Sunday, January 20, 2013

NBS : வாழ்க்கையையே பங்கு சந்தையில் பணயம் வைத்த அமெரிக்க பில்லினியர்


லார்கோ விஞ்ச் பற்றி தெரியாதவர்களுக்கு 

நண்பர்களே இது "Never Before Special" என்ற பெயரில் Muthu Comics வெளியிட்ட புத்தகத்தின் 
முதல் இரு கதைகள். இது உலகெங்கும் வெளியாகி பட்டையை கிளப்பிய ஒரு
காமிக்ஸ் புத்தகம்.புத்தகமாக மட்டுமல்லாமல் டிவியில் தொடராகவும்சினிமாவாகவும் 
வந்துள்ளது. இந்த சினிமா போஸ்டரை விஜய் நடிக்க விருக்கும் (?) யோகன் படத்துக்கு யூஸ் 
பண்ணியதாக கேள்வி.  

மேலதிக தகவலுக்கு விக்கி .என் மன வானில் 

முதல் முதலில் லார்கோவை சர்ப்ரைஸ் ஸ்பெஷலில் பார்த்தபோது அவ்வளவு
சுவாரஸ்யமாக  இல்லை. வெள்ளை நிற அட்டைப் படத்தில் கேஷுவல் ட்ரஸில்  ஒரு
சேரில் கேர் ப்ரீ ஆக உட்க்கார்ந்து (கிட்ட தட்ட படுத்து) இருந்தவரை கதாநாயகனாக
ஏற்றுக் கொள்ள முடியவில்லை.எந்த புத்தகத்தையும் வாங்கிவந்த அன்றே படித்து
முடிக்கும் நான் சர்ப்ரைஸ் ஸ்பெஷலை படிக்க கையில் எடுப்பதற்கே நாலு நாளாகி
விட்டது. ஆனால் படிக்க ஆரம்பித்தவுடன் முடித்து விட்டுதான் வைத்தேன். அப்படி
ஒரு ரோலர் கோஸ்டர் ரைட். முதலில் பங்கு சந்தை பற்றிய தகவல்கள் சிறிது
மிரட்டினாலும் என்னுடைய சொற்ப பங்கு சந்தை அறிவை வைத்து புரிந்து
கொண்டேன்.

சர்ப்ரைஸ் ஸ்பெஷல் ரோலர் கோஸ்டர் ரைட்  என்றால் NBS இல் வெளிவந்துள்ள
"கான்க்ரீட் கானகம் நியூயார்க்" மற்றும் "சுறாவோடு ஒரு சடுகுடுஒரு கோஸ்ட்
ரைடர் ரைட். கில்லி படம் மாதிரி (சௌந்தர் நீங்க சொன்ன மாதிரியே எழுதிட்டேன் :D)
பர பரவென்று  ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரே மூச்சில் படித்துவிட்டு எழுந்தேன்
என்பதை நான் சொல்லத்  தேவை இல்லை.

கதை 

பீப் பீப். ஸ்பாயிலர் அலர்ட் கேட்கிறதா நண்பர்களே?

வழக்கம் போல பங்கு சந்தைகாதல் & மோதல் கொண்ட கதை தான்.  விஞ்ச் குழுமத்தில்
இருந்த காட்டன் லார்கோவின் வருகை பிடிக்காமல் பெனிகோ இன்சூரன்ஸ் கம்பெனிக்கு
போய் விடுகிறார்.பெனிகோ கம்பனியின் மேஜர் பங்குதாரர் "கஸ் பெனிமோர்". லார்கோவின்
வளர்ப்பு தந்தை நெரியோவின்  பழைய எதிரி. காட்டன் உதவியுடன் விஞ்ச் குழுமத்தை
விழுங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். விஞ்ச்  குழும பங்குகளை வாங்கி குமிக்கிறார்.
இதைப் பார்த்த சல்லிவனும்கொக்ரேனும் பெனிகோவை பதிலுக்கு வாங்க
நினைக்கிறார்கள். பெனிமோர்  தன்னிடம் பணம் இல்லாதது போல் காட்டிகொள்கிறார்.
அதனால் துணிந்து பெனிகோவை வாங்க நினைக்கிறார்கள்.ஆனால் அது அவர்களுக்கு 
பெனிமோர்  விரித்த வலை என்பது அவர்களுக்கு தெரியாது. லார்கோவின் உள்ளுணர்வு
எச்சரித்தாலும் அவர்கள் சொல்வது தவறு என்று நிரூபிப்பதற்க்காக ஒப்புக் கொள்கிறான்.
பெனிமோர்  ஒரு கைப்பாவை என்பதும்  அவர்களுக்கு தெரியாது. தெரியாத எதிரியோடு
விளையாடி எப்படி லார்கோ ஜெயிக்கிறான் என்பதே கதை.

லார்கோ கதைகளில் இருக்கும் விஷயம் இளமை துள்ளல். இதிலும் அதிகமாகவே
இருக்கிறது. மிக அற்புதமான ஓவியங்களையும் கொண்டிருக்கிறது

லார்கோ ஒரு லீடர்
லார்கோ பல மில்லியன் டாலர்களுக்கு அதிபதி யானாலும் அவனுள் உள்ள அடிப்படை
நல்ல குணங்கள் மாறவில்லை.அதனால் தான் அவன் நெரியோவைப் போல் ஒரு
பாஸாக இல்லாமல் ஒரு லீடராக இருக்கிறான்.

1) நெருக்கடியான நேரங்களில் நிதானத்தை தவற விடவில்லை. பக்கம் 65. பணம் 
    கிடைக்காமல் போகும்போது சல்லிவனின் முகமும், கொக்ரானின் முகமும் தொங்கிப்
    போய் இருப்பதை பாருங்கள். அப்போது கூட மனம் தளராமல் ”வாருங்கள் ஜென்டில் மென்,
    இன்னும் கொஞ்சம் ஷாம்பெய்ன் ஆபிசில் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு நடையை 
    கட்டும் அழகைப் பாருங்கள்.

2) பக்கம் நாற்பத்தி இரண்டில் நார்த்ரிட்ஜுக்கு ஏற்ப்பட்ட முடிவு தன்  தொழில் எதிரியாக
இருந்தாலும் பெனிமோருக்கு ஏற்படக் கூடாது என்று நினைக்கிறான்.

3) பக்கம் ஐம்பத்தி ஒன்னில் பெனிகோவைக் கைப்பற்றும் முயற்சியைப் பற்றி சல்லிவன் 
   வற்புருத்தும் போது ரெண்டு  நாள் முன்புதான் பெனிமோரும் நானும் கைகுலுக்கிக் 
   கொண்டோம் என்று தயங்குகிறான்.
4)   தனக்கு துரோகம் செய்த பிஷர் இறந்ததற்காக வருத்தப் படுகிறான்.

5) பக்கம் எழுபத்தி ஆறில் கடுமையான பணக் கஷ்ட்டத்தில் இருந்தபோதும் வந்த வரை 
    லாபம் என்று காட்டன் கொடுக்கும் மூன்று பில்லியன்னை வாங்காமல் உண்மையான 
    போராளியாய் அவரை யாருமே அவமானபடுத்தாத அளவுக்கு அவமானப் படுத்தி 
   அனுப்புகிறான்.

6) தன் ஊழியர்கள் நல்லவர்களாக இருந்தால் “தன்னைப் பற்றி அவர்கள் வைக்கும்
   விமரிசனங்களைப் பொருட்படுத்துவது இல்லை.
    
    உதாரணத்துக்கு அவரது காரியதரிசி பென்னி. எப்பொழுதும் அவரை நேரியோவுடன் 
   ஒப்பிட்டுக்கொண்டே இருப்பார்.

   மற்றுமொரு உதாரணம் கோக்கரான், உனக்கு ஒன்றும் தெரியாது சின்னப் பையா என்று
   சொன்னாலும் இது வரை அவரை வேலையை விட்டு தூக்கவில்லை.

7) மெலனி  ன்ற பெயரில் வந்து தன்னை ஏமாற்றியது தெரிந்தாலும் அவளை மறக்காமல்
    இருக்கிறான்.

பஞ்ச் டயலாக்ஸ் 

விஜய் படம் போலவே பஞ்ச் டயலாக்ஸ் அதிகம் லார்கோ கதைகளில் வரும். அது 
அவருடைய கேர் ப்ரீ லைப் ஸ்டைலையும் , திமிரையும் , நகைச்சுவை உணர்வையும் 
காட்டும். அந்த வகையில் பஞ்ச் டயலாக்ஸுக்கு இதில் பஞ்சமே இல்லை.

1) பக்கம் 16 இல் பெனிகோவின் பாஸ் பெயர் கொரில்லா கஸ் என்றவுடன் "அவருக்கு அந்த
 கவர்ச்சியான பெயர் எப்படி வந்தது" என்ற நக்கல்.
2) பக்கம் 17 இல் மெலனி "சுமாராகவாவது ஒரு ஆசாமியின் கையை கோர்த்துக் கொண்டு 
  டின்னருக்கு போக இருந்தேன்" எனும்போது, "நான் அந்த சுமாரான ஆள் எனும் பட்சத்தில் 
என் கையை பிடித்துக் கொள்" என்று ஒரு ஈகோவும் இல்லாமல் சொல்கிறார்.
3) பக்கம் 18 இல் "ராபர்ட் காட்டன் உங்களிடம் பணிக்கு வந்ததையா எங்கள் பங்குகளை 
நீங்கள் வாங்கி குமிப்பதயா?" என்று அதிரடியாக ஆரம்பிக்கிறார். பக்கம் 19 இல் கடைசியாக 
"குரங்கு ரத்தம் உங்களுக்கு ரொம்பவே இஷ்டமாமே" என்று கேட்பதற்கும் ஒரு கட்ஸ் வேண்டும் 

4) பக்கம் 20 இல் "உன் பாட்டியின் மந்திரம் மகா வீரியமானது போலும் மெல்லி. அது சரி 
உன் தாத்தா எப்படி செத்தார்?" என்று ஒரு கொலை கண் முன் நடந்திருக்கும் போது 
கிண்டலாக கேட்கிறார்.       

5) வருமான வரி அதிகாரியின் முன் சேரின் மீது கால் போட்டுக் கொண்டு "ஆமாம்ங்க எஜமான்" என்று தெனாவெட்டாக சொல்லுவதை பாருங்கள். 


வருமான வரி அதிகாரி பைசா கணக்காக சொல்ல "அந்த 37 சென்ட்டுகளும் அவசியம் தானோ?" என்று அடுத்த நக்கல்.


6) ரிலீஸ் பண்ணும்போது போலீஸ் "உன்ன எங்கேயோ பாத்திருக்கிறேனே? தேடப்படும்
குற்றவாளியா நீ?" என்று சொல்ல "இருக்காது சார்ஜெண்ட், உங்களுக்கு ஏதும் வயசுப் பொண்ணு 
இருக்கா என்ன ? பொதுவாக என்னை தேடுவது அவர்கள் தான்" என்று அந்த நிலைமையிலும்
நக்கல் அடிக்கிறார். 
7) சைமன் அஜால் குஜால் போட்டோ எடுத்து கொண்டிருக்க உள்ளே வரும் லார்கோ 
"எப்பவாச்சும் பிலிம் போட்டு போட்டோ எடுத்திருக்கயாடா?" என்று கலாய்ப்பது. 8) "அருமை நண்பரே உங்கள் பேனாவை சற்றே இரவல் தர முடியுமா?" என்று பெனிமோரிடமே
 கேட்பது உச்சகட்டம்

9)  “இஸ்ரேல் எப்போதும் போரில் இருக்கும் நாடு மிஸ்டர் வின்ச்” என்று இஸ்ரேல் நாட்டவர்
 சொல்வதும் “சுவாரஸ்யமான மேற்க்கத்திய கலாச்சாரப் படி இப்போது காட்டன் தற்கொலை 
செய்து கொள்வாரா என்று ஜப்பானியர் கிண்டலடிப்பதும் அவரவர் கலாச்சாரத்தை 
உணர்த்தக் கூடிய வசனங்கள்.

ஓவியப் பார்வை
ஓவியங்களை ரசிக்கும் (ஓவியாவை அல்ல :D) என்னைப் போன்ற ஆசாமிகளுக்கு இந்த
லார்கோ கதைகள் அற்புதமான ஓவியங்களை கொடுத்துள்ளது.

1) முதல் பக்கத்திலேயே ஸ்விஸ்ஸில் தண்ணீரில் இருக்கும் ஒரு கட்டிடத்தைப்
பாருங்கள்.


2) பக்கம் 21 இல் லார்கோவின் வீட்டில் இருக்கும் கார்டன்.


3) பக்கம் 26 இல் லிஸ்ஸா வின் வீடு


4) பக்கம் 3௦ இல் இருக்கும் பார்க். மாலை வெயிலில் துள்ளி விளையாடும் அணில்களைப்
பாருங்கள். வெயில் எந்த  பக்கம் இருந்து  வருகிறது தெரிகிறதா? சூரியன் மறையும்
மேற்குப் பக்கத்தில் இருந்து. இந்த புத்தகத்தையும் ஒரு மேப் என்று வைத்துப் பார்த்தால்
நம் இடது கைப் பக்கம்தான் மேற்கு. அதனால் மேற்குப் பக்கத்திலிருந்து வெயிலை விழ
வைத்த ஓவியர் ஜீன் வான் ஹாம் ஒரு ஜீனியஸ் என்பதை மற்றுமொருமுறை
நிரூபித்துள்ளார். சூப்பர்


5) பக்கம் 41 வெடித்து சிதறும் கார்.6) பக்கம் 58 வின்ச் குழுமக் கட்டிடம் இரவில்.

7) பக்கம் 63, 65 இல் பிசியான கடைவீதி இந்த ரெண்டு படங்களிலும் கடை வீதிகளை
காட்ட வேண்டிய அவசியமில்லை. நீண்ட வசனங்கள்  நம்மை போரடிக்காமல் இருக்க
இப்படி பண்ணியுள்ளார் என்று நினைக்கிறேன்.8) பக்கம் 66 இல் பெனிமோரின் கோட்டை மற்றும் நெருப்பின் வெளிச்சத்தில் 
சாப்பாட்டு அறை.
9) பக்கம்  76 இல் காட்டன் மேலிருந்து  ீழே விழும் ஷாட். உண்மையிலேயே உயரமான 
கட்டிடம்  என்று நம்மை நம்ப வைத்து விடுகிறார்.


10) பக்கம்  82 இரவில் பெனிமோரின் கோட்டை.11) பக்கம்  95 இல் இருக்கும் உயரக் கட்டிடங்கள் இருக்கும் பிசியான ரோட்டில் பறக்கும்
மோட்டார் பைக். சின்ன சின்ன ஓவியங்கள் மூலம் சைமன் என்ன வேகத்தில் போகிறான் 
அதற்க்கு மற்றவர்களின் ரியாக்சன் என்ன? என்பதை சொல்லி இருப்பதைப் பாருங்கள்.12) பக்கம்  98 எட்டில் ஒரு பறவைப் பார்வை ஓவியம்


13) பசுமையான பார்க் ஓவியம் கரும் பச்சை, இளம் பச்சை மற்றும் சிகப்பு என்று தீட்டியிருக்கிறார்.


  
14) இரவில் உயரே ஒரு ரயில்.
  
  

15) பக்கம் 1௦௦ இல் இருக்கும் கடைசி ரெண்டு ஓவியங்கள் கிளாசிக். கதை முடியப்
போகிறது என்பதை “EXIT” என்ற சொல்லால் குறித்து விட்டு லார்கோ மனம் சோர்வாக
இருக்கிறது என்பதை கீழே இறங்கும் மின் படிகளில் காட்டி இருக்கிறார்.

காதலியின் உடலை ஆயிரம் ரோஜாக்களோடு ப்ளைட்டில் அனுப்பி
வைத்து விட்டு மனச்சோர்வோடு மின் படியில் இறங்கும்
லார்கோவை நாம் தொந்தரவு செய்ய வேண்டாம் நண்பர்களே.
வாருங்கள் இப்போதைக்கு அவனுக்கு விடை கொடுப்போம்.
Post Comment

28 comments :

 1. பதிவு மிக பெரியதாக இருக்கிறது.
  எதுக்கும் ஒரு கமெண்ட் பதிந்துவிட்டு படித்துவிட்டு வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வழமை போல உங்களுடைய பாணியில் வெளுத்து வாங்கி உள்ளீர்கள்.
   எனக்கு புத்தகம் படிக்கும் பொழுது ஓவியங்கள் அனைத்தும் ஒரு திரைப்படம் போல தான் என் கண் முன்னே ஓடியது.
   அதே போல Wayne கதையின் ஓவியங்களும் நன்றாக இருந்தது,

   Delete
  2. நன்றி கிருஷ்ணா.

   //எனக்கு புத்தகம் படிக்கும் பொழுது ஓவியங்கள் அனைத்தும் ஒரு திரைப்படம் போல தான் என் கண் முன்னே ஓடியது.//

   எனக்கும் தான் ஒரு ஆக்சன் படம் பார்த்த நிறைவு.

   உங்களை நெறி சந்தித்ததில் மகிழ்ச்சி.

   Delete
 2. வித்தியாசமான ஒரு விமர்சனப் பதிவு. அருமை.

  ReplyDelete
  Replies

  1. நன்றி கார்த்திகேயன்.

   Delete
 3. சூப்பர்ப்...

  சித்திரங்கள்.. கதை... வசனங்கள் என்று அனைத்தையும் பின்னி எடுத்துவிட்ட்டீர்கள்... அருமை.

  இதை சினிமாவாக எடுத்தால், கேமரா கோணங்களுக்கு சிரமம் எடுக்கவேண்டாம்.. இந்த சித்திரங்களை ரெபரன்ஸ் வைத்தால் போதுமானது..

  இரண்டு பேர் கட்டிடத்தில் பேசும் போது, வெளிப்புறத்தை - கடைவீதியை காட்டுவது ஒரு ஸ்டைல்.. ஆங்கிலப்படத்தில் பேக்ட்ராப்பில் வசனம் வரும் ஆனால் கேரக்டர்ஸ் ஒரு லாங்ஷாட்டில் இருப்பார்கள்.. இந்த உத்தி லார்கோ கதைகளில் நிறைய வருகிறது. லார்கோவின் முதல் பாகத்தின் முதல் பக்கத்திலேயே.. இந்த முறை கையாளப்பட்டுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி RAMG.

   //இதை சினிமாவாக எடுத்தால், கேமரா கோணங்களுக்கு சிரமம் எடுக்கவேண்டாம்.. இந்த சித்திரங்களை ரெபரன்ஸ் வைத்தால் போதுமானது..//

   உண்மைதான் ஒரு ஆங்கில படம் எடுக்க தகுதியான கதைதான்.

   Delete
 4. அருமையான விமர்சனம் தலைவரே.... முதலில் பார்க்க பதிவு பெரிதாக இருந்தது. அடுத்து படிக்க படிக்க பதிவு முடிந்ததே தெரியவில்லை

  நான் இன்னும் படிக்காததால் ஒரு அருமையான ட்ரைலர் வீடியோ பார்த்தது போல் இருந்தது

  ReplyDelete
  Replies
  1. நன்றி லக்கி.

   //நான் இன்னும் படிக்காததால் ஒரு அருமையான ட்ரைலர் வீடியோ பார்த்தது போல் இருந்தது//

   இன்னுமா படிக்கலே. அமித் கமல் கூட சேர்ந்த ஆளா நீங்க , சீக்கிரம் படிங்க .

   Delete
 5. இதே போல் அனைத்து கதைகளுக்கும் எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. எல்லாக் கதைகளுக்கும் முடியாது என்று நினைக்கிறேன். முடிந்த அளவுக்கு பண்ணுகிறேன். :D

   Delete
 6. // ”கேர் ப்ரீ” ஆக // லார்கோ பொண்ணுங்க விசயத்துல வீக் குதான்! அதுக்காக இப்படியா?? ;)
  //
  காதலியின் உடலை ஆயிரம் ரோஜாக்களோடு ப்ளைட்டில் அனுப்பி
  வைத்து விட்டு மனச்சோர்வோடு மின் படியில் இறங்கும்
  லார்கோவை நாம் தொந்தரவு செய்ய வேண்டாம் நண்பர்களே.
  வாருங்கள் இப்போதைக்கு அவனுக்கு விடை கொடுப்போம்.// உண்மையிலேயே மனம் சிறிது நேரம் வேதனை பட்டது அந்த கடைசி பக்க ஓவியங்கள் பார்த்தபோது! :(

  ReplyDelete
  Replies
  1. ”கேர் ப்ரீ” முதலில் ஆங்கில வார்த்தைகள் அப்புறம்தான் ஒரு ப்ராண்ட் நண்பரே :D

   // உண்மையிலேயே மனம் சிறிது நேரம் வேதனை பட்டது அந்த கடைசி பக்க ஓவியங்கள் பார்த்தபோது! :(//

   எனக்கும் மனம் கனத்து விட்டது.

   Delete
 7. சூப்பரான விமர்ச்சனம் என்பது படிக்கும்போதே புரிகிறது. நிறையவே ரசித்திருப்பதும் புரிகிறது.
  நான் இப்பதான் லார்கோ கதையை படிக்க ஆரம்பிச்சுருக்கேன். படிச்சுட்டு வந்து மறுபடியும் உங்க விமர்சனத்தைப் படிச்சாத்தான் எந்த அளவுக்கு நீங்க ரசிச்சுருக்கீங்கன்னு புரியும்.

  இப்போ போரேன். ஆனா, மறுபடி திரும்பி...

  வருவேன்னு சொன்னேன். :)

  ReplyDelete
  Replies
  1. எங்கடா பூனையாரை காணோமே என்று பார்த்தேன்.

   //நான் இப்பதான் லார்கோ கதையை படிக்க ஆரம்பிச்சுருக்கேன்.//

   என்னப்பா இது இவ்வளவு நாளுக்கு அப்புறமும் படிக்கலே என்கிறீர்கள். அட்டையைப் பார்த்து மயங்கி விட்டீர்களா? இல்லை படித்து விட்டால் முடிந்து விடுமே என்ற கவலையா? :D

   சீக்கிரம் படிக்க ஆரம்பியுங்கள் .

   //ஆனா, மறுபடி திரும்பி...

   வருவேன்னு சொன்னேன். :)//

   வாங்க வாங்க காமிக்ஸ் வாங்க, வாங்க

   Delete
 8. லார்கோ படித்து விட்டேன் - அட்டகாசம்! :)

  ReplyDelete
  Replies
  1. லார்கோ ஒரு அதிரடி ஆக்சன் படம் தான். :D

   Delete
 9. உங்கள் அக் மார்க் ஸ்டைலில் கலக்கியுள்ளீர்கள். சூப்பரப்!!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி காமிக்ஸ் பிரியன்.

   Delete
 10. 11) பக்கம் 95 இல் வசனத்தில் ஒரு சிறு பிழை இருக்கிறது. அது என்ன? வாசகர்களே?
  (பு. சாத்தான் மற்றும் அவர் உறவினர்கள் போட்டியில் கலந்து கொள்ள முடியாது.?!

  ReplyDelete
  Replies
  1. //95 இல் வசனத்தில் ஒரு சிறு பிழை இருக்கிறது. அது என்ன? வாசகர்களே?//

   பார்ரா. நானும் ஒருதடவை படித்து விட்டேன். எனக்கு புரியலையே? ஒருவேளை "இக்கட சூடு " வா?

   Delete
  2. yes yes. இப்புடு சூடு என்றிருக்க வேண்டும்

   Delete
 11. ஒரு வழியாகப் படித்து முடித்துவிட்டேன்.

  ஆனாலும் நீங்கள் ரசித்த அளவுக்கு என்னால் ஊன்றிப்போய் இரசித்திட இயலவில்லைதான்.

  * ஓவியங்கள் (குறிப்பாக நீங்கள் பதிவிட்ட அனைத்தும்) கொள்ளை அழகு! இப்படியெல்லாம் கூட வரைய முடியுமா என்ற பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.

  * கதையைப் படிக்கும்போதே நம் கோடம்பாக்கத்து ஆட்களிடம் இந்தக் கதை சிக்கியிருந்தால் அதை எப்படி கையாண்டிருப்பார்கள் என்ற சிந்தனை வந்து வந்து போவதைத் தவிர்க்க முடியில்லை. குறிப்பாக டைரக்டர் ஷங்கர் படத்துக்கான எல்லா லாஜிக்கும்(!) இதில் இருக்கிறது.
  * முதல் பாகத்தில் சென்ரல் பார்க்கில் நடக்கும் அந்த சண்டை கதைக்கு எந்த விதத்தில் உதவியதென்று தெரியவில்லை!
  * பங்கு சந்தைபற்றியக் கதைக்களம் எல்லா தரப்பு வாசகர்களையும் திருப்திபடுத்திடுமா என்ற சந்தேகம் எழுகிறது.
  * கஸ் பெனிமோரின் அந்தக் குரங்கு ரத்தம் ஐடியாவை நான் எப்படி பயன்படுத்துவதென்பதை தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். :-D

  ReplyDelete
 12. ப்பா! என்னா ஒரு பதிவுடா இது! கலக்கல்டா! அசத்திட்டீங்க! வாழ்த்துக்களுடன்!

  ReplyDelete
 13. @Erode VIJAY: நன்றி நண்பரே.

  //* முதல் பாகத்தில் சென்ரல் பார்க்கில் நடக்கும் அந்த சண்டை கதைக்கு எந்த விதத்தில் உதவியதென்று தெரியவில்லை!//

  உண்மைதான். மெலனியுடன் ளார்கோ இன்னும் நெருங்குவதற்கு என்று நினைத்து கொள்ளவேண்டியதுதான்.


  //* பங்கு சந்தைபற்றியக் கதைக்களம் எல்லா தரப்பு வாசகர்களையும் திருப்திபடுத்திடுமா என்ற சந்தேகம் எழுகிறது.//

  உண்மைதான் அந்த டேக் ஓவர் சம்பத்தப் பட்ட செய்திகளை மட்டும் 4 அல்லது 5 தடவை படித்தால் தான் புரிகிறது. நிறய பேருக்கு புரிந்து இருக்காது என்பது என் கணிப்பு.


  //* கஸ் பெனிமோரின் அந்தக் குரங்கு ரத்தம் ஐடியாவை நான் எப்படி பயன்படுத்துவதென்பதை தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். :-D //

  ஹா ஹா . அவரே அது கப்சா என்று சொல்லி விட்டாரே. நீங்களும் "கொல்லி மலை சித்தரிடம் ஞான திருஷ்டியில் கேட்டு டைரெக்டா கொரியரில் வந்த சிட்டு குருவி லேஹியத்தை காலையில் 4 மணிக்கு தினம் சாப்பிட்டு வர்ரதா " அடிச்சு உட வேண்டியது தானே. :D  ReplyDelete
  Replies
  1. // கொல்லிமலைச் சித்தர் - கொரியரில் - சிட்டுக்குருவி லேகியம் - அதிகாலை 4 மணி //

   நீங்க சொன்னதெல்லாம் ஒரு sequenceல இருக்கே!

   அப்படின்னா.... ஆஹா, புரிஞ்சு போச்! :-D

   Delete
 14. @John C Simon : நன்றி நண்பரே, வேலை அதிகமோ? பெர்முடா படலத்தில் வாசகர் அறிமுகத்தில் உங்கள் பேட்டி பார்த்தேன். நினைத்த மாதிரியே காவலராக சேர்ந்து விட்டீர்கள்.:D

  ReplyDelete
 15. @Erode VIJAY : அய்யயோ கண்டு புடிச்சிட்டீங்களா ? :D

  ReplyDelete