Saturday, February 9, 2013

NBS : புலி வால் பிடித்த டைகர்

என் மன வானில்மரண நகரம் மிசெளரி தான் நான் படித்த கேப்டன் டைகரின் முதல் புத்தகம். அதை
சிலாஹித்து எழுதும் போதே நண்பர் சௌந்தர் “இதை விட நல்ல கதைகள் கேப்டன்
டைகரிடம் உள்ளன” என்றார். அப்புறம் தங்க கல்லறை , ரத்தக் கோட்டை (ஆங்கிலத்தில்)
என்று டைகர் என்னை ஆட்க்கொண்டு விட்டார்.

NBS இல் நான் மிகவும் எதிர் பார்த்தது லார்கோவும், டைகரும் தான் . மரண நகரம்
மிசெளரி யின் தொடர்ச்சியாக கான்சாஸ் கொடூரன்” மற்றும் இருளில் ஒரு இரும்புக்
குதிரை  என்று இரட்டை கதைகள். போதாதற்கு NBS இன் முன் அட்டையை டைகர்
தீச்சாட்டையுடன் அலங்கரிக்க எதிர்பார்ப்பு எகிறியது. NBS இன் மணி மகுடமாக
இருக்கப் போகிறார் என்று நினைத்தேன் ஆனால் எனக்கு வந்த புத்தகத்தின் அச்சு
தரத்தினாலும்(?!) திப்பி திப்பியாய் ஒட்டியிருந்த பிங்க் கலர் பெயிண்ட்டாலும், பின் பக்க
ஓவியம் முன் பக்கம் தெரியும் அவலத்தினாலும் முதலில் படிக்க வேண்டும் என்று
நினைத்திருந்த டைகரை விட்டு விட்டு.வரிசைக் கிரமமாக லார்கோவில் இருந்து
ஆரம்பித்தேன்.

ஓவியப் பார்வை
     
     1) நீல வண்ண கண்ணனாய் ப்ளுபெர்ரி. ஏதாவதுஒரு இடத்தில இந்த  
    மாதிரி நீலவண்ணத்தில் ஓவியர் வரைந்து விடுகிறார். மரண நகரம்
    மிசௌரியிலும் இப்படி உண்டு.


 

         2)  அந்த  காலத்து ரயில் நிலையமும் அதைச் சுற்றி உள்ள நகரமும்.

 

           3) வெடி மருந்து கிடங்கு வெடித்து சிதறும் காட்சி.
          4) ஒரு மழை நேர ஓவியம்.

 

   5) தற்கொலைக்கு ஒப்பான முயற்சி என்று சொல்லும் போதே டைகரின்
     குரலை நாம் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறோம்.

 
    
    6) இருளில் மோதி சிதறும் ரயில் 


      _________________________________________________________________

      Never Before Special லில் வந்த மற்ற கதைகளுக்கான பதிவுகளைப் படித்து விட்டீர்களா

        1) லார்கோ விஞ்ச்  - வாழ்க்கையை பங்குச் சந்தையில் பணயம் வைத்த பில்லியனர் 

        2) வெய்ன் ஷெல்டன் - ஒரு போராளியின் கதை 


     கான்சாஸ் கொடூரனின் முந்தைய பாகத்தின் விமர்சனம்

       1) மரண நகரம் மிசௌரி  - பல்கோணப் பார்வை     
      _________________________________________________________________

யுக்திகள்

டைகர் யுக்திகளின் மன்னன் என்பதை சொல்ல வேண்டியதில்லை. கான்சாஸ் கொடூரனில் அவ்வளவு யுக்திகள் இல்லை. ஆனால் இருளில் ஒரு இரும்புக் குதிரை யுக்திகளால் நிரம்பி வழிகிறது.

கான்சாஸ் கொடூரன்

        1) கைகள் நன்றாக கட்டப் பட்ட நிலையில் அதை அவிழ்ப்பதற்கு கீழே கிடக்கும்
ஒரு கண்ணாடியை படுக்கப் போகும்போது எடுத்து வைத்து கொள்கிறார்.
(அது கண்ணாடி மாதிரி தெரியவில்லை கல்மாதிரி தெரிகிறது )


  
          2)   பின் மழை பெய்யும் பொது குளிரடிக்கிறது என்று நீள கோட்டை வாங்கி
யாருக்கும் தெரியாமல் கட்டை அவிழ்த்துக் கொள்கிறார்.
         3)  இரவில் செனேட்டரின் வீடு எது என்று தெரியாத நிலையில் , சர்ச் மணியை
அடித்து எல்லோரையும் எழுப்பி எச்சரிக்கிறார். ( கடலோரக் கவிதைகள்  
திரைப்படத்தின் கடைசிக் காட்சி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை)


         4) கடைசியில் செனட்டரை காப்பாற்றுவது செம யுக்தி. குதிரை சாண
குவியலுக்கிடையில் இருக்க வைத்து காப்பாற்றுகிறார். யாரும் அங்கு இருப்பார்
என்று கனவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள். பலூன்களில் தெரியும் பிங்க் கலரைப் பாருங்கள் :-(


இருளில் ஒரு இரும்புக் குதிரை

         1) குதிரையில் போனால் மாட்டிக் கொள்வோம் என்று ரயிலில் செல்ல
முயற்சிக்கிறார். வேகமாகவும் செல்லலாம், போகும் வழியில் உள்ள தந்தி
கம்பங்களை அழித்து விட்டு செல்லலாம்.
         2)   சிப்பாய்களை கூட்டி செல்லாமல் மரண தண்டனை கைதிகளை கூட்டி
செல்கிறார். சிப்பாய்கள் மிச்சம் மற்றும் ஒரு தற்கொலை தாக்குதலுக்கு உள்ள
மனநிலை அவர்களிடம் இருக்கும். (Dirty Dozen என்ற படத்திலும் கதாநாயகன்
இப்படி பன்னிரண்டு மரண தண்டனை கைதிகளை வைத்து ஒரு கோட்டையை
தகர்ப்பார்கள்)

 

        3) ரயிலில் போகும் போது தந்தி கம்பங்களை அழிப்பதின் மூலம் தன் ரயிலைப்
பற்றி எதிரிக்கு தகவல் செல்வதை முடக்குகிறார்.
 


4) ஒரு வேளை ரயிலிலேயே திரும்பி வரும்போது எதிரி ரயிலில் துரத்தி வந்தால் முறியடிப்பதற்காக பாலத்திலும் , மடக்க கூடிய இடங்களிலும் வெடியை மறைத்து வைக்க சொல்கிறார்.


5) போகும் வழியில் உள்ள ஒரு ஸ்டேசனில் நிறுத்தி அந்த ஸ்டேசன் மாஸ்டர் மூலம் ஒரு உயாரதிகாரி ரயிலில் வருவதால் எல்லா ரயிலையும் நிப்பாட்டி வைக்குமாறு சொல்லி தந்தி அனுப்புகிறார். அதனால் டைகர் வரும் ரயிலை யாரும் சந்தேகப் பட மாட்டார்கள். தந்தி அனுப்பி முடிந்ததும் மறக்காமல் அந்த தந்திக் கருவியை உடைத்து விடுகிறார். ஸ்டேசன் மாஸ்டர் மீண்டும் ஒரு தந்தி அனுப்பி காரியத்தை கெடுத்து விடக் கூடாது அல்லவா


6) எதிரே தன்னை தேடி ஒரு  ரயில் வருகிறது என்றவுடன் சைட் லைன் இருக்கும் இடத்தில் ரயிலையே மறைந்து கொண்டு எதிரே வந்த ரயிலை அனுப்பி விடுகிறார். அவர்கள் திரும்ப வருவார்கள் என்று தெரிந்து சுவிட்சை கோளாறு பண்ணி வைத்து விட்டு, நட்டுகளை கழற்றி விட்டுப் போகிறார். திரும்ப வந்த அந்த ரயில் தலை குப்புற  கவிழ   வேண்டியதுதான்.


7) எதிரிகளுக்கு தெரிந்து தங்களை தடம் மாற்றி விட்டாலும் திரும்ப போகாமல் முன்னே போய் அடுத்த ஸ்டேசனில் மெயின் லைனுக்கு மாற்றிக் கொள்ளலாம் என்பது. பின்னே சென்றாலும் அங்கு இருப்பவர்களுடன் மோத வேண்டும்.8) எதிரிகளின் உடை அணிந்து ஒரு கட்டத்தில் எதிரிகள் தங்களை கண்டு பிடித்து விட்டார்கள், ரயிலும் முன்னே போக முடியாது என்று தெரிந்தவுடன் ஆளுக்கு ஒரு பக்கமாக தெறித்து ஓடுவது. எதிரிக்கு யாரை சுடுவது என்ற குழப்பத்திலேயே நிறைய பேர் தப்பிக்கலாம். தப்பித்து எதிரிகளுடன்  கலந்து விட்டால் கண்டு பிடிக்க முடியாது.

 

முரண்

1) திப்பி திப்பி யான பிங்க் கலர் வெள்ளை பலூன்களில் தெரிகிறது.


2) லார்கோ வுடனோ ஷெல்டனுடனொ டைகரின் பக்கங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். அதன் தரம் புரியும். எனக்கு NBS இல் மிக வருத்தற்குரிய விஷயம் இதுதான். 10 கதைகள் என்று போடும்போது எல்லாக் கதையும் ஒரே மாதிரி தரத்தில் கொடுக்க வேண்டுமா இல்லையா? அதிலும் முன்னட்டையில் இடம் பெற்ற ஒருவரின் கதையின் அச்சு  தரம் இவ்வளவு கேவலமாக இருக்கும் என்று நான் நினைத்தும் பார்க்க வில்லை. எனக்கு வந்த புத்தகத்தில் கான்சாஸ் கொடூரன் முழுவதும் மற்றும் இரும்புக் குதிரையில் பக்கம் 275 முதல் 285 வரை மிக மோசமாக இருந்தது. பக்கம் 274 மற்றும் 275 ஐ ஒப்பிட்டு பாருங்கள்.

எனக்கு மட்டும் திப்பி திப்பி யாக கலர் ஒட்டிக் கொண்டு இருந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது.அது சாத்தியம் தான். ஆனால்  எனக்கு மட்டும் தனி பிரிண்ட் போட்டா கொடுக்க முடியும்?. உங்கள் புத்தகத்தையும்  செக் பண்ணி பாருங்கள்.

 மேல்பக்கத்தை பாருங்கள் பின் பக்க பலூன் மற்றும்  ஓவியம் முன் பக்கம் தெரிகிறது.


3) வாயும் மூக்கும் இல்லாத நக்கட். இது ஒன்றே சொல்லும் எனக்கு வந்த  புத்தகத்தின் அச்சு தரத்தை.கிளைமாக்ஸ் 

கான்சாஸ் கொடூரன் 

 டைகர் தன் கதைகளை தானே தனது யுக்திகளின் மூலம் முன்னிருந்து நடத்தி செல்வார். ஆனால்  கான்சாஸ் கொடூரனில்  கதை போகும் போக்குக்கு போகிறார். நிறைய யுக்திகள், சாகசங்கள் இல்லை.

இருளில் ஒரு இரும்புக் குதிரை 

இந்த கதையில் யுக்திகள் நிரம்பி வழிகிறது. ஆனாலும் எனக்கு ஒரு திருப்தி இல்லை. அது கதையாலா, கதைக்களனாலா, அச்சு தரத்தாலா தெரியவில்லை

மொத்தத்தில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. லார்கோவை நினைத்து மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.

      _________________________________________________________________
மற்ற பதிவர்களின் கலாட்டா 

1) நண்பர் சௌந்தர் எழுதிய நெவெர் பிபோர் ஸ்பெஷல் பதிவு 
2) நண்பர் கார்த்திகேயன் எழுதிய எனது பார்வையில் NBS - லார்கோவும் எனது பங்கு முதலீடும் !

      _________________________________________________________________

Post Comment

23 comments :

 1. வர..வர உங்கள் பதிவைப் படித்த உடன் புத்தகத்தை எடுத்து நீங்கள் குறிப்பிட்ட இடங்களை மறுபடியும் பார்த்து/படித்து மகிழ்கிறேன்.

  படிப்பதற்கு மிகவும் இதமான பதிவுகள் நீங்கள் இடுவது. ரசனையான ஆளுய்யா நீ ! :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி RAMG75. உங்கள் உள்ளத்திலுருந்து வந்த வார்த்தைகளுக்காக.

   Delete
  2. முற்றிலும் உண்மை..:)

   Delete
 2. Replies
  1. வாங்க லக்கி. வருகைக்கு நன்றி. எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே.

   Delete
 3. நக்கட் மூக்கும் முழியுமா நல்லா இல்ல! :)

  ReplyDelete
  Replies
  1. @cap tiger : ஆமா. நல்லாவே இல்லை. :D

   Delete
 4. நக்கட் மூக்கும் முழியுமா நல்லா இல்ல --> It is kind of art, even in some places you can observe the same for Tiger image also. So it is based on the artists of the stories!

  Some how I am not able to believe the story, crossing the enemy area without much problem :-(

  ReplyDelete
  Replies
  1. // It is kind of art, even in some places you can observe the same for Tiger image also. So it is based on the artists of the stories! //

   நான் என்ன சொல்றதுன்னு தெரியல. அந்த மாதிரி நான் இதுவரை பார்க்கல.

   //Some how I am not able to believe the story, crossing the enemy area without much problem :-(//

   முழுவதும் இரவிலேயே நடப்பது நல்ல ஓவியங்கள் வருவதை தடை செய்திருக்கும் என்று நினைக்கிறேன்.

   Delete
 5. டியர் ராஜ் முத்து குமார்,

  வழக்கமாக குறும்பான, நகைச்சுவை கலந்த கமெண்டுகள் உங்கள் பதிவு முழுக்க இழையோடும்; இங்கே அது கொஞ்சம் மிஸ்ஸிங்!  :(

  அதற்கான காரணங்களாக நான் அறிய வருவது:

  1. NBSல் டைகரின் இரு கதைகளுமே சுமார் ரகம்தான் - உண்மை! உண்மை!

  2. NBS போன்ற ஒரு மைல்கல் இதழில் ஓவியங்கள் மனதைக்கவராத அளவுக்கு உள்ள, ஆனால் முத்துக்காமிக்ஸின் நெம்பர்1 நாயகனை (டைகர்) சற்று பின்னுக்குத் தள்ளிப் பார்த்தது கொஞ்சம் கொடுமையான விஷயமே! - உண்மை! உண்மை!

  3. பலூன்களில் ஆங்காங்கே பிங்க் நிற சிதறல்கள், பின்பக்க அச்சு முன் பக்கம் தெரிவது போன்ற குறைகள் நிச்சயம் உங்களது புத்தகத்தில் மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும். உங்களுக்கான பிரதி இப்படியாகிவிட்டதில் எனக்கும் வருத்தமே; என்றாலும், இப்படியா 'பிரின்டிங் குவாலிட்டி சரியில்லை, பலூன் சரியில்லை' என்று எடிட்டரின் வலைப்பூ, உங்கள் வலைப்பூ, FB, சொந்தக்காரர்கள், கூடவேலை செய்பவர்கள், கேர்ள் ப்ரண்ட்ஸ், பார்க்கில் படுத்துக்கிடக்கும் குடிமகன்கள், காது கேளாத பக்கத்து வீட்டுப் பாட்டி, இன்சூரன்ஸ்க்காக அழைக்கப்படும் டெலிகாலிங் அழைப்பாளர்கள், அவ்வளவு ஏன்; சில சமயங்களில் ராங் நம்பரிடம் கூடப் புலம்பித்தள்ளுகிறீர்களாமே?!! :)

  ஒரு பதிவரின் பரிதாப நிலை?!

  ReplyDelete
  Replies
  1. //உங்களுக்கான பிரதி இப்படியாகிவிட்டதில் எனக்கும் வருத்தமே; என்றாலும், இப்படியா 'பிரின்டிங் குவாலிட்டி சரியில்லை, பலூன் சரியில்லை' என்று எடிட்டரின் வலைப்பூ, உங்கள் வலைப்பூ, FB, சொந்தக்காரர்கள், கூடவேலை செய்பவர்கள், கேர்ள் ப்ரண்ட்ஸ், பார்க்கில் படுத்துக்கிடக்கும் குடிமகன்கள், காது கேளாத பக்கத்து வீட்டுப் பாட்டி, இன்சூரன்ஸ்க்காக அழைக்கப்படும் டெலிகாலிங் அழைப்பாளர்கள், அவ்வளவு ஏன்; சில சமயங்களில் ராங் நம்பரிடம் கூடப் புலம்பித்தள்ளுகிறீர்களாமே?!! :)//

   ஹா ஹா, கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ :D


   //கேர்ள் ப்ரண்ட்ஸ்//
   கேட்க நல்லாதான்யா இருக்கு :D

   Delete
 6. வழக்கம் போலவே ரசிக்கும் படியான பதிவு. ஆனால் வெய்ன் ஷெல்டன் கதைகளை விட எனக்கு டைகர் கதைகளே பிடித்தது.வெய்ன் ஷெல்டன் ஏனோ ஒட்டவில்லை

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் எனக்கும் ஒட்டவில்லை. வரும் கதைகளில் பார்க்கலாம்

   Delete
 7. நல்லதொரு பதிவு என்றாலும், உங்கள் புத்தகத்தின் தரகுறைவால் பதிவில் சற்றே சோகம் இழைந்தோடுகிறது.
  எனது புத்தகத்தையும் நான் பரிசோதித்துவிட்டு கூறுகிறேன்.

  ReplyDelete
 8. @Lucky Limat: எனக்கு ஷெல்டன் கதைகளின் ஓவியங்கள் மிகவும் பிடித்திருந்தது. அதனால் ஷெல்டன் கதை ஒரு படி மேலே போய் விட்டது

  ReplyDelete
 9. @கிருஷ்ணா வ வெ:

  நன்றி கிருஷ்ணா. பார்த்து சொல்லுங்கள்.

  ReplyDelete
 10. வழக்கம் போல் அருமையான பதிவு.

  உங்கள் விமர்சன பதிவுகளைப் படிக்கும் பொழுதெல்லாம் மனதில் எழும் சந்தேகம்:

  நீங்கள் கதையைப் படித்து விட்டு திரும்ப ஒருமுறை படம் பார்த்து மகிழ்வீர்களா? அல்லது சிறுகுழந்தை போல் படம் பார்த்துவிட்டு படிக்க ஆரம்பிக்கிறீர்களா? :-)

  கதை போகும் வேகத்தில் எப்படி இவ்வளவு நுணுக்கமாக கவனிக்க முடிகிறது?!!!

  காமிக்ஸை முழுமையாக ரசிக்கிறீர்கள்.

  //உங்கள் பதிவைப் படித்த உடன் புத்தகத்தை எடுத்து நீங்கள் குறிப்பிட்ட இடங்களை மறுபடியும் பார்த்து/படித்து மகிழ்கிறேன்.// Same Feeling

  எனது பதிவுகளுக்கு LINK வழங்கியதற்கு மிக்க நன்றி. :-)

  ReplyDelete
  Replies
  1. கம்பெனி ரகசியத்தை கேட்க்கிறீர்கள் என்றாலும் சொல்கிறேன். மினிமம் மூணு தடவை படிப்பேன். :D

   1) எனக்காக ஸ்பீடா போய் விடும்
   2) பதிவுக்காக - நிறுத்தி நிதானமாக ஒரு தடவை. இப்போது எது எதை எழுத வேண்டும் என்று உறுதியாகி விடும்.
   3) குறிப்புக்காக - எழுத வேண்டியதை ஒரு தாளில் குறிப்பு எடுத்து கொள்வேன். ஓவியங்களின் பக்கங்களையும் தான்.

   அப்புறம் குறிப்பை வைத்து போட்டோ செசசன் நடக்கும். அப்புறம் பதிவு எழுதும் போது அவ்வப்போது ரெபர் பண்ணுவதும் உண்டு.

   இருப்பதிலேயே காமிக்ஸ் பதிவுகளுக்கு தான் அதிக நேரம் எடுக்கும். மினிமம் 5 மணி நேரம் எடுக்கும் (படிக்கும் நேரத்தை தவிர்த்து). வீட்டம்மாவின் முறைப்பை சமாளிக்க காலையில் 5 மணிக்கு எழுது எழுதுவதும் உண்டு. இப்படி எழுதுனாதான் எனக்கு ஒரு திருப்தி வருகிறது. :D

   Delete
 11. நான் ஐந்து காப்பிகள் வாங்கினேன். நான் பிரித்துப் படித்த எனது சொந்தக் பிரதியில் 'இருளில் ஒரு இரும்புக்குதிரை' கதையில் ஒரு பத்து பக்கங்கள் பிரிண்ட் சரியில்லைதான். சரி தொலைகிறது என்று விட்டுவிட்டேன்.

  But yes ... எல்லா பக்கங்களும் ஒரே தரத்தினில் இருக்க வேண்டியது அவசியம்தான்.

  ReplyDelete
  Replies
  1. // 'இருளில் ஒரு இரும்புக்குதிரை' கதையில் ஒரு பத்து பக்கங்கள் பிரிண்ட் சரியில்லைதான். சரி தொலைகிறது என்று விட்டுவிட்டேன்.//

   ஏன் ஒரு பாதி மட்டும் அப்படி என்று தெரியவில்லை. இன்சைட் இன்போ தெரிந்தால் தான் உண்டு

   Delete
 12. miga miga miga arumaiyaaga eluthi irukireergal nabare! appadiye star comics panimandala kottaiyaiyum asaithu paarungalen! he he he sorry 4 delay!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே. முயற்சி செய்கிறேன்.

   Delete
 13. பூம் ! பூம் !
  டமார் !
  டுமில் ! டுமில் !
  மடேர் !
  சரக் !
  ஒண்ணுமில்ல உங்க பதிவை படிச்ச சந்தோஷத்துல இருக்கேன். :-D

  ReplyDelete