Monday, February 4, 2013

NBS : ஷெல்டன் - ஒரு போராளியின் கதை


என் மன வானில்
"காதல்னா நம்ம அடிச்சு தூக்கி புரட்டிப் போடணும்" VTV யில் சிம்பு பேசிய வசனம். புதிதாக
வருகின்ற காமிக்சுக்கும் இது பொருந்தும். ஒரு கதைய படிச்சா உடனே "யப்பா என்ன
கதடா இது" ன்னு இருக்கணும். லார்கோ அப்படிப்பட்ட ஒரு கதை. சமீபத்தில் வெளியாகி
 இருக்கும் மற்றுமொரு தொடர்  வெயின் ஷெல்டன். இதுவும் அப்படி இருந்ததா? பார்ப்போம்.

காதோரம் நரை முடியுடன் அறிமுகமான ஒரு கதாநாயகன் ஷெல்டன். ஆரம்பம் முதல்
இறுதி வரை பட்டாசாய் வெடிக்கும் அட்டகாசமான கதை. நாம்  இது வரை பார்த்திராத
அற்புதமான ஓவியங்கள் என்று அட்டகாசப் படுத்தி இருக்கிறார் ஷெல்டன். ஆனால்
லார்கோ மாதிரி மனதில் நின்றாரா?

ஓவியப் பார்வை  

அட்டகாசமான  வெளிப்புற காட்சிளாகட்டும், அதி வேகத்தில் செல்லும் ட்ரக்குகள்ளாகட்டும் ,
மலை பள்ளத்தாக்கு பின்னணியில் மேலேறும் ட்ரக்குகள்ளாகட்டும்  ஓவியங்களைப்
பாராட்டாமல் இருக்க முடியாது. ஓவியத்தில் NBS இல் வந்த லார்கோவையே இந்த தொடர்
ஓரம் கட்டிவிட்டது என்றே சொல்ல வேண்டும். நம்மை கவர்ந்த சில ஓவியங்கள் உங்கள்
பார்வைக்கு

1) ஆரம்பமே ஒரு ட்ரக் விபத்தில் ஆரம்பிக்கிறது.2) ஓவியர் ட்ரக் க்குகளின் காதலர் என்பதில் சந்தேகம் இல்லை.

3) இளவெயில் வெளிச்சத்தில் ஒரு நகரத்தையே  எப்படி வரைந்திருக்கிறார் பாருங்கள்  4) வேகமாக சென்று மோதும் ட்ரக் 

5)  பறக்கும் பைக் 


6) சென்னை சென்ட்ரலை நினைவு படுத்தும் ஒரு கட்டிடம் 


7) பறவைப் பார்வையில் கலஹார் 8) செம்மலைகளூடே செல்லும் ட்ரக்குகள் 
9) அற்புதமான கட்டிடங்கள்.  ஒவியர் சபாஷ் வாங்கும் இடங்கள் 

10) அதல பாதாள மலை முகடு 
முரண்

நிறைய எழுத்து பிழைகள் இல்லை எனினும் பெயர்களை ஆளாளுக்கு குழப்பி அடிக்கிறார்கள்

1) துப்பாக்கி நுப்பாக்கி ஆகியிருக்கிறது.2) கலாஹார் என்று சொல்கிறார்கள் முதலில் அப்புறம் எல்லாம்  கலகாரி என்று வருகிறது.

3) ஜாபோரிட்ஜ்கா, ஜாபோரிட்ஜ்சா ,  ஜபோரிட்ஜ்கா எது சரியானது ?4) டானியட்ஸா, டானியஸ்டா  எது சரியானது ?5) கலாக்ஜிஸ்த்தான்- னை கலாக் என்று சொல்லலாம் காலக் என்பது சரியா?6) லாய்ரெட் , லாரெட் எது சரியானது ?  


7) பலூன் மீது பலூன் வைக்கும்போது கீழே இருக்கும் பலூனை மறைத்து வைக்க வேண்டும். சில இடங்களில் அவை மறைக்கப் படாமல் இருக்கிறது.

பக்கம் 310 மூன்றாவது வரிசை கடைசியில் ஷெல்டன் "போய்ரெட்டை " என்று ஆரம்பிக்கும் பலூனில் ரெட்டை சுட்டி (யார் பேசுகிறார் என்பதை குறிக்கும் ) தெரிகிறது


பக்கம் 313 இல் "அதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை " என்று ஹானஸ்டி பேசும் பலூனிலும் ரெட்டை சுட்டி- சிறிய வித்தியாசம் தான்
பக்கம் 374 லில் முதல் படத்தில் ஒரிஜினல் பலூன் மீது இன்னொரு பலூன் வைக்கப் பட்டுள்ளது ஆனால் கீழே உள்ள பலூன் மறைக்கப் படவில்லை.கிளைமாக்ஸ் 
சில படங்களை / நாடகங்களை பார்த்து சிரியோ சிரி என்று சிரித்து விட்டு வருவோம் ஆனால்
தியேட்டரை விட்டு வெளியே வந்தவுடன் இதற்க்கு போய் என் இவ்வளவு சிரித்தோம் என்று
தோன்றும். அவ்வளவு ஆழமாக நம்  மனதில் பதியாது. அதே போல தான் இந்த கதையும்
அட்டகாசமான கதை என்று படித்து முடித்தவுடன் தோன்றினாலும், அப்படி என்ன கதை
இருக்கிறது, யுக்தி இருக்கிறது என்று பார்த்தால் சிறிது ஏமாற்றம் தான். முழுக் கதையை
தாங்கி பிடிப்பது ஓவியங்கள், ஓவியங்கள், ஓவியங்கள்  எனும் போது இந்தக் கதையை
பொறுத்தவரை "ஓவியங்கள் சூப்பர்,கதைக் களன் சூப்பர்,கதை சுமார், ஹீரோ ஓகே"
என்பது தான் என் பதில்.

 ஒட்டுமொத்தமாக நன்றாக இருந்தாலும் கதாநாயகனாக ஷெல்டன் மனதில்
பதியவில்லை. அடுத்த கதையில் பார்க்கலாம்.

அடுத்த பதிவு NBS வந்த "கவ்பாய் சூப்பர் ஸ்டார்" டைகரின் கதைகள்

Post Comment

27 comments :

 1. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கொண்டு படிப்பீர்களோ....?நீங்கள் சொன்னது போல் கதை சாதாரண கதை தான்.

  ReplyDelete
 2. விறுவிறுப்பு அவ்வளவாக இல்லை.

  ReplyDelete
  Replies
  1. //நீங்கள் சொன்னது போல் கதை சாதாரண கதை தான்//
   அதே!

   //விறுவிறுப்பு அவ்வளவாக இல்லை//
   அதே! அதே!

   Delete
 3. @Lucky Limat :

  வருக வருக

  என்னைப் பொறுத்தவரை விறுவிறுப்பு இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் ஒரு ஹீரோ வாக ஷெல்டன் மனதி பதிய வில்லை.  தன நண்பன் உடலைக் கூட நல்லடக்கம் செய்யாமல் நடை கட்டுகிறார். டைகர் தன எதிரிகளுக்கும் அந்த மரியாதையை செய்வார். இதிலேயே ஒரு படி இறங்கி விடுகுறார் ஷெல்டன்.

  ReplyDelete
  Replies
  1. //துப்பாக்கி நுப்பாக்கி ஆகியிருக்கிறது.//

   விடுகிறார் விடுகுறார் ஆகியிருக்கிறது.

   -->) சும்மா ஒரு தமாசுக்கு நண்பா :)

   Delete
  2. தன நண்பன் உடலைக் கூட நல்லடக்கம் செய்யாமல் நடை கட்டுகிறார். டைகர் தன எதிரிகளுக்கும் அந்த மரியாதையை செய்வார். இதிலேயே ஒரு படி இறங்கி விடுகுறார் ஷெல்டன்.

   Muthu, characters differs, you can't expect all the characters do behave same :-)

   Delete
 4. @ P.Karthikeyan : வாங்க காமிக்கேயன்

  ReplyDelete
 5. கதை பிரமாதம் இல்லை என்றாலும், ஓவியங்கள் அபாரம்!!! அந்த ட்ரக்குகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் அவ்வளவு முரட்டுத்தனமான அழகு! :)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், முரட்டுத்தனமான அழகுதான்!

   நான் சொல்வது ட்ரக்குகளை அல்ல! :)

   Delete
  2. உமது ஜொள்ளுக்கு ஒரு அளவில்லையா?! சரி சரி, அழகை முழுவதும் ரசிக்க சென்சாருக்கு எதிராக குரல் கொடுங்களேன் லயன் ப்ளாகில்!!! ;)

   Delete
 6. @Karthik Somalinga: ஓவியங்கள்தான் இந்த கதையை தாங்கி பிடிக்கின்றன. அவை சொதப்பி இருந்தால் இந்த கதை ஹிட் அடித்திருக்க சான்சே இல்லை. வரும் கதைகள் எப்படி இருக்கப் போகிறது என்று தெரிய வில்லை. :(


  ReplyDelete
 7. * கார்த்திக், செளந்தர் வரிசையில் தாராளமாக உங்களையும் புலனாய்வுப் பதிவர்கள் பட்டியலில் சேர்த்துவிடலாம், ராஜ் முத்துக் குமார்! :)

  * ஓவியங்களை ரசிக்கமட்டும்தான் லென்ஸ் வச்சுக்குவீங்கன்னு நெனச்சேன், ஊப்ப்...

  * எனக்கென்னவோ ஓவியங்களில்கூட லார்கோவுக்கே முதலிடம்!

  * சரியாக overlap ஆகாத பலூன்களைப் பறறிப் பதிவிட்டீர்களே, நம் சிவகாசி ஓவியர்களால் சரியாக overlap செய்யப்படாத உடைகளைப் பதிவிட்டீர்களா? ஹம்ம்... :)

  ReplyDelete
  Replies
  1. விஜய், மணியை எங்கே காணோம்?! பெயர் பிடிக்காமல் ஓடி விட்டதா?! ;)

   Delete
  2. உங்கள் கரடிக்கு கந்தசாமி என்ற பெயர் சூட்டுகிறேன்! :D

   Delete
  3. / *உங்கள் கரடிக்கு கந்தசாமி என்ற பெயர் சூட்டுகிறேன்! :D */ - Ha Ha!

   Delete
  4. @ கார்த்திக்

   'மணி' என்று பெயரிடப்பட்டதன் காரணம் விளங்காமல் அடிக்கடி குனிந்து பார்த்துக்கொண்ட அந்த அப்பாவிப் பூனை; பின்பு, பாரபட்சமில்லாமல் அழகான பெயரிடும் ஒரு நல்ல மனிதரைத்தேடி உலகெங்கும் பயணம் கிளம்பிவிட்டது! :(

   Delete
 8. Yes you are correct. Compared to largo, shelton didn't impress me much. May be it is too early to say. Still I like largo

  ReplyDelete
 9. @திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : வருகைக்கு நன்றி . ஹி ஹி நானும் பிழை திருத்தாமல் போட்டுட்டேன்.

  ReplyDelete
 10. @Erode VIJAY: ஹானஸ்டி கிட்ட ஹானஸ்ட்டா இருக்கணும் இப்படி ஜோள்ளக் கூடாது.  //* கார்த்திக், செளந்தர் வரிசையில் தாராளமாக உங்களையும் புலனாய்வுப் பதிவர்கள் பட்டியலில் சேர்த்துவிடலாம், ராஜ் முத்துக் குமார்! :) //

  பார்ரா . புலனாய்வு பதிவர்கள் , பேரு நல்லாதானிருக்கு.  //* சரியாக overlap ஆகாத பலூன்களைப் பறறிப் பதிவிட்டீர்களே, நம் சிவகாசி ஓவியர்களால் சரியாக overlap செய்யப்படாத உடைகளைப் பதிவிட்டீர்களா? ஹம்ம்... :)//


  நம்ம ஓவியர்கள் ஓவரா wrap தான பண்ணுவாங்க. மாடஸ்டிய கோடஸ்டி ஆக்கின மாதிரி :D  //'மணி' என்று பெயரிடப்பட்டதன் காரணம் விளங்காமல் அடிக்கடி குனிந்து பார்த்துக்கொண்ட அந்த அப்பாவிப் பூனை;//  குனிந்து பார்த்துக் கொண்ட பூனையா? :D தப்பா நினைச்சுக்க போறாங்க VIJAY

  ReplyDelete
 11. @கார்த்திக் சோமலிங்கா : அவரே குனிஞ்சு பார்த்து, நிமிந்து பார்த்து கரடி பொம்மைய போட்டிருக்காரு. நீங்க அதுக்கும் கரடி கந்தசாமின்னு பேரு வச்சுடிங்களா. :D

  ReplyDelete
 12. @Comic Lover (a) சென்னை ராகவன் : வருகைக்கு நன்றி. NBS விழாவில் உங்களை பார்க்க முடியாதது வருத்தம்.

  ReplyDelete
 13. @RAMG75 : முழுக் கதையாக ஒப்பிட்டு பார்த்தால் கூட லார்கோ முன்னாடிதான் நிற்கிறார். பார்க்கலாம் இனி வரும் கதைகள் எப்படி இருக்கின்றது என்று.

  ReplyDelete
 14. எனக்கு லார்கொ மற்றும் ஷெல்டன் இருவருமே பிடித்து இருந்தது.
  இரண்டையும் ஒப்பிடும் பொழுது சற்றே லார்கொ அதிகமாக பிடிக்கிறது.

  உங்கள் பார்வையில் நான் அந்த ஓவியங்களை பார்க்கும்பொழுது
  இன்னும் அழகாக தெரிகிறது.

  ReplyDelete
 15. Muthu,
  அப்படி என்ன கதை இருக்கிறது, யுக்தி இருக்கிறது என்று பார்த்தால் சிறிது ஏமாற்றம் தான். --> I disagree with this, if that is the case other stories in NBS not having story. Most of the comics stories fall into same plate, except "graphics novels"

  காமிக்ஸ் கதைகளை தாங்கி பிடிப்பது ஓவியங்கள்~ rest is next.

  ReplyDelete
 16. @கிருஷ்ணா வ வெ :ஆமாம்,ஒப்பிடும்போது லார்கோ முதலில் தனித்து தெரிகிறார். நன்றி கிருஷ்ணா

  ReplyDelete
 17. @Parani from Bangalore :

  //அப்படி என்ன கதை இருக்கிறது, யுக்தி இருக்கிறது என்று பார்த்தால் சிறிது ஏமாற்றம் தான். --> I disagree with this, if that is the case other stories in NBS not having story. Most of the comics stories fall into same plate, except "graphics novels" //

  வெறும் கதை என்று பார்த்தால் முக்கால்வாசி கதைகள் ஒரேமாதிரிதான் இருக்கும். ஆனால் சொன்ன விதம் , எப்படி அந்த காரியத்தை முடிக்கிறார்கள் என்பதை சுவாரஷ்யப்படுத்தி சொல்லி இருப்பார்கள். டைகர் கதைகளில் அவருடைய யுக்திகள் அந்த சுவாரஸ்யத்தை கொடுக்கும். லார்கோ கதைகளில் அவரது அதிரடி, திமிர் அந்த சுவாரஸ்யத்தை கொடுக்கும். அந்த மாதிரி எதுவும் ஷெல்டனில் இல்லை என்பது என் கருத்து.

  கருத்துக்கு நன்றி பாலா !

  ReplyDelete