Thursday, December 13, 2012

கும்கி - இசை அனுபவம்

கும்கி - இசை அனுபவம்

* நண்பர்களே இது கும்கி படப் பாடல்களை அனுபவித்த என் இசை அனுபவம் மட்டுமே. 


படம் : கும்கி
நடிப்பு : விக்ரம் பிரபு, லட்சுமி மேனன்
இசை : டி. இமான்
இயக்கம் : பிரபு சாலமன்
தயாரிப்பு : லிங்குசாமி 
பாடல் : யுக பாரதி

மைனாவிற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கும் படம், சிவாஜியின் பேரன், பிரபுவின்
மகன் விக்ரம் நடிக்கும் படம்,முழுக்க காட்டுக்குள்ளேயே எடுக்கப் பட்ட படம் என்று
ஏகப்பட்ட எதிர்பார்ப்பை இந்த படம் கிளப்பி இருக்கிறது. மைனாவின் வெற்றிக்கு
இமானின் இசை ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. மீண்டும் கும்கியில்
இருவரும் இணைந்திருக்கிறார்கள். அந்த ஒரு எதிர்பார்ப்பில் தான் நான் பாடல்களை
கேட்க ஆரம்பித்தேன். என் அனுபவம் இதோ

1) ஐயையோ ஆனந்தமே (அதிதி பால் , கார்த்திக் (வயலின்)) - A Lady and Violin

   முதல் பாடலே   ஐயையோ என்று ஆரம்பிக்கிறதே என்று நினைத்துக் கொண்டே
  கேட்க ஆரம்பித்தேன்.  கார்த்திக்கின் வயலின் நம்மை முதலில் வரவேற்று
  பாடல் முழுவதும் கை பிடித்து அழைத்துச் சென்று அந்த பாடலை நமக்குள் ஊற்றுகிறது
 என்று தான் சொல்லவேண்டும். அதிதி பாலின் குரலும் காதல் ஏக்கத்துக்கு நன்றாக
  இருக்கிறது.  அதிதியின் குரல் வராத இடங்களில் வயலினை தேனாக இழைத்திருக்கிறார்
  மனுஷன். கார்த்திக்கின் வயலின் இந்த பாடலின் ஹைலைட். எனக்கு மிகவும் பிடித்த
  பாட்டு.2) சொய்ங் சொய்ங் (மகிழினி மணிமாறன்)

    மைனாவில் "ஜிங் ஜிக்கா" பாட்டு போல முயற்சி செய்திருக்கிறார்கள். ஆரம்பமே ஒரு
   புதிய வாத்தியத்தின் இசையுடன் தொடங்குகிறது. பழைய படங்களில் போர்  நடக்கும்
   போது முரசின் பக்கத்தில் மேற்பக்கம் வளைந்த நாதசுரம் மாதிரி  இருக்கும் கருவியை
   ஒருவர் ஊதுவதை பார்த்திருப்பீர்கள். அந்த  எக்காளத்தின் ஓசையுடன் தொடங்குகிறது.
   விஜய லக்ஷ்மி நவநீத கிருஷ்ணனின் "கொலுசு ஒண்ணாங்க கொலுசு ரெண்டாங்க
   வாங்கச் சொன்னேன்" பாட்டின் மெட்டு அப்பட்டமாக இந்த பாட்டில் வருகிறது. எனக்கு
   ஓகே ரகம்.3) ஐயையோ ஆனந்தமே (ஹரிச்சரண்)

   முதல் பாட்டில் வயலின்  என்றால் ஆண் குரல் பாடும் இந்த பாட்டில் கிட்டார்  போன்ற
   தந்திக்  கருவிகளும் டிரம்ஸுசும் பிடிக்கின்றன. அதிதி பாடிய பாட்ட்டுக்கு இணையில்லா  
  விட்டாலும் பக்கத்தில் வருகிறது.எனக்கு பிடித்த பாட்டு.4) ஒண்ணும் புரியல (டி.இமான்)

     காதல் பைத்தியம் பிடித்தவன் பாடும் பாட்டு.   கரோக்கேக்கு என்று தனி பாட்டும்
   போட்டிருக்கிறார் இமான். யுகபாரதியின் பாடல் வரிகள் இந்த பாட்டில்  எனக்கு
   பிடித்திருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.5) சொல்லிட்டாளே என் காதல (ரஞ்சித், ஸ்ரேயா கோஷல்)
    கண்ணை மூடிக் கேட்டால் இளையராஜா பாட்டு மாதிரியே இருக்கிறது. வழக்கம் போல்
     தேன் குரலில் ஸ்ரேயா கோஷல். எனக்கு ஓகே ரகம்.6)  எல்லா ஊரும் (பென்னி தயாள், டி.இமான்)
     யானைப் பாகனது வாழ்க்கையை சொல்லும்  பாடல். எனக்கு ஓகே ரகம்.


7)  நீ எப்போ புள்ள சொல்லப் போற (அல்போன்ஸ் ஜோசப்)
      ஊடலில் இருக்கும்போது பாடப்படும் பாடல். அல்போன்ஸ் ஜோசப் "விண்ணைத் தாண்டி
      வருவாயா" வில்  ஆரோமலே  பாடலில் கலக்கியவர். அதே மாதிரி ஹை பிட்சில் கலக்கி
     இருக்கிறார். * கும்கி ஒரு மியுசிகல் டிலைட்.
* இனிமேல் பிரபு சாலமன் கையில் தான் படத்தின் வெற்றி உள்ளது.

Post Comment

7 comments :

 1. // சொல்லிட்டாளே //
  // இளையராஜா பாட்டு மாதிரியே //

  அதே! அதே!

  இளையராஜாவைப் போல இமான் இசையமைத்திருக்க, இளையராஜாவோ இமானைப்போல (நீதானே என் பொன்வசந்தம் படத்தில்) இசையமைத்திருப்பதாகத் தோன்றுகிறது :)

  ReplyDelete
  Replies
  1. Vijay punch! :)

   கும்கி - இன்னிக்கே பாத்துரலாம்னு இருக்கேன்! :)

   Delete
 2. என்னா ஸ்பீட் விஜய் :-D

  நீதானே என் பொன் வசந்தம் இன்னும் கேட்கவில்லை. கேட்க வேண்டும்

  ReplyDelete
 3. நானும் இன்று மதியம் போகிறேன்.பார்த்துவிட்டு என் கருத்தை சொல்கிறேன்.

  ReplyDelete
 4. @கார்த்திக் : பாருங்க உங்க பதிவை எதிர் பார்க்கிறேன்.

  ReplyDelete
 5. @கிருஷ்ணா : பாத்துட்டு சொல்லுங்க. மதியம் ஆபீசுலாம் இல்லையா?

  ReplyDelete
 6. அனுபவிச்சு ரசிச்சு எழுதியிருக்கீங்க.
  பாடல்கள் முன்னமே ஹிட் ஆனதால், படமும் ஹிட். எங்க ஊர்ல நல்லா போயிட்டு இருக்கு.

  ReplyDelete