Monday, February 18, 2013

வில்லனுக்கோர் வேலி - காமெடிப் புல்வெளி


என் மன வானில் 

லக்கி லுக் எப்பவுமே எனக்கு பிடித்த ஒரு ஹீரோ. ஆனால் டால்டன்களை துரத்தும்படியே பல கதைகள் அமைந்துருப்பது, படிப்பதற்கு முன்பே ஆயாசத்தை உண்டு பண்ணிவிடும். இந்த கதை அப்படி இல்லாமல் இருப்பதே ஒரு ரிலீப். 

பண்ணையார்களுக்கும் சாமானிய விவசாயிக்கும் நடக்கும் யுத்தத்தில் லக்கி உப்பு ஜாடிக்குள் தோட்டாக்களை போட்டு வைத்திருக்கும் வெள்ளந்தி விவசாயி பக்கம் இருக்கிறார். காமெடி கதை என்றாலும் உலகம் முழுவதும்  இந்த கதை ஏதோ ஒரு வகையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. திபெத்தை சீனா அடிமைப் படுத்தி வைத்திருப்பதைப் போல, எவ்வளவு என்று கேட்காமல் குளிர்பானத்திற்கும், கோல்ட் காபிக்கும் பணத்தை வீசி எறியும் நாம், கீரைக்காரியிடம்  பேரம் பேசுவதைப் போல உலகின் ஒவ்வொரு மூலையிலும் இந்த போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.முதல் இதழ் 

இந்த இதழ் ஒரு முன்னோட்ட இதழ் என்ற வகையில் இந்த இதழைப் பற்றிய விமர்சனம் இதோ 

ஷொட்டு 

1) பெரிய அளவு 
2) அட்டகாசமான அட்டைப் படம் 
3) மூன்று கதைகள் 
4) குட்டீஸ் கார்னர் 
5) அதிரடி சிரிப்பை வரவழைக்கும் மொழி பெயர்ப்பு 

குட்டு 

1) மூன்று கதைகளில் ஒன்றை கருப்பு வெள்ளையில் கொடுத்திருப்பது 
____________________________________________________________________________________

நண்பர் லக்கி லிமட் கொடுத்த மூன்று அனிமேஷன் வீடியோ. என்ஜாய் மக்களே.

____________________________________________________________________________________
நான் ரசித்த  காட்சிகள் 

1) பரந்த புல்வெளியில் தன் நிலத்தை தேடும் வெர்னன். இவரது தைரியத்தை பாராட்ட வேண்டும். 2) நகத்தை பாலிஷ் பண்ணும் அரத்தால் முள் வேலியை அறுக்க முயற்சி பண்ணும் கனவான்கள்.


3) மாமனாரை கரித்து கொட்டும் ஒரு மருமகப் பிள்ளை. அந்தக் காலத்து ஹனி மூன் எப்படி இருக்கிறது பாருங்கள்.


4) நாலு பேரின் தொப்பியை மூன்றே தோட்டாக்களால் தூக்கும் லக்கி. மூன்று தோட்டாக்கள் தேவையே இல்லை ரெண்டே போதும். ஜாலி ஜம்பர் நகர்ந்ததால்தான் மூன்று தோட்டாக்கள் என்று சொல்ல்வது மாஸ். அந்த தொப்பிகள் இருக்கம் பலூனை பாருங்கள். முதல் இரண்டு தொப்பிகளுக்கு தல ஒரு தோட்டாவும் மற்ற இரு தொப்பிகளுக்கு ஒரே தோட்டாவும் போட்டிருப்பார்கள். 

ஜாலி சாரி பாஸ் எனக்கு மூக்கில் நமைச்சல் எடுக்கும் நேரம் நீங்கள் சுட ஆரம்பித்து விட்டீர்கள் என்பது புன்னகையை வரவழைக்கிறது.
   


5) ஆலோசனை சொல்வதில் மனைவிகள் எப்பொழுதுமே கெட்டிக் காரர்கள்தான்.


6) துப்பாக்கியை தேடும் கணவன். துப்பாக்கியை உப்பு ஜாடியில் போட்டு வைத்த மனைவி 7) கோபத்தில் பூசணிக்காய் புட்டிங்கை கொண்டு போய் குப்பையில் கொட்டு என்ற தாத்தா , நிஜமாவே கொட்டிடாளா என்று தேடுவதை பாருங்கள்  


8) அம்மா வீட்டு சீதனம் எப்போதும் பெண்களுக்கு உசத்திதான். நேரே குறி வைக்க சொன்னால் அடுக்களையுள் குறி வைக்கும் வல்லவர்கள். 


9) இந்த படத்தில் ஏகப்பட்ட சிரிப்பு இருக்கிறது. ஒவ்வொரு பலூனையும் அது எங்கே நிகழ்கிறது என்பதையும் பாருங்கள். ஒவ்வொரு கடைகளின் பெயர்களை தெளிவாக எழுதி இருந்தால் இந்த பலூன் அட்டகாசமானதாக இருந்திருக்கும்.முரண் 


1) "நம்மோட ஐட்டம் ஒண்ணு" என்பது  "நம்மோட ஐடம் ஒண்ணு" என்று ஆகி இருக்கிறது.


2) "எத்தனை வருஷமா பத்திரமா .." என்று ஆரம்பிக்க வேண்டியது வெறும் "வருஷமா " என்று ஆரம்பிக்கிறது.


க்ளைமாக்ஸ் 

நான்  அலுவலகம் முடிந்து வீட்டுக்கு  வந்து இரவே படித்து முடித்து விட்டேன். மறு நாளே என் மகள் அப்பா இதை நான் படிச்சுட்டு தரேன் என்று எடுத்து கிட்டு போய் மொத்தமாக முடித்து விட்டுதான் கீழே வைத்தாள். இங்கிலீஷ் காமிக்ஸ் தான் பிடிக்கும் என்று பீட்டர் விடும் அவள் ரொம்ப நல்லா இருக்கு என்றது இந்த பார்மெட்டின் வெற்றி. முதல் வெற்றி என் வீட்டில் இருந்தே தொடங்குகிறது. வாழ்த்துக்கள் விஜயன் சார். 

________________________________________________________________________________

இந்தக் கதையைப் பற்றி கனவுகளின் காதலன் எழுதிய "புல்வெளி முள் வேலி" என்ற பதிவு நன்றாக இருக்கும், வாசித்து பாருங்கள்.
________________________________________________________________________________


Post Comment

14 comments :

 1. ரொம்ப சரிங்க ராஜ்.
  வித்தியாசமான கதை களன்.
  காமெடி வசனங்கள் கதையின் ப்ளஸ்.
  அதுவும் ஜாலியின் வசனங்கள் டாப் கிளாஸ்.
  அதுவும் வசனங்களின் பொழுது அதன் முக பாவங்கள் அருமை.
  சிரித்து வயிறு புண்ணாக வேண்டியதுதான்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி கிருஷ்ணா.ஜாலியும் காமெடி பண்ணியிருக்கு. முகபாவங்களை சரியாகப் பார்க்கவில்லை. மீண்டும் படிச்சுடுவோம்

   Delete
 2. Replies
  1. வாங்க லக்கி. நன்றி நீங்கள் அனுப்பிய லிங்க்களுக்கு

   Delete
 3. வாழ்த்த வந்தோம் மூணாவதா! வாழ்த்துக்கள் தோழரே!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜானி. வருகைக்கு நன்றி

   Delete
 4. /*எவ்வளவு என்று கேட்காமல் குளிர்பானத்திற்கும், கோல்ட் காபிக்கும் பணத்தை வீசி எறியும் நாம், கீரைக்காரியிடம் பேரம் பேசுவதைப் போல */
  லக்கி லூக் பதிவை சீரியசாக ஆரம்பித்து விட்டீர்கள் .

  ReplyDelete
  Replies
  1. விவசாயியின் நிலைமை அதுதானே நண்பரே. வெளிநாட்டுக்காரன் கொடுக்கும் பூச்சிக் கொல்லி கலந்த குளிர் பானத்தை கேள்வி கேட்க்காமல் குடிக்கிறோம், ஆனால் உடலுக்கு நன்மை தரும் இளநீர் விர்ப்பவனிடம் பேரம் பேசுகிறோம். அந்த முரண் நகை தான் இது.

   Delete
 5. இந்த முறை பறவையின் பார்வையில் ஓவியத்தை காணவில்லையே

  ReplyDelete
  Replies
  1. நான் ரசித்த ஓவியங்களில் முதல் ஓவியமே பறவைப் பார்வை தானே. நான் சொல்லவில்லை அவ்வளவுதான் :D

   Delete
 6. குட்டீஸ்க்கு பிடிச்சுப்போச்சுன்னா நிச்சயம் சூப்பர் ஹிட்தான்! நோ டவுட்!

  எனக்கும் பிடிக்குதான்னு பார்க்கிறேன்!

  தொடர்ச்சியான பல பணிகளின் நடுவே இன்னும் வில்லனுக்கோர் வேலி படித்திட நேரம் கிடைக்கவில்லை! ஹம்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க விஜய். கரடியிலிருந்து மியாவிக்கு மாறீட்டீங்களா ? அவதாரத்த மாத்திகிட்டே இருக்கீங்களே. நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும். சீக்கிரம் படிங்க.

   Delete
 7. இந்த லக்கி லூக் மற்ற புத்தகங்களை போல் இல்லாமல் எழுத்துரு ஒரே அளவாக இருந்ததை குறிப்பிட்டே ஆகவேண்டும் .
  படிப்பதற்கு சிரமமில்லாமல் இருந்தது .

  ReplyDelete