Tuesday, February 26, 2013

விஜய் டிவி : கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ் - பைனலில் வென்றது ப்ரியாவா பூஜாவா ?









கடந்த  வாரம் கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 1 - பைனலை நானும் என் மகளும் மிக ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தோம். முந்தைய பதிவில் சொல்லி இருந்த படி என் வோட்டு பிரியாவுக்கும், இளவரசனுக்கும்தான். பைனலுக்கு தேர்வாகி இருந்தவர்கள் பிரியா, இளவரசன்,பூஜா மற்றும் சந்தியா.

முதல் ரவுண்டு ~ஒற்றைக்கு ஒற்றை

முதல் ரவுண்டு ஒரு ஒற்றைக்கு ஒற்றை ரவுண்டு. இதில் ப்ரியாவும் , சந்தியாவும் போட்டி போட்டனர். மற்றொரு பக்கம் பூஜாவும் , இளவரசனும் போட்டி போட்டனர்.

விதிகள் 

இதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால் நம்முடைய போட்டியாளர்களுக்கு நாமே என்ன பொருட்களை வைத்து சமைக்க வேண்டும் என்பதை எடுத்து கொடுத்து விட வேண்டும். கஷ்ட்டமான பொருள்களை  கொடுத்து விடலாம். ஆனால் நீங்கள் எடுத்து கொடுத்த பொருளை வைத்து என்ன செய்வீர்கள் என்பதையும் சொல்ல வேண்டும். எதிராளி அந்த பொருட்கள் அனைத்தையும் அவர் சமைப்பத்தில் பாவித்து இருக்க வேண்டும்.

இளவரசன் ஏழு காய்கறிகளை எடுத்து கொண்டு வந்து நடுவர்களிடம் இதை வைத்து என்ன செய்வீர்கள் என்று கேட்க்கும்போது சொல்லத் தெரியாமல் பல்பு வாங்கினார். பின்பு வேறு சமையல் பொருட்களை எடுத்துக் கொண்டு வந்தார். அவை எல்லாமே பிரியாணிக்கு பாவிக்க கூடியவை. இதோடு வாட்டர் மெலன் கூட. இதை பூஜா சமைக்க வேண்டும்.

பூஜா இளவரசனுக்கு பாஸ்தா தொடர்பான பொருட்களை கொடுத்திருந்தார்.

சந்தியாவின் கேம்ப்ளிங்

சந்தியா ஒரு கேம்ப்ளிங் ஆடினார் என்றே சொல்ல வேண்டும். அவருடைய எண்ணம் என்ன வென்றால் சிம்பிளான பொருட்களை கொடுத்தால் அதை வைத்து ப்ரியா ஒரு சிம்பிள் டிஷ் தயார் செய்வார். பைனலுக்கு தகுந்த டிஷ் இல்லை என்று அவரை தோற்கடித்து விடலாம் என்று நினைத்தார்.

சந்தியா கொண்டு  வந்த பொருட்கள் ஒரு டெசெர்ட் தயார் பண்ணக் கூடிய பொருட்கள். அதைப் பார்த்ததும் செப் வெங்கட்டுக்கு ஆச்சர்யம். ஏன்னா பிரியா டெசெர்ட் வகைகளில் கை தேர்ந்தவர். அவருக்கு நீங்க ஜெயிக்கிறதுக்கு கொடுக்குற  மாதிரி இருக்கு, இன்னொரு வாய்ப்பு  கொடுக்கிறோம் மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொன்னதைக் கூட மறுத்து விட்டார்.

பிரியா ஒரு ராஜஸ்தானி சமையலுக்கு உள்ள பொருட்களை கொண்டு வந்தார்.  வாழைத் தண்டும் அதில் இருந்தது.

பூஜா VS இளவரசன்

பூஜா வாட்டர் மெலன் தண்ணீரில் வேக வைக்கப் பட்ட பிரியாணி செய்தார். சிக்கன் வேகாத போது அதை தம்மில் (அவிக்கிற மாதிரி ) வேக வைத்தார். இந்த டெக்னிக்குகள் தான் இவரை காப்பாற்றின.

இளவரசன் பாஸ்தா பண்ணினார் ஆனால் நூடுல்ஸ் மாதிரி பண்ணினார் என்று செப்களின் கமெண்ட்ஸ்.

கடைசியில் வாட்டர் மெலன் தண்ணியில் வேக வைத்த புதுமைக்காக பூஜாவை செலக்ட் பண்ணினார்கள். இளவரசன் வெளியேறினார்.

பிரியா VS சந்தியா

சந்தியாவின் மூவை பிரியா புரிந்து கொண்டார். சிம்பிளாக செய்யாமல் பிஸ்கட் மாதிரி எல்லாம் செய்து ( பேரு ஏதோ சொன்னங்க மனசில இல்லை) அசத்தி விட்டார். செப் வெங்கட் பார்த்து விட்டு "நாங்க டெசெர்ட் செய்வீங்கன்னு பார்த்தால் இது செஞ்சுகிட்டு இருக்கீங்களே" என்று பாராட்டி விட்டு போனார்.

சந்தியா ஒரு டெசெர்ட் பண்ணினார். கடைசியில் ஜெயித்தது ப்ரியாதான்.

ரொம்ப சிக்கலான இடத்துக்கு என்ன இட்டு சென்று விட்டார்கள். ப்ரியா தான் ஜெயிக்க வேண்டும். பூஜா ஜெயிக்கவே கூடாது என்ற முடிவுகளுடன் இருந்த என்னை கடைசியில்  பூஜா VS ப்ரியா என்று இந்தியா  VS பாகிஸ்தான் லெவெலுக்கு  ஆக்கி விட்டார்கள்.

கடைசி ரவுண்டு

கடைசி ரவுண்டில் உங்களுடைய "Signature Dish " பண்ணுங்க என்று சொல்லி விட்டதால், சுதந்திரத்துடன் வேண்டிய பொருட்களை எடுத்து சமைக்க ஆரம்பித்தார்கள்.

பிரியா ரெண்டு டிஷ் பண்ணினார். ஒண்ணு தாய் பிஷ் கேக் அப்புறம் கேலட்டி கபாப். கேலட்டி கபாப் ஒரு தொன்மையான ஒரு டிஷ். வறுப்பது அரைப்பது என்று நிறைய வேலைகள் அதற்க்கு பார்க்க வேண்டும். அதன் மூலம் நடுவர்களை அசத்த முடியும் என்று நம்பினார்.

பூஜா இதுதான் "நான் கடைசியாக சமைக்கப் போகிறது இந்த மேடையில், அதனால்  ஒரு முழு சாப்பாடு மாதிரி கொடுக்க வேண்டும்.சும்மா ஒரு டிஷ் ரெண்டு  டிஷ்  என்று கொடுக்க கூடாது" என்று ஒரு முழு சாப்பாடு  தயார் பண்ணினார். அப்போதே என் மனதில் எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்து விட்டது ஆகா பூஜாவோட வியூகம் அசத்தலாக இருக்கிறதே, ப்ரியா ரெண்டே ரெண்டு டிஷ் பண்ணுறாங்களே ன்னு நினைச்சேன்.

ப்ரியா தயார் பண்ணின தாய் பிஷ் கேக் சரியாக வரவில்லை என்பதால்,கேலட்டி கபாப்பை மட்டுமே காட்டினார். செப் தாமு கேலட்டி கபாப்புக்கு 140+ ஸ்பைஸ் போட வேண்டும் என்றார். வெறும் 14   ஸ்பைஸ் மட்டுமே போட்டு அந்த சுவை கொண்டு வந்து விட்டீர்கள் பாராட்டினார்.

பூஜா கொண்டு வந்த முழு சாப்பாட்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ்.எல்லோருக்கும் பிடித்து இருந்தது.

க்ளைமாக்ஸ்

விஜய் டிவி இலக்கணப்படி செப் தாமு ப்ரியாவையும் செப் வெங்கட் பூஜாவையும் தேர்ந்தெடுத்து விட்டதாக அறிவிக்க, மூன்றாவதாக ஆங்கர் சுரேஷ் கொஞ்ச நேரம் நம் பிரஷரை ஏறும்படி காத்திருக்க வைத்து விட்டு பூஜா என்று அறிவிக்க பூஜா முதல் கிச்சன் சூப்பர் ஸ்டார் ஆனார். பூஜா வரக் கூடாது என்று நினைத்திருந்தாலும் அவர் செய்த டெக்னிக்குகளை பார்க்கும்போது தகுதியானவர் என்றே தோன்றியது.ப்ரியா எப்போதும்  போல் சிரித்த முகத்துடன் இருந்தார். இதுதாங்க எனக்கு பிடித்தது.

ப்ரியாவிடம் கேட்கும் போது "நான் இந்த ஷோ வரும்போது சில கொள்கைகளுடன் வந்தேன். இவுங்க அப்பிடி அவுங்க இப்படின்னு பேசக் கூடாது. யார் கூடயும் சண்டை போடக் கூடாதுன்னு. இப்போ அந்த கொள்கைகளை  மீறாமல் எல்லோருடனும் அன்பாயிருக்கிறேன் அதுவே எனக்கு போதும் என்றார். " இந்த ஒரு குணம்தான் எல்லோரிடமும் இருக்க வேண்டியது. இந்த குணம்தான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தது.இந்த ஷோக்கள் இன்று வரும்   நாளை போகும் நல்ல நண்பர்கள் அப்படி அல்ல. இந்த ஷோவுக்காக யாரையும் பகைக்க வேண்டாமே.

என்னடா தலைப்பு இது

சரி தலைப்புக்கு வருகிறேன். என்னடா பூஜா தானே ஜெயிச்சாங்க,பின்ன ஏன் பூஜாவா , ப்ரியாவா? ன்னு   தலைப்பில்  போட்டுருக்கீங்கன்னு   கேக்குறவங்களுக்கு, அதுக்கு மேல அந்த ஷோவில் ஒரு சம்பவம் நடந்தது. அது ப்ரியா மிக அருமையாக செய்த ஒரு டிஷ்ஷை அவருடைய பேரிலேயே தான் இருக்கும் பைவ் ஸ்டார் ஹோட்டலில் வைக்கப் போவதாக அறிவித்தார். அதாவது Priya's  <டிஷ் பேரு> என்று வைப்பார்கள். "அப்பா, இப்போதான் என் மனசு நிரஞ்சுச்சு. ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் தன் பெயரில் ஒரு டிஷ் இருப்பது ஒரு செப்க்கு எவ்வளவு பெரிய ஹானர். அந்த விஷயத்தில் ப்ரியாதான் ஜெயித்தார். அந்த நாளில்  பூஜா  ஜெயித்திருந்தாலும் கிச்சன் சூப்பர் ஸ்டாரில் பங்கேற்றவர்களையும், பார்த்தவர்களையும் ஒரு சேர வென்றவர் ப்ரியா அதனால் என்னை பொறுத்த வரை   
ப்ரியாதான் ஜெயிச்சவர்.

என்ன என்னோடு ஆமோதிக்கிறீர்கள் தானே?

 ___________________________________________________________________________________

கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ் பற்றிய முந்தைய பதிவு


 ___________________________________________________________________________________

Post Comment

5 comments :

  1. கண்டிப்பா ஏத்துக்கரங்க.
    பூஜாதான் ஜெயித்தது என சொன்ன உடனேயே நான் டிவி ஆப் பண்ணிட்டேன்.
    அதனால் அதன் பின்பு நடந்தது தெரியவில்லை.
    எனக்கு பூஜா ஜெயிச்சது புடிக்கல for சிம்பிள் ரீசன் அவங்களோட attitude பிடிக்கல.

    ReplyDelete
  2. @கிருஷ்ணா வ வெ : கடைசி ட்விஸ்ட் நான் எதிர் பாராதது.

    //எனக்கு பூஜா ஜெயிச்சது புடிக்கல for சிம்பிள் ரீசன் அவங்களோட attitude பிடிக்கல.//

    எனக்கும் அதே அதே.

    ReplyDelete
  3. ennaiporuththavarai pooja indha nigzhchchikke thagudhiyaanavar illai kaaranam avar edharkkagavandhaaro adhaividuththu naththamedukkudhu,komattudhu,vaandhivaramaadhi irrukkudhu, paarkka sagikkala enbadhu pondra vaarththaigalai ovvoru nigazhchchiyilum sonnaar ivarai poi kitchchan super star endral kelikooththaana nigzhchchi
    surendran

    ReplyDelete
  4. @விழித்துக்கொள் : நீங்கள் சொல்லும் பாயிண்ட்டை நான் பல முறை பார்த்திருக்கிறேன். அவருடைய குணம் எனக்கு பிடிக்கவில்லை.



    தமிழில் எழுத பின்வரும் URL ஐ பயன் படுத்தலாம். நீங்கள் சாதாரணமாக இப்போது அடிப்பது போலவே அடித்து பாருங்கள்

    http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/

    ReplyDelete
  5. I finding same like your post thanks visit my site http://www.universalgranite.co.uk/

    ReplyDelete