Monday, January 14, 2013

Never Before Special மாலை : காமிக்ஸ் பதிவர்கள் & வாசகர்கள்


NBS மாலை 

இது மிக நீண்ட பதிவு NBS மாலையை உங்கள் கண் முன் கொண்டு நிறுத்த வேண்டும் என்று
எழுதப் பட்டது. அதனால் ரிலாக்ஸ் ஆக மனதை வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பிக்கவும்.

என் மன வானில் 

மணமகளை கைப்பிடிக்க காத்திருக்கும் மணமகனின் இனிமையான அவஸ்த்தை போல
எப்போது வரும் என்று இருந்த NBS ரிலீஸ் விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. நேற்று
பாஸிடம் டைம் ஆப் கேட்டுவிட்டு 4 மணிக்கு சோளிங்கநல்லூரில் SEZ  இருக்கும் என்
ஆபீசை விட்டு கிளம்பினேன். போகும் வழியில் எல்லாம் யார் யார் வரப் போகிறார்கள்,
முகமறியா நண்பர்கள் பலரை  சந்திக்கப் போகிறோம், எடிட்டரை சந்திக்கப் போகிறோம்
 என்ற உணர்வுகளே மண்டையில் ஓடிக் கொண்டிருக்க சாவிகொடுத்த பொம்மை போல
 பைக்கை செலுத்தினேன்.

ஆனால் நந்தனம் YMCA மைதானத்தை அடைந்தவுடன் உள்ளே நுழைந்த உடனே டூ வீலர்
பார்க்கிங் என்று பைக்கை பிடுங்கி வைத்து விட்டார்கள். நுழைவு கட்டணம் ரூ 5 ஆனால்
பார்க்கிங் கட்டணம்ரூ 10.. நல்லா வருவீங்கடா  நீங்க  ... நேற்று முதல் நாள் என்பதால்
நுழைவு கட்டணம் கூடவசூலிக்க வில்லை. பார்க்கிங்குக்கும் புக் பேர் நடக்கும் இடத்துக்கும்
1.5 கிலோமீட்டர் இருக்கும்.நடந்து போவதற்குள் கால் வலி ஆரம்பித்து விட்டது. லைட் கூட 
ஏற்பாடு பண்ணவில்லை. அட்மின் ஐயா கூட உள்ளே நுழையும்போதே எவ்வளவு தூரம் என்று
சலித்து கொண்டே வந்தார். பாவம் மனிதன் வியர்வையில் குளித்து விட்டார். அவருடைய
புகைப்படங்களை பார்த்தால் தெரியும்.
சந்தித்த நண்பர்கள் 


திருப்பூர் ப்ளூ பெர்ரி (நாகராஜ்)

நான் வாசலில் போய் நின்று ஜானிக்கு போன் பண்ணினால் பிஸியாக இருந்தார். சரி
உள்ளே நுழைவோம் என்று  343 ஸ்டாலை தேடினேன். ஸ்டாலின் உள்ளே 45 வயது மதிக்க
தக்க ஒருவர் ஒருவர் நின்று கொண்டு  4 பேருக்கு பதில் சொல்லி கொண்டது இருந்தார்.
ஒரு வேளை பிரகாஷ் (பப்ளிஷர்ஸ் ) ஆக இருக்குமோ என நினைத்து விட்டேன். அவர்
முத்து பேன் ப்ளாக் ஓனர். கேள்வி கேட்டுக் கொண்டிருந்த 4 பேரிடம் என்னை
அறிமுகப் படுத்தி கொண்ட போது காமிக்ஸ்டா என்றவுடன் ஒ என்று கட்டிக் கொண்டனர்
அவர்கள் திருப்பூர் ப்ளுபெர்ரி நாகராஜ் (மனிதர் என் வீட்டுக்கு மிக அருகில் இருக்கிறார்)
மற்றும் ராம்குமார்.


கலீல் (முதலைப் பட்டாளம் ,செந்தில் குமார்(காமிக்ஸ் ரசிகன்) கார்த்திகேயன்,(காமிக்ஸ் கலாட்டா),ராஜகணேஷ்(வில்லர் ஃபேன்) பின்னால் நிற்ப்பவர் , நாக ராஜ் (திருப்பூர் ப்ளுபெர்ரி), ராம் குமார் , கோகுல கிருஷ்ணன் 


JSC ஜானி 

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர ஆரம்பித்தது. சிறிது நேரம் கழித்து ஒருத்தர்
எல்லோரிடமும் சிரித்து சிரித்து  பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் அறிமுகப் படுத்திக்
கொண்டால்  பாஸ் நான்தான் ஜானி என்கிறார். அடப் பாவி போலீஸ்காரரை இப்படி ஒரு
கேரக்டரில் எதிர் பார்க்கவில்லை. விறைப்பாக இருப்பார் என்று நினைத்தேன். மனிதர்
 எல்லோருடனும் ஈசியாக ஒட்டினார். அவருடன் வந்த அவருடைய பையன்
கிரிஸ்ட்டோபர் அதகளம் பண்ணிவிட்டான். அந்த ரீலிசின்  மெயின் அட்ராக்சனாக
மாறிவிட்டான். அவன் செய்த அட்ராசிட்டியை NBS ரிலீஸ் வீடியோவில் பாருங்கள்.
"ஆத்தா வையும் வீட்டுக்கு போகணும் காசு குடு" ன்னு கமல் திரும்ப திரும்ப சொன்னது
மாதிரி "லக்கி லுக் புக் எனக்கு வேணும்" ன்னு  கேட்டு சௌந்தர பாண்டியன் சாரை ஒரு
வழி பண்ணி விட்டான். குரூப்பாக நாங்கள் போஸ் கொடுத்துக் கொண்டிருக்க ரபிக்கின்
காமிராவில் அவரையே கீழிருந்து மேலாக போட்டோ எடுத்துக் கொண்டிருந்தான்.கிங் விஸ்வா 

அடுத்து விஸ்வா வந்தார். செந்துருக்க பொட்டுடன் மிகவும் தன்மையாக எல்லோருடனும்
பேசினார். படுத்தினார். சின்ன ஆள் பெரிய ஆள் என்று பார்க்காமல் எல்லோரையும்
சௌந்தர பாண்டியனாரிடமும் , எடிட்டரிடமும் அறிமுகப்படுத்தினார். கிங் விஸ்வா சார்
என்று சொல்ல கிங்கும் வேண்டாம் சாரும் வேண்டாம் என்றார். டைம்ஸ் ஆப் இண்டியா
நிருபரை இண்டர்வ்யுக்கு அரெஞ்ச் பண்ணி இருந்தார்.

                     உதய்குமார்,கோபாலகிருஷ்ணன், கலீல்,கிங்விஸ்வா,ஸ்ரீராம்

லக்கி லிமட் (பொன் தமிழ் செல்வம்)

லக்கி லிமட் சொன்ன மாதிரியே லக்கி லுக் டி ஷர்ட் போட்டுக் கொண்டு வந்திருந்தார்.
கடைசியாக அவர் சொந்த முகத்தில் பார்த்து விட்டோம். இயற்பெயர் பொன் தமிழ்
செல்வன். வெரிசானில் வேலை பார்ப்பதாக சொன்னார். ரொம்ப க்ளோஸ் ஆகி விட்டார்.
நேற்று போட்டு வந்த டி ஷர்ட் பர்பிள் கலரில் இருக்கவே இது இன்னைக்கு என் மனைவி
பிரிண்ட் பண்ணி கொடுத்தது என்றார். எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது.  ஏன்னு
சொல்லுங்க பார்ப்போம்? ரமேஷ்,லக்கி லிமிட்& கார்த்திகேயன்


ரமேஷ் 

அங்கு சந்தித்த மற்றுமொரு நண்பர் ரமேஷ் சண்முகசுந்தரம் சௌந்தர பாண்டியணாரை
வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போது  என்னை இவர் இன்டர்வ்யு  செய்து
கொண்டிருந்தார் :D . அந்த இன்டர்வ்யு  வீடியோ பார்க்கும் போது கேளுங்கள் .


ரபிக் ராஜா 

ரபிக் ராஜா 1.5 கிலோ மீட்டர் பார்க்கிங்கில் இருந்து நடந்து வந்ததில் கால்வலியொடு
உள்ளே நுழைந்தார். அட்மின் வாழ்க என்று கோஷம் போடாதது ஒன்று தான் பாக்கி.
எல்லோரும் அறிமுகப்படுத்திக் கொண்டோம். முதலில் போட்டோவுக்கு முகம் காட்ட
மாட்டேன் என்று அடம் பிடித்தவரை அமுக்கி பிடித்து போட்டோவில் கொண்டு வந்து
விட்டோம். எங்களுடைய அன்பைப் (?) பார்த்து அவர் 9 மணிவரை இருந்து இருந்தார்.
எடிட்டரை புல் கவர் பண்ணி இருந்தார், 9 மணிக்கு கிளம்பும்போது கூட எடிட்டரை 
கார்னர் பண்ணி (தப்பாக நினைக்க வேண்டாம் , எடிட்டர் அப்போது ஸ்டாலின்
மூலையில் நின்று கொண்டிருந்தார் ஹி  ஹி ) அவர பேசுவதை கவர் பண்ணிக் கொண்டு
இருந்தார்.


           ராஜகணேஷ், ரஃபீக், கலீல், கார்த்திகேயன்,நான் ,லக்கிலிமிட்

முருகன் தியாகராஜன் 

லயன் காமிக்ஸின் டை ஹார்ட் பேன் முருகன் தியாகராஜன் இருந்தார். இவரைப் பற்றி
நான் சொல்லத் தேவை இல்லை. எடிட்டரும் கிரிதரனும் வேண்டிய அளவு  சொல்லி
விட்டார்கள்.

நடுவில் முருகன் 

ஸ்ரீராம் 

பழக்கப்பட்ட முகம் ஒன்று தெரிந்தது, அது  ஸ்ரீராம் . பெங்களூர் காமிக் கானில் கார்த்திக்
இவருடைய கவ்பாய் கெட்  அப்பை போட்டோ எடுத்து போட்டிருந்தார்.  இவர் போட்ட
மாதிரியே கேப்டன் டைகரை நெஞ்சில் குத்திக் கொண்டு போகும் ஆசையில் இவர்
போட்டோவை ப்ளேடுபிடியாவில் அடிக்கடி பார்த்திருப்பதால் அடையாளம் தெரிந்து
கொண்டேன். அவர் கசினுடன் வந்திருந்தார். கவ்பாய் கெட்  அப்பை போடவில்லையா

என்று கேட்ட போது  அவர் கசினுக்கு அது தெரியாது வீட்டில் போய் சொல்லப் போகிறான்

என்று சிரித்தார்.

முதலைப் பட்டாளம் கலீல் மற்றும் கார்த்திகேயன் 

புதுச்சேரியில் இருந்து  கார்த்திகேயன் , முதலைப் பட்டாளம் கலீல் வந்திருந்தார்.
கார்த்திகேயன் ரமேஷ் என்று கடைசி வரை  கும்மி அடித்தோம்.


பாலாஜி சுந்தர் 


கடைசியாக இவரைப் பார்த்தேன். அயன் மேன் ஐக்கானுடன் பின்னுட்டம் இடுபவர்.

இந்தவருடம் தான்  சந்தா கட்டி இருப்பதாக சொன்னார். ஆனால் சந்தா தொகைக்கு

மேலேயே செலுத்தி வேண்டும் போது எக்ஸ்ட்ரா புக்கோ காமிக்க க்ளாசிக்கோ வாங்கி
கொள்வேன் என்றார்.

 கார்த்திகேயன்,பாலாஜி சுந்தர்,கோபால கிருஷ்ணன்,கலீல்

பழனிவேல்

நண்பர் பழனிவேல் புத்தம் புதிதாக இருந்த XIII இரத்தப் படலத்தில் சௌந்தர
பாண்டியனாரிடம் கையெழுத்து வாங்கினார். எல்லோருடைய கண்ணும் அவர் XIII
புத்தகத்தின் மேலேயே இருந்தது. நீங்க எந்த பக்கம் போவீங்க என்று சொன்னேங்கன்னான்னு
கேட்டு பார்த்தேன். மனிதன் சொல்லவே இல்ல. :D

பரிமேல் , கிறுக்கல் கிறுக்கன், பிரசன்னா , உதய், அய்யம்பாலயதில் இருந்து வந்த
நண்பர்,RAMG போன்ற நண்பர்களுடனும் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

எல்லோரையம்கவர் பண்ணி விட்டேன் என்று நினைக்கிறேன். யாரையும் தெரிந்தே
விடவில்லை மக்களே .

சௌந்தர்,கிருஷ்ணா வா வே , கார்த்திக், பரணி  உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன். :-(

ஸ்டால் டிஸ்க்கி 


முதல் நாள் இவ்வளவு கூட்டம் கூடியது நம் ஸ்டால்லுக்குதான். பக்கத்து ஸ்டால் காரர்கள்

பொறாமையில் வெந்து கருகி இருப்பார்கள். உயிர்மை பிரசுரம் பக்கத்தில் தான் நம் ஸ்டால்

மனுஷ்ய புத்திரன் கவனிக்க படாமல் பரிதாபமாக உட்க்கார்ந்து கொண்டு இருந்தார்.

அந்த வழி  போன நிறைய பேர் கூட்டத்தைப் பார்த்து "ஏதோ நடிகர் முதல் நாள் ஒரு

ஸ்டாலை திறந்து வைக்க வந்திருக்கிறாரோ என்று என்னிடம் "சார், யார் சார் திறந்து
வைக்க வந்திருக்கிறார்" என்று கேட்டார்கள். எடிட்டர் வேற நல்ல கலராக இருப்பதால்

சிலர் "டேய் அர்விந்த் சாமிடா " என்று சொன்ன கூத்தும் நடந்தது.


NBS ரிலீஸ் 


ஒரு வழியாக எடிட்டரும் , சௌந்தரபாண்டியனாரும் வந்தார்கள். அவர் வலை தளத்தில்
சொன்னதுபோல அவர்கள் வந்ததும் வாசகர் கூட்டம் அவர்களை அள்ளிக் கொண்டது.

யார் வெளியிட்டு யாரிடம் கொடுக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது, ஸ்டாலிலேயே

நடக்குமா அரங்கத்தில் நடக்குமா என்ற சந்தேகமும் இருந்தது.  சௌந்தரபாண்டியனார்

வெளியிட எடிட்டரின் மகன் விக்ரம் வாங்கிக் கொண்டார். இதில் இன்னும்மொரு சூட்சுமம்

இருக்கிறது உன் தந்தைக்குப் பின் உனக்கு இந்த காமிக்ஸை தருகிறேன் என்ற சூட்சுமம்
என்று நான் நினைத்துக் கொண்டேன்.அந்த வீடியோ இதோ

ரிலீஸ்சுக்குப் பின் சௌந்தரபாண்டியனாரின் பேட்டி  மற்றும் கலந்துரையாடல் வீடியோ இதோ.
கிட்டத்தட்ட 2.5 மணி நேரம் உட்க்கராமலேயே பேசினார். உட்க்கார வற்புருத்திய  போது

வாசகர்கள் நிற்கும்போது நான் உட்க்காருவதா என்று ரெண்டு முறை மறுத்து விட்டார்.
மிகுந்த வற்புறுத்தலின் பேரிலேயே உட்க்கார்ந்தார். தான் சென்னையில் வேலை செய்தது

முல்லை தங்கராசன் , அந்த சமயம் வந்த  புத்தகங்கள், காப்புரிமை பெற்றது, மொழிபெயர்ப்பு

என்று அவர் பேசிய வீடியோ இதோ.

வீடியோ # 1 
வீடியோ # 2 

வீடியோ # 3 

வீடியோ # 4

வீடியோ # 5
வீடியோ # 6 (புதியது


பைனல் டிஸ்க்கி

1) நான் எடிட்டரிடம் கேட்க நினைத்து கேட்க்காமல் விட்ட கலாய் கேள்வி

    "சார் நம் காமிக்ஸ் பற்றி நிறைய ப்ளாக் இப்போது வந்து விட்டது. இதனால் உங்கள்

    சர்க்குலேசன் கூடி இருக்கா  இல்ல உங்க BP கூடி இருக்கா" :D .


2) நான் எடுத்த அரிய புகைப்படகளில் ஒன்று. இந்த படத்துக்கு வசனம் தேவை இல்லை. இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு உங்கள் தலைக்குள் ஏதாவது வசனம் தோன்றினால் அதற்க்கு கம்பெனி பொறுப்பாகாது.  :D மொத்தத்தில் கல்லூரி அலுமினியில் பழகிய நண்பர்களைப் பார்த்து விட்டு வந்த நிறைவு

கிடைத்தது. நான் நினைத்தது போலவே வாசகர் சந்திப்பாக நன்றாக நடந்து முடிந்தது.   கூடவே ரூ 400 க்கு புக் வாங்கியதுக்கு வீட்டில் திட்டும் கிடைத்தது.


கலீல் திட்டமாட்டார் என்ற நம்பிக்கையில் அவரது ப்ளோகில் இருந்து,  நான் போட்டோ எடுக்காத நண்பர்களில் படங்களை உருவி உள்ளேன். நன்றி கலீல்.

Post Comment

34 comments :

 1. //திருப்பூர் ப்ளூ பெர்ரி (பொன்ராஜ்)// இல்லை, நாகராஜன்!:)

  பொன்ராஜ் = கோவை ஸ்டீல் க்ளா! :) :)

  ReplyDelete
  Replies
  1. //எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது. ஏன்னு சொல்லுங்க பார்ப்போம்?//
   உங்க மனைவி 'காமிக்ஸ்'னாலே, போ'டா' சொல்கிற டைப்போ?! அதனால்தான் உங்கள் ப்ளாக் பெயர் காமிக்ஸ்டா - கரெக்டா?! ;)

   Delete
  2. ஆஹா.. ஏண்டா இப்படி கேள்வி கேட்டோம்னு தோணுதா ராஜ் ? :).. கார்த்திக் இதிலே PhD பண்ணியவர்.. :)

   Delete
  3. //பழக்கப்பட்ட முகம் ஒன்று தெரிந்தது, அது ஸ்ரீராம்//
   பயங்கரமான ஆளாச்சே அவரு! :) :) :)

   //கார்த்திகேயன்//
   காமிக்கேயன், கிங்கேயன் இப்படி பல பேர்ல சுத்திட்டு இருக்காரு இந்த ஆளு!!! ;)

   //உன் தந்தைக்குப் பின் உனக்கு இந்த காமிக்ஸை தருகிறேன் என்ற சூட்சுமம்//
   அட! :)

   //உங்கள் சர்க்குலேசன் கூடி இருக்கா இல்ல உங்க BP கூடி இருக்கா//
   கேட்டிருந்தா, BP-தான் கூடியிருக்குன்னு (உங்களை) அடிச்சு சொல்லி இருப்பார்!!! ;)

   //இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு உங்கள் தலைக்குள் ஏதாவது வசனம் தோன்றினால் அதற்க்கு கம்பெனி பொறுப்பாகாது. :D //

   * எடிட்டர்: கிர்ர்... பேட்டி எடுக்கறேன் பேர்வழின்னு ரொம்ப ஓவராத்தான் பேசுறான்!

   * ரஃபிக்: இன்னும் கொஞ்சம் கேள்விகள் எழுதி வெக்க மறந்துட்டனே! அடடா, வட போச்சே! :)

   அருமையான பதிவு, வீடியோ இன்னமும் பார்க்கவில்லை! :)

   Delete
  4. //காமிக்கேயன், கிங்கேயன் இப்படி பல பேர்ல சுத்திட்டு இருக்காரு இந்த ஆளு!!! ;)//

   உங்க வயிற்றேரிச்சல் புரியுது. :)

   இவ்வளவு போட்டோவுல வருவேன்னு தெரிஞ்சியிருந்தா கொஞ்சம் மேக்கப் போட்டு வந்திருப்பேன். :)

   Delete
  5. இந்த மிதமான மேக்கப்லேயே மிகவும் அம்சமாகத்தான் இருக்கிறீர்கள்! :D

   Delete
 2. உங்களைச் சந்தித்ததும் மகிழ்ச்சி நண்பரே.

  அழகான மாலைப் பொழுது, பால்ய கால நினைவுகளுடன் பொன் மாலைப் பொழுதாகியது. நான் சற்று சீக்கிரமே கிளம்பிவிட்டேன். அதனால் சீனியர் லயனின் பேச்சைக் கேட்கவில்லை. அந்த குறை இந்த வீடியோக்களால் தீர்ந்தது. உங்கள் பொறுமைக்கும் நன்றி.

  ReplyDelete
 3. @ஸ்ரீராம்: நன்றி ஸ்ரீராம்

  ReplyDelete
 4. @RAMG75: நன்றி ராம்ஜி. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்களை எப்படியோ மறந்து விட்டேன். இப்போது அப்டேட் பண்ணிவிட்டேன்.

  ReplyDelete
 5. @ கார்த்திக்: நன்றி. நாகராஜ் என்று மாற்றிவிட்டேன். சாரி நாகராஜ்.

  //உங்க மனைவி 'காமிக்ஸ்'னாலே, போ'டா' சொல்கிற டைப்போ?! அதனால்தான் உங்கள் ப்ளாக் பெயர் காமிக்ஸ்டா - கரெக்டா?! ;) //

  இல்லையே வவ் வவ் . நம்ம படிச்சுக்கிட்டு இருக்கும்போது, நம்ம நண்பன் ஒருத்தன் வந்து "என்னடா படிக்கிறன்னு கேட்டால், "காமிக்ஸ்டா" ன்னு சொல்லுவோம்ன்னு தோணுச்சு. அதான் அப்படி ஒரு பேர்.

  ReplyDelete
  Replies
  1. நாகராஜன் என்று மாற்றி, மீண்டும் ஒருமுறை அவருக்கு சாரி சொல்லுங்கள்! ;)

   Delete
 6. //கேள்வி கேட்டுக் கொண்டிருந்த 4 பேரிடம் என்னை
  அறிமுகப் படுத்தி கொண்ட போது காமிக்ஸ்டா என்றவுடன் ஒ என்று கட்டிக் கொண்டனர்//

  காமிக்ஸ்"டா" என்றதற்கு கட்டி போட்டல்லவா அடிக்க வேண்டும்? ஏன் கட்டிக் கொண்டனர்?

  :) :) :)

  நேரில் சென்று வந்ததைப் போல இருக்கு...

  ReplyDelete
 7. @கார்த்திக்: //நாகராஜன் என்று மாற்றி, மீண்டும் ஒருமுறை அவருக்கு சாரி சொல்லுங்கள்! ;)//

  நான் நாகராஜ்ன்னு தான் கூப்பிடப் போறேன், அதனால் மாற்றும் எண்ணம் இல்லை.

  ReplyDelete
 8. அருமையான பதிவு. Thanks for sharing the photos and videos.

  ReplyDelete
 9. சிறப்பான பதிவு. உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி.
  உங்களுடனும், நண்பர் ரமேஷுடனும் நீண்ட நேரம் இருந்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

  ReplyDelete
 10. @பெரியார் : நன்றி பெரியார்.

  ReplyDelete
 11. @பரணி : தேங்க்ஸ்டா

  ReplyDelete
 12. @கார்த்திகேயன் : எனக்கும் மிக சந்தோஷம். ரொம்ப ஜோவியலாக இருந்தீர்கள். நிறைய நல்ல நட்புகள் கிடைத்தது.

  ReplyDelete
 13. @அப்துல் பாசித் : டா போட்டுப் பேசியதால் நெருங்கி விட்டார்கள்

  //நேரில் சென்று வந்ததைப் போல இருக்கு... //

  நன்றி பாசித்

  ReplyDelete
 14. தூள் பண்ணியிருக்கீங்க ராஜ் முத்து குமார்! நேரில் வரவில்லையென்றாலும், நேரில் வந்தால் கிடைக்கும் அனுபவத்தை சிறிதளவாவது ஏற்படுத்தி தந்த உங்களுக்கு நன்றிகளோ நன்றிகள்! :)

  இதுவரை போட்டோவில் கூடப் பார்த்திராத நண்பர்களை காட்டியதற்கும் நன்றி!

  வழக்கமான உங்க 'ஹியூமர் டச்'களும் சூப்பர்! :)

  ReplyDelete
 15. தல உங்களை சந்தித்த்தில் மிக்க மகிழ்ச்சி. நீங்களும் vhnsn collegeல் படித்தவர் என்பது பெரும் சந்தோஷம். இது அங்கேயே தெரிந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

  ReplyDelete
 16. அந்தக் கடைசி வரியை அபாயத்தின் நிறமான சிவப்பிலே போட்டு குடும்ப வாழ்க்கையின் குரூரத்தை எவ்வளவு சூசகமா காட்டியிருக்கீங்க! ச்சொ!

  கொடுமையின் நிறம் சிவப்பு?

  ReplyDelete
 17. நீங்கள் வீடியோ எடுக்கும் போது ரமேஷ் உங்களை இண்டர்வீயூ செய்ததை நானும் பார்த்து கொண்டு தான் இருத்தேன். கேள்விகணைகளை தொடுத்து கொண்டே இருந்தார்

  ReplyDelete
 18. @LuckyLimat : எனக்கும் மகிழ்ச்சிதான். ஒரு கால் பண்ணுகிறேன் பேசுவோம்.

  ReplyDelete
 19. @ஈரோடு விஜய் : நன்றி விஜய்
  //
  அந்தக் கடைசி வரியை அபாயத்தின் நிறமான சிவப்பிலே போட்டு குடும்ப வாழ்க்கையின் குரூரத்தை எவ்வளவு சூசகமா காட்டியிருக்கீங்க! ச்சொ!

  கொடுமையின் நிறம் சிவப்பு? //

  இதுதான் உங்கள் ஹ்யூமர் டச்

  ReplyDelete
 20. நல்ல பதிவுங்க.
  வராத எங்களுக்கு ஒரே வவுதெரிச்சலா இருக்கு.
  நான் முன்னாடியே மூனாவதா ஒரு கமெண்ட் போட்டேன் அத வேற காணல.
  என்னாச்சு?
  நீங்க ஆசிரியரிடம் கையெழுத்து வாங்கினீங்களா?
  எல்லா நண்பர்களும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிடீங்க
  ஹ்ம்ம் எல்லாம் இந்த தேதி மாத்துனதுல வந்த பிரச்சனை
  இதுபோல இன்னும் ஒரு சந்தர்ப்பம் அமையுமா?
  ஆனால் போன எல்லோரும் புகைப்படங்கள் எடுத்து ஷேர் பண்ணியதால் நண்பர்கள் முகங்கள் அறிந்து கொள்ள முடிந்தது.
  ஒரு உண்மையா தெரிஞ்சுகிட்டாங்க எல்லோரும் பழைய போட்டோவ profile pic வச்சு ஏமாத்தீருகீங்க.
  இப்போ எல்லாம் வெளிச்சத்துக்கு வந்திருச்சு.

  ReplyDelete
 21. உங்களை மற்றும் நண்பர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

  உண்மையாகவே மறக்க முடியாத சந்திப்பு ... அந்த நிமிடங்கள் இன்னும் எனது கண்ணுக்குள் நிற்கிறது ...

  முடிந்தஅளவு வந்திருந்த நண்பர்கள் நண்பர்கள் அனைவரது அலைபேசி என்னையும் வாங்கி உள்ளேன். நேரம் கிடைக்கும் பொழுது ஒவ்வொருவராக அழைத்து 'ரம்பம்' போடா போகிறேன் :)

  திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன் (எ) நாகராஜ் :)

  ReplyDelete
 22. @கிருஷ்ணா வ வெ:

  உங்களோட முன்னைய கமெண்ட் என்ன ஆச்சுன்னு தெரியவில்லை. ஸ்பாமிலும் இல்லை. ஆபீஸ்ஸில் இருந்து அப்படியே போய் விட்டதால் புத்தகம் எடுத்துக் கொண்டு போகவில்லை. எல்லோரும் ஒரு புக் வாங்கும் போது நான் வாங்காமல் இருந்தது கேவலமாக இருந்தது. அதனால் கையெழுத்தும் வாங்கவில்லை.

  நான்கூட 10 வகுப்பு போட்டா வைத்தான் போடலாமுன்னு பார்த்தேன். அது ரொம்ப ஓவருன்னு இப்போ இருக்கிற போட்டோ போட்டேன். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. :D

  நிஜமாகவே நல்ல ஒரு அனுபவம். நான் நினைத்ததை விட மிக சிறப்பாக நடந்தது. நிறைய நண்பர்களை ஒரே இடத்தில் சந்திக்க முடிந்தது.


  ReplyDelete
 23. @திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்

  நன்றி நாகராஜ். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

  //முடிந்தஅளவு வந்திருந்த நண்பர்கள் நண்பர்கள் அனைவரது அலைபேசி என்னையும் வாங்கி உள்ளேன். நேரம் கிடைக்கும் பொழுது ஒவ்வொருவராக அழைத்து 'ரம்பம்' போடா போகிறேன் :) //

  I am waiting :D

  ReplyDelete
 24. அருமையான கவரேஜ் நண்பரே. புத்தகக் கண்காட்சிக்கு வராத குறையை உங்கள் மற்றும் நம் நண்பர்களின் பதிவுகள் ஓரளவு தீர்த்து வைத்துள்ளது.

  ReplyDelete
 25. @Tamil Comics - SoundarSS:
  நன்றி சௌந்தர் நீங்களும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  ReplyDelete
 26. நேர்ல கலந்துகிட்ட மாதிரி நல்லா இருக்கு! hmm நான் தான் வரமுடியல (அதனால யாருக்கும் நட்டம் இல்ல)! வீட்டுல பொங்கல் கெஸ்ட்ஸ்..!

  ReplyDelete