Friday, February 22, 2013

விஜய் டிவி : என் தேசம் என் மக்கள் ~ சியர்ஸ் ~ தமிழ்க் "குடி"மக்களின் குடி வரலாறு
விஜய் டிவியின் மற்றுமொரு சமூக அக்கறை கொண்ட ஷோ என் தேசம் என் மக்கள். கோட்டுப் போடாத கோபிநாத்தே இது கொஞ்சம் வித்தியாசமான ஷோ என்று சொல்லாமல் சொன்னார். அன்றைய பாகத்தின் சப்ஜெக்ட் குடியின் தீமை.

நீயா நானா தியரி கிளாஸ் என்றால் இந்த ஷோ ஒரு ப்ராக்டிகல் கிளாஸ்.ப்ராக்டிகல் கிளாஸ் என்று நான் சொல்லுவதற்கு காரணம் குடியினால் பாதிக்கப் பட்டவர்களின் கதையை அவர்கள் வாயிலாக,அவர்கள் குடும்பத்தின் வாயிலாக சொல்ல வைக்கிறார்.


"நான் என் பையன மருந்து வச்சு கொன்னுரலாம்ன்னு நினைச்சேன்" 

இது ஒரு தாயின் வார்த்தைகள். ஒரு தாய் தன் உயிரைக் கொடுத்து தன பிள்ளையின் உயிரை
காக்க கூடியவர். இப்படி அவர் சொன்ன வார்த்தை  எல்லோரையும்  ஒரு நிமிடம் ஊமையாக்கி விட்டது. அந்த அம்மாவுடைய மகனின் முகத்திலும் இனம் புரியாத சோகம். தாயை கண்டபடி திட்டுவது, மனைவியை சந்தேகப் படுவது, தன் கையாலாகாத தனத்தை மறைக்க மனைவியை அடிப்பது,வார்த்தைகளால் குத்தி கிழிப்பது என்று எல்லா கோர முகத்தையும் காட்டி இருக்கிறார்.  இப்படி தன் கோர முகத்தை காட்டும் மது, அறிமுகமாகும் நேரத்தில் தன் நல்ல முகத்தை காட்டி அறிமுகமாகிறது.

எப்படி அறிமுகம் ஆகிறது

மது அறிமுகம் ஆவது இப்படி ஏதாவது ஒரு வழியில் தான்

சொகுசுக் குடி

1) டீன் ஏஜில் நண்பர்கள் மூலமாக
2) கல்லூரி காலங்களில்
3) வேலை இடங்களில், எல்லோரும் குடிக்கும்போது நாம் எப்படி குடிக்காமல் இருப்பது என்று ஆரம்பிப்பது.
4) வேலை தரும் மன அழுத்தம், வாழ்க்கையில் விரக்தியால் குடிக்க ஆரம்பிப்பது.

உழைப்புக் குடி

1) கடும் உழைப்புக்குப் பின் உடல் வலி தெரியாமல் இருக்க குடிப்பது.

தமிழ்க் குடிமகன்களின் குடி வரலாறு

டீன் ஏஜ்

சொகுசுக் குடியில் முதலில் ஆரம்பிப்பது பியர் (பீர் ?) தான்.3 % தான் ஆல்கஹால்தான் மச்சி என்று நண்பன் ஊற்றி கொடுப்பான். அடித்து முடித்தவுடன் தான் பெரிய ஆம்பிள்ளை ஆகிவிட்ட மாதிரி டீன் ஏஜில் தெரியும்.

ஊற்றிக் கொடுத்த நண்பன் ஹாட்டுக்கு மாறிவிட நமக்கு பியர் அடிக்க மனசு வராது. எனக்கும் கொடு மச்சி எனும்போது "டேய் இதுல்லாம் பெரியாளுங்க சாப்பிடுரதுடா  மாப்ளே " என்று அலட்டலுடன் தரும் ஹாட்டை அடிக்கும்போது லேசாக சில்லென்று உணர்வீர்கள். குடி அரக்கனின் மாளிகையின் வாயிலில் இருந்து அடிக்கும் காற்றுதான் அது.

முதலில் திருட்டு தனமாக நண்பன் தரும் பானத்தை அருந்தி கொண்டிருந்த
 சிட்டுக் குருவிக்கு   சிறகு முளைக்க ஆரம்பிக்கும். தானாக வாங்கி குடிக்க ஆரம்பிக்கும்.

குடி கேங்

 பிறகு நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்ற நல்ல பழக்கத்தை பின் பற்றும் முயற்சியில், ஒரு கேங்  பாம் ஆகும். அப்புறம் என்ன குப்புற விழுந்தாக் கூட "மச்சி குப்புற விழுந்தத பத்தி ஏன்டா கவலைப் படுற, அப்போ நம்ம மஞ்சுளா உன்னப் பாத்து சிரிச்சாடா  மச்சி, டேய் சொல்லுங்கலேண்டா"ன்னு சொல்ல  கேங்கில் இருக்கும்  எல்லா  மண்டையும்   பார்ட்டிக்காக ஆடும்.மச்சி பார்ட்டி குடு மச்சி என்று படுத்தி எடுத்து குப்புற விழுந்ததுக்கும்  பார்ட்டி கேட்க தோணும்.

கல்யாணத்துக்கு முன் 

கல்யாணக் காலம் குடிமகன்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான நேரம். இதை எப்பிடி சமாளிப்பது என்று தெரியாமல் நிறைய பேர் திண்டாடுவார்கள். வரப் போகும் மனைவியிடம் நல்ல பேர் வாங்க வேண்டும், அடே நேரம் நண்பர்களிடம் "பொண்டாட்டிக்கு இப்பவே பயப்புட ஆரம்பிச்சுட்டான்டா"  என்ற நல்ல பேரை வாங்காமல் இருக்க வேண்டும்.

எது எப்படி ஆனாலும் கல்யாணத்துக்கு முந்தின நாள் பாட்டில் இல்லாம மட்டும் போயிடுச்சு மாப்பிளை முகத்த கூட  பாக்காமகிளம்பி போய்க் கிட்டே இருப்பாங்க அந்த கேங். அப்புறம்  அவங்கள பார்த்தால் படுத்தி எடுத்து விடுவார்கள் என்பதால் சகித்துக் கொண்டு "பாட்டில்களின்  ராஜ்யத்தில்  உய்யலாலா " என்று பாடியே ஆக வேண்டும்.

{என்னைக் கேட்டால் அந்த கேங்கை கழட்டி விடணும் என்றால், பாட்டிலே இல்லை மச்சி. இருந்து கட்டாயம்  சைவச் சாப்பாடு சாப்பிட்டுதான் போகணும்னு" சொல்லிட்டு மாப்பிள்ளை   நடை கட்டி விடவேண்டும்.  }

கல்யாணத்துக்குப் பின்

சரி கல்யாணம் ஆகி விட்டது. கல்யாணம் ஆன முதல் மாதம் ஒன்றும் தெரியாது. புது மனைவியின் நெருக்கம், ஹனிமூன் என்று என்ஜாய் பண்ணி
விட்டு ரெண்டாம் மாதம் தான் பழைய கேங்க்கு போவார்கள். அல்லது கேங்கில் இருந்து அழைக்கப் படுவார்கள்.

"மச்சி நான் கல்யாணத்துக்கப்புறம் குடிக்கிறது இல்ல 

மச்சின்னு" சொல்லிப்  பாருங்க. அவிங்க வீட்டுல இருந்த 

அம்பது  பவுன்  நகைய களவாண்டுட்டு  வந்த  களவாணிப் 

பயல பாக்குற காண்டுலையே பாப்பாய்ங்க. "

 

"மச்சி நான் கல்யாணத்துக்கப்புறம் குடிக்கிறது இல்ல மச்சின்னு" சொல்லிப்  பாருங்க. அவிங்க வீட்டுல இருந்த அம்பது பவுன் நகைய களவாண்டுட்டு  வந்த களவாணிப் பயல பாக்குற காண்டுலையே பாப்பாய்ங்க. அவிங்க மண்டைக்குள்ள  ஓடுறத மட்டும் படிச்சா இப்பிடித்தான் இருக்கும் " இப்பிடிதாண்டி மாப்ளே, எல்லாப் பயலும் சொல்லறான் , ஒண்ண  உட்டுருவோமா ? ".

"மச்சி என்னடா" ன்னு ஆரம்பிச்சி தன்  மானத்தை கீறிப் பார்க்கும் " டே நா அப்பவே சொல்லல. இவன் பொண்டாட்டி தாசன்டா, நீ வேணும்னா ஒரு போனப் போட்டு ஒரு வாய்  குடிச்சுக்கவான்னு  ஓம் பொண்டாட்டிக்கிட்ட கேட்டுக்க மச்சி." ன்னு சொன்னதுக்கபுரம் நம்ம ஆளு "டேய் நான் என்ன சொம்பப் பயன்னு நினச்சீங்களானு" ஒரே  கல்ப்புல அடிப்பாரு. அப்புறம் என்ன கேங்கோட மானம் காப்பற்றப்படும். வீட்டில் மானம் கப்பலேறும்.

வீட்டுக்கு தெரிஞ்ச பிறகு

வீட்டில் தெரிஞ்சு போனது நல்லதாப் போச்சுன்னு அடுத்த நாள் நேரமாவே குடிக்கபோரவனும் உண்டு. இல்ல மனைவி கூட நடந்த சண்டைய மறக்க குடிக்கப் போறவனும் உண்டு. நா அப்பிடிதான் குடிப்பேன் உன்னால என்ன பண்ண முடியும்னு ஆம்பள சிங்கமா(?) குடிக்க வருபவனும் உண்டு. இல்ல நடந்த சண்டையில் படுகாயப் பட்டு "அம்மா அப்பா" என்று முனங்கி கொண்டு வீட்டில் கிடப்பவர்களும் உண்டு.

IT பீல்ட் என்று சொல்லக் கூடிய கணினி துறையில்

IT பீல்ட் என்று சொல்லக் கூடிய கணினி துறையில் இருப்பது குடிப்பவர்களுக்கு இன்னும் சாதகம். ப்ரொஜெக்ட் வந்தாலும் பார்ட்டி, முடிஞ்சாலும் பார்ட்டி, டீம்ல எவனாவது சேர்ந்தாலும் பார்ட்டி, இவங்க தொல்ல தாங்க முடியாம டீம்ல இருந்து போனாலும் பார்ட்டி, இது போக கல்யாணம் ஆனா, காது குத்தினா, கார வாங்கினா, லோனப் போட்டு வீடு வாங்கினா, ப்ரோமோசன் வந்தா, முக்கியமா ஆன் சைட் போனான்னு  பார்ட்டி இல்லாத தருணமே இல்ல. அடடா வாரம்  ஒரு முறை வரும்  பிரைடேயை விட்டு விட்டுடனே.என்ன இப்பவே கண்ணக் கட்டுதா?.  

இது போக மேனேஜர் குடித்தால், தானும் குடித்தால்தான் அவரிடம் நெருங்க முடியும் என்று நினைப்பவர்களும் உண்டு. அட சும்மா இருங்க பாஸ் இதுவும் ஒரு காரணந்தான். பொழைக்கிற புள்ள எப்படி  இருந்தாலும் பொழைக்கும்.

ஆணுக்குப் பெண் சமம்கிறது இங்கே சகஜம் ஆதலால் க்ளாசுடன் பெண்களைப் பார்த்தால்  பட்டிக் காட்டான் மிட்டாய்க் கடையைப் பாக்கிறது மாதிரி பார்க்காமல் கொஞ்சம் டீசெண்டா பார்க்கிறதுக்கு நம்மை பக்குவப் படுத்திக்கொள்வது நல்லது.


க்ளைமாக்ஸ்

சரி, தன் மகனை மருந்து வைத்து கொன்றிருப்பேன் என்று சொன்ன தாய் கொன்றார்களா?

இல்லை,அதற்குள் அவர்களுக்கு குடி என்பது ஒரு நோய்தான் மருந்துகளின் மூலம் குணப்படுத்தி விட முடியும் என்று தெரிந்து அவரை குடி மறுவாழ்வு மையத்தில் சேர்த்து மீட்டிருக்கிரார்கள். அவர் மீண்டு வந்தவுடன் என்ன வேலை செய்கிறார் தெரியுமா ?

குடியில் இருந்து மீட்கும் குடி மறு வாழ்வு மையத்தை அமைத்திருக்கிறார். அவர் தன்  வாழ்வையே அங்கு வரும் நோயாளிகளுக்கு எடுத்துக் காட்டாக சொல்கிறார்.

இவர் மாதிரி அதிர்ஷ்டம் எல்லோருக்கும் இருக்குமா? இல்லை என் நண்பனுக்கு இல்லை. +2 வில் 1100 க்கும் அதிகமாக எடுத்தவன் இப்போது குடியால் உயிரோடு இல்லை.

இந்த பதிவை படித்து முடித்தவுடனே கைகள் நடுங்க தொடங்கி இருந்தால் உடனே செயல்படும் நேரமிது. நேரம் கடக்கும் முன் செயல் படுங்கள் நண்பர்களே.

இப்போ ரஜினி சொன்னதுதான் நினைவுக்கு வருது.

 "கண்ணா, பால் குடிச்சாலே பல நோய் வர்ற இந்தக் காலத்துல நீ
 விஷத்த குடிக்கிற, அது உன்னெ அழிச்சிரும்"    

 ___________________________________________________________________________

டிஸ்க்கி

வலைப் பூக்களில் குடியை கொண்டாடும் போக்கு மிக அதிகமாக இருக்கிறது. இது மிகக் கவலைக்குரியது.

குடியில் மூன்றாவது இடத்தில தமிழ் நாடு இருக்கிறது.முதலிடத்தில் கேரளா என்று தானே  நினைக்கிறீர்கள். இல்லை நானும் அப்படித்தான் நினைத்து ஏமாந்தேன்.முதலில்ஞ்சாப்,
பின்பு ஆந்திரா அப்புறம்  தமிழ் நாடு.

டாஸ்மாக்கில் 2015 இல்இப்போது வரும் வருமானத்தை ரெண்டு மடங்காக்க வேண்டும் 
என்று உத்தரவு வந்திருப்பதாக ஒரு புரளி.

 ___________________________________________________________________________

Post Comment

8 comments :

 1. அருமை நண்பரே !!!

  குடி எவ்வளவு மோசமானது என்று இதை விட எளிமையாக , அருமையாக சொல்லி விட முடியாது

  இந்த பதிவை படித்து ஒரு சிலர் திருந்தினாலும், அது உங்களுக்கு கிடைத்த வெற்றி !!!

  கண்டியப்பாக இந்த பதிவை எனது அலுவலக நண்பர்களிடம் பகிர்வேன் (பெருமையுடன்)

  இந்த நேரத்தில் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன் - இது வரை எத்தனையோ வாய்ப்புகள் / நண்பர்களின் வற்புறுத்தல்கள் / செல்ல மிரட்டல்கள் வந்த பொழுதும் இது வரை இதை நான் தொடமால் உள்ளேன் .. இனியும் தொடாமல் தொடர்வேன் :) என் மீது எனக்குள்ள நம்பிக்கையுடன் ... என் குடும்பம் என் மீது வைத்துள்ள நம்பிக்கையுடன் ...

  நன்றி நண்பரே !!!!

  ReplyDelete
  Replies
  1. //இந்த நேரத்தில் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன் - இது வரை எத்தனையோ வாய்ப்புகள் / நண்பர்களின் வற்புறுத்தல்கள் / செல்ல மிரட்டல்கள் வந்த பொழுதும் இது வரை இதை நான் தொடமால் உள்ளேன் .. இனியும் தொடாமல் தொடர்வேன் :) என் மீது எனக்குள்ள நம்பிக்கையுடன் ... என் குடும்பம் என் மீது வைத்துள்ள நம்பிக்கையுடன் ... //

   அருமை நண்பரே

   //இந்த பதிவை படித்து ஒரு சிலர் திருந்தினாலும், அது உங்களுக்கு கிடைத்த வெற்றி !!!

   கண்டியப்பாக இந்த பதிவை எனது அலுவலக நண்பர்களிடம் பகிர்வேன் (பெருமையுடன்) //

   நன்றி நண்பரே

   Delete
 2. அருமையாகத் தொகுத்திருக்கிறீர்கள்! ஒரு மாறுபட்ட, ஆனால் அவசியமான பதிவும்கூட!

  குடிப்பவர்கள் அவர்களாகவே திருந்தினால் தவிர, இந்தமாதிரி கட்டுரைகள் அவர்களைத் துளியும் அசைத்துப்பார்ப்பதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்!

  டாஸ்மாக் கடைகளில் விற்பனையின் அளவை இரு/மும்மடங்காக அதிகரிக்கச்சொல்லி ஊழியர்களை நிர்பந்தித்து வரும் அரசாங்கத்தின் போக்கு வேதனைக்குரியது! முதலில் அரசாங்கம் திருந்தவேண்டும்!

  குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, சொல் புத்தியும் கேட்காமல், சுயபுத்தியும் இல்லாமல் மொத்த குடும்பத்தையுமே பரிதவிக்கவிட்டு பரலோகம் போய்ச்சேர்ந்த எண்ணற்றவர்களில்...

  என் சகோதரனும் ஒருவன்!

  ReplyDelete
  Replies

  1. //குடிப்பவர்கள் அவர்களாகவே திருந்தினால் தவிர, இந்தமாதிரி கட்டுரைகள் அவர்களைத் துளியும் அசைத்துப்பார்ப்பதில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்!//

   ஊதுற சங்க ஊதி வைப்போம்.அப்புறம் அவங்க இஷ்ட்டம்


   //குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, சொல் புத்தியும் கேட்காமல், சுயபுத்தியும் இல்லாமல் மொத்த குடும்பத்தையுமே பரிதவிக்கவிட்டு பரலோகம் போய்ச்சேர்ந்த எண்ணற்றவர்களில்...

   என் சகோதரனும் ஒருவன்!//

   சாரி நண்பா :-(

   Delete
 3. Yarukkum kudippatharka selavu seyya kudathentrum Nannum Kudippathillai entrum ennoda sinna vayasilerunthu palakka paduthi kondullen.. Avarkalukku seyyum selavukku nalla sappadu vanki kudukkalam illathavarkalukku.. Mikavum arumaiyana pathivu..

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் நண்பா . நானும் அதைதான் கடை பிடித்து வருகிறேன். நீங்கள் சொன்ன மாதிரி அதுக்கு இல்லாதவங்களுக்கு ஒரு வேலை சாப்பாடு வாங்கி கொடுக்கலாம்.

   Delete
 4. குடி எவ்வளவு மோசமானது என்று இதை விட எளிமையாக , அருமையாக சொல்லி விட முடியாது

  இந்த பதிவை படித்து ஒரு சிலர் திருந்தினாலும், அது உங்களுக்கு கிடைத்த வெற்றி !!!
  naanum naagaraajanai vazhimozhigiren
  surendran
  surendranath1973@gmail.com

  ReplyDelete
 5. @Surendranath : வருகைக்கு நன்றி நண்பரே

  ReplyDelete