக இருக்கும் தமிழ் நாட்டில் மது குடிப்பது ஒரு பிரச்சனையே இல்லை போலிருக்கிறது. மது தான் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மன சிதறல், பணப் பிரச்னை மற்றும் குடும்பம் சிதறிப் போவது என்ற பல பிரச்சனைகளுக்கு மூலாதாரம். அதை ஈசியாக எடுத்துக் கொண்டது அதிர்ச்சியானது.

இஸ்லாமியர்கள் 

ஒரு சிலர் செய்யும் தவறால் சாதாரண இஸ்லாமியர்கள் படும் வேதனையை  பற்றி யாருக்கும் புரியவில்லை. இது பற்றி நண்பர் தினகரன் பகிர்ந்து கொண்ட ஒரு தகவல்.
_______________________________________________________________________________


"இப்படி அரைவேக்காட்டு தனமான ஒரு கூட்டத்தை கூட்டி எதிரணியில் இருந்தவர்களின் 
நேரத்தையும் நம் நேரத்தையும் வீணடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்."
_______________________________________________________________________________


கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்   

ஞாயிறு இரவு 8 மணிக்கு நான் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. போன வாரம் Wild Card Round நடந்தது.

ப்ரியா இந்த நிகழ்ச்சியில் எனக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் பிரியா. சாதாரணமாக பிரியா என்றால் நிறய பேருக்கு தெரியாது "மெட்ரோ பிரியா" என்றால் தெரியும். சன் டிவி வருவதற்கு முன்பு தூர்தர்ஷனில் மெட்ரோ சேனல் என்று ஒன்று இருந்தது. அதில் பிரியா அவர்கள் பேசும் வேகத்தை பார்த்து கிண்டல் பண்ணியிருக்கிறேன். சன் டிவி வந்தவுடன் மெட்ரோ சானல் தன் மவுசை இழந்து விட்டது. இவர் சன்னில் சேராமல் கல்யாணம் பண்ணிக் கொண்டு போய்விட்டார். திரும்பவும் இந்த நிகழ்ச்சி மூலம் திரும்ப வந்திருக்கிறார்.

இப்போ உள்ள ப்ரியா அளந்து தான் பேசுகிறார். ஆனால் பங்கேற்ற போட்டியாளர்கள் உட்பட அனைவருக்கும் பிடித்தவர் இவர்தான். மற்றவர்களுக்கு உதவுவதும் மற்றவர்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி அணைப்பதாகட்டும் ஒரு தாயை, தாய்மையை பார்க்கிறேன்.  உங்களுக்கு என் மரியாதைகள் பிரியா.

மற்றவர்கள் வெற்றி பெற்றால் "ஏண்டா இவன் ஜெயிச்சான்" என்று மூஞ்சை தூக்கி வைத்து கொள்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுள் நான் அப்படி நினைப்பது பூஜா. Wild Card Round-இல் முன் சுற்றுக்களில் தோற்ற அனைவரும் பங்கேற்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் இளவரசன், லலிதா மற்றும் பூஜா.

இளவரசன்

இளவரசன் பங்கேற்ற ஆண் போட்டியாளர்களில் பெஸ்ட். சும்மா ஒரு டிஷ், ரெண்டு டிஷ் பண்ணுவதெல்லாம் இவருக்கு பிடிக்காது. ஒரு முழு சாப்பாட்டில் எவ்வளவு டிஷ் இருக்குமோ அவ்வளவு டிஷ் கொடுப்பார். தொடர்ச்சியாக நன்றாக செய்தவர்களில் இவரும் ஒருவர்.மூன்று பேர் நன்றாக செய்திருந்தார்கள். பூஜா, இளவரசன் மற்றும் சிவா. இவர்களில் நல்ல தன்னம்பிக்கையோடு நின்று கொண்டிருந்தவர் இளவரசன். ஆனால் பூஜாவுக்கு தான் கிடைத்தது. இளவரசன் ஏமாற்றமடைந்தாலும் பூஜாவுக்கு வாழ்த்து சொன்னார். பூஜாவுக்கு ஒரே சந்தோஷம். விஜய் டிவி வழக்கம் போல் ஒரு ட்விஸ்ட் வைத்தது. நாலு பேரோடு ஐந்தாவதாக இளவரசனையும் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் பூஜா  முகம்  வாடிப் போய் விட்டது. மற்றவர்கள் ஜெயிப்பதை கண்டு பொறமை கொண்டால் நாம் ஜெயிக்க முடியாது என்பது பூஜாவுக்கு தெரியவில்லை. இதனாலேயே பூஜாவை எனக்கு பிடிக்காமல் போய் விட்டது.

இந்த நிகழ்ச்சி பற்றி பிரபல பதிவர் கேபிள் சங்கர் பாணியில் சொல்லுவதென்றால் "டிவைன்" :-D

_______________________________________________________________________________

"பைனலில் என் தேர்வு ப்ரியா அல்லது இளவரசன் தான்."

_______________________________________________________________________________

டிஸ்கி 

தொடராக நான் பார்ப்பது "சரவணன் மீனாட்சி", "நீயா நானா" மற்றும் "கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்" மட்டுமே .

Post Comment

10 comments :

 1. நானும் நீயா நானா பார்த்தேன். பாவம் ஏதோ ஷோ நடத்துவதற்காக கூட்டி வந்தது போல இருந்தது. நான் முதல் பாதி மட்டும் தான் பார்த்தேன். எதிர் அணியில் இருந்த ஒரு பெண் "இவர்கள் சமீபத்தில் மீடியாவில் வந்த நிகழ்சிகளை மட்டும் வைத்து கூறுகிறார்கள்" என்றார். அது தான் உண்மை.அதன் பின் நான் பார்கவில்லை.நீங்கள் கூறிய நபர் பேசியதை நான் கேட்கவில்லை.

  நான் விரும்பி பார்க்கும் ஒரே நிகழ்ச்சி கிச்சன் சூப்பர் ஸ்டார் தான்.எனக்கும் மிகவும் பிடித்தது ப்ரியா தான்.

  ஆனால் நிகழ்சிகளுக்காக ஒரு டீசர் போடுகிறார்களே.அதில் நாம் பார்க்கவேண்டும் என்று ஒரு உந்துதலை ஏற்படுத்தி விடுகிறார்கள்.ஒன்றும் இல்லாத விஷயத்தை கூட பெரிது படுத்தி காட்டிவிடுகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. //ஒன்றும் இல்லாத விஷயத்தை கூட பெரிது படுத்தி காட்டிவிடுகிறார்கள்.//

   அதற்க்கு விஜய் டிவி க்கு சொல்லியா தர வேண்டும் :D

   Delete
 2. போன வாரம் நீயா நானா நானும் பார்த்தேன். ஒண்ணுமே பேச தெரியாத ஒரு பக்கத்தை பார்க்க கடுப்பு தான் வந்தது. அதுவும் பொண்ணுக பேசுனது எதுவும் சரியில்ல...

  ReplyDelete
 3. /* தொடராக நான் பார்ப்பது "சரவணன் மீனாட்சி", "நீயா நானா" மற்றும் "கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ்" மட்டுமே .*/

  சரவணன் மீனாட்சி எட்டரை மணிக்குனு என் மணைவி சொல்ல கேட்டிருக்கிறேன். எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவீர்களா? கொடுத்து வைத்தவர். நமக்கு எட்டு மணிக்கு தான் காலே ஆரம்பிக்கும்...usகாரன் பல் தேய்ச்சிகிட்டே பேசுவான்

  ReplyDelete
  Replies
  1. ஜெனரல் ஷிப்ட் என்பதால் இந்த வசதி :D

   Delete
 4. சாரி மறுந்துட்டேன்... வந்தோம்ல செகண்ட்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா மறக்க மாட்டீங்களே

   Delete
 5. உங்க ஆபீஸ்ல வேலை வாங்கி கொடுங்களேன்

  ReplyDelete
 6. உங்களுக்குத் தெரிந்த எழுத்தாளர் சொல்லுங்கன்னு மடக்குன உடனே.. ப்ளாங்க் ஆகிடுச்சு அவருக்கு.. பாவம்.. இது பலருக்கு வரும் பிரச்சினைதான்.. நான் அமெரிக்கா விசா வாங்கப் போகும் போது இதே போல ரொம்ப பேசிக் கொஸ்டின் கேட்க.. ப்ளாங்க் ஆகி.. முழித்தேன்..

  இருப்பினும்.. தமிழ் எம்.ஏ..க்கு கண்டிப்பாக பெயர் தெரிந்திருக்க வேண்டும் :) எந்த சூழ்நிலையிலும்

  ReplyDelete
 7. மன்னிக்கவும். நீயா நானா பார்ப்பதில்லை. கிச்சன் வீட்ல இருக்கு. பார்க்கிறேன். இந்த ப்ரோகிராம் நடக்கும்போது, டிவி ஆப் பண்ணியிருந்தா மட்டும் பார்ப்பேன் :)

  ReplyDelete