Monday, December 10, 2012

வெங்கட் பிரபுவின் போங்காட்டம் - கோலிவுட் கிங்


 கேம் ஷோக்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். முக்கியமாக கேள்வி கேட்டு பதில் சொல்லும்
KBC மாதிரியான ஷோக்களுக்கு நான் அடிமை. அப்படிதான் வெங்கட் பிரபு நடத்தும்
கோலிவுட் கிங் நிகழ்ச்சியையும் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் அதில் அவர் நடத்தும்  போங்காட்டம்   ரொம்பவே  கஷ்டமாக   இருக்கிறது. ரூல்ஸை முதலிலேயே சொல்லவில்லை. நேரில்  சொன்னார்களோ என்னவோ தெரியாது. முதல் எபிசோடில் (அஜித் ரசிகர்களுக்காக
நடந்தது) கடைசி கேள்விக்கு பதில்  தவறு என்றவுடன் கட கட என்று நிகழ்ச்சியை முடித்து
விட்டார். அஜித் ரசிகர்களின் முணுமுணுப்பு அதிகமாகவே கேட்டது.

தனித்துவம்

இந்த ஷோவின் தனித்துவம் என்ன என்றால் ஒரு குறிப்பிட்ட சினிமா நடிகரை எடுத்துக்
கொண்டு  அந்த நடிகரின் ரசிகர்களிடம் நடிகரைப்  பற்றிய கேள்விகள்  கேட்க்கப்படும்.  ஐம்பது ரசிகர்களுடன் ஆரம்பிக்க படும் தவறான பதில்களால் ரசிகர்கள் வெளியேறி
வெளியேறி கடைசியில் ஐந்து ரசிகர்களுடன் வந்து நிற்கும்.

சரியான பதில்களுக்கு பதிலுக்கு தலா ரூ 1000, 2000, 3000 என்று வைப்பார்கள். ரசிகர்களின்
எண்ணிக்கை குறைய குறைய, ரூபாயை கூட்டிக்கொண்டு இருப்பார்கள்.  உதாரணமாக
25 பேர் சரியான பதில் சொல்லி இருந்தால் அந்த பதிலுக்கு ரூ 2000 என்றால் ரூ 50,000
பாக்ஸ் ஆபீசில் சேர்ந்து விடும்.

போங்காட்டம்

இப்படி சேரும் பணம் இது வரை ரூ பத்து லட்சத்தை தாண்டியதில்லை. தாண்டவும் முடியாத
அளவுக்கு கேள்விகள் கடினமாகிக் கொண்டே போகும். அந்த   கடைசி வரை சரியான பதில்
சொல்பவரில் ஒருத்தரை தேர்ந்தெடுத்து (யார் சீக்கிரம் பதில் சொன்னார் என்பதை வைத்து)
கோலிவுட் கிங் கேள்வி கேட்கப்படும்.

அந்த கேள்விக்கு பதில் சொன்னால் அவருக்கு பாக்ஸ் ஆபீசில் உள்ள தொகை முழுவதும்
 கொடுக்கப் படும். அதாவது மிக அதிகமாக ரூ பத்து லட்சம் கிடைக்கலாம்.
அப்படி தெரியாவிட்டால் அவர் இதுவரை சரியாக சொன்ன பதில்களில் இருந்து  50%  மட்டுமே
தருவார்கள். ஒருத்தர் மிக அதிகமாகவே இருந்தாலும் ரூ 80ஆயிரம் - ரூ 1 லட்சம்  வரை
 தான் தான் சொன்ன சரியான கேள்விகளின் மூலம் சம்பாதிக்க முடியும். அதை கூட
குடுக்காமல் மாதிரி அதிலுருந்து 50% என்று கொடுக்கிறார்கள்.

டிஜிட்டல் கேமரா எல்லாம் கொடுக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். அது எல்லாம்
ஸ்பான்சர் கொடுப்பது. இந்த பக்கம் வாங்கி அந்த பக்கம் கொடுப்பது. நான் பார்த்த வரை
ஒரு எபிசோடில் மட்டுமே கோலி வுட் கிங் பட்டம்  வாங்கினார்கள். மற்ற எபிசொடுக்கு
எல்லாம் அதிக பட்சம் ரூ ஒரு லட்சம் (நான் சொல்லுவது ஆக அதிகம்) கடைசியில்
வந்து தவறான பதில் சொன்னவனுக்கு கொடுத்து விட்டு அந்த எபிசொட் மூலம் வரும்
லாபத்தை அவர்கள் வாரிக் கொள்கிறார்கள்.

ஒரு கோடி கொடுக்கும் ஷோக்கள் எல்லாம் நியாமாக, ஜெயித்த பணத்தை எடுத்துக்
கொண்டு ஷோவில் இருந்து வெளியேற அனுமதிக்கும் போது  இந்த மாதிரி ஷோக்கள்
ரசிகர்களின் அதிகப் படியான அபிமானத்தை மூலதனமாக வைத்து அது வரை ஜெயித்த
பணத்தை கூட எடுத்து செல்ல அனுமதிக்கமால் லாபத்தை வாரிக் கொண்டு இருக்கின்றன.



Post Comment

6 comments :

  1. நியாயமான ஆதங்கம்தான்!

    ஓட்டைகள் அடைக்கப்படவில்லையென்றால், நிகழ்ச்சி ரொம்ப நாள் தாக்குப்பிடிக்காது.

    ReplyDelete
  2. தலைப்பு அருமை.
    நீங்கள் கூறுவது உண்மைதான்.

    ReplyDelete
  3. @Erode Vijay: நானும் அப்படி தான் நினைக்கிறேன்

    ReplyDelete
  4. @கிருஷ்ணா வ வெ : நன்றி கிருஷ்ணா

    ReplyDelete
  5. ஓகே ஆனா தயாரிப்பாளரை தான் இந்த மேட்டர்ல சொல்லணும்ங்க

    ReplyDelete
  6. @ஹாரி.R
    உண்மைதான், ஆனால் இவரை வைத்துதானே இந்த ஷோவை விற்பனை செய்கிறார்கள். இவருக்கும் தார்மீக கடமை இருக்கிறது. சாதாரணமான ஒரு ஆங்கரை போட்டு ஓட்டினால் அந்த ஷோ ஓடுமா? ஒரு ஷோவை எடுத்து நடத்தும்போது அது அவருடைய பெயரை கெடுத்து விடுகிற மாதிரி இருக்க கூடாது. சூர்யா எல்லாம் புல்லா குடுத்துர்றாருப்பா இவருதான் பாதிய குடுக்கிறாரு என்று தான் சொல்வார்கள். இல்லை இவர் சொன்னால் தயாரிப்பாளர் கேட்க மாட்டாரா ? என்பது தான் கேள்வி.

    ReplyDelete